Thursday 17 January 2013

சர்க்கரை நோயாளிகள் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால்?


சர்க்கரை நோயாளிகள் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால்?

அன்பு நண்பர்களே! சர்க்கரை வியாதி என்று பொதுவாக அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
உள்ளூரில் வேலை பார்த்துக் கொண்டு வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களே உணவுக்கட்டுப்பாட்டை முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை எனும் போது ஊர் ஊராக அலையும் வேலையில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் என்ன சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது, சர்க்கரை ஏறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
ஒரு நாள் போய் விட்டு திரும்பி வந்து விடுபவர்கள் என்றால் வீட்டிலிருந்து கொண்டு செல்ல்லாம். அப்படி இல்லாமல் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள் என்றால் என்ன செய்வது? மேற்கண்ட நபர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர கீழ்க்கண்ட வழிகளைக் கடைப் பிடிக்கலாம்.
இந்த குறிப்புகளைக் கடைப்பிடிப்பது சற்று சிரமம்தான், இருந்தாலும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கலாம்.
முதலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்:
1.பிரியாணி
2.பூரி
3.புரோட்டா
4.ரோஸ்ட்
5.பொங்கல்
6.வடை
7.சேவை
போன்ற உணவுகள் அதிக கலோரி உள்ளவை என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.
முழு சாப்பாடு, அன்லிமிடெட் மீல்ஸ் போன்றவை வாங்காமல் கொஞ்சம் சாதம் வாங்கி அதில் கூட்டு போன்ற காய்கறிகளை சரிக்கு சம்மாகக் கலந்து சாப்பிடலாம்.
கறி,கோழி போன்ற அசைவம் சாப்பிட நேர்ந்தால் சாதத்தை குறைத்துக் கொள்ளவும்.
சைவ உணவுகளில் சில்லி கோபி, சில்லி காளான் போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
மேலே சொன்னவை தவிர்க்க வேண்டியவை!
ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தால் என்னென்ன சாப்பிடலாம்.
1.தயிர் சாதம்
2.சப்பாத்தி
3.சாலட்
4.கொட்டை வகைகள்
5.இட்லி,
6.எண்ணெய் குறைந்த தோசை
7.சப்பாத்தி
8.இடியாப்பம்
8.காய்கறி சாலட்
9.பழ சாலட், ப்ப்பாளி அதிகம் சேர்ந்த்து.
8.ஒரு ஆப்பிள்
9.வெள்ளரிக்காய்
இந்தச் சின்னச் சின்ன குறிப்புகளைக் கடைப்பிடித்தால் சர்க்கரையின் அளவு குறைவது உறுதி.

Monday 14 January 2013

பொங்கல் வாழ்த்துகள்!

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் 




                                                 இனிய பொங்கல் வாழ்த்துகள்!


                                                    நட்புடன் தேவன்மாயம்.

Thursday 10 January 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு கால் வலிக்கான காரணங்கள்!


சர்க்கரை நோயாளிகளில் பலர் கால் வலி, கால் மதமதப்பு, கால் கடுப்பு, உளைச்சல் அவதிப்படுகின்றனர்.
அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது கால் வலிக்கான காரணங்கள் பொதுவாக என்ன என்பதை அறிந்த பின்னரே சிகிச்சை மேற்கொள்ளுவதே சிறந்தது. பொதுவாக அவ்வப்போது வலி வரும்போது வலி மாத்திரைகளை சாப்பிடுவதும் விட்டுவிடுவதும் பிறகு வலி வரும்போதெல்லாம் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சரியல்ல.
வலிக்கான காரணங்கள்:
கால் வலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள்:
நீர்ச்சத்துக் குறைவு,
உப்பு குறைவு
விட்டமின் டி3 குறைவு
ஊட்டச் சத்துக்குறைவு
பொருத்தமற்ற காலணிகள்
யூரிக் அமிலம் அதிகமாதல்
தசைகள்
பொதுவாக வலியானது தசைகளின் பலமின்மை மற்றும் தசை நார் ஆகியவற்றின் செயல்பாடுகளாலேயே ஆரம்பிக்கிறது.
1.தசைகளின் பலம் குறைவது
2.தசை நார் இறுக்கம், பிடிப்பு
3.தசைநார்களின் சுருங்கி விரியும் தன்மை     
தசைகளுக்கு சரியான உடற்பயிற்சியின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். 70% வலியானது தசைநார் பிரச்சினைகளாலேயே வருகின்றது.
எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினைகள்:
எலும்புகளே நம்முடைய உடல் எடையைத் தாங்குகின்றன. எலும்புகளில் சத்துக் குறைவு ஏற்படுவதால் கால் வலி உண்டாகிறது.
இரத்த ஓட்டக் குறைவால் ஏற்படும் வலி:
கால் தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதாலும் கால் வலி உண்டாகிறது.
நரம்பு பாதிப்புகளால் ஏற்படும் வலி:
வலி, மதமதப்பு, எரிச்சல், காலின் சில பகுதிகளில் உணர்வின்மை, நடக்க இயலாமை ஆகியவை நரம்பு பாதிப்புகளால் உண்டாகின்றன
கீழே கொடுத்துள்ளவை உங்களுக்கு இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம்.
1.கால்,கைகளில் தசை இறுக்கம் மற்றும் அசைப்பதில் சிரம்ம்.
2.விரல்கள் மடக்கும்போது மடக்கவோ நீட்டவோ முடியாமல் லாக் ஆகி விடுதல்.
3.தோள்பட்டை அசைவுகள் குறைவு, கையை மேலே தூக்க இயலாமை.
4.கால் கைகளில் மதமதப்பு, ஊசியால் குத்துவது போன்ற உணர்வு
5.தசை வீக்கம், தசை வலி.
-------------------------------------------------------------------
தேவன்மாயம்.
-------------------------------------------------------------------
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory