தினமும் காலை எழுந்தவுடன் வேக வேகமாகக் குளித்து உடை அணிந்து வேலைக்குச் செல்லும்போது நம் எல்லோருக்கும் அன்று அலுவலகத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அன்று செய்ய வேண்டிய வேலைகள் வேறு டென்ஷனைக் கிளப்பிவிட்டிருக்கும்.
இதில் அலுவலக்த்தில் நுழைந்து அவரவர் வெலைகளில் மூழ்கிப்போகும் நாம் எப்படி நம் டென்சனைக் குறைத்துக்கொள்வது.?
இதற்கு வெகு சுலபமான சின்ன செயல்களை என் கல்லூரி ஆசிரியர் ஒருவரிடமிருந்து நான் சுட்டு வைத்துள்ளேன்.. கைவசம் உள்ள அந்த சரக்கு ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆயினும் காலையில் எல்லோருக்கும் இருக்கும் அந்த டென்ஷனை அது மிகவும் குறைக்கிறது. அதனை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
முதலில் உள்ளே நுழையும் போதே அவர் தன்னை விட பணியில் மேலுள்ளவர்களோ, கீழுள்ளவர்களோ யாராக இருந்தாலும் சரி சிரித்து முதல் வணக்கத்தைப் போட்டு விடுவார். சின்னப் பையன்களாக இருந்தால் அவன் கண்டுகொள்ளாமல் போகிறானே என்று எண்ணாமல் “என்னடா தம்பி, எப்படிடா இருக்கிறாய்?” ஒரு சின்ன விசாரிப்பு.
உள்ளே நுழைந்தவுடன் கூட்டம் அதிகமாக இருக்கும். நோயாளிகளைப் பார்த்துக்கொண்டே நம்மையும் நோட்டம் விடுவார். கொஞ்சம் கூட்டம் குறைந்தவுடன் அன்று நாம் போட்டிருக்கும் சட்டை, பேண்ட் இவற்றைப் பாராட்டாமல் விட மாட்டார். “ சட்டை பிரமாதமா இருக்கே! பேண்ட் பிட்டிங் அருமையா இருக்குடா தம்பி!”
“தம்பி தலையை ஒரு ஸ்டைலா வாரியிருக்காண்டா! அசத்துடா!” என்று சின்னச் சின்ன சிரிப்புடன் பாராட்டுதல் அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.. நான் வார்டுக்குச் சென்ற சில நாட்களில் அவரின் சிஷ்யனாகிவிட்டேன். மிகவும் ரிசர்வ் டைப்பான மருத்துவ மாணவர்கள்கூட அவருடன் கலந்து சந்தோசமாகப் பேசுவது கண்டு வியந்து போயிருக்கிறேன்.
அவருடன் டீ சாப்பிடச் செல்வதே ஒரு சுகானுபவம். வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மாணவர்கள்கூட அவர் வார்டில் நன்றாக வேலை செய்வார்கள்.
சிரித்துக்கொண்டும், பிறரைப் பாரட்டிக்கொண்டும் இருப்பது, கர்வத்துடன் சுயபெருமை கொண்டு இருப்பதைவிடச் சிறந்தது என்பதை அவருடைய செயல்கள் உணர்த்திக்கொண்டே இருக்கும்.
அவருடன் பணிநாள் என்றால் அவரைச் சுற்றி ஒரு குழுவே உட்கார்ந்திருக்கும். பக்கத்து வார்டுகளில் பணியிலிருக்கும் நாங்களும் அவருடன் சென்று பேசிக்கொண்டிருப்போம்.
இன்றும் நான் அரசு மருத்துவமனைக்குள் நுழையும் போதெல்லாம் அவர் நினைவு வந்து விடும். யாரைக்கண்டாலும் மறக்காமல் நானே முந்திக்கொண்டு சிரித்துக்கொண்டே குட்மார்னிங் சொல்லி விடுகிறேன். அதே போல் பிறரின் உடையையோ செயல்களையோ பாராட்டவும் செய்கிறேன்.
எவ்வளவு கூட்டமிருந்தாலும் அவர்களால் சிரித்துக்கொண்டே எளிமையாக மலைப்பில்லாமல் வேலை செய்ய முடிகிறது.
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!! . என்ன நான் சொல்வது சரியா?
38 comments:
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!! . என்ன நான் சொல்வது சரியா?
yes yes...
100% agreed
உண்மை. அருமை
கருத்துக்கு நன்றி பார்வையாளன்!
மோகன் குமார் said...
உண்மை. அருமை//
மோகன்! நன்றி!
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!
உண்மை!!
முனைவர்.இரா.குணசீலன் said...
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!
உண்மை!!
//
வருக முனைவர்!
//நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே! //
மிகச் சரியாய் சொன்னீங்க அண்ணே!
கனிவான அணுகுமுறை டென்ஷன் குறைக்கும் தான்.... நல்ல செய்தி
//மோகன் குமார் said...
உண்மை. அருமை//
Repeat....
அட!இது நல்லாருக்கே!!!!
//நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே! //
மிகச் சரியாய் சொன்னீங்க.
நன்றி பால சரவணன்!
Arun Prasath said...
கனிவான அணுகுமுறை டென்ஷன் குறைக்கும் தான்.... நல்ல செய்தி//
அருண்! சரியாச்சொன்னீங்க!
ரவிச்சந்திரன் said...
//மோகன் குமார் said...
உண்மை. அருமை//
Repeat....//
வாங்க! நண்பரே! நலமா!
thamizhan said...
அட!இது நல்லாருக்கே!!!!//
தமிழன்! வருக!
சே.குமார் said...
//நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே! //
மிகச் சரியாய் சொன்னீங்க.//
நன்றி குமார்!
//சின்ன விசயம்!//
ofcourse
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!! . என்ன நான் சொல்வது சரியா?
..... 100 % correct.
இது மேட்டரு..
இந்தா பிடிங்க ஒட்டு !
//நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!//
நிச்சயமாக!எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது!
இந்த உத்திகளைத்தான் நான் பணியில் இருந்தபோது கடைப் பிடித்திருக்கிறேன் !
அழகான பகிர்வு.
வார்த்தை said...
//சின்ன விசயம்!//
ofcourse//
மிக்க நன்றி!
Chitra said...
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!! . என்ன நான் சொல்வது சரியா?
..... 100 % correct.//
சித்ரா ஒத்துக்கிட்டா சரிதான்!
ராமலக்ஷ்மி said...
அருமையான பகிர்வு.//
நன்றிங்க!
யூர்கன் க்ருகியர் said...
இது மேட்டரு..
இந்தா பிடிங்க ஒட்டு !///
நண்பா! எங்கே ஆளையே காணோம் !
சென்னை பித்தன் said...
//நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!!//
நிச்சயமாக!எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது!
இந்த உத்திகளைத்தான் நான் பணியில் இருந்தபோது கடைப் பிடித்திருக்கிறேன் !//
அட! அப்படியா? தற்போது பணியில் இல்லையா?
புதுகைத் தென்றல் said...
அழகான பகிர்வு.//
வாங்க தென்றல்!
இதுவும் ஒரு வைத்திய முறைதானே டாக்டர் !
அழகான் அணுகு முறை ...........பாராட்டுக்கள்
வாங்க ஹேமா- இது மனோதத்துவ வைத்தியம் என்கிறீர்களா?
மிகச்சரிதான்.
பெரிய விசயம்.......
மிக சரி
அருமையான விஷயம் அண்ணே.. நல்லா சொன்னீங்க.
அருமையான விஷயம் அண்ணே.. நல்லா சொன்னீங்க.
நாளையும் பொழுதையும் இனிமையாக மாற்றுவது நாம்தானே!! .
உண்மையான ஆலோசனை. வாழ்த்துக்கள்.
சரி தான்.
Post a Comment