Wednesday, 3 June 2009

மறதிநோய்,நடுக்குவாதம்(Alziemers&Parkinsons disease)-புதிய சிகிச்சை!!!

இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.

மருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.

அல்சீமர் நோய் என்பது  ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையா?மாலையா? என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.

பார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.

இன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.

அனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

இத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள்.  இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து  சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.

இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.

நீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.

என்னுடைய ஆண்கள் அமுதூட்டமுடியுமா? இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.

தலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..)

இந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்!!

37 comments:

நட்புடன் ஜமால் said...

\\பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) \\இதுவரை கேள்விப்பட்டதில்லை

நன்றி மருத்துவரே

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தேவா

யூத் விகடனுக்கும்

அதிகம் வாக்குகள் பெற்றதர்க்கும்

thevanmayam said...

\\பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) \\இதுவரை கேள்விப்பட்டதில்லை

நன்றி மருத்துவரே///

அப்படியா? தெரியும் என்று எண்ணியிருந்தேன்!!

thevanmayam said...

வாழ்த்துகள் தேவா

யூத் விகடனுக்கும்

அதிகம் வாக்குகள் பெற்றதர்க்கும்///

நன்றி ஜமால்!!

"அகநாழிகை" said...

டாக்டர் தேவா,
தொழில் சார்ந்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

வால்பையன் said...

எனக்கு Insomnia இருக்கு டாக்டர்!

மன அம்பந்தமான சிகிச்சைகளுக்கு தரும் மருந்துகள் மூளையை மழுக்கும் என்னும் பேச்சுகளால் சிகிச்சை எடுக்காமல் இருக்கிறேன்!

என்ன செய்யலாம் ஒரு ஐடியா கொடுங்க!

வேத்தியன் said...

மிகவும் பயனுள்ள பதிவு தேவா...

இன்றுதான் இந்த நோய்கள் பற்றி தெரிந்து கொண்டேன்...

நன்றி...

வேத்தியன் said...

ஓட்டுப் போட்டாச்சு...

:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

துறை சார்ந்த நல்ல பதிவு தேவா சார்..:-)

Anonymous said...

பயனுள்ள பதிவுகளா போட்டு பாஸ் மார்க்கா வாங்கறீங்க.....வாழ்த்துக்கள்.......

எனக்கும் ஞாபகமறதி அதிகம் தாங்க...என்ன கவலை என்றால் முதல் வரி எழுதத் தொடங்கும்
முன்னே அடுத்த வரி அடுத்த வரி என்று மனம் தொடுத்துக் கொண்டே இருக்கும் முதல் வரி எழுதி முடிக்கும் போது அத்தனையும் மறந்திருப்பேன்.....இது சும்மா ஒரு உதாரணம் தாங்க நிறைய ரணங்களையும் இப்படித் தான் மறந்திடறேன்.........உங்கள் பதிவைப் படித்தவுடன் யோசிக்கிறேன்..இது எனக்கு வந்த நோயோ?...........

இராகவன் நைஜிரியா said...

பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி பர்கின்சன்ஸ் வியாதியால் தான் அவதிப்படுகின்றார்.

மறதி நோய், 1983 -ல் எனது உற்ற நண்பன் தாத்தா அவர்களுக்கு வந்து, சுமார் 30 நாட்களில் அவர் நினைவை சுத்தமாக இழந்து, இறந்தும் விட்டார்.

இது வராமல் தடுப்பதற்கு, முன்னெசரிக்கை நடவடிக்கை எதாவது இருக்கின்றதா என்று சொல்லுங்களேன்.

வாழ்த்துகள் - யூத் விகடனில் உங்கள் இடுகை வந்ததற்கும், அதிக வாக்குகள் பெற்றதற்கும்.

thevanmayam said...

மிகவும் பயனுள்ள பதிவு தேவா...

இன்றுதான் இந்த நோய்கள் பற்றி தெரிந்து கொண்டேன்...

நன்றி.//

நன்று வேத்தியன்

thevanmayam said...

டாக்டர் தேவா,
தொழில் சார்ந்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்///

வாங்க!!

thevanmayam said...

எனக்கு Insomnia இருக்கு டாக்டர்!

மன அம்பந்தமான சிகிச்சைகளுக்கு தரும் மருந்துகள் மூளையை மழுக்கும் என்னும் பேச்சுகளால் சிகிச்சை எடுக்காமல் இருக்கிறேன்!

என்ன செய்யலாம் ஒரு ஐடியா கொடுங்க!///

விரிவாக சொல்கிறேன்!!

thevanmayam said...

பயனுள்ள பதிவுகளா போட்டு பாஸ் மார்க்கா வாங்கறீங்க.....வாழ்த்துக்கள்.......

எனக்கும் ஞாபகமறதி அதிகம் தாங்க...என்ன கவலை என்றால் முதல் வரி எழுதத் தொடங்கும்
முன்னே அடுத்த வரி அடுத்த வரி என்று மனம் தொடுத்துக் கொண்டே இருக்கும் முதல் வரி எழுதி முடிக்கும் போது அத்தனையும் மறந்திருப்பேன்.....இது சும்மா ஒரு உதாரணம் தாங்க நிறைய ரணங்களையும் இப்படித் தான் மறந்திடறேன்.........உங்கள் பதிவைப் படித்தவுடன் யோசிக்கிறேன்..இது எனக்கு வந்த நோயோ?......///

இல்லை !இது கடவுள் தந்த வரம் உங்களுக்கு இந்த வியாதியில்லை! பயப்படவேண்டாம்!!

thevanmayam said...

பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி பர்கின்சன்ஸ் வியாதியால் தான் அவதிப்படுகின்றார்.

மறதி நோய், 1983 -ல் எனது உற்ற நண்பன் தாத்தா அவர்களுக்கு வந்து, சுமார் 30 நாட்களில் அவர் நினைவை சுத்தமாக இழந்து, இறந்தும் விட்டார்.

இது வராமல் தடுப்பதற்கு, முன்னெசரிக்கை நடவடிக்கை எதாவது இருக்கின்றதா என்று சொல்லுங்களேன்.

வாழ்த்துகள் - யூத் விகடனில் உங்கள் இடுகை வந்ததற்கும், அதிக வாக்குகள் பெற்றதற்கும்.//

வாழ்த்துக்கு நன்றி!

விரிவாக ஒரு பதிவில் பார்ப்போம்!!

சாந்தி ரமேஷ் வவுனியன் said...

டாக்குத்தரய்யாவின் மருத்துவ ஆலோசனைகளுக்கு நன்றிகள்.


//மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.//

இது கொஞ்சம் யோசிக்க வேண்டியதாயிருக்கு டாக்குத்தரே !
இப்பிடியான நிலமை எல்லா வீடுகளிலயும் எல்லா நபர்களிடத்திலயும் இருக்குதே.

சாந்தி

புதுகைத் தென்றல் said...

பார்கின்ஸ்ன் வியாதி இதனால் என் மாமியார் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு 2 அடியில் கடக்கும் தூரத்தைக்கூட 15 நிமிடத்தில் தான் அவரால் கடக்க இயலும்.

முறையான மருத்துவ வசதி(அப்போது இந்த நோய் பற்றியே அதிகம் தெரியாது) இல்லாததால் 9 வருடங்கள் முன்பு அந்த நோயுடனே பலவருடங்கள் போராடி இறந்துவிட்டார்.

பழமைபேசி said...

வாழ்த்துகள் ஐயா! அடிச்சு ஆடுங்க அப்ப!!

" உழவன் " " Uzhavan " said...

பயனுள்ள பதிவு தேவன் சார்..

பித்தன் said...

உங்க எண்ணம் புரியுது சார் இத படிகுறவன் எவனுக்கும் பொண்ணு தரகூடாது அதுதானே ? தமிழ்நாட்டுல யாருக்கு ஞாபக சக்தி இருக்குன்னு சொல்லுங்க... அப்படி இருந்த ஒருகட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது :)

***

நல்ல பதிவு :)

thevanmayam said...

டாக்குத்தரய்யாவின் மருத்துவ ஆலோசனைகளுக்கு நன்றிகள்.


//மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.//

இது கொஞ்சம் யோசிக்க வேண்டியதாயிருக்கு டாக்குத்தரே !
இப்பிடியான நிலமை எல்லா வீடுகளிலயும் எல்லா நபர்களிடத்திலயும் இருக்குதே.
///

சாதாரணமாக ஏற்படுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை!!

thevanmayam said...

பார்கின்ஸ்ன் வியாதி இதனால் என் மாமியார் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு 2 அடியில் கடக்கும் தூரத்தைக்கூட 15 நிமிடத்தில் தான் அவரால் கடக்க இயலும்.

முறையான மருத்துவ வசதி(அப்போது இந்த நோய் பற்றியே அதிகம் தெரியாது) இல்லாததால் 9 வருடங்கள் முன்பு அந்த நோயுடனே பலவருடங்கள் போராடி இறந்துவிட்டார்.///


உண்மை! தற்போது சிகிச்சைமுறைகளால் கட்டுப்படுத்தலாம்!!

thevanmayam said...

நன்றி!
பழமை!
பதிவு இயந்திரம் ஏதும் வைத்துள்ளீர்களா?பதிவா போட்டுத்தாக்கிறீயளே!
பின்னுரீயளேப்பு!!

thevanmayam said...

உங்க எண்ணம் புரியுது சார் இத படிகுறவன் எவனுக்கும் பொண்ணு தரகூடாது அதுதானே ? தமிழ்நாட்டுல யாருக்கு ஞாபக சக்தி இருக்குன்னு சொல்லுங்க... அப்படி இருந்த ஒருகட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது :)

***

நல்ல பதிவு :)///

பித்தன்!!

இந்த இடுகையையும் மறந்துவிடுவாங்க.கவலையை விடுங்க!

thevanmayam said...

பயனுள்ள பதிவு தேவன் சார்///

நன்றி உழவன்!!

sakthi said...

இப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள்.

பார்கின்சன், அல்சீமர் பற்றி முன்பே தெரிந்தாலும் இந்த தகவல் புதியது
நல்ல பகிர்வு மருத்துவரே.....

vinoth gowtham said...

தகவல்கள் புதுசு..

குறும்பன் said...

//இந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது//

குழப்பமா இருக்குதே. 20 ம் நூற்றாண்டை சொல்லறீங்களா இல்லை 21 ம் நூற்றாண்டை சொல்லறீங்களா? இஃகிஃகி

//( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை! இஃகி! இஃகி! இஃகி..) //

எந்த இடுகையும் மொக்கை இல்லை என்பது பழமைபேசியாரின் கருத்து.

ஆதவா said...

இசையால் மழைதான் வரும் என்று முன்பு சொல்வார்கள்... இப்போ மருந்துமாக இருக்கிறதா??

ஆதவா said...

ஞாபக மறதி நமக்கு கொஞ்சம் ஜாஸ்திதான்... பயனுள்ள பதிவு

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு
இசை மருத்துவம் வாயிலாக நோய்களை நீக்குவது சாத்தியம் தான் . சங்க இலக்கியங்களில் கூட இசை மருத்துவம் பற்றி பல குறிப்புகள் உள்ளன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும்" பயனுள்ள செய்தி. பணிக்கு வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் said...

நீங்க பெரிய டாக்குத்தர் சாமியோவ்!
பகிர்விற்கு நன்றி அண்ணா...
:)))

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ள பதிவு தேவன் சார்.

ஒரு சில; நோயைவிட நோய்ப்பற்றிய பயம் கொடுமையானதாக இருக்கின்றது டாக்டர்.

ஒரு நோயின் அறிகுறிகள் தெரிந்துக்கொண்டால் எல்லாம் நமக்கு இருப்பதுபோல தோன்றுவது ஏன்?

இய‌ற்கை said...

தொழில் சார்ந்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

மணிநரேன் said...

நல்ல பயனுள்ள இடுகை தேவன்..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory