Thursday 22 January 2009

இடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1

இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1
இடுப்பு எலும்பு முறிவு
பற்றி சிறிய அறிமுகம்.......





அன்புடன் ஒரு சிகிச்சையில் இடுப்பு எலும்பு முறிவு பற்றி மேலோட்டமாக எழுதி இருந்தேன்.அதில் இருந்த அறிவியலைவிட மனிதாபிமானமே அனைவராலும் விரும்பப்பட்டது.

ஆயினும் அது ஒரு அறிமுகமே!

இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும்.

தொடை எலும்பின் மேற்பகுதி எலும்பு(FEMUR) அதாவது இடுப்புப்பகுதி இரண்டு இடங்களில் உடையும்!

1.சிகப்பு நிறத்தில் காட்டியிருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதி!
2.ஊதா நிறத்தில் காட்டப்பட்டு இருக்கும் ந்லும்பின் கழுத்துப்பகுதிக்கு வெளியில் உள்ள (TROCHANTER) எலும்புப்பகுதி!!

ரொம்ப சாதாரணமான விஷயங்க.

சிகப்புநிறத்தில் உள்ள எலும்பின் கழுத்துப்பகுதிக்கு இரத்த ஒட்டம் ஊதா நிறப்பகுதியில்,அதாவது மூட்டின் வெளிப்பகுதியில் இருந்துதான் போகிறது.
இந்த இடம் புரிந்தால் எல்லாம் எளிமை. இல்லை புரியாம தலை சுத்துதா?

எலும்பின் சிகப்புப் பகுதியான கழுத்துப்பகுதியில் எலும்பு உடைந்தால் அதற்கு மேல் உள்ள மூட்டு உருளை இரத்த ஓட்டம் இல்லாமல் பட்டுப்போகும்.
அப்படி ஏற்படும்போது நாம் உருளையை மாற்ற வேண்டும்!!
பக்கவாட்டில் உள்ள படம் உருளை மாற்றிய பின்...

2.மூட்டின் வெளிப்பகுதியில்-அதாவது ஊதாநிறப்பகுதியில் உடைந்த்தால் எலும்புக்கு இரத்த ஒட்டம் பாதிக்காது. ஆகையால் எலும்ப் பட்டுப்போகாது!
ஆகையால் எலும்பை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
தகடு, திருகாணிகள் கொண்டு சரி செய்து விடலாம்.
ஓரளவாவது நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா? இல்லை சொதப்பி விட்டேனா?
எதாக இருந்தாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள்! விளக்க முயற்சிக்கிறேன்.

இன்னொரு சங்கதி!
எனக்கு உரைகளுக்கு நடுவே குறிப்பிட்ட இடங்களில் படத்தை சேர்க்கத்தெரியவில்லை. கணிணி மக்கள் சொல்லுங்களேன்...

அன்புடன் தேவா..




45 comments:

நட்புடன் ஜமால் said...

முழுசா புரியலைன்னாலும்.

கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு.

ஒன்னுமே தெரியாத நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு போயிறுக்கேன்.

மிக்க நன்றி தேவா.

எளிமையான விளக்கம்.

படங்கள் சேர்ப்பது பற்றி உங்கள் மின்மடலிடுகிறேன் ...

புதியவன் said...

//இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும்.//

இந்த விசயம் மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது...இப்போது மேலும் தெரிந்து கொண்டேன்...நன்றி தேவா...

அ.மு.செய்யது said...

பயனுள்ள மருத்துவ பதிவு...

நல்ல விளக்கம்..இன்னும் நிறைய எழுதுங்கள் இதைப் பற்றி..

Sinthu said...

அடடா........... என்ன இது வில்லங்கமாக இருக்கே.................அண்ணா வைத்தியர் அண்ணா............. நல்ல தகவல் தான் ஆனால் பலர் பட்ட பின்னர் தான் இதைப் பற்றியே யோசிப்பார்கள்.................. இல்லையா?

தேவன் மாயம் said...

முழுசா புரியலைன்னாலும்.

கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு.

ஒன்னுமே தெரியாத நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு போயிறுக்கேன்.

மிக்க நன்றி தேவா.

எளிமையான விளக்கம்.

படங்கள் சேர்ப்பது பற்றி உங்கள் மின்மடலிடுகிறேன் ///


நன்றி ஜமால்!!!

தேவன் மாயம் said...

/இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும்.//

இந்த விசயம் மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது...இப்போது மேலும் தெரிந்து கொண்டேன்...நன்றி தேவா..///

நீங்கள் விரும்பினால்
இன்னும் எழுதலாம்!!!
நன்றி..

தேவன் மாயம் said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

வருகிறேன்!!
வரவேற்புக்கு நன்றி..

தேவன் மாயம் said...

பயனுள்ள மருத்துவ பதிவு...

நல்ல விளக்கம்..இன்னும் நிறைய எழுதுங்கள் இதைப் பற்றி..///

இன்னும் வேறு பதிவா, அல்லது இடுப்பு பற்றியா?
தேவா......

KARTHIK said...

நல்ல பயனுள்ள பதிவுதான் ஆனா எனக்கு இது பற்றி ஒன்னும் தெரியாது.

தேவன் மாயம் said...

அடடா........... என்ன இது வில்லங்கமாக இருக்கே.................அண்ணா வைத்தியர் அண்ணா............. நல்ல தகவல் தான் ஆனால் பலர் பட்ட பின்னர் தான் இதைப் பற்றியே யோசிப்பார்கள்.................. இல்லையா?///

உனக்கு சின்ன வயசு!!
வயசானவங்களுக்குதான் இது வரும்..

தேவன் மாயம் said...

நல்ல பயனுள்ள பதிவுதான் ஆனா எனக்கு இது பற்றி ஒன்னும் தெரியாது.///

என்னுடைய
அன்புடன்
ஒரு சிகிச்சை
என்ற பதிவை
படிக்கவும்.

தேவா......

அ.மு.செய்யது said...

//thevanmayam சொன்னது…
பயனுள்ள மருத்துவ பதிவு...

நல்ல விளக்கம்..இன்னும் நிறைய எழுதுங்கள் இதைப் பற்றி..///

இன்னும் வேறு பதிவா, அல்லது இடுப்பு பற்றியா?
தேவா......
//

இடுப்பைப் பற்றியல்ல..இது போன்ற மருத்துவ பதிவுகளைத் தொடருங்கள் என்றேன்.


All the best deva ....!!!

Muruganandan M.K. said...

நல்ல பதிவு.
படத்தை அப்லோட் பண்ணிய பின் Ctrl X அழுத்தி கட் பண்ணி, வேண்டிய இடத்தில் பிரவுசரை வைத்து Ctrl V அடித்து பேஸ்ட் பண்ணுங்கள்

Anonymous said...

அருமையான பதிவு. தேவையான பதிவு. பாராட்டுக்கள் டாக்டர் தேவா.

ஹேமா said...

தேவா பிரயோசனமான பதிவு என்றுதான் நினைக்கிறேன்.
எனக்குத்தான் விளக்கியும் விளங்காமலுமிருக்கு.இன்னொருமுறை ஆறுதலாக வாசித்துப் பார்க்கிறேன்.

தேவா என் வீட்டுப் பக்கமும் வந்து போங்களேன்.ரொம்ப நாளாச்சே!

தேவன் மாயம் said...

/thevanmayam சொன்னது…
பயனுள்ள மருத்துவ பதிவு...

நல்ல விளக்கம்..இன்னும் நிறைய எழுதுங்கள் இதைப் பற்றி..///

இன்னும் வேறு பதிவா, அல்லது இடுப்பு பற்றியா?
தேவா......
//

இடுப்பைப் பற்றியல்ல..இது போன்ற மருத்துவ பதிவுகளைத் தொடருங்கள் என்றேன்.
///

நீங்க படிக்கத்தயாரா?
நான் எழுதுகிறேன்...

தேவா....

தேவன் மாயம் said...

நல்ல பதிவு.
படத்தை அப்லோட் பண்ணிய பின் Ctrl X அழுத்தி கட் பண்ணி, வேண்டிய இடத்தில் பிரவுசரை வைத்து Ctrl V அடித்து பேஸ்ட் பண்ணுங்கள்///

மிக்க நன்றி அய்யா!!!!

தேவா..

தேவன் மாயம் said...

அருமையான பதிவு. தேவையான பதிவு. பாராட்டுக்கள் டாக்டர் தேவா.///

கவிதைகளையும்,
அறிவியலையும்
ரசிக்கிறீர்கள்!!!

நன்றி..

தேவன் மாயம் said...

தேவா பிரயோசனமான பதிவு என்றுதான் நினைக்கிறேன்.
எனக்குத்தான் விளக்கியும் விளங்காமலுமிருக்கு.இன்னொருமுறை ஆறுதலாக வாசித்துப் பார்க்கிறேன்.

தேவா என் வீட்டுப் பக்கமும் வந்து போங்களேன்.ரொம்ப நாளாச்சே!///

கட்டாயம் வருகிறேன்!!
பதிவுபோட்டவுடன் ஒரு கடிதம் அனுப்பினால் ஞாபகம் வரும்..

ஹேமா said...

தேவா,எத்தனையோ பதிவுகள் போட்டாச்சு.வாங்க.

வேத்தியன் said...

இதே போல எலும்புல கல்சியம் குறைவால வர்ற ஒஸ்டியோபுரோசிஸ் பத்தியும் எழுதுங்க...
தெரியாதவங்க விளங்கிக்கலாம்...
நல்ல பதிவு...

நட்புடன் ஜமால் said...

Download this Deva

எழுதி

தேவன் மாயம் said...

இதே போல எலும்புல கல்சியம் குறைவால வர்ற ஒஸ்டியோபுரோசிஸ் பத்தியும் எழுதுங்க...
தெரியாதவங்க விளங்கிக்கலாம்...
நல்ல பதிவு...///

விரைவில்
எழுதுகிறேன்!!!!!

தேவன் மாயம் said...

Download this Deva

எழுதி///

நன்றி ஜமால்!!!

Arasi Raj said...

அருமையான பதிவு .

எனக்கு இந்த பிரச்சனை இருக்கு....எலும்பு முறிஞ்சு போகல....ஆனா பிரசவத்துக்கு அப்புறம் என்னோட இடுப்பு எலும்புகள் பலவீனமா போச்சு.....கால்சியம் குறைவுனாலயும் , நிலவோட வெயிட் தூக்குற காரணத்துனாலயும்னு சொல்றாங்க.

முதலிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்துக்கு அறிவியல் விளக்கம் குடுத்த தேவா -விற்கு பாராட்டுக்கள்

குடுகுடுப்பை said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறையின் பெயர் அவாஸ்குலர் நெக்ரோசிஸ்.
தொடர்புடைய பதிவு இங்கே
குகு

தொடர்புடைய பதிவு

மேவி... said...

somewhat i understood....
will read it and try to understand it properly

தேவன் மாயம் said...

அருமையான பதிவு .

எனக்கு இந்த பிரச்சனை இருக்கு....எலும்பு முறிஞ்சு போகல....ஆனா பிரசவத்துக்கு அப்புறம் என்னோட இடுப்பு எலும்புகள் பலவீனமா போச்சு.....கால்சியம் குறைவுனாலயும் , நிலவோட வெயிட் தூக்குற காரணத்துனாலயும்னு சொல்றாங்க.

முதலிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்துக்கு அறிவியல் விளக்கம் குடுத்த தேவா -விற்கு பாராட்டுக்கள்///

உங்கள் குறையை சரி செய்ய உடற்பயிற்சி முக்கியம்.
நடக்க முடியவில்லை என்றால்
stationary cycle ல் பயிற்சி செய்யவும்...
எலும்பில் கனம் கூடும்.....

geevanathy said...

நல்ல பயனுள்ள பதிவு தொடருங்கள் தேவா....

சாந்தி நேசக்கரம் said...

நன்றிகள் டாக்குத்தரய்யா(எங்கடை ஊரிலை உங்களையெல்லாம் இப்பிடித்தான் சொல்லுவோம்)

பயனுள்ள தகவல். படித்துப்பயன்பெறுவதோடு நிற்காமல் தேவாவின் மருத்துவக்குறிப்புகளை தெரிந்தவர்களுக்கும் கொடுத்துள்ளேன்.

சாந்தி

புருனோ Bruno said...

அசத்துகிறீர்கள்
வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

Thank you very much!

ராஜ நடராஜன் said...

படம் சேர்ப்பதற்கு நட்புடன் ஜமால் வந்துவிட்டதால் நான் பதிவை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறேன்.

தேவன் மாயம் said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறையின் பெயர் அவாஸ்குலர் நெக்ரோசிஸ்.
தொடர்புடைய பதிவு இங்கே
குகு

தொடர்புடைய பதிவு///

வாருங்கள்
நண்பரே!!
அது அளவுக்கு அதிகம் ஸ்டெராய்ட் மருந்து உட்கொள்வதால் வருவது..

இது எலும்பு உடைந்து வருவது.

அவ்வளவுதான்....

மிக சிரத்தையுடன் ப்டித்துள்ளீர்.மேலும் சந்தேகத்திற்கு மின் அஞ்சல் செய்யவும்....

தேவன் மாயம் said...

நல்ல பயனுள்ள பதிவு தொடருங்கள் தேவா...//

நன்றி தங்கராஜா!!
ஏதாவது புரிந்ததா?

தேவன் மாயம் said...

நன்றிகள் டாக்குத்தரய்யா(எங்கடை ஊரிலை உங்களையெல்லாம் இப்பிடித்தான் சொல்லுவோம்)

பயனுள்ள தகவல். படித்துப்பயன்பெறுவதோடு நிற்காமல் தேவாவின் மருத்துவக்குறிப்புகளை தெரிந்தவர்களுக்கும் கொடுத்துள்ளேன்.

சாந்தி///

வான் வழி அன்பு பொழியும் இனிய சகோதரியே!
இந்தப் பதிவுகள் பயபடுவது நினைத்து சந்தோஷப்படுகிறேன்..
அன்புடன் டாக்குத்தரய்யா!
இலங்கையில்
நீங்கள்
இனிய
தமிழ் பேசி
{உறவினர்களுடன்)
மகிழ்வுறுவதை
பார்க்க ஆசை...

தேவன் மாயம் said...

அசத்துகிறீர்கள்
வாழ்த்துக்கள்//

வருகைக்கும்
வழ்த்துக்கும்
நன்றி>...

தேவன் மாயம் said...

Thank you very much!//

இவ்வளவுதானா?

தேவன் மாயம் said...

படம் சேர்ப்பதற்கு நட்புடன் ஜமால் வந்துவிட்டதால் நான் பதிவை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறேன்.

January 23, 2009 3:39 PM//

அன்பு நண்பரே!
உங்கள்
அறிவியல்
கட்டுரைகள்
பார்த்தேன்.....

வினோத் கெளதம் said...

ரொம்ப உபயகோமான பதிவு சார். இப்பதிவில் உங்களூடைய மனித நேயம் தான் வெளி படுகிறது. புது பதிவு போட வேண்டும் சார். எதுவும் யோசிக்கவில்லை. உங்களூடைய அன்புக்கு மிக்க நன்றி.

priyamudanprabu said...

அருமையான பதிவு....
வாழ்த்துக்கள்

குமரை நிலாவன் said...

எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கு
இருந்தாலும் பயனுள்ள தகவல் ...

அமுதா said...

நல்ல பதிவு. இன்னும் நிறைய எழுதுங்கள் இது போன்று..

Vishnu... said...

மிக அருமையான பதிவு நண்பரே ...
பயனுள்ள பல தகவல்கள் கிடைக்க பெற்றேன் ...

நன்றிகளுடன்
விஷ்ணு

Anonymous said...

தங்களது இந்த பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்
பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory