Tuesday, 9 June 2009

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.

அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.

இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே...

 

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!

நல்லா யோசிங்க.. கெண்டகி வறுவல் உண்ணும்முன்..

ஓட்டுகளை தமிழ்மணம், தமிலிஷில் போடுங்கள்!!

40 comments:

பழமைபேசி said...

தமிலிசு?

பழமைபேசி said...

//மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.//

செல்லாது, செல்லாது... நாங்கெல்லாம் விரைவு உணவகத்துக்கு போற சோலியே கெடையாதே? இஃகிஃகி, ஆனா, நல்ல உபகோகமான அவசியமான தகவல்... சபாசு!

thevanmayam said...

/மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.//

செல்லாது, செல்லாது... நாங்கெல்லாம் விரைவு உணவகத்துக்கு போற சோலியே கெடையாதே? இஃகிஃகி, ஆனா, நல்ல உபகோகமான அவசியமான தகவல்... சபாசு!///

இதை உண்ணாததுக்கு ஒரு சொட்டு! (ஷொட்டு) !! இஃகி இஃகி இஃகி!!!

ராஜ நடராஜன் said...

இதுகதான் கெண்டகியா?எனக்கு கெண்டகி,பெப்சின்னாலே சரிப்பட்டு வர்றதுல்ல.நான் தப்பிச்சேன்.

நிகழ்காலத்தில்... said...

உபயோகமான தகவல்.

வாழ்த்துக்கள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சினிமா கோழிகளா சார்..,

மொழுமொழுன்னு இருக்கு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இரண்டு ஓட்டும் போட்டாச்சு சார்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல உபகோகமான அவசியமான தகவல்

thanks sir

அமர பாரதி said...

என்னது, காந்திய சுட்டுட்டாய்ங்களா?

Anonymous said...

Meipporul Kaanba thaRivu :)

http://www.unh.edu/BoilerPlate/kfc.html

http://www.snopes.com/lost/kfc.asp

http://www.snopes.com/horrors/food/kfc.asp

ILA said...

என்னது, காந்திய சுட்டுட்டாய்ங்களா?

தமிழிச்சி said...

ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை ? இனி எப்படி கென்டுக்கி கோழியைச் சாப்பிட முடியும்.
எழுதினால் காணாதென்று படமெல்லாம் போட்டுக் காட்டியிருகிறீர்களே!
கிழமையில் இரண்டு தரம் கென்டுக்கி சாப்பிடும் என் கதி என்னாகும் என்று சுற்று யோசித்துப் பாருங்கள்.

Anonymous said...

Thanks for the post but this a decade old news.

அ.மு.செய்யது said...

KFC நாங்க விரும்பி சாப்டறதாச்சே !!!

அதுல இவ்ளோ மேட்டர் இருக்கா ??

தேங்க்ஸ் தேவா தகவலுக்கு !!

இராகவன் நைஜிரியா said...

அதிர்ச்சியா இருக்குங்க...

பணத்திற்க்காக மனித உயிர்களுடன் இப்படி எல்லாமா விளையாடுவார்கள்...

நசரேயன் said...

நான் வேற கோழி யோன்னு நினச்சேன்

சாதிக் அலி said...

அதிர்ச்சி அடைய வேண்டாம் இது வெறும் வதந்தி தான்.அனானியின் ஹைப்பர் லின்குகளை பார்த்து விடுங்கள்.படத்தில் இறகு இல்லாத கோழிக்கு அருகில் முழுதாய் கிடக்கும் இறகுகள் எந்த கோழியினுடையது?

நந்தவனத்தான் said...

இது ஒரு புரட்டு மெயில்

மரபணு மாற்றம் பெற்ற உயிரிணங்களை சாப்பிடுவதால் எந்த கெடுதலும் இல்லை.

மேலும் இது மாதிரி மெயில்களை டுபாக்கூர் என ஹாம்ப்சயர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள டிஸ்கி!
http://www.unh.edu/BoilerPlate/kfc.html


இதை கண்டுகாம KFC-ல வெட்டுங்க மக்கா!

Anonymous said...

//இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது.///
நம்ம ஊர் ப்ராய்லர் கோழி கூட இது மாதிரிதான்...

நட்புடன் ஜமால் said...

நல்லா கிளப்புறாங்கப்பூ ...

KFCயில் கோழியின் தோல் இருப்பதால் நான் உண்பதில்லை.

இந்த படங்கள் பார்த்துவிட்டு கொஞ்ச நாட்கள் கோழியை பற்றி நினைப்பதே ஒரு மாதிரியாத்தான் இருக்கும்.

நமக்கு மறதி ஜாஸ்த்திங்கோ ...

thevanmayam said...

அன்பு நண்பர்களே!!
இந்த செய்தி நெட்டில் உலவியதால் தகவல் சொல்லும் நல் நோக்குடன் பதிவிட்டேன். இதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்..
அன்புடன் தேவா...

பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி!!

’டொன்’ லீ said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

வேத்தியன் said...

பயனுள்ள தகவல் தேவா...

நான் உண்பதில்லை..
வெஜிடேரியன்..

வேத்தியன் said...

சிறு விண்ணப்பம் தேவா...

நான் எழுத விடயமில்லாமல் காய்ந்து போயிருக்கிறேன்..
எங்க இருந்து தகவல் எடுக்கிறீங்கன்னு கொஞ்சம் தகவலை மெயில் பண்ணிடுங்களேன்..
:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லதோ, நல்லது இல்லையோ.. இது போன்ற உணவுகளுக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது தேவா சார்,.. நமக்கு லோக்கல் போதும்

யூர்கன் க்ருகியர்..... said...

கொக்கரக்கோ கும்மாங்கோ !

புதுகைத் தென்றல் said...

நான் கேள்விப்பட்ட மற்றுமொரு தகவல் இவ்வகை உணவகங்களில் கோழியின் ரத்தம் தரும் சுவைக்காக கழுத்தறுத்து கொல்லாமல் சுடு தண்ணீரில் அமுக்கி கொல்வார்களாம்.

என்னகொடுமையோ நானெல்லாம் சுத்த சைவம். நீங்க சொல்வதை கேட்டாவது பலர் மாறினால் சரி தேவா

புதுகைத் தென்றல் said...

தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தேனே,

கேள்வியும் நானே பதிலும் நானே பதிவில் பாருங்க

ஸ்ரீதர் said...

நான் சைவம் அதுனால எனக்கு இது மாதிரி கவலையெல்லாம் கிடையாது சார்.

நேசன்..., said...

இவங்களோட தனிப்பட்ட ருசிக்கு இது தான் காரணமா?...இந்திய கெண்டகிக்கும் அமெரிக்கவுலேர்ந்து தான் கோழி வருதா?......

கிருட்டிணன் said...

சைவர்களாக இருப்பவர்கள் ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வேண்டாம். மரபணு மாற்றம் செய்வதால் உடலுக்கு தீங்கு என்பது உண்மையானால், சைவம் அசைவம் ரெண்டுமே ஒன்றுதான். நாம் தினமும் உண்ணும் அரிசியில் இருந்தே மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தான் உண்கிறோம். இல்லேனா இவ்ளோ மக்கள் தொகைக்கு சோத்துக்கு எங்க போறது ?

வழிப்போக்கன் said...

நல்ல தகவல் அண்ணா...
:)))

ஜீவன் said...

என்னப்பா ! இது ? உரிச்ச கோழி உயிரோட நிக்கு?

அபுஅஃப்ஸர் said...

தேவா சார்

இது ரொம்ப நாளைக்கு முன்னமே வந்துவிட்ட்து, ஒரு வகையான மாயை இந்த கென்டகி சிக்கன்... நீங்க தலைகீழா இருந்து சொன்னாலும் யாரும் ஒதுக்க போவது இல்லை....

வார இறுதி நாட்களில் 2 மணி நேரம் காத்திருந்து வாங்கி திண்கிறார்கள்

Anonymous said...

ஆலிவுட் நடிகை ஏன்சலினா சோலி தன் வயிற்றில் பின்வருமாறு பச்சை குத்தி உள்ளாராம்.

"what you eat destroys you"

"நீங்கள் உண்ணும் உணவு உங்களை அழிக்கிறது"

இந்த வாக்கியம் பச்சை குத்திய இடம் பற்றி எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் இந்த பதிவிற்கு இந்த வாக்கியம் மிகவும் பொருந்தும்.

பித்தன் said...

கலிமுத்திடுத்து...

******

அசைவம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா ?

நம்மளோட அபிபிராயத்த பாருங்க
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_17.html

Anonymous said...

கோழி ஆசையே போயிடிச்சுங்க .....எச்சரிக்கை மற்றும் பயனுள்ள தகவல்..... நன்றி

" உழவன் " " Uzhavan " said...

நம்ம ஊரு சிக்கன் பக்கோடா சாப்பிடலாம்ல? நம்மளால அசைவம் சாப்பிடாமலாம் இருக்க முடியாது :-)

காரணம் ஆயிரம்™ said...

சாம்பார்ல கரப்பான்பூச்சிதான் கிடந்துச்சு. ரசத்துல என்ன கிடந்துச்சு தெரியுமா? இதையே எடுத்துப்போட்டு தூருவாரிக்கிட்டு இருக்கேன்.. சரி சரி மோரை ஊத்து. அதுல பூன கீன கிடக்குதான்னு பார்ப்போம்..

இந்த காமெடிதான் ஞாபகம் வந்தது. என் நண்பர் ஒருத்தர் நைஜீரியாவில் வேலைக்குச்சேர்ந்தார். சாப்பாட்டில், எதோ பீன்ஸ் மாதிரி வைத்துக்கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் அது பச்சைப்பாம்பாம். இப்பொழுது சாப்பிட பழகிவிட்டார் என்று கேள்வி, வேறுவழியின்றி!

இப்படி ’எதையும்’ சாப்பிடுபவர்களுக்கு இதைப்பற்றிய கவலையில்லை.

உங்களுக்கு மேலும் தைரியம்(!) இருந்தால், இந்தத்தளத்தில் பார்க்கவும்..

http://www.hotlix.com/

எல்லாமே நிஜமானதுதான்!

அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogpost.com

Anonymous said...

appa intha puthu janthu-ku per vacha udane sollunga... naan sapta janthunga list-la sethukaren :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory