Monday 22 June 2009

என் கவிதைகள்!!

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!

அதில் உங்களுக்கான்

தூண்டில்கள் இல்லை!



ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!



ஒரு பைன் மரக்காட்டைக்

கடந்து செல்லும்

பயணி போல்

என் கவிதை

உங்களைக் கடந்து செல்லும்!



ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!



உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!



முகம் அறியாத

குயிலின் பாடல்போல்

கடந்து செல்லும்

இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!



தமிழ்த்துளி தேவன்மாயம்...

39 comments:

வழிப்போக்கன் said...

அருமையான கவிதை...
என் மனதை தென்றல் போல் வருடியது....
:)))

வழிப்போக்கன் said...

தொடர்க உங்கள் பணி...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!//

அருமை லேசான தூறல் நான் சேத்துக்குறேன் -:)

cheena (சீனா) said...

அன்பின் தேவா

கவிதை எனில் இது கவிதை - மெல்ல வந்து வருடிச் செல்லும் தென்றல் போல - நான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தழுவும் காற்று போல - கவிதை இருப்பது நன்று

நல்வாழ்த்துகள் தேவா

தேவன் மாயம் said...

நன்றி!!
வழி!!!

தேவன் மாயம் said...

/உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!//

அருமை லேசான தூறல் நான் சேத்துக்குறேன் -:)///
உங்கள் விருப்பம் நண்பரே!!

தேவன் மாயம் said...

அன்பின் தேவா

கவிதை எனில் இது கவிதை - மெல்ல வந்து வருடிச் செல்லும் தென்றல் போல - நான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தழுவும் காற்று போல - கவிதை இருப்பது நன்று

நல்வாழ்த்துகள் தேவா//

மிக்க நன்றி!! தங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன!!

Menaga Sathia said...

அழகான கவிதை,இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

அழகான கவிதை,இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!/

நன்றி நண்பரே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

duraian said...

அச்சில் வார்த்த வார்த்தைகள்
அளவெடுத்து செதுக்கிய வரிகள்
ஆழ்மனம் தொடும் உணர்வுகள்
அற்புதம் உன் கவிதைகள்

Arasi Raj said...

அதெல்லாம் சரி..கவிதையை எங்க? அதப் போடுங்கப்பா ..

ஹி ஹி...அருமை மருத்துவரே...தெளிந்த நீரோடை போல இருக்கு

வேத்தியன் said...

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!//

அதிலென்ன சந்தேகம்??
:-)

வேத்தியன் said...

உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!//

ஏனோ தெரியாமல் பிடித்திருக்கின்றது தேவா...

வேத்தியன் said...

நல்லா வந்திருக்கு..

வாக்கும் கொடுத்தாச்சு...

pudugaithendral said...

கதை, கவிதை எல்லாம் கலக்கறீங்களே டாக்டர்.

உங்களுக்கு எப்படி நேரம் இருக்கு???

மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா

பழமைபேசி said...

//வேத்தியன் said...
நல்லா வந்திருக்கு..

வாக்கும் கொடுத்தாச்சு...
//

நாங்க மட்டும் என்னவாம்? இஃகிஃகி!

மேவி... said...

vaippugal illai...

arumai

ப்ரியமுடன் வசந்த் said...

அழகான கவிதை

Unknown said...

சூப்பரப்பு......!!! வாழ்த்துக்கள்....!!!!

நிலவகன் said...

அது சரி கவிதை எங்கே நண்பரே?
haahaahaa

சும்மா தமாஷ்

வித்தியாசமான கரு
வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

கவிதைகளின் தன்மையை கவித்துவமான சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

அழகாக இருக்கின்றது கவிதை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சபாஷ்.கலக்கிட்டீங்க .இதுக்குப் போடனும் ஓட்டு.

Unknown said...

have you seen Pine Forest?

'Padimam' should reflect the geography. :)

I STOPPED AFTER THAT LINE. :(

ஆ.ஞானசேகரன் said...

//இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!//

நல்ல வரிகளுடன் கலக்கிட்டீங்க சார்

நட்புடன் ஜமால் said...

ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!\\

நீங்கள் நண்பர் என்பதால் உங்கள் வரிகளும் அப்படித்தானே ...

தேவன் மாயம் said...

இசை said...

have you seen Pine Forest?

'Padimam' should reflect the geography. :)

I STOPPED AFTER THAT LINE. :(///

அன்பு நண்பரே!!
பைன் மரக்காடுகளை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.மலையேறுதலும் செய்திருக்கிறேன்..கொடைக்கானலில்.!!!
நீங்களும் கொடைக்கானல் சென்று பார்த்து விட்டு வந்து மிச்ச வரிகளைப் படியுங்கள்!!

தேவன் மாயம் said...

Blogger Mrs.Menagasathia said...

அழகான கவிதை,இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!///

நன்றி நண்பரே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!
--------------------------------
Blogger DURAI.N.U 9443337783 said...

அச்சில் வார்த்த வார்த்தைகள்
அளவெடுத்து செதுக்கிய வரிகள்
ஆழ்மனம் தொடும் உணர்வுகள்
அற்புதம் உன் கவிதைகள்///

நல்ல கவிதைகள் எழுதும் நீங்கள் தமிழ்மணத்தில் சேரவும்.
------------------------------
Blogger நிலாவும் அம்மாவும் said...

அதெல்லாம் சரி..கவிதையை எங்க? அதப் போடுங்கப்பா ..

ஹி ஹி...அருமை மருத்துவரே...தெளிந்த நீரோடை போல இருக்கு///

ஊருக்குப் போயிட்டிங்களா? பதிவு இன்னும் போடலியா?
---------------------------
Blogger வேத்தியன் said...

என் கவிதை

உங்களுக்குப் பிடிக்கும்!//

அதிலென்ன சந்தேகம்??
:-)

22 June 2009 08:27
Delete
Blogger வேத்தியன் said...

உங்களிடம் அது

எதையும் வேண்டாது,

ஒரு இனிய

மாலைப்பொழுதுபோல்!!//

ஏனோ தெரியாமல்

22 June 2009 08:28
Delete
Blogger வேத்தியன் said...

நல்லா வந்திருக்கு..

வாக்கும் கொடுத்தாச்சு..//

வாக்குக்கு நன்றி வேத்தியன்!!
-----------------------------.
Blogger புதுகைத் தென்றல் said...

கதை, கவிதை எல்லாம் கலக்கறீங்களே டாக்டர்.

உங்களுக்கு எப்படி நேரம் இருக்கு???

மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா///
நீங்கள் கேட்ட கட்டுரை விரைவில் எழுதுகிறேன்.
-------------------------------
Blogger பழமைபேசி said...

//வேத்தியன் said...
நல்லா வந்திருக்கு..

வாக்கும் கொடுத்தாச்சு...
//

நாங்க மட்டும் என்னவாம்? இஃகிஃகி!///
இது சூப்பர்....இஃகி இஃகி இஃகி.........
--------------------------
Blogger MayVee said...

vaippugal illai...

arumai//
மேவி !!! வாழ்த்துக்கு நன்றி!!
------------------------------
Blogger பிரியமுடன்.........வசந்த் said...

அழகான கவிதை//
வசந்த் வருக!!
-------------------------

22 June 2009 09:26

Blogger லவ்டேல் மேடி said...

சூப்பரப்பு......!!! வாழ்த்துக்கள்....!!!!//
வாங்கப்பு!!!
----------------------------

22 June 2009 09:30
Delete
Blogger nilavakan said...

அது சரி கவிதை எங்கே நண்பரே?
haahaahaa

சும்மா தமாஷ்

வித்தியாசமான கரு
வாழ்த்துக்கள்//
கலாய்ங்க! ஹும் .. எனக்கும் ஒரு நேரம் வரும்......இஃகி இஃகி...
-----------------------------

22 June 2009 09:34
Delete
Blogger அபுஅஃப்ஸர் said...

கவிதைகளின் தன்மையை கவித்துவமான சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்///
அபு, மிக்க நன்றி!!
-----------------------

22 June 2009 10:05
Delete
Blogger ஆ.முத்துராமலிங்கம் said...

அழகாக இருக்கின்றது கவிதை///
வருகைக்கு நன்றி!!
----------------------------

22 June 2009 10:08
Delete
Blogger ஸ்ரீதர் said...

சபாஷ்.கலக்கிட்டீங்க .இதுக்குப் போடனும் ஓட்டு.//
ஸ்ரீதர்... நன்றி!1
-------------------------

22 June 2009 12:29
Delete
Blogger ஆ.ஞானசேகரன் said...

//இன்னொரு இடம்,

காலம் நோக்கி!!!//

நல்ல வரிகளுடன் கலக்கிட்டீங்க சார்///
கவிதை பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!!
----------------------------

22 June 2009 17:51
Delete
Blogger நட்புடன் ஜமால் said...

ஒரு நெருங்கிய

நண்பன் போல்

அது உங்கள் நெஞ்சுக்குள்

புகும்!\\

நீங்கள் நண்பர் என்பதால் உங்கள் வரிகளும் அப்படித்தானே ..//
ஆஹா!! ஜமால்!! கொன்னுட்டிங்க!!
------------------------------

22 June 2009 18:03

வால்பையன் said...

இது மீள்பதிவா!
படிச்சமாதிரி ஞாபகத்தில் கேட்டேன்!

யூர்கன் க்ருகியர் said...

உங்க கவிதைகள் இந்த வேலையெல்லாம் பண்ணுதா ? சபாசு ! :)

சொல்லரசன் said...

புதுகைத் தென்றல் said...
//கதை, கவிதை எல்லாம் கலக்கறீங்களே டாக்டர்.

உங்களுக்கு எப்படி நேரம் இருக்கு???//

இதே சந்தேகம்தான் டாக்டர் எனக்கும்.

தேவன் மாயம் said...

thevanmayam said...
வால்பையன் said...
இது மீள்பதிவா!
படிச்சமாதிரி ஞாபகத்தில் கேட்டேன்!///

இதானே வேணாங்கிறது!!
------------------------------

22 June 2009 21:48

யூர்கன் க்ருகியர்..... said...
உங்க கவிதைகள் இந்த வேலையெல்லாம் பண்ணுதா ? சபாசு ! :)///
ரொம்ப யோசித்துத்தான் நானே தெரிஞ்சுக்கிட்டேன்!!!
---------------------------
சொல்லரசன் said...
புதுகைத் தென்றல் said...
//கதை, கவிதை எல்லாம் கலக்கறீங்களே டாக்டர்.

உங்களுக்கு எப்படி நேரம் இருக்கு???//

இதே சந்தேகம்தான் டாக்டர் எனக்கும்.??////

தமிழ்த்துளி தேவா..
-----------------
அட சொல்லரசன் !!! எனக்கும் அதுதாங்க ரொம்ப நாள் டவுட்....இஃகி,இஃகி..இஃகி.

_______________________________
______________________________

குடந்தை அன்புமணி said...

கவிதைகள் எதையும் வேண்டுவதில்லைதான்... ஆனால் எதாவதொரு உணர்வை தந்துவிட்டே செல்லும்...

குமரை நிலாவன் said...

ஒரு குளிர்ந்த நீரோடை

போல்

உங்கள் கால்களை

தழுவிச்செல்லும்!


கவிதை அருமை தேவா சார்

Rajeswari said...

கவிதை அழகாய் வந்துள்ளது.

Anonymous said...

மெல்ல வருடிய மெல்லிய தென்றல்...சுகமாய் தொட்டது சுவாசத்தை.....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை நன்றாக இருக்கிறது. சகல கலா வல்லவன் என்று நிரூபிக்காமல் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது.

Sinthu said...

Nicw poem..

ராமலக்ஷ்மி said...

வெகு அழகு, என்ன சொல்லியிருக்கிறீர்களோ அப்படித்தான் இருக்கிறது இக்கவிதை. பாராட்டுக்கள் தேவன்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory