Friday 6 March 2009

அன்புடன் ஒரு சிகிச்சை-3-ஏன் குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் சுளுக்கு வலிக்கவோ மருந்து அழுத்தி தேய்க்கவோ கூடாது?

என்ன நண்பர்களே!!

தலைப்பே ஒரு பாரா இருக்கே என்று பார்க்கிறிர்களா?வேறு எப்படி வைத்தாலும் நான் சொல்ல வந்தது சரியாகப் புரியாது!

எனவேதான் தலைப்பிலேயே என்ன சொல்லப்போகிறேன் என்று சொன்னேன்! தலைப்பைப்படித்த்வுடனேயே உங்களுக்கு ஒரு ஐடியா வந்து இருக்கும்!!

ஏன் குழந்தைகளுக்கு முழங்கையில் விழுந்து அடிபட்டு வீங்கி இருந்தால்  மருந்து போட்டு உருவி விடக்கூடாது?  முழங்கை மட்டும் என்ன விசேஷம்? என்று நீங்கள் கேட்கலாம்!! கேட்காவிட்டாலும் நான் அதைத்தான் சொல்லப் போகிறேன்!!!

பொதுவாக கீழே குழந்தைகள் விழும்போது சாதாரணமாக கால்,கை போன்ற பகுதிகளில் அடிபடும்!! பெரும்பாலும் உருவி விட்டோ, களிம்புகளைத்தடவி விட்டொ அல்லது பக்கத்தில் உள்ள வைத்தியர்களிடம் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல் கட்டுப்போட்டோ வைத்தியம் செய்கிறோம்.

எலும்பு உடைந்து இருந்தால் அந்த இடத்தில் முறையான சிகிச்சை செய்தால் இரண்டு எலும்புகளுக்கும் இடையில் புது எலும்பு உருவாகி இணைந்து விடும். குழந்தைகளில் இது மிக வேகமாக நடைபெறும்! நாம் சிகிச்சை முறையாகச் செய்தால் மிக விரைவில் குணமாகி விடும்!

ஆனால் முழங்கைப்பகுதியில் எலும்பு உடைந்தால் நாம் மிக அதிகமாக உறுவி விடும்போதோ,மிக அதிகமாக எலும்பை பிசைந்து இழுத்து எண்ணை போட்டு வலித்து விட்டால் எலும்பு மட்டும் இணையாமல் பக்கத்தில் உள்ள சவ்வு, மூட்டு உறை, தசைப்பகுதி ஆகியவற்றில் புது எலும்பு உருவாகிவிடும்!!!

1.முழங்கை எலும்பு சிறிது உடைந்து விலகாமல் இருந்தாலோ,

2.முழங்கை எலும்பு உடைந்து விலகி இருந்தாலோ,

3.முழங்கை மூட்டு விலகியிருந்தாலோ

குறிப்பாகக் குழந்தைகளுக்கும்

இளைஞர்களுக்கும்,

1.எண்ணை விட்டு நன்றாக வலித்துவிட்டுக்கட்டுவதோ, இல்லை

2.விலகியுள்ள எலும்பை இழுத்து கட்டுப்போட்டு ஒன்று சேர்க்கிறேன் என்றோ, இல்லை

3.விலகியுள்ள மூட்டு எலும்புகளை எடுத்து வைத்துக்கட்டுகிறேன் என்றோ

4.நாமே மூட்டு வலி எண்ணை,தென்னை மரக்குடி எண்ணை, கோடாலி தைலம் போட்டு உறுவி விடுகிறேன் என்றோ

செய்யவே கூடாது!!! 

மேலே குறிப்பிட்டபடி இப்படி செய்தால் ஏற்படும் தேவையில்லாத எலும்பு உருவாதலுக்கு,

மயோஸைடிஸ் ஆசிஃபிகன்ஸ் என்று பெயர். இதில் முழங்கை மூட்டை சுற்றியுள்ள சவ்வுகள்,தசைப்பகுதிகள்,தசைநாண்கள் ஆகியவற்றில் தேவையில்லாமல் புது எலும்புகள் உருவாகும் என்று மேலே சொன்னேன்.  இது முழங்கைப்பகுதி எலும்பு முறிவுகளில் அதிகமாக ஏற்படுகிறது!

அப்படி உருவானால் என்ன ஆகும்?

முழங்கையின் செயல் பாடுகள் குறைந்துவிடும்!!

முழங்கை முழுவதுமாக மடக்க முடியாமல் முழங்கை முன்புறம், பக்கவாட்டில் புதிய எலும்புகள் தோன்றி முழங்கை செயல்பாட்டைத்தடுக்கும்!!

இது ஏன் முழங்கையில் மட்டும் அதிகம் வருகிறது?

யாருக்கும் தெரியாது!!

இந்த ஒரு விசயம் ஞாபகத்தில் இருந்தால் போதும் நம்மைச் சுற்றீயுள்ள குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை வராமல் தடுத்து விடலாம்..

இது கொஞ்சம் எளிமைப்படுத்திக் கொடுத்து உள்ளேன்!!

விபரமாக வேண்டுமெனில் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்!!

35 comments:

ஹேமா said...

தேவா,குழந்தைகளோடு இருக்கும் இளம் பெற்றோருக்கு அருமையான பயனுள்ள தகவல்.நான் பிரதி பண்ணிக்கொண்டேன்.நன்றி தேவா.

சி தயாளன் said...

நன்றி தேவா...:-)

Rajeswari said...

பயனுள்ள பதிவு..ஞாபகத்தில் வைத்து கொள்கிறேன்

குடந்தை அன்புமணி said...

பயனுள்ள பதிவு.கவனமாகத்தான் இருக்கணும். நீங்க சக பதிவராவும், மருத்துவராகவும் இருக்கிறதால ஆலோசனைக் கட்டணமின்றி பல தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது.

தேவன் மாயம் said...

தேவா,குழந்தைகளோடு இருக்கும் இளம் பெற்றோருக்கு அருமையான பயனுள்ள தகவல்.நான் பிரதி பண்ணிக்கொண்டேன்.நன்றி தேவா.///

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

நன்றி தேவா...:-)//

வருகைக்கு நன்றி

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு..ஞாபகத்தில் வைத்து கொள்கிறேன்//

பயனுள்ளதானால் எனக்கு மகிழ்ச்சிதான்!

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு.கவனமாகத்தான் இருக்கணும். நீங்க சக பதிவராவும், மருத்துவராகவும் இருக்கிறதால ஆலோசனைக் கட்டணமின்றி பல தகவல்களை அறிந்துகொள்ளமுடிகிறது.///

இதுக்கெல்லாம் பின்னாடி பில் வரும்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதுக்கெல்லாம் பின்னாடி பில் வரும்!!//


பயமுறுத்துறீங்களே தல

தேவன் மாயம் said...

/இதுக்கெல்லாம் பின்னாடி பில் வரும்!!//


பயமுறுத்துறீங்களே தல///

சும்மா! பூச்சாண்டி!!!
உங்களுக்கு அனுப்புவனா?

நிஜமா நல்லவன் said...

எங்க நான் போட்ட பின்னூட்டம் காணும்????

இராகவன் நைஜிரியா said...

நன்றி தேவா..

மிக அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.

அடுத்து இந்த தசை இழப்பு நோய் பற்றி எழுதுங்களேன். அதிலும் முக்கியமாக DMD பற்றி எழுதுங்க. இன்று வரை இதை குணமாக்க எதாவது சிகிச்சை வந்துள்ளதா என்று பாருங்கள்.

DMD உள்ள குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடிக்க எதாவது வழி உள்ளதா என்றும் சொல்லுங்க. ஜீன் மேப்பிங் செய்தால் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லுகின்றார்கள். சற்று விரிவாகவே எழுதுங்க ப்ளீஸ்.

SASee said...

நன்றி தேவா

நல்ல தகவல்கள். இன்னும் தாருங்கள்.......

தமிழ் அமுதன் said...

மிக்க நன்றி தேவா! பயனளிக்கும் பதிவு!!

தேவன் மாயம் said...

எங்க நான் போட்ட பின்னூட்டம் காணும்????///

தெரியலியே/

தேவன் மாயம் said...

நன்றி தேவா..

மிக அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.

அடுத்து இந்த தசை இழப்பு நோய் பற்றி எழுதுங்களேன். அதிலும் முக்கியமாக DMD பற்றி எழுதுங்க. இன்று வரை இதை குணமாக்க எதாவது சிகிச்சை வந்துள்ளதா என்று பாருங்கள்.

DMD உள்ள குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடிக்க எதாவது வழி உள்ளதா என்றும் சொல்லுங்க. ஜீன் மேப்பிங் செய்தால் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லுகின்றார்கள். சற்று விரிவாகவே எழுதுங்க ப்ளீஸ்.///

நன்றி!!
அன்பரே!!!
கட்டாயம்
எழுதுகிறேன்!!

தேவன் மாயம் said...

நன்றி தேவா

நல்ல தகவல்கள். இன்னும் தாருங்கள்.....//

நன்றி,

சசீ!!!

தேவன் மாயம் said...

மிக்க நன்றி தேவா! பயனளிக்கும் பதிவு!!//

உங்களுக்கு பிடித்தால் சரிதான்

வேத்தியன் said...

மிக நல்ல பதிவு...
தொடர்ந்து இது மாதிரி எழுதுங்கள்...

தேவன் மாயம் said...

மிக நல்ல பதிவு...
தொடர்ந்து இது மாதிரி எழுதுங்கள்..///

நன்றி வேத்தியன்!!!

குமரை நிலாவன் said...

நல்ல பயனுள்ள பதிவு தேவா சார்

நட்புடன் ஜமால் said...

பயனுள்ளது

அவசியம் மேலும் இது பற்றி விளங்கிடச்செய்யுங்கள் ...

தேவன் மாயம் said...

நல்ல பயனுள்ள பதிவு தேவா சார்

நன்றி!நிலாவன்!

தேவன் மாயம் said...

பயனுள்ளது

அவசியம் மேலும் இது பற்றி விளங்கிடச்செய்யுங்கள் .///

அவசியம் செய்கிறேன்

Muruganandan M.K. said...

சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு

தேவன் மாயம் said...

சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு///

நன்றி ஐயா!

அப்துல்மாலிக் said...

நன்றி மருத்துவரே தாங்கள் விளக்கமான பதிவிற்கு

தெளிவா சொல்லிருக்கீங்க‌

தேவன் மாயம் said...

நன்றி மருத்துவரே தாங்கள் விளக்கமான பதிவிற்கு

தெளிவா சொல்லிருக்கீங்க‌//

பயன்பட்டால் சரி!!

Sinthu said...

நிறைய நாட்களுக்கு அப்புறம் வந்த எனக்கு நல்ல செய்தி தான். நன்றி தேவா அண்ணா....

அன்புடன் அருணா said...

Useful info!!!
anbudan aruna

சந்தனமுல்லை said...

useful info!

தேவன் மாயம் said...

நிறைய நாட்களுக்கு அப்புறம் வந்த எனக்கு நல்ல செய்தி தான். நன்றி தேவா அண்ணா..///

மிக்க நன்றி சிந்து!!!

தேவன் மாயம் said...

Useful info!!!
anbudan aruna///

நன்றி அருணா!!

தேவன் மாயம் said...

useful info!///

நன்றி !!!

Arasi Raj said...

அருமையான பயனுள்ள தகவல்...

I always think I'm very god in massaging...and thats the first thing i do when some one get hurt....Now i know Finally its time to stop all that nonsense...

It would be more helpful if you can give us some first aid tips for these kind of injuries ezpecially when it comes to kids...

[I'm at work.....pardon my englibisss]

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory