Wednesday, 14 July 2010

சர்க்கரை நோய் ஏன் வருகிறது? முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!

சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.ஆயினும் சர்க்கரை நோய்
  • ஏன் சர்க்கரை நோய் வருகிறது?
  • என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..எனக்கு வருமா?
என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர். இதற்கு நாம் அறிவியல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இக்கட்டுரை இந்த நோய் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர் குடும்பத்தினருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக எழுதியுள்ளேன். இதைப் படிக்கும் என் அன்பு நண்பர்கள், இத்தகைய கட்டுரைகளின் தேவை பற்றி எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நீரிழிவு நோயைப் பொதுவாக  இரண்டு வகைப்படுத்தலாம்.
1.முதல்வகை நீரிழிவு நோய்
2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.
நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன. 
  • மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்கு வரலாம். அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம். தாய் தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும் அதிகம். 
  • உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவான உணவு 
  • உடல் எடை, கொழுப்பு அதிகம்
  • உடலுழைப்பற்ற வேலை
  • மன அழுத்தம்
  • மருந்துகளால் - வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சில மருந்துகள்   நீரிழிவு நோயைத் தூண்டுபவை.
  • கணையத்தில் கிருமித் தொற்று.
  • இரத்த அழுத்தம்
  • இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்
  • புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும் ஏற்படும். நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும். 

முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வகை நீரிழிவு( Type 1 Diabetes Mellitus)
இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)
இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.
இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.
நோய் வருவதைத் தடுக்க முடியாது.
நோய் வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ வராமல் தடுக்க முடியாது.
தடுக்கலாம்.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.
கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.
85% பேர் இந்த வகையினர்!
சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)
நடு வயதில் ஆரம்பிக்கும்.

இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம்.நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.
நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும். குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும். அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.  
.நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.
இன்சுலின் ஊசி அவசியம், தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும். ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும். 
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
 இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


28 comments:

கோவி.கண்ணன் said...

//கணையத்தில் கிருமித் தொற்று.//

அங்கே சிறுகட்டிகள், கொப்புளங்கள், புற்று ஏற்பட்டாலும் சர்கரை குறைபாடு ஏற்படும்.

உண்மைத்தமிழன் said...

பயனுள்ள தகவல்கள்..! மிக்க நன்றிங்கண்ணே..!

Sabarinathan Arthanari said...

பகிர்விற்கு நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள பதிவு .பகிர்வுக்கு நன்றிங்க டாக்டர் .

CS. Mohan Kumar said...

அருமை. எனது ப்ளாகில் இந்த பதிவிற்கு (வானவில் தலைப்பில் அடுத்த வாரம் எழுதும் போது) லிங்க் தருகிறேன் டாக்டர்.

ராஜ நடராஜன் said...

இப்பொழுதுதான் டாக்டர் புருனோ அம்மை பற்றி சொல்லிகிட்டிருந்தார்.டாக்டர்!இப்ப நீங்க சர்க்க்ரை நோய் பற்றி.

முன்பை விட தமிழகத்தில் சர்க்கரை நோய் அதிகமாகியுள்ளதா அல்லது தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் இது பற்றிய கேள்விகள் அதிகமாகியுள்ளனவா என அறிய விரும்புகிறேன்.

உடல் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே சர்க்கரை நோயின் தாக்கம் அமையும் என்று நினைக்கிறேன்.எனவே சிகரெட்,மது,அதிக கார்போ ஹைடிரேட் உணவுகள் இரண்டாம்பட்சம்தான் என்பது நான் பார்த்த மனிதர்கள் மூலமான அனுபவம்.

சிலர் மாத்திரை மட்டுமே உண்கிறார்கள்.சிலர் இன்சுலின் ஊசியே சிறந்தது என்று ஊசியே குத்துகிறார்கள்.இரண்டுமே மருத்துவரின் சிபாரிசின் பேரில்.இதில் வித்தியாசமென்ன என்பதையும் சொல்லுங்கள்.நன்றி.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான பயனுள்ள பதிவு..இன்னும் இதனை பற்றி பல விஷயங்கள் எழுதுங்க...இரண்டிற்கு வித்தியசம் காட்டியது அருமை...வாழ்த்துகள்...

priyamudanprabu said...

பயனுள்ள பதிவு
என் அப்பாவுக்கும் அவருடைய அம்மாவுக்கும் இருந்தது
அதனால் தான் போன பதிவிலேயே கேட்டேன்
நிறைய எழுதுங்க .......

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
//கணையத்தில் கிருமித் தொற்று.//

அங்கே சிறுகட்டிகள், கொப்புளங்கள், புற்று ஏற்பட்டாலும் சர்கரை குறைபாடு ஏற்படும்.//

அட! அசத்துகிறீர்கள் கோவி!!

தேவன் மாயம் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
பயனுள்ள தகவல்கள்..! மிக்க நன்றிங்கண்ணே..//

உண்மை! வருகைக்கு நன்றி

தேவன் மாயம் said...

Sabarinathan Arthanari said...
பகிர்விற்கு நன்றி

நன்றி!!

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள பதிவு .பகிர்வுக்கு நன்றிங்க டாக்டர் .

கருத்துக்கு நன்றி !

தேவன் மாயம் said...

மோகன் குமார் said...
அருமை. எனது ப்ளாகில் இந்த பதிவிற்கு (வானவில் தலைப்பில் அடுத்த வாரம் எழுதும் போது) லிங்க் தருகிறேன் டாக்டர்.
///

மிகுந்த மகிழ்ச்சி!!

தேவன் மாயம் said...

ராஜ நடராஜன் said...

முன்பை விட தமிழகத்தில் சர்க்கரை நோய் அதிகமாகியுள்ளதா அல்லது தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் இது பற்றிய கேள்விகள் அதிகமாகியுள்ளனவா என அறிய விரும்புகிறேன்.

உடல் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே சர்க்கரை நோயின் தாக்கம் அமையும் என்று நினைக்கிறேன்.எனவே சிகரெட்,மது,அதிக கார்போ ஹைடிரேட் உணவுகள் இரண்டாம்பட்சம்தான் என்பது நான் பார்த்த மனிதர்கள் மூலமான அனுபவம்.

சிலர் மாத்திரை மட்டுமே உண்கிறார்கள்.சிலர் இன்சுலின் ஊசியே சிறந்தது என்று ஊசியே குத்துகிறார்கள்.இரண்டுமே மருத்துவரின் சிபாரிசின் பேரில்.இதில் வித்தியாசமென்ன என்பதையும் சொல்லுங்கள்.நன்றி.

//
தற்போது சர்க்கரை நோய் இருப்பது அதிக அளவில் கண்டு பிடிக்கப்படுகிறது.
சர்க்கரை நோய் நடுத்தர வயதில் உணவு, உடற்பயிற்சி குறைவால் வருவதே அதிகம்.
மாத்திரையால் கட்டுப்படாவிட்டால் ஊசி அவசியம்.

தேவன் மாயம் said...

GEETHA ACHAL said...
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு..இன்னும் இதனை பற்றி பல விஷயங்கள் எழுதுங்க...இரண்டிற்கு வித்தியசம் காட்டியது அருமை...வாழ்த்துகள்.//

கருத்துக்கு நன்றிங்க!

தேவன் மாயம் said...

பிரியமுடன் பிரபு said...
பயனுள்ள பதிவு
என் அப்பாவுக்கும் அவருடைய அம்மாவுக்கும் இருந்தது
அதனால் தான் போன பதிவிலேயே கேட்டேன்
நிறைய எழுதுங்க ......//

பிரபு இது உங்களுக்கான பதிவு!

அப்துல்மாலிக் said...

மிகுந்த உபயோகமுள்ள பதிவு சார்

நன்றி

தேவன் மாயம் said...

நன்றி அபு !

அமர பாரதி said...

அருமை டாக்டர். பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு குழந்தைகளுக்கு வருவது இருந்தால் 50% சாத்தியமும் இருவருக்கும் இருந்தால் 100% சாத்தியமும் இருப்பதே உண்மை. இரண்டாம் வகையானவர்கள் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் தள்ளிப் போட முடியும் அல்லது அதை சிறப்பாகச் செய்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும். (நான் கடந்த 24 வருடங்களா இன்சுலின் - தினசரி குறைந்தது இருமுறை ஊசி எடுத்து வருபவன்)

வகை 1 - நீரிழுவுக்கான முக்கியக் காரணம், குழந்தை கர்பத்தில் இருக்கும் போது அம்மாவுக்கு வரும் கெஸ்டேஷனல் சரியாக கவனிக்கப் படாமை தான். இந்த பிரச்சினை இருந்தால் குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் (4 கிலோ அல்லது அதற்கு மேல்). இந்த குழந்தைகளுக்கு 16 வயதுக்குள் நீரிழிவு வகை 1 வருவது பொதுவான ஒன்று.

அமர பாரதி said...

அருமை டாக்டர். பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால் குழந்தைகளுக்கு வருவது இருந்தால் 50% சாத்தியமும் இருவருக்கும் இருந்தால் 100% சாத்தியமும் இருப்பதே உண்மை. இரண்டாம் வகையானவர்கள் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றால் தள்ளிப் போட முடியும் அல்லது அதை சிறப்பாகச் செய்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும். (நான் கடந்த 24 வருடங்களா இன்சுலின் - தினசரி குறைந்தது இருமுறை ஊசி எடுத்து வருபவன்)

வகை 1 - நீரிழுவுக்கான முக்கியக் காரணம், குழந்தை கர்பத்தில் இருக்கும் போது அம்மாவுக்கு வரும் கெஸ்டேஷனல் டயாபெடிஸ் (GESTATIONAL DIABETES) சரியாக கவனிக்கப் படாமை தான். இந்த பிரச்சினை இருந்தால் குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் (4 கிலோ அல்லது அதற்கு மேல்). இந்த குழந்தைகளுக்கு 16 வயதுக்குள் நீரிழிவு வகை 1 வருவது பொதுவான ஒன்று.

தேவன் மாயம் said...

அமரபாரதி!!
உஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
24 நீண்ட வருடங்கள் இன்சுலின் எடுத்துவரும் நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதலாமே!
உங்கள் இரண்டு பிளாகிலும் இடுகை ஏதும் காணவில்லையே!!
உங்கள் அனுபவங்கள் பிறருக்கு வழி காட்டும் வகையில் எழுத வரவேற்கிறேன்!

அமர பாரதி said...

வரவேற்ப்புக்கு நன்றி டாக்டர். எழுதுவதற்கு தங்களைப் போன்றவர்கள் பலர் இருக்கிறீர்கள். நான் பின்னூட்டர் மட்டுமே.

Jayadev Das said...

இங்க சொல்லப்பட்டுள்ள அனைத்தும் சரியாக இருக்கலாம். படித்த விஞ்ஞான உலகம் பாமரர்களிடமிருந்து ஒரு உண்மையை மூடி மறைக்கிறது, அந்த உண்மையை அவர்களால் வெளியே சொல்ல முடியாது, ஏனென்றால் எந்தத் திருடனும் நான் திருடன் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டன். நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள காரணங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். இருப்பினும் இப்பொழுது சர்க்கரை வியாதி கொண்ட மக்களின் சதவிகிதம் கண்ட மேனிக்கு எகிறிக் கொண்டிருக்கிறது. காரணம் என்ன? நாம் உண்ணும் உணவுதான். அதிகப் படியான ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் விவசாயத்தில் பயன் படுத்தப் படுகின்றன. மனிதன் சாப்பிடுவதே விஷம் என்ற நிலை. ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் தான் உலகிலேயே சிறந்த உணவு என்று சொல்வார்கள், ஆனால் அதிலேயே என்பது சதவிகிதம் விஷம் என்றால் எங்கே போய்ச் சொல்வது? இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உண்டு வந்தால் 25 % ஆக இருக்கும் சர்ர்க்கரை வியாதிக்காரர்கள் 3 % ஆக குறைந்து போய் விடுவார்கள். இதை இந்த திருட்டு விஞ்ஞானிகள் மறைத்து விட்டு நரிக் கதை புலிக்கதை என்று வேரேதேதையோ புளுகிக் கொண்டு திரிகின்றனர்.

அன்புடன் நான் said...

கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.//

இதில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்றால்.... ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? குடிக்கனும்?

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே.

அன்புடன் நான் said...

உங்களின் இந்த பதிவு மிக மிக அவசியமானதுங்க மருத்துவரே.
இதுபற்றிய சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. தொடரட்டும் உங்க தொண்டு.

பகிர்ந்த தகவலுக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே.

Arasi Raj said...

நல்ல பதிவு

இதுல கர்ப்பிணிப் பெண்களுக்கு வரக் கூடிய சக்கரை நோய் எந்த வகை?

Unknown said...

chocolate சாப்பிடலாமா

Nisha said...

பயனுள்ள தகவல். மேலும் நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைக்கட்டுப்பாடு அதிக முக்கியமானது

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory