தட்டுப்ப்பிதுக்கம் பற்றிய முந்தைய இடுகைகள் கீழே!
முதல் இடுகை:
வட்டு விலகல், டிஸ்க் ப்ரொலாப்ஸ்! (முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்)
இரண்டாவது இடுகை:
டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-2
மூன்றாம் இடுகை
டிஸ்க் ப்ரொலாப்ஸ்,முள்ளெலும்பிடைத் தட்டுப்பிதுக்கம்-3
இந்த தட்டுப்பிதுக்கம் வராமல் தடுத்துக்கொள்ள முடியுமா?
இது வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிகளைப் பயன்படுத்தலாம்.
- முதுகு தசைகள் பலமிழத்தலே முக்கிய காரணம். முதுகுத் தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
- உடல் எடை அதிகரித்தல்- உடல் எடை அதிகரித்தால் முள்ளெலும்பிடைத் தட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் தட்டுப்பிதுக்கம் அதிகரிக்கும்.
- நிமிர்ந்த நடையும், நிமிர்ந்து அமருதலும் மிக முக்கியம். இதனால் முதுகெலும்பின் வளைவுகள் சரியான நிலையில் இருப்பதால் தட்டுகளின் மீதான அழுத்தம் குறையும்.
- முதுகை முன்புறம் வளைத்து குனிந்து பொருட்களை எடுப்பதால் தட்டுகளின் முன்புறத்தில் அழுத்தம் அதிகமாகிறது.இதனால் மெதுவாக தட்டு சிதையும் வாய்ப்பு அதிகமாகிறது.
- புகை பிடித்தல்- தட்டுப்பிதுக்கம் இதனால் அதிகரிக்கிறது.
பரிசோதனைகள்: கீழ்முதுகு தட்டுப்பிதுக்கத்தைக்க் கண்டுபிடிக்க கீழ்க்கண்ட பரிசோதனைகள் உள்ளன.
- எக்ஸ் கதிர்ப்படம் அல்லது நுண்கதிர்ப்படம்- நுண்கதிர்ப்ப்படத்தில் எலும்புகளுக்கு இடையில் தட்டு உள்ள பகுதி குறைந்து காணப்படும். ஆயினும் இதைக்கொண்டு நாம் தட்டுப்பிதுக்கத்தை உறுதி செய்ய முடியாது.
- எம். ஆர்.ஐ- ஸ்கேன் –இந்த ஸ்கேன் மூலம் தட்டுப்பிதுக்கம் எந்த அளவில் உள்ளது, மற்றும் எந்தப்பகுதியில் உள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள்:
- பொதுவாக இவை தன்னாலேயே சுருங்கிவிடும்ம் தன்மை கொண்டவை என்பதால் அறுவைசிகிச்சை 73% நோயாளிகளில் தேவைப்படாது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தட்டு வீக்கத்தைக்குறைக்கும் மருந்துகள், வலி குறைக்கும் மருந்துகள் ஆகிய்யவற்றைக் கொண்டு முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- முதுகுப்பட்டைகள் (LUMBOSACRAL BELT) பொதுவாக இந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது ஓரளவே பயன் தரும்.
- பயிற்சி முறைகள், இயன்முறை சிகிச்சை: மின் கருவிகள் கொண்டு முதுக்குப்பகுதியில் மசாஜ் போல் சூடேற்றி பிடித்து விடுதல் (Interferential therapy, Electrical stimulation), மின் இழுவைக் கருவி மூலம் எலும்புகளுக்கு இடையில் உள்ள இடை வெளியை அதிகப்படுத்த முயற்சிகள்( traction) போன்ற உப சாந்தியான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
- தட்டு பிதுங்கிய இடத்தில் ஸ்டீராய்ட் ஊசி மருந்து செலுத்தி அந்த பிதுக்கத்தின் வீக்கத்தைக் குறைத்தல்
மேற்கண்ட சிகிச்சை முறைகள் மூலம் பலன் இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்.
அறுவை சிகிச்சை என்பது மிகக்குறைந்த நோயாளிகளுக்கே செய்யப்படுகிறது. முதுகுப்புறத்தில் உள்ள பிதுங்கி வெளித்தள்ளியுள்ள தட்டு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்படுகிறது..
அறுவை சிகிச்சை:
தற்போதைய நவீன அறுவை சிகிச்சை முறைகளில் பின் விளைவுகள் மிகக் குறைவு.
அறுவை சிகிச்சை செய்வதால் 80 லிருந்து 90% நோயாளிகளில் கால் வலியானது முற்றிலும் நீங்கிவிடுகிறதுகால் மதமதப்பு, தசை பலவீனம் ஆகியவை குறைய 6-12 வாரங்கள் ஆகலாம்.
10-15 சதவீதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டோருக்கு மீண்டும் அதற்கு மேலுள்ள அல்லது கீழுள்ள எலும்பிடைப்பகுதிகளில் இந்நிலை மறுபடியும் ஏற்படலாம். .
26 comments:
நீங்க சொல்றத பாத்தா, நம்ம சாதாரன வாழ்கை முறை ல, கண்டிப்பா வரும் போலயே.... இனி முதுகு எப்பவும் நேரா இருக்க மாறி பாத்துகறேன்....
அருமையான, உபயோகமான தகவல்..
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்...
Arun Prasath said...
நீங்க சொல்றத பாத்தா, நம்ம சாதாரன வாழ்கை முறை ல, கண்டிப்பா வரும் போலயே.... இனி முதுகு எப்பவும் நேரா இருக்க மாறி பாத்துகறேன்....
//
நிச்சயம் உடற்பயிற்சி தேவை!
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!
மிக உபயோகமான,எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.நல்ல முயற்சி.
வருகைக்கு நன்றி சென்னைப்பித்தன்!
I really like your short and simple approach for explaining the concept. Thanks so much.
Thankyou Mr.JMR! How is your nephew!
மிகவும் பயனுள்ள பதிவு!
வருகைக்கு நன்றி எஸ்.கே!
மிகவும் அவசியமான தொடர்பதிவுகள். தங்களது பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார். தொடரட்டும் தங்கள் சேவைகள்.
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு.
இந்த சிக்குன் குனியா இருக்கே..சிக்குன் குனியா ,இது வராம இருக்கணும்னா "நாம சாப்பிடுற சிக்கன... குனியாம சாப்பிடனுமாமே.?அப்பிடியா?சொல்லுங்க டாக்டர்.
பிரவின்குமார் said...
மிகவும் அவசியமான தொடர்பதிவுகள். தங்களது பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார். தொடரட்டும் தங்கள் சேவைகள்.///
நன்றி பிரவீன்!!
ஜெரி ஈசானந்தன். said...
இந்த சிக்குன் குனியா இருக்கே..சிக்குன் குனியா ,இது வராம இருக்கணும்னா "நாம சாப்பிடுற சிக்கன... குனியாம சாப்பிடனுமாமே.?அப்பிடியா?சொல்லுங்க டாக்டர்.//
நாம குனியலாம்!! கோழிதான் குனியாத கோழியாப் புடிக்கனும்!! ஹி ஹி!!
குனியாத கோழியா? "என்ட குருவாயூரப்பா....இது எங்கட சாத்தியம்?
எந்தா டாக்டர்..ஞான்...பரஞ்சது......கொஞ்சம் ...கிளுகிளுப்பாயிட்டு உண்டோ..?
'கோழி குனிஞ்சா தானே ஞான் சிக்கன் கடிக்க முடியும்? பிறகு எந்தா குனியாத கோழி..குனிஞ்ச கோழின்னு..எந்தா ..மனசிலாயோ..?
நல்ல தகவல் பகிர்வுங்க. நன்றி.
Sir enakum back pain padithen pinpatrapogiren mikka nandringa..
நல்ல பல விடயங்களை அறிந்தேன்...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
நல்ல தகவல் பகிர்வுங்க. நன்றி.
good post sir
thank you!
Blogger Chitra said...
நல்ல தகவல் பகிர்வுங்க. நன்றி.
நன்றி சித்ரா!
------------------------
Blogger தமிழரசி said...
Sir enakum back pain padithen pinpatrapogiren mikka nandringa..
கவனமாக இருங்கள் தமிழரசி
-----------------------------
Blogger ம.தி.சுதா said...
நல்ல பல விடயங்களை அறிந்தேன்...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
அன்பில் நனைவோம் நண்பா!
-------------------------
Blogger சே.குமார் said...
நல்ல தகவல் பகிர்வுங்க. நன்றி.
அன்பின் நண்பரே! நன்றி!
------------------------------
Blogger valarmathi said...
good post sir
thank you!
வருகைக்கு நன்றிங்க!!
-----------------------------------
இப்ப நிறைய பேருக்கு இந்த பிராப்ள்ம் அதிகரித்து இருக்கும், எல்லோரும் கணனி உலகில் முழ்கி கிடக்கிறார்கல்,
மிக அருமையான பயனுள்ள பகிர்வு,
நிறைய விசயங்கள் தெரிய வைத்தமைக்கு ந்ன்றி.
Post a Comment