Monday, 30 March 2009

கஞ்சா!! ஒரு பார்வை! அமெரிக்காவை சரிவிலிருந்து மீட்குமா?

pot,grass,hash,mary jone,M.J,hasish

கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்!!

சமீபத்தில் அமெரிக்காவில் கஞ்சாவை மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தலாமா என்று ஒரு சர்ச்சை எழுந்து உள்ளது!

பாரக் ஒபாமா இதுபற்றி  பேசியுள்ளார்..அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சட்டமாக உள்ளது..சில மாநிலங்களில் மருந்தாக இதனை உபயோகிக்கிறார்கள். சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் $14 பில்லியனுக்கு ஆண்டுக்கு கஞ்சா வர்த்தகம் நடக்கிறது.

கஞ்சா உபயோகத்துக்கு தடை நீக்கி வர்த்தக ரீதியாக மருத்துவத்தில் உபயோகிக்க அனுமதியளிப்பதன் மூலம் அரசுக்கு வரியாக மிகப்பெரும் தொகை கிடைக்கும் என்று கருதப்படுகிறது!!

அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர்களும் தங்கள் இளமைக்காலத்தில் கஞ்சா உபயோகித்தவர்கள்தான்.. ஒபாமா கொக்கையின் என்னும் போதைப்பொருளும் உபயோகித்தவராம்.. அமெரிக்காவில் இது சகஜம்தான் என்கிறீர்களா?

கஞ்சா வியாபாரத்தை முறைப்படுத்தி உரிய வரி விதித்து மருத்துவத்துறைக்கு அமெரிக்கா முழுமைக்கும் உபயோகிக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் என்பது ஒரு சாராரின் கருத்து!!

இதனைப்பற்றி பல கருத்துக்கள்,கண்டனங்கள் செய்திகளாக வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மருத்துவத்துறையில் கஞ்சாவின் பயன் என்னவென்று பார்ப்போம்.

250க்கும் மேற்ப்பட்ட வியாதிகளுக்கு கஞ்சாவை மருந்தாக கொடுக்கலாம்! அவற்றில் முக்கியமாக

மூட்டுவலி-- வலியைக் குறைக்க!

ஆஸ்துமா---நுறையீரல் விரிவடைய செய்ய

மன சோர்வு-- மூடு ,உற்சாகம் ஏற்பட,

க்ளாக்கோமா,கண் நீர் அழுத்த நோய்--கண்ணின் அழுத்தம் குறைக்க!

வலி--- வலி நிவாரணி

சில அனுமதிக்கப்பட்ட கஞ்சாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கீழே:

1.நாபிலோன்-   புற்றுநோய் மருந்துகளால் ஏற்படும் குமட்டல்

2.மாரினால்- அதே குமட்டல், எயிட்ஸில் உடல் தசை குறைவைத்தடுக்க.

3.சாடிவெக்ஸ்- மல்டிபில் ஸ்கெலொரோஸிஸ் என்ற நரம்பு நோயில், புற்றுநோயில் ஏற்படும் வலி!

இவ்வளவு மருத்துவ குணமிருந்தாலும் கஞ்சா போதை வஸ்துவாக தவறாகப்பயன் படுத்தப்படுகிறது!! அதனாலேயே பல நாடுகளில் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கஞ்சாவால் ஏற்படும் விளைவுகள்: உற்சாகம்,புத்திசாலியாக நினைத்துக்கொள்ளுதல், தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம், கலகல்ப்பாக இருத்தல் போன்றவை இருந்தாலும்,

கவனமின்மை, சுயநினைவு இழத்தல், மாயத்தோற்றங்கள், நெஞ்சுவலி, ஞாபக மறதி, நடுக்கம், போன்றவை ஏற்படும்.

நீண்ட தூக்கமும் , அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மூச்சு விடசிரமம் , இறப்பு ஆகியவை நேரும்!!

28 comments:

அ.மு.செய்யது said...

//"கஞ்சா!! ஒரு பார்வை! //

இந்த டைட்டிலுக்கே நூறு மார்க் போடலாமே !!!!!!!!!!

அ.மு.செய்யது said...

கஞ்சா...

நல்லவனா ..கெட்டவனா ...?? கடைசியில அத சொல்லலியே தேவா !!!!!!!!

thevanmayam said...

அன்பே!!
தமிலிஷில் ஒரு ஓட்டு போடுங்க!!

thevanmayam said...

கஞ்சா...

நல்லவனா ..கெட்டவனா ...?? கடைசியில அத சொல்லலியே தேவா !!!!!!!!///

நல்லவனுக்கு நல்லவன்!!

Anonymous said...

நன்மையும் உண்டு ஆனால் தீமை அதிகம் அல்லவா?

நட்புடன் ஜமால் said...

யம்மாடி

பயமாயிருக்கே

நட்புடன் ஜமால் said...

தமிழிஸ் லின்க் கொடு தலைவா

அ.மு.செய்யது said...

என்னால் தமிழ்மண ஓட்டுப்பட்டை மட்டுமே பார்க்க முடிகிறது.

தமிழிஷ் எங்க இருக்குங்க ??

கார்த்திக் said...

// நீண்ட தூக்கமும் , அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மூச்சு விடசிரமம் , இறப்பு ஆகியவை நேரும்!! //

கஞ்சாவை பற்றிய பயத்தை போக்கும் பதிவு.

ராஜ நடராஜன் said...

தேவா!இம்புட்டு நோய்களை கஞ்சா குணப்படுத்துகிறதா!!கல்லூரிக் கால கஞ்சா வளிக்கும் சந்தர்ப்பங்கள் கிட்டியும் அது என் பக்கத்துல வரலை.சின்ன வயசில ஓடியாடின காரணமோ அப்பன் அம்மா டி.என்.ஏ புண்ணியமோ இதுவரை எந்த நோயும் பயந்துகிட்டு பக்கத்தில் வருவதில்லை.

thevanmayam said...

http://www.tamilish.com/PothuPadaippugal
தமிலிஷில்..

thevanmayam said...

தமிலிஷ் பதிவுப் பட்டையை இணைக்க முடியவில்லை.. என் டெம்ப்ளேட்டில்!!

SUREஷ் said...

//கஞ்சாவால் ஏற்படும் விளைவுகள்: உற்சாகம்,புத்திசாலியாக நினைத்துக்கொள்ளுதல், தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம், கலகல்ப்பாக இருத்தல் போன்றவை இருந்தாலும்,//ஏற்கனவே அமரிக்கா அப்படித்தானே இருக்கு

SUREஷ் said...

///250க்கும் மேற்ப்பட்ட வியாதிகளுக்கு கஞ்சாவை மருந்தாக கொடுக்கலாம்///


பிறவித்துன்பத்திலிருந்து நீக்குமாமே....

நட்புடன் ஜமால் said...

இங்கே முயன்று பாருங்கள்

தமிழிஸ் ஓட்டு

Anonymous said...

மற்ற போதை பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது கஞ்சா போதைபொருள் என்பது சரியானது அல்ல. மது வகைகளை போல் உடல் அழிக்கும் பொருள் அல்ல. மற்ற போதை பொருட்கள் போல் அடிமைபடுத்தும் வகையும் அல்ல. மனதின் எண்ணங்களை வீரியபடுத்தும் தன்மை உடையது. புதிய ஆராய்ச்சிகளுக்கு தீர்வுகளை தரவல்லது. ஆனால் அரசியல் வாதிகள் பணம் நிரம்ப மதுவகை தான் சரியானது. அதனால் தான் கஞ்சாவுக்கு தடை மதுவுக்கு அனுமதி. கஞ்சா வை பற்றி பொது மக்களிடம் உள்ள கருத்து திட்டமிட்டு பரப்ப பட்ட ஒரு பொய்.

வேத்தியன் said...

நல்ல தகவல்...
இது பத்தி தேடிப் பாக்கணும்...
பகிர்வுக்கு நன்றி...

நிலாவும் அம்மாவும் said...

வோட்டிட்டேன்

வால்பையன் said...

நான் ரெண்டு வாட்டி அடிச்சிருக்கேன்!
சிகரெட்டை விட பெருசா ஒண்ணும் தெரியல அதுனால பிடிக்கலை விட்டுட்டேன்

அபுஅஃப்ஸர் said...

நல்ல தகவல்

ஆணிகள் அதிகம் அடிக்கடி வரமுடியாததற்கு வருந்துகிறேன்

Evanooruvan said...

கஞ்சாவை ஒரு சிட்டிகை கசக்கி பாலில் கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுகடுப்பு போன்றவைகூட குணமாகும்!!!நஞ்சும் மருந்தாகும், அளவறிந்து உபயோகித்தல்....

கிரி said...

இந்த பதிவை நான் கடவுள் படம் வந்த போது போட்டு இருந்தீங்கன்னா இன்னும் நல்ல எபக்ட் :-) இருந்து இருக்கும் :-))

கலை - இராகலை said...

கஞ்சாவின் தீமைகள் ஒரளவு தெரிந்திருந்தாலும் நன்மையும் இருக்கு என்பது இப்போது தான் தெரியும்.

Anonymous said...

கஞ்சா இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எந்த ஒரு தடையும் இன்றி விற்கபடுகின்றது. ராஜஸ்தான் ஒரிசா போன்ற மாநிலங்களில் அது இறைவனின் பிரசாதமாக கருதப்படுகின்றது. லஸ்ஸி போன்று பாங் என்னும் திரவமாக விற்கபடுகின்றது. தீமைகள் மிகவும் குறைவு நன்மையே அதிகம்.

http://petergormanarchive.com/at/tales-from-india/bhang-bhang-youre-high

http://en.wikipedia.org/wiki/Bhang

kumar lee said...

we can give the elephant power to the man by using the kanja. Ordinary man is not about kanja. Kanja increases the man's melanin in our body. So we have to reduce the kanja's power as decrease the melanin. Kanja is a super power and god's gift. Hi nobody should not take the incredible medicine as a smoking habits. If you use the kanja as a medicine, then your semen did not fall out.

Anonymous said...

கஞ்சா மரணத்தை ஏற்படுத்தாது .......

RAMSUJA VFX & MOTION GRAPHICS said...

Enna solringa
.

ராம் ராம் said...

சிவனால்
உருவாக்கப்பட்ட
சிந்தனையின்
வெளிப்பாடு
"சிவ பானம்"

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory