Tuesday 31 March 2009

வன்முறை இளைஞர்களும்! நாமும் !

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!”மனிதன் பாதி

மிருகம் பாதி” போன்ற பாடல்களைக்கேட்டிருப்போம்!

மனிதன் தெய்வமாக மாறவேண்டாம்! மிருகமாக

மாறாமல் இருந்தால் சரி!!

ஏனெனில் இத்தகைய இளைஞர்கள்

(மனிதர்கள்) குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும்

விளைவிக்கும் கேடு மிக அதிகம்! நம் ஊரிலும்

பொதுவாக ஆண்களின் கரம் குடும்பத்தில்

ஓங்கியிருப்பதால் பெண்களும் குடும்ப

உறுப்பினர்களும் ஆண்களின் மிருக வெறிக்கு

ஆளாவது சாதாரணமாக நிகழ்கிறது!

 

குடும்ப விசயம் என்பதால் அக்கம் பக்கத்தார்

வேடிக்கைபார்க்கலாம் ! ”தட்டிக்கேட்டால் இது என்

குடும்ப விசயம், நீ தலையிடாதே”  என்கிற பதிலே

கிடைக்கும். மேலும் குடும்ப மானம் கருதி அவர்களும்

எந்த புகாரும் தருவதில்லை!

 

நாம் நேரடியாக அவ்வளவு கொடூரமான

மனிதர்களைச் சந்த்தித்து இருக்க மாட்டோம்.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் இந்த

நிலையிலுள்ள இளைஞர்களை அடையாளம்

கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும்

உள்ளிருப்பு சிகிச்சை முகாம்கள்

அமைப்பதும் மிக முக்கியம்!!

 

சர்க்கரை, இதய நோய்களுக்கு தேசிய

திட்டங்களைப்போல் இத்தகைய

மனப்பிறழ்வுகளையும்  ஆரம்பத்திலேயே கண்டறிந்து

களைய வேண்டியது அவசியமாகிறது!

 

பாஸ்டனில் சமீபத்தில் கெர்பி ரெவெலஸ் என்ற 23

வயது வலிபன் தன்னுடைய 17 வயது சகோதரியை 

வீட்டில் உபயோகிக்கும் கத்தியால் குத்தி கொன்று

உள்ளார்.

 

இதற்கு முன்னரே இவருக்கும் பக்கத்து வீட்டு

நபருக்கும் சிறிய கைகலப்பு ஏற்பட்டு உள்ளது! இவர்

தனது குடும்பத்துடனும் பாட்டியுடனும் வசித்து

வந்தவர்.

 

அவருடைய சகோதரி சரஃபினா (9 வயது) அவசர

போலீஸுக்கு போன் செய்தவுடன் போலீசார் பக்கத்தில்

ரோந்தில் இருந்ததால் உடனடியாக வீட்டுக் கதவை

உடைத்து உள்ளே நுழைந்தனர்.

 

போலீசாரின் கண் எதிரிலேயே தன் இன்னொரு

சகோதரியின் தலையை வெட்டி கையில் எடுத்து

விட்டு அடுத்த சகோதரியைக் கொல்ல முயலும்

போது போலீஸ்  அவரை சுட்டு வீழ்த்தினர்..

 

2004 ம் வருடம் இதே இளைஞன் ஒரு

பெண்மணியைத் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு

உள்ளார்.

 

உயிர் தப்பிய சகோதரியின் உடல் வயிற்றுப்

பகுதிகளிலும் நிறைய கத்திக் குத்துக்கள் காணப்பட்டு

உள்ளன..

 

ஒன்றும் அறியாத அப்பாவி பெண்குழந்தைகள் ஒரு

வெறி பிடித்த சகோதரனால் கொடூரமான முறையில்

கொல்லப்பட்டு இருப்பது கொடுமை!  இத்தகைய

கொடுமைகள் ஏன் நிகழ்கின்றன?ஏன் இன்று பல

இளைஞர்கள் அதீத வன்முறையில் ஈடு படுகிறார்கள்?

என்பவை இன்று சிந்தித்து கண்டறிந்து

அவற்றைக்களைய வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்!!

இது ஏதோ உலகில் எங்கோ நடக்கும் விசயமல்ல!

நம்மைச்சுற்றிலும் நடந்து கொண்டு இருக்கும் விசயம்!

 

அலட்சியத்தாலும், குழந்தைகளின் மேல்

அக்கறையின்மையாலும் நாமே இத்தகைய

இளைஞர்களை உருவாக்குகிறோம்!!

 

ஆம் , இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நாம்தான் காரணம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப்பருவத்திலேயே நம்முடைய

செயல்பாடுகளும், நாம் வாழும் சூழ்நிலையும் மிகமிக

முக்கியம்!! இவற்றாலேயே ஒரு குழந்தை முறையற்ற

இளைஞனாக மாறுகிறது!!

 

குழந்தைப் பருவத்தில் சில விசயங்களைக்கொண்டு

இதனை  நாம் கண்டறியலாம்.

எப்படி? கீழேயுள்ள விசயங்களை கவனியுங்கள்:

1.உடன் கோபம்

2.அடிக்கடி சுயகட்டுப்பாட்டை இழந்து கத்துதல், கோபப்படுதல்

3.சின்ன விசயங்களுக்கும் எரிச்சல் அடையும் தன்மை

4.அடிக்கடி வெறுப்படைதல்

குழந்தைகளின் இந்தப் பண்புகளை பெற்றோர் எளிதாக

கண்டறியலாம்.. அதேபோல பள்ளி ஆசிரியர்களும்

எளிதாக அடையாளம் காணலாம்.

 

பெற்றோர் படிக்காத, விபரமில்லாதவர்களாக இருக்க

வாய்ப்பு உண்டு. ஆனால் ஆசிரியர்கள் அப்படியல்ல!

பள்ளீயிலேயே இத்தகைய குழந்தைகளைக்

கண்டறிந்து முறைப் படுத்துவதே சிறந்த மனிதர்களை

சமுதாயத்தில் உருவாக்கும்!!

 

இப்படிக் கண்டறிந்த குழந்தைகளுக்கு முறையான

சிகிச்சை அளித்தால் நிச்சயமாக அவர்களின்

தன்மையை குறைப்பதோடு இல்லாமல், கோபம், வெறி

ஆகியவை இல்லாமல் செய்து விடலாம் என்று

ஆரய்ச்சிகள் தெரிவிக்கின்றன!!

ஒரு இளைஞன் ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் கவனிக்க வேண்டியவை!!

1.ஏற்கெனவே இத்தகைய சம்பவம் நடந்து உள்ளதா?

2.நபர் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டவரா?

3.வீட்டிலோ,சுற்றியிருக்கும் பகுதியிலோ வன்முறைகள் அதிகமா?

4.போதை,மதுவுக்கு அடிமையா?

5.வீட்டில் துப்பாக்கி போன்றவை உண்டா?

6.வறுமை,கண்காணிப்பின்மை,பெற்றோர்

விவாகரத்து,வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்க

ப்பட்டவரா? ஆகியவை மனிதனை மாற்றும் !!

 

வீட்டில் அடிக்கடி பிள்ளைகளின் முன்

சண்டைபோடுதல், வாழும் இடத்தில் அடிக்கடி நிகழும்

சண்டைகளும், கொடிய நிகழ்வுகள்,

படங்களிலும் ,தொலைக்காட்சி போன்றவற்றில் 

காட்டப்படும் வன்முறைக்கதைகள், காட்சிகள்

ஆகியவையே இளைஞர்கள் இத்தகைய

கொடுமையான வன்முறைகளில் ஈடுபடுவதன்

காரணம்!!

 

தொலைக்காட்சியில் குழந்தைகள் என்ன

நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்று பெற்றோர்

கவனிக்க வேண்டும்.   என் நண்பர் ஒருவர் கேபிள்

இணைப்பையே துண்டித்து விட்டு சி.டி.யில்

தேர்ந்தெடுத்துப் பார்க்கிறார்கள்!! நாம் அந்த அளவுக்கு

செல்லமுடியாது!! இருந்தாலும் கண்காணிப்பு அவசியம்!

 

என்ன இன்றிலிருந்து நம் குழந்தைகளை

கவனிப்போமா?

 

ஆசிரியர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து இளம்

வயதிலேயே குழந்தைகளை நெறிப்படுத்த உதவ

வேண்டும்! அப்போதுதான் நல்ல இளைஞர்களை

நாம் எதிர்காலத்துக்கு அளிக்க முடியும்.

24 comments:

நட்புடன் ஜமால் said...

\\குழந்தைப் பருவத்தில் சில விசயங்களைக்கொண்டு

இதனை நாம் கண்டறியலாம். \\

இது நல்ல தகவல் தொகுப்பு

நட்புடன் ஜமால் said...

\\ஒரு இளைஞன் ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் கவனிக்க வேண்டியவை!!\\

இதுவும்.

நட்புடன் ஜமால் said...

\\வீட்டில் அடிக்கடி பிள்ளைகளின் முன்

சண்டைபோடுதல்\\

இது ரொம்ப முக்கியம்.

நட்புடன் ஜமால் said...

தமிழிஸில் ஓட்டு போட

தேவன் மாயம் said...

http://www.tamilish.com/upcoming
தமிலிஷிலும் ஓட்டுப் போடவும்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என்ன இன்றிலிருந்து நம் குழந்தைகளை

கவனிப்போமா?



ஆசிரியர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து இளம்

வயதிலேயே குழந்தைகளை நெறிப்படுத்த உதவ

வேண்டும்! //


தீர்வோடு பதிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி

அப்துல்மாலிக் said...

நல்ல தெளீவான அலசல் தேவா சார்

ரொம்ப கவனிக்க வேண்டிய விடயம்

அப்துல்மாலிக் said...

வெளிநாடுகள் அளவிற்கு நம்மவூரில் இன்னும் வரவில்லை என்றாலும் முன்னரே தடுப்பது நல்லதுதானே

இதில் ஆசிரியர் பங்கு நிறைய இருக்கிரது

இராகவன் நைஜிரியா said...

அருமையான இடுகை டாக்டர் தேவா அவர்களே.

மன நல மருத்துவரை பார்ப்பது என்பதே ஏதோ ஒரு ஒவ்வாத செயல் என்று சமுதாயத்தில் நினைக்கின்றார்கள்.

உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரை காண்பது மாதிரி, மன நிலை சரியில்லை என்றால் மன நல மருத்துவரை காண்பது என்பதுவும்.

நீங்க சொல்லிய மாதிரி, குழந்தைகள் எந்த தொலைக்காட்சிகளை பார்க்கின்றார்கள் என்பதை கண்காணிப்பதும் மிகத் தேவையான ஒன்று.

இது தவிர வீட்டில் கணினியும், இண்டர் நெட் இணைப்பும் இருந்தால், அதையும் கண்காணிப்பது நல்லது.

பெற்றோர்கள் குழந்தைகள் முன் மட்டுமல்ல, எப்போதும் சண்டையிடாமல் இருப்பது, மிகவும் நல்லது.

குடந்தை அன்புமணி said...

பெற்றோர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய விடயம்தான். சிறப்பான பதிவு.

குடந்தை அன்புமணி said...

// நட்புடன் ஜமால் said...
\\வீட்டில் அடிக்கடி பிள்ளைகளின் முன்

சண்டைபோடுதல்\\

இது ரொம்ப முக்கியம்.//

???

வால்பையன் said...

உடலியலோடு, உளவியலும் மிக முக்கியம் என்பதை உணர வையுங்கள்

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

மேலை நாடுக‌ளில் இது போன்ற‌ குற்ற‌ங்க‌ள் ச‌க‌ஜ‌ம்ங்க‌..

ஒரு ம‌ருத்துவ‌ரா உங்க‌ க‌ட‌மைய‌ ச‌ரியா செய்றீங்க‌..க‌ருத்துள்ள‌ ப‌திவுக்கு ந‌ன்றி !!

Suresh said...

என்ற 23 வயது வலிபன் தன்னுடைய 17 வயது சகோதரியை வீட்டில் உபயோகிக்கும் கத்தியால் குத்தி கொன்று உள்ளார்.

nadu enga poguthu enna kodumai sir ithu ..

ராஜ நடராஜன் said...

//மனிதன் தெய்வமாக மாறவேண்டாம்! மிருகமாக

மாறாமல் இருந்தால் சரி!!//

பதிவின் நீதியை இரண்டு வரியில் சொல்லி விட்டீர்கள்.

வேத்தியன் said...

நல்ல தகவல் தேவா...
எழுத்து நடை கலக்கல்..
அருமையா சொல்லியிருக்கீங்க...

குமரை நிலாவன் said...

வெளிநாடுகள் அளவிற்கு நம்மவூரில் இன்னும் வரவில்லை என்றாலும் முன்னரே தடுப்பது நல்லதுதானே

இதில் ஆசிரியர் பங்கு நிறைய இருக்கிரது

ரீப்பிட்டு...

Rajeswari said...

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நாம்தான் காரணம். நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பருவத்திலேயே நம்முடைய செயல்பாடுகளும், நாம் வாழும் சூழ்நிலையும் மிகமிக முக்கியம்!! //

உண்மைதான்..

Rajeswari said...

நல்ல பயனுள்ள பதிவு

kuma36 said...

ம்ம்ம் நீங்க சொல்வது போல பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்கனும். அருமையான ஆக்கம்.

ஆதவா said...

டெம்ளேட் சேஞ்சாயிடுச்சு போல.... நல்லா இருக்குங்க சார்.

குற்றத்தில் ஈடுபட்டால் செய்யவேண்டியவை!......

ஒரு நல்ல தொகுப்பு இது!!!! அருமையான பதிவு!!

../////ஆசிரியர்கள் அப்படியல்ல!/////...

உண்மைதான்!!!!

அமர பாரதி said...

//குழந்தைகளின் இந்தப் பண்புகளை பெற்றோர் எளிதாக
கண்டறியலாம்//

பெற்றோர்களுக்கே இது இருந்தால் என்ன செய்வது?

ச.பிரேம்குமார் said...

மிக அவசியமான பதிவு. உலகம் எங்க போயிட்டுருக்குன்னே தெரியல.

சமூக கோபங்கள் எல்லாம் விடுத்து, மக்களுக்கு சுய கோபம் தான் பெரிசா படுது.

பொறுமை, சகிப்புதன்மை எல்லாம் இல்லாமலயே போய்விட்டது :(

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory