Monday 13 April 2009

எயிட்ஸ் - ஒரு அறிமுகம்

எயிட்ஸ் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்.நிறைய படித்தும் இருப்போம். ஆனால் ரொம்ப புரியாத நுட்பமான அறிவியல் வார்த்தைகள் இருப்பதால் அப்படியே பாதியில் படிக்காமல் விட்டு விடுவோம்! இதனால் இந்த நோய் பற்றி ஒரு தெளிவு இருக்காது!! நான் ஒரு நோயாளியின் கதையாக ஒரு முன்னுரை தருகிறேன்.

நான் செல்லும் அரசு ஆஸ்பத்திரிக்கு 5 மாதம் முன்னாடி ஒரு நோயாளியைக் கூட்டி வந்தனர்!

டி.பி. மாதிரி எலும்பும் தோலுமாக இருந்தார்! அவருக்கு மூன்று மனைவியர்(அப்பாடி).கடைசி மனைவிதான் கூட்டிவந்தது! டி.பி.மாதிரியேசளி,காய்ச்சல்,வேகமான எடை குறைவு எல்லாம் இருந்தது! ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் டி.பி.இல்லை என்று தெரிய வந்தது! அப்படியானால் என்ன?

உங்களுக்குத்தெரியும்! ஆம்! எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி.இவரும் மருந்துஒழுங்காகச் சாப்பிடலை.ஆனால் பாருங்க இந்தநோய்க்குஆயிரக்கணக்கான ரூபாய்க்கான மருந்து அரசு இலவசமா தருதுங்க! அதை ஒழுங்கா வாங்கி சாப்பிடவில்லை இவர்.

இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!

கிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் நோயுடனேயே 10-15 வருடம் கூட வாழ்கிறார்கள்! உடலுறவு தவிர போதை மருந்து ஊசியை இரண்டு மூன்று பேர் கழுவாமல் போட்டுக்கிறதுனால கூட இது பரவிவிடும்!

மருத்துவமனை போனா தனி புதிய சிரிஞ் உபயோகிக்கிறார்களான்னு பாருங்க! ரொம்ப கிராமம்னா ஒரு புதிய சிரிஞ் வாங்கிக்கொண்டு போய் விடுங்கள்!!

எயிட்ஸுக்கு நல்ல மருத்துவம் தாம்பரம் டி.பி.சானிடோரியத்தில் கிடைக்கிறது!அது தவிர எல்லா தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் கிடைக்கும்! என்ன இந்த வியாதியை குணப்படுத்த முடியாது! கட்டுப்படுத்தி கொஞ்ச நாள் வாழ்க்கையை தள்ளிப்போடலாம்!

இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்!

அப்புறம் அந்த நோயாளியை விட்டுவிட்டமே! அவர் 3 நாள் கழித்து உடல்நிலை ரொம்ப சீரியஸ் ஆகி கோமா நிலைக்குப்போய்விட்டார்! உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்!போன் மூலம் கூப்பிட்டாலும் யாரும் வரவில்லை! இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்!

கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!

பிடித்து இருந்தால் தமிலிஷ், தமிழ்மணத்தில்

ஓட்டுப்போடவும்!!

-------------------------------------------------------------


30 comments:

Rajeswari said...

கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!
//

அய்யோ பாவம் தேவையா இது...

Rajeswari said...

தேவன் சாருக்கும் மற்றும் இந்த பதிவை படிக்க போகும்/படித்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இராகவன் நைஜிரியா said...

// இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்! கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது! //

சில மணித் துளிகள் சுகங்களுக்காக வாழ்வையே இழந்துவிட்டார்.

அது உடல் உறவாகட்டும், போதைப் பழக்கமாகட்டும், தேவையில்லாதவைகள் புறந்தள்ளினால் மிக நல்லது.

சி தயாளன் said...

அருமையான தகவல் பதிவு தேவா..அடிக்கடி உங்கள் துறை சார்ந்த மருத்துவ தகவல்களை வழங்குங்கள்...:-)

Unknown said...

vanakam oruvanuku oruthi thamil panbadu kadipidithaal eeyitsuku velai ellai. eeitsu arimugam nandru.paaratukkal. era.eravi,editor www.kavimalar.com

Sinthu said...

That is the reality anna......
They who are affected by HIV don't care about themselves even though they have facilites. Then how can others help tp prevent the disease?
Nice analyse. I have studied and known abt their situation too.

Vishnu - விஷ்ணு said...

// உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்! //


என்ன தப்பு பண்ணிருந்தாலும் மனுஷன் பாவம் இறக்கும் தருவாயிலாவது இருந்திருக்கலாம் மக்கள். இன்னும் எட்ய்ஸ் பத்தின விழிப்புணர்வு தேவை. மருத்துவ விழிப்புணர்வு பதிவுகள் நிறைய நீங்க எழுதனும்.

தேவன் மாயம் said...

கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!
//

அய்யோ பாவம் தேவையா இது...///

ராஜேஸ்!! நிறைய நோயாளிகளின் நிலை பரிதாபம்!

தேவன் மாயம் said...

தேவன் சாருக்கும் மற்றும் இந்த பதிவை படிக்க போகும்/படித்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..///

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

// இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்! கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது! //

சில மணித் துளிகள் சுகங்களுக்காக வாழ்வையே இழந்துவிட்டார்.

அது உடல் உறவாகட்டும், போதைப் பழக்கமாகட்டும், தேவையில்லாதவைகள் புறந்தள்ளினால் மிக நல்லது.///

மிக அருமையாக சொன்னீர்கள்!!

வேத்தியன் said...

நல்ல விளிப்புணர்வான பதிவு மருத்துவரே...

ஒரு எயிட்ஸ் நோயாளியை கட்டிப்பிடிப்பதாலோ, முத்தமிடுவதாலோ, அவர் பாவித்த பொருட்களை (இரத்தம் சம்பந்தப்படாமல்) பாவிப்பதாலோ எயிட்ஸ் பரவாது என்பது பலருக்கு தெரிவதில்லை...
நோயாளியை தள்ளி வைத்து விடுகின்றனர்...

பகிர்வுக்கு நன்றிகள் பல...

அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்...

தேவன் மாயம் said...

அருமையான தகவல் பதிவு தேவா..அடிக்கடி உங்கள் துறை சார்ந்த மருத்துவ தகவல்களை வழங்குங்கள்...:-)//

அப்படியே செய்கிறேன் டொன் லி!!

தேவன் மாயம் said...

vanakam oruvanuku oruthi thamil panbadu kadipidithaal eeyitsuku velai ellai. eeitsu arimugam nandru.paaratukkal. era.eravi,editor www.kavimalar.com///

வணக்கம்!!
வருகைக்கு நன்றி!!!

தேவன் மாயம் said...

That is the reality anna......
They who are affected by HIV don't care about themselves even though they have facilites. Then how can others help tp prevent the disease?
Nice analyse. I have studied and known abt their situation too.///

இதுதான் உண்மை நிலை!

தேவன் மாயம் said...

நல்ல விளிப்புணர்வான பதிவு மருத்துவரே...

ஒரு எயிட்ஸ் நோயாளியை கட்டிப்பிடிப்பதாலோ, முத்தமிடுவதாலோ, அவர் பாவித்த பொருட்களை (இரத்தம் சம்பந்தப்படாமல்) பாவிப்பதாலோ எயிட்ஸ் பரவாது என்பது பலருக்கு தெரிவதில்லை...
நோயாளியை தள்ளி வைத்து விடுகின்றனர்...

பகிர்வுக்கு நன்றிகள் பல...

அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.///

வேத்தியனுக்கும் வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

// உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்! //


என்ன தப்பு பண்ணிருந்தாலும் மனுஷன் பாவம் இறக்கும் தருவாயிலாவது இருந்திருக்கலாம் மக்கள். இன்னும் எட்ய்ஸ் பத்தின விழிப்புணர்வு தேவை. மருத்துவ விழிப்புணர்வு பதிவுகள் நிறைய நீங்க எழுதனும்.///

நிச்சயமாக!! படிக்க நீங்க ரெடியா?

வால்பையன் said...

//இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்! //


வேண்டாமே!
இந்த பயம் இருக்குறதாலத்தான் கொஞ்சமாவது தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கபடுது!

Vishnu - விஷ்ணு said...

நிச்சயமாக
உறுதியாக
கண்டிப்பாக
படிக்க நான் ரெடி. பத்திரம் எழுதி தரவா?


// வேண்டாமே!
இந்த பயம் இருக்குறதாலத்தான் கொஞ்சமாவது தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கபடுது! //

வழி மொழிகிறேன்

தேவன் மாயம் said...

//இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்! //


வேண்டாமே!
இந்த பயம் இருக்குறதாலத்தான் கொஞ்சமாவது தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கபடுது!/////

நல்ல கருத்துதான்!
தவ்றுக்கு தண்டனை!

தேவன் மாயம் said...

நிச்சயமாக
உறுதியாக
கண்டிப்பாக
படிக்க நான் ரெடி. பத்திரம் எழுதி தரவா?///

இவ்வளவு போதுமே எனக்கு!
கட்டாயம் நிறைய எழுதுகிறேன்!!

ச.பிரேம்குமார் said...

நல்ல பதிவு தேவா. துறை சார்ந்த பதிவுகள் என்றாலே ஒரு தனிச்சிறப்பு தான்.

வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில், குறிப்பா தமிழ்நாட்டில் எவ்வளவு இருக்குன்னு நினைக்கிறீங்க???

dharshini said...

நல்ல கருத்து அண்ணா.. இன்னும் நிறைய இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்திய அதே சிரஞ்சியை பயன்படுத்துகிறார்கள். கண்டிப்பாக அனைவரும் மருத்துவமனைக்கு போகும்போது ஒரு சிரஞ்சியை எடுத்துச் செல்வது நல்லது.


இனிய தமிழ் புத்தான்டு நல்வாழ்த்துக்கள்..
:)

அப்துல்மாலிக் said...

எய்ட்ஸ் ஒரு எரிமலை என்ற புத்தகம் படித்திருக்கிறேன்

அதில் அழகாக எளிதாக விளக்கியிருப்பார்

வாங்கிப்படிக்கவும்

அப்துல்மாலிக் said...

யாரு சார் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கிறது, 2 லிருந்து 5 நிமிட சந்தோஷத்திற்காக இறுதியில் வாழ்வையே இழந்து அனாதை பிணமாக அடக்கம் செய்யப்படுகிறது

அப்துல்மாலிக் said...

//இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது! கிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்///

சரிதான்.. ஆனால் இது பரவும் என்பதை இன்னும் மக்கள் நோயாளியை கிட்டே அனுமதிப்பதில்லை...

மிருகம் என்ற திரைப்படம் இதுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

வாழ்த்துக்கள் தேவா சார்

நல்ல பதிவு

தேவன் மாயம் said...

நல்ல பதிவு தேவா. துறை சார்ந்த பதிவுகள் என்றாலே ஒரு தனிச்சிறப்பு தான்.

வாழ்த்துகள்///

முழுவதும் துறை சார்ந்து எழுதினால் பல வாசகர்களையும் சிலநேரம் சென்றடைவதில்லை நம் வலைப்பக்கம்!!

Suresh said...

மச்சான் சூப்பரான தகவல் பரி மாற்றம் ... Now check both tmailmanam and tamilish ur vote in tamilmanam ll be 8 and tamilish ll be 13 vottu pottachu ..

ஹேமா said...

// இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்! கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது! //

மனசைத் தொட்டது அனுபவம்.
எல்லோரும் கவனத்தில் எடுக்கவேண்டிய பதிவு.

சின்னப் பையன் said...

நல்ல பதிவு தேவா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory