Friday 12 June 2009

பிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!!!

பிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும் பொருட்டு செய்யப்படுவதே பிரேதப் பரிசோதனை.

பிரேதப்பரிசோதனையின்போது உடலில் உள்ள காயங்கள், வெளிப்புறத் தோற்றம், ஆகியவை கவனிக்கப்படும்.

அதன் பின்னர் உடலுக்குள் உள்ள இதயம்,இரைப்பை,ஈரல்,நுரையீரல் சிறுநீரகங்கள் ஆகியவையும் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். ஆய்வில் உடலுறுப்புகளில் நஞ்சு இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.

இது ஒரு அரசு மருத்துவமனையின் சாதாரண நிகழ்வு. எவ்வளவுதான் சொன்னாலும் படங்கள் விளக்குவதுபோல் ஆகாது!!

படத்தில் நெஞ்சுக்கு நேராக கிழித்து உடல் உறுப்புக்களை எடுக்கும் காட்சியைப்பார்க்கிறீர்கள்!!

இவற்றில் சந்தேகங்களைக் கேட்கவும்!!

(நான் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது எடுத்த படங்கள் இருக்கு. அதையும் போடவா?)

-------------------------------------------------------------------------------

தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஓட்டுப் போடவும்!

-------------------------------------------------------------------------------

42 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஐயா நிஜமாவே பயமா இருக்கு

பூங்குழலி said...

ஆனா இது நம்மூரு மருத்துவமனை மாதிரி தெரியலையே ..

pudugaithendral said...

ம்ம் ஒண்ணும் சொல்ல முடியலை.

பிரேத பரிசோதனையோ, உயிருடன் இருக்கும்போது பரிசோதனையோ மருத்துவருக்கு அது பத்தோடு பதினொன்றாக மற்றொரு பேஷண்ட். ஆனால் உறவினருக்கு.

டாக்டர்கள் கொஞ்சம் மனிதமும் கற்க வேண்டுமென்பது என் வேண்டுகோள்.

pudugaithendral said...

இரண்டு மாதங்களுக்கு முன் கணவரின் அண்ணன் இறந்துவிட்டார்.

வசூல்ராஜா படத்தில் வருவது போல் என் கணவரின் அண்ணனின் இறந்த உடலை வைத்துக்கொண்டு போஸ்ட்மார்டம்(என்ன காரணம் என்று தெரியாமலேயெ இறந்துவிட்டார்) செய்து உடன் கொடுக்காமல் அந்தச் சூழ்நிலையிலும் அவரது பிணத்தை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்ததை என் கணவர் கண்ணால் கண்டு கொதித்து சண்டையிட்டாராம்.

பிரேத பரிசோதனை குறித்து நிறைய்ய சொன்னார்.

எழுத மனம் வரவில்லை. :(((

முனைவர் இரா.குணசீலன் said...

கொஞ்சம் பயமாத் தான் இருக்கு .
இருந்தாலும் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்ட நிறைவு..

Suresh said...

வாழ்க்கை அவ்வளவு தான் என்று உணர்த்து பயமாக இல்லை, ஒரு வேளை கண்ணாடியில் என்னை திணமும் பார்க்கும் மன தெரியமா கூட இருக்கலாம்

Anonymous said...

விபத்தில் மற்றும் சந்தேகத்துக்கு உட்பட்டு இறந்தவர்களை அவர்கள் உறவினர்கள் ஏன் போஸ்ட் மாடம் செய்யாமல் தரச்சொல்லி அழுகிறார்கள் என்று இப்போது புரிகிறது உறவுகளுக்கு தானே அந்த உறவின் பலம் வலி புரியும்.....

ஆடி அடங்கும் வாழ்கையடா...வாழ்க்கை மேல வெறுப்பு வந்து விட்டது இதற்கா இத்தனை போராட்டம் பரிதவிப்பு ......

சொல்லரசன் said...

//நான் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது எடுத்த படங்கள் இருக்கு. அதையும் போடவா?//

அதை வெளியிட உங்க மருத்துவதுறை அனுமதியிருக்குமானல் வெளியிடுங்கள்.

குமரை நிலாவன் said...

பயமா இருக்கு தேவா சார்

மணிப்பக்கம் said...

நன்றி, விவரங்கள் அருமை!

Unknown said...

பிரேதப் பரிசோதனையா இல்லை நோண்டி நொங்கு எடுக்கிறாரா?

படுத்திட்டு இருக்கிறவரு கனவுல
வராம இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிடிக்கொள்கிறேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

வேணா சாமி இதுவே ரொம்ப பயமா இருக்கு

Unknown said...

சார் நீங்கதான அபிதேவாவா? உங்க பிளாக் பத்தி இந்த வாரம் குங்குமம்
18-06-09 தலையணை மந்திரங்கள்
வந்திருக்கு.

மயாதி said...

நண்பரே மன்னிக்கவும்! பிரேத பரிசோதனை என்பது மருத்துவத்திலே எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இது சட்டத்திற்காக மட்டும் செய்வதல்ல அதையும் தாண்டிய நோக்கங்கள் கூட உள்ளன.
உதாரணத்திற்கு இந்த படங்களில் உள்ளது , இது சடத்திற்கு உட்பட்ட சோதனை அல்ல, படங்களைப் பார்க்கும் போது புரிகிறது.
உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் மக்களிடையே இது சம்பந்தமாக எவ்வளவு விடயங்கள் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன?
அவர்கள் நினைப்பது இது ஏதோ வைத்தியர் தன சொந்த தேவைக்காக செய்வது என்று நினைப்பவர்களே அதிகம்.
அவர்களுக்கு சற்று விழிப்பு வரும் மாதிரி உங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த படத்தைப் பார்த்த எவரும் தன உறவினர்களுக்கு பரிசோதனை செய்ய இடமளிக்கப் போவதில்லை, அதுதான் சொல்கிறேன் இந்த மாதிரி மருத்துவ சம்பந்தமான இடுகைகள் இடும் போது மக்கள் விழிப்பு பெரும் மாதிரி இடுங்கள்.
நீங்கள் சில குறிப்புக்கள் சொல்லி இருந்தாலும் போதாது...
தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களுக்கு சிறந்த பதில் அளித்து அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர செய்வீர்கள் என நம்புகிறேன்..
நன்றி.

Unknown said...

//மிக்க நன்றி நண்பரே!! நீங்க சொல்லிதான் தெரிந்துகொண்டேன். எப்படி அதை பார்ப்பது?//

நெட் என்றால் பத்து நாள் வெயிட் பண்ணி அவங்க சைட்டுக்குப் போகலாம்
என்று நினைக்கிறேன்.முயற்சியுங்கள்.

உடனே என்றால் பத்திரிக்கை வாங்க வேண்டும்.

வால்பையன் said...

அய்யோ சார் முடியல!
யாராவது லேடிஸ் பார்த்தா மயக்கம் போட்டு விழுந்துருவாங்க!

Sumathi. said...

ஹாய் ,

நண்பரே, எனக்கு நீண்ட நாளாக இது பற்றி தெரிந்து கொள்ளவும், பார்த்து அறியவும் ஆசை உள்ளது . முடிந்தால் எனக்கு நீங்கள் எடுத்ததாக சொன்ன போட்டோக்களி போடவும் அல்லது எனக்கு முடிந்தாம் அதை தனி மடலாக அனுப்பி வைக்க முடியுமா? இன்னும் சொல்ல போனால் எனக்கு இது பற்றி நேரில் பார்க்கவும் மிகவும் ஆசையாக உள்ளது.

satheesh said...

Its really informative.For longer period of time i want to see these kind of pictures to know about post mortem.

தமிழிச்சி said...

இறந்த உடலை இப்படிப் பார்க்கவே முடியாமல் இருக்கிறது, தேவா. தன் சொந்தத் தாயையும் தகப்பனையும் இந்தக் கோர நிலையில் கண்ட எங்கள் ஈழக் குழந்தைகளின் நினைவு வந்து கலங்க வைத்து விட்டது.

மேவி... said...

படங்கள் தந்த விளக்கம் அருமை .....

பிறகு மண்டை ஓட்டை எப்படி உடைபங்க ?????
விசஷ கருவி எதாவது இருக்கிறதா ?????

யூர்கன் க்ருகியர் said...

//இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!!!"//

படங்களை பார்த்த பிறகுதான் இதயம் பலகீனம் ஆயிருச்சோன்னு லைட்டா ஒரு டவுட்!

சி தயாளன் said...

ம்...உண்மையாகவே இத பண்ணிற டொக்டர்மார் நிலைமை பரிதாபம் தான்..ஆனா போக போக பழகிடும் என்ன...?

வழிப்போக்கன் said...

படங்க்கள் நிஜமாவே பயங்கரமா இருக்கு...
ஆனாலும் அறிந்தேன்...
நன்றி..

Jackiesekar said...

எனக்கு இந்த அனுபவம் இருக்கின்றது...

நான் போட்டோ கூட எடுத்து இருக்கிறேன் அது பற்றிய பதிவு விரைவில்

ஜாக்கிசேகர்

ஆ.ஞானசேகரன் said...

தேவன் சார், நீஙகள் எடுத்த படத்தையும் போடுங்களேன்... நல்ல பகிர்வு

செந்தில்குமார் said...

டாக்டர்,

இன்சூரன்ஸ் , இறப்புச்சான்றிதழ் கிடைக்க பிரேத பரிசோதனை கட்டாயமா என்ன ?

படங்கள் பாக்கறதுக்கு ரொம்ப அதிர்ச்சியாவும் பயமாவும் இருந்தது உண்மை...

தேவதாசன் said...

இது இறந்தவரின் உடல் அல்லவா? உயிரோடு ஈழ மக்களின் உடல்களை எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி பரிசோதித்தாரே! பார்க்கவே வேண்டாம்.

Bruno said...

//செய்து உடன் கொடுக்காமல் அந்தச் சூழ்நிலையிலும் அவரது பிணத்தை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்ததை என் கணவர் கண்ணால் கண்டு கொதித்து சண்டையிட்டாராம்.//

பிறகு எப்படி வகுப்பெடுக்க வேண்டும் ??

லஞ்சம் கேட்டிருந்து கோபப்பட்டால் நியாயம்.

இது ஒன்றும் கொதித்து சண்டையிடும் செயல் அல்ல என்பது என் கருத்து

அவர்கள் நினைப்பது இது ஏதோ வைத்தியர் தன சொந்த தேவைக்காக செய்வது என்று நினைப்பவர்களே அதிகம்.

cheena (சீனா) said...

mmmmm - நல்ல தகவல்கள் நிறைந்த இடுகை- நீங்கள் செய்த பிரேத பரிசோதனை பட்ங்களும் போடுங்கள் - நம் நாடு எப்படி இருக்கிறது - பார்ப்போம்

Cable சங்கர் said...

உங்க படங்களையும், மேலும் இதை பற்றிய செய்திகளையும், தெரிய படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அபி அப்பா said...

எல்லா டாக்டர்ஸ்ம் சேர்ந்து என்ன கூத்து அடிக்கிறீங்க! ஏண் தான் இந்த பதிவை பார்த்தோமான்னு இருக்கு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நீங்கள் செய்த pm படங்களையும் வெளியிடுங்கள். நான் ஏற்கெனவே இது தொடர்பான வீடியோ ஒன்றை பார்த்திருக்கிறேன். youtube ல்.

அபி அப்பா said...

டாக்டர் நல்லா இருக்கேன். வாமிட்டிங் இப்ப இல்லை. ஆனா டயர்டு தான் அதிகமா இருக்கு. இளநீர், சாத்துகுடி, கஞ்சி தான் உணவு. காலையும் மாலையும் டாக்டர் ரூம்க்கு வந்து பார்த்துக்கறார்.

லைட்டா பயமா இருந்துச்சு. அப்ப இந்த பதிவை படிச்சுட்டனா, அதான் அப்படி ஒரு ஜாலி பின்னூட்டம் போட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க!

தேவன் மாயம் said...

பிரியமுடன்.........வசந்த் said... ஐயா நிஜமாவே பயமா இருக்கு///
வசந்த ! உள்ளதுதானே!!
பூங்குழலி said...
ஆனா இது நம்மூரு மருத்துவமனை மாதிரி தெரியலையே ///
வெளியூர்தான்!!
---------------------------------------------------------..புதுகைத் தென்றல் said...
ம்ம் ஒண்ணும் சொல்ல முடியலை.

பிரேத பரிசோதனையோ, உயிருடன் இருக்கும்போது பரிசோதனையோ மருத்துவருக்கு அது பத்தோடு பதினொன்றாக மற்றொரு பேஷண்ட். ஆனால் உறவினருக்கு.

டாக்டர்கள் கொஞ்சம் மனிதமும் கற்க வேண்டுமென்பது என் வேண்டுகோள்.////
நான் மனிததன்மை உள்ளவன்தான்!!
12 June 2009 01:52
--------------------------------------------------------

புதுகைத் தென்றல் saidஇரண்டு மாதங்களுக்கு முன் கணவரின் அண்ணன் இறந்துவிட்டார்.

வசூல்ராஜா படத்தில் வருவது போல் என் கணவரின் அண்ணனின் இறந்த உடலை வைத்துக்கொண்டு போஸ்ட்மார்டம்(என்ன காரணம் என்று தெரியாமலேயெ இறந்துவிட்டார்) செய்து உடன் கொடுக்காமல் அந்தச் சூழ்நிலையிலும் அவரது பிணத்தை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்ததை என் கணவர் கண்ணால் கண்டு கொதித்து சண்டையிட்டாராம்.

பிரேத பரிசோதனை குறித்து நிறைய்ய சொன்னார்.
//
மாணவர்களுக்கு பிரேதப் பரிசோதனைபற்றி சொல்லித்தர வேறு வழியில்லை!! சொந்தக்காரர்களுக்கு வருத்தம் உண்டாவது இயற்கைதான்!! thevanmayam said...
------------------------------------------------------முனைவர்.இரா.குணசீலன் said...
கொஞ்சம் பயமாத் தான் இருக்கு .
இருந்தாலும் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்ட நிறைவு///
மிக்க நன்றி!!
--------------------------------------------------------Suresh said...
வாழ்க்கை அவ்வளவு தான் என்று உணர்த்து பயமாக இல்லை, ஒரு வேளை கண்ணாடியில் என்னை திணமும் பார்க்கும் மன தெரியமா கூட இருக்கலாம்//
ஆமா சுரேஷ்!!
12 June 2009 02:02
தமிழரசி said...
விபத்தில் மற்றும் சந்தேகத்துக்கு உட்பட்டு இறந்தவர்களை அவர்கள் உறவினர்கள் ஏன் போஸ்ட் மாடம் செய்யாமல் தரச்சொல்லி அழுகிறார்கள் என்று இப்போது புரிகிறது உறவுகளுக்கு தானே அந்த உறவின் பலம் வலி புரியும்.....

ஆடி அடங்கும் வாழ்கையடா...வாழ்க்கை மேல வெறுப்பு வந்து விட்டது இதற்கா இத்தனை போராட்டம் பரிதவிப்பு ///
உண்மைதான் தமிழரசி!!
-----------------------------------------------------..சொல்லரசன் said...
//நான் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது எடுத்த படங்கள் இருக்கு. அதையும் போடவா?//

அதை வெளியிட உங்க மருத்துவதுறை அனுமதியிருக்குமானல் வெளியிடுங்கள்.//
அனுமதி கிடைக்காது நண்பரே!!
குமரை நிலாவன் said...
பயமா இருக்கு தேவா சார்//
பயம் எதற்கு நண்பா?
---------------------------------------------------------மணிப்பக்கம் said...
நன்றி, விவரங்கள் அருமை!///
வருகைக்கு நன்றி!!
-------------------------------------------------------கே.ரவிஷங்கர் s

தேவன் மாயம் said...

aid...
பிரேதப் பரிசோதனையா இல்லை நோண்டி நொங்கு எடுக்கிறாரா?

படுத்திட்டு இருக்கிறவரு கனவுல
வராம இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிடிக்கொள்கிறேன்.///
சிறுநீரகம் அடியில் இருக்கும். வேறுவழியில்லை!!
------------------------------------------------------現在建築式™ said...
My Blog
http://www.wretch.cc/blog/markacey
Thanks for your share
Nice to meet you

Hsinchu, Taiwan///
Thank you my friend!!
-பித்தன் said...
வேணா சாமி இதுவே ரொம்ப பயமா இருக்கு
12 June 2009 05:05 ///

பித்தன்னு பேர் வைத்துவிட்டு பயப்படலாமா?
----------------------------------------------------கே.ரவிஷங்கர் said...
சார் நீங்கதான அபிதேவாவா? உங்க பிளாக் பத்தி இந்த வாரம் குங்குமம்
18-06-09 தலையணை மந்திரங்கள்
வந்திருக்கு///
நன்றி ரவி!! புத்தகம் வாங்கிவிட்டேன்!!
.மயாதி said...
நண்பரே மன்னிக்கவும்! பிரேத பரிசோதனை என்பது மருத்துவத்திலே எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இது சட்டத்திற்காக மட்டும் செய்வதல்ல அதையும் தாண்டிய நோக்கங்கள் கூட உள்ளன.
உதாரணத்திற்கு இந்த படங்களில் உள்ளது , இது சடத்திற்கு உட்பட்ட சோதனை அல்ல, படங்களைப் பார்க்கும் போது புரிகிறது.
உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் மக்களிடையே இது சம்பந்தமாக எவ்வளவு விடயங்கள் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன?
அவர்கள் நினைப்பது இது ஏதோ வைத்தியர் தன சொந்த தேவைக்காக செய்வது என்று நினைப்பவர்களே அதிகம்.
அவர்களுக்கு சற்று விழிப்பு வரும் மாதிரி உங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த படத்தைப் பார்த்த எவரும் தன உறவினர்களுக்கு பரிசோதனை செய்ய இடமளிக்கப் போவதில்லை, அதுதான் சொல்கிறேன் இந்த மாதிரி மருத்துவ சம்பந்தமான இடுகைகள் இடும் போது மக்கள் விழிப்பு பெரும் மாதிரி இடுங்கள்.
நீங்கள் சில குறிப்புக்கள் சொல்லி இருந்தாலும் போதாது...
தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களுக்கு சிறந்த பதில் அளித்து அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர செய்வீர்கள் என நம்புகிறேன்..///

நன்றி. நீண்ட கருத்துமிக்க பின்னூட்டம். 1.பிரேதப்பரிசோதனை செய்ய யாரும் அனுமதிதர வேண்டியதில்லை.
2. இது சட்டத்துக்கு உட்பட்டு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரியில் சில நேரம் ஒரு வகுப்பில் 20 பேருக்குக்கூட இதுபோல் வகுப்பு எடுப்பார்கள்.
3.நம் மக்களுக்கு ஏற்ற மாதிரி விளக்கங்கள் நிச்சயம் அளிக்கிறேன்!
4.என் மைத்துனர் இறந்தபோதுகூட தனியார் மருத்துவமனையிலிருந்து இப்படி பிரேதப் பரிசோதனை செய்யாமல் கொண்டு வந்துவிட்டார்கள். போலீஸ் வீட்டுக்கு வந்து அருகில் உள்ள ம.மனையில் பிரேதப் பரிசோதனை செய்துதான் உடலைக் கொடுத்தார்கள்.
5.பிரேதப் பரிசோதனை செய்யாவிட்டால் அவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் கிடைக்காது. ஆதலால் கோர்ட்டில் இழப்பீடு கிடைக்காது. இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது.
இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.
மிக அருமையான உங்கள் கருத்துக்கு நன்றி!!
12 June 2009 05:59
---------------------------------------------------------
21:17

தேவன் மாயம் said...

---------------------------------------------------------
வால்பையன் said...
அய்யோ சார் முடியல!
யாராவது லேடிஸ் பார்த்தா மயக்கம் போட்டு விழுந்துருவாங்க!//
கீழே சுமதியின் பின்னூட்டம் பாருங்க!!
Sumathi. said...
ஹாய் ,

நண்பரே, எனக்கு நீண்ட நாளாக இது பற்றி தெரிந்து கொள்ளவும், பார்த்து அறியவும் ஆசை உள்ளது . முடிந்தால் எனக்கு நீங்கள் எடுத்ததாக சொன்ன போட்டோக்களி போடவும் அல்லது எனக்கு முடிந்தாம் அதை தனி மடலாக அனுப்பி வைக்க முடியுமா? இன்னும் சொல்ல போனால் எனக்கு இது பற்றி நேரில் பார்க்கவும் மிகவும் ஆசையாக உள்ளது.///
ஆகா!! உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்!!! போட்டோக்கள் அனுப்புகிறேன்..
satheesh said...
Its really informative.For longer period of time i want to see these kind of pictures to know about post mortem.//
நன்றி நண்பா!
---------------------------------------------------------

12 June 2009 07:15
தமிழிச்சி said...
இறந்த உடலை இப்படிப் பார்க்கவே முடியாமல் இருக்கிறது, தேவா. தன் சொந்தத் தாயையும் தகப்பனையும் இந்தக் கோர நிலையில் கண்ட எங்கள் ஈழக் குழந்தைகளின் நினைவு வந்து கலங்க வைத்து விட்டது.//
வருந்துகிறேன்!!
12 June 2009 07:36
-------------------------------------------------------hevanmayam said...
பழமைபேசி, மேவி,தமிழிச்சி,சதீஷ் நன்றி
satheesh said...

Its really informative.For longer period of time i want to see these kind of pictures to know about post mortem.//

சதீஷ்!! மிக்க நன்றி!!
-----------------------------
Blogger தமிழிச்சி said...

இறந்த உடலை இப்படிப் பார்க்கவே முடியாமல் இருக்கிறது, தேவா. தன் சொந்தத் தாயையும் தகப்பனையும் இந்தக் கோர நிலையில் கண்ட எங்கள் ஈழக் குழந்தைகளின் நினைவு வந்து கலங்க வைத்து விட்டது.///

என்ன செய்வது! கடினம்தான் நண்பரே..
-------------------------
Blogger MayVee said...

படங்கள் தந்த விளக்கம் அருமை .....

பிறகு மண்டை ஓட்டை எப்படி உடைபங்க ?????
விசஷ கருவி எதாவது இருக்கிறதா ?????///

மேவி!! ஆமா மேவி! சுத்தியலும் உளியும்!!
------------------------------

Blogger பழமைபேசி said...

இதுல சந்தேகமா... புடி ஓட்டம்...///

பழமை!! இப்படி ஓடினா எப்படி?
-------------------------------------------------------டொன்’ லீ said...
ம்...உண்மையாகவே இத பண்ணிற டொக்டர்மார் நிலைமை பரிதாபம் தான்..ஆனா போக போக பழகிடும் என்ன...?//
பாசக்கார டொன்லி!!
--------------------------------------------------------வழிப்போக்கன் said...
படங்க்கள் நிஜமாவே பயங்கரமா இருக்கு...
ஆனாலும் அறிந்தேன்...
நன்றி..///
நன்றி!
12 June 2009 09:19
---------------------------------------------------------
17

தேவன் மாயம் said...

ackiesekar said...
எனக்கு இந்த அjனுபவம் இருக்கின்றது...

நான் போட்டோ கூட எடுத்து இருக்கிறேன் அது பற்றிய பதிவு விரைவில்

ஜாக்கிசேகர்//
போடுங்க !!

12 June 2009 09:29
---------------------------------------------------------
ஆ.ஞானசேகரன் said...
தேவன் சார், நீஙகள் எடுத்த படத்தையும் போடுங்களேன்... நல்ல பகிர்வு///
சரி நண்பா!
12 June 2009 11:18
---------------------------------------------------------செந்தில்குமார் said...
டாக்டர்,

இன்சூரன்ஸ் , இறப்புச்சான்றிதழ் கிடைக்க பிரேத பரிசோதனை கட்டாயமா என்ன ?

படங்கள் பாக்கறதுக்கு ரொம்ப அதிர்ச்சியாவும் பயமாவும் இருந்தது உண்மை...//
ஆம்!! வேண்டும்!
தேவதாசன் said...
இது இறந்தவரின் உடல் அல்லவா? உயிரோடு ஈழ மக்களின் உடல்களை எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி பரிசோதித்தாரே! பார்க்கவே வேண்டாம்.///
வருந்துகிறேன்!!
---------------------------------------------------------

புருனோ Bruno said...
//செய்து உடன் கொடுக்காமல் அந்தச் சூழ்நிலையிலும் அவரது பிணத்தை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்ததை என் கணவர் கண்ணால் கண்டு கொதித்து சண்டையிட்டாராம்.//

பிறகு எப்படி வகுப்பெடுக்க வேண்டும் ??

லஞ்சம் கேட்டிருந்து கோபப்பட்டால் நியாயம்.

இது ஒன்றும் கொதித்து சண்டையிடும் செயல் அல்ல என்பது என் கருத்து

அவர்கள் நினைப்பது இது ஏதோ வைத்தியர் தன சொந்த தேவைக்காக செய்வது என்று நினைப்பவர்களே அதிகம்///
அவர்கள் அறியாமல் கூறுகிறார்கள்!!
cheena (சீனா) said...
mmmmm - நல்ல தகவல்கள் நிறைந்த இடுகை- நீங்கள் செய்த பிரேத பரிசோதனை பட்ங்களும் போடுங்கள் - நம் நாடு எப்படி இருக்கிறது – பார்ப்போம்//
போடுவோங்க்ணா
12 June 2009 19:17
-----------------------------------------------------
Cable Sankar said...
உங்க படங்களையும், மேலும் இதை பற்றிய செய்திகளையும், தெரிய படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.//
வாங்க ! செய்கிறேன்!!
12 June 2009 20:40
ஸ்ரீதர் said...
நீங்கள் செய்த pm படங்களையும் வெளியிடுங்கள். நான் ஏற்கெனவே இது தொடர்பான வீடியோ ஒன்றை பார்த்திருக்கிறேன். youtube ல்.///
பார்க்கிறேன்!!
--------------------------------------------------------
அபி அப்பா said...
எல்லா டாக்டர்ஸ்ம் சேர்ந்து என்ன கூத்து அடிக்கிறீங்க! ஏண் தான் இந்த பதிவை பார்த்தோமான்னு இருக்கு. எல்லா டாக்டர்ஸ்ம் சேர்ந்து என்ன கூத்து அடிக்கிறீங்க! ஏண் தான் இந்த பதிவை பார்த்தோமான்னு இருக்கு.//

நண்பரே!! உடல் சரியாகிவிட்டதா? ஏன் இந்த மாதிரி பதிவுக்கு எச்சரிக்கை செய்தும் வருகிறீர்கள்! எவ்வளவு பேர் இன்னும் தகவல் வேண்டும், நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். இதைவிட ஆங்கில ப்ளாகுகளில் அருமையா,வெளிப்படையா,மக்கள் தெரிந்து கொள்ளும்படியா எழுதுகிறார்கள். இது போல் இன்னும் நிறைய உள்ளது. விவாதங்களும் சந்தேகங்களும் ஆரோக்கியமானவை!! அவற்றை நான் வரவேற்கிறேன்!!
அன்புடன் தேவா
அபி அப்பா said...
டாக்டர் நல்லா இருக்கேன். வாமிட்டிங் இப்ப இல்லை. ஆனா டயர்டு தான் அதிகமா இருக்கு. இளநீர், சாத்துகுடி, கஞ்சி தான் உணவு. காலையும் மாலையும் டாக்டர் ரூம்க்கு வந்து பார்த்துக்கறார்.

லைட்டா பயமா இருந்துச்சு. அப்ப இந்த பதிவை படிச்சுட்டனா, அதான் அப்படி ஒரு ஜாலி பின்னூட்டம் போட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க!///

உடல் நலத்தை நல்லா கவனிங்க!! நலம் பெற வேண்டுகிறேன்!! 13 June 2009 01:52 12 June 2009 21:

ஆகாய நதி said...

படங்கள் மூலம் நடப்பதை புரிந்துகொள்ள முடிகிறது... ஆனால் இறந்தவுடன் மனித உடல் பல கெட்ட கிருமிகளின் உறைவிடமாகத்தானே மாறுகிறது? பின் ஏன் இப்படங்களில் மருத்துவர்களும் மாணவர்களும் முகத்திற்கு உறை அணியவில்லை?

பிரேதப்பரிசோதனை செய்யும் மருத்துவருக்கும் தைரியம் அதிகம் வேந்தும் போல...

உண்மைத்தமிழன் said...

ஐயோ போஸ்ட்மார்ட்டம்னா இப்படியெல்லாம் செய்யணுமா..?

நல்ல வேளை நான் டாக்டருக்கு படிக்கல.. தப்பிச்சேன்..

சி.கருணாகரசு said...

பயங்கரமான படம்தான்... ஆனா தெரிஞ்சிக்க வேண்டியதுதான்.

ttpian said...

please do the post mortam for manjal thuntu/green saree cabara dancer!

Anonymous said...

வீடியோ வரவே இல்லை 😔

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory