Friday, 27 March 2009

8.2 வினாடியில் காதல்!

 

காதல் மேட்டர்ன்னாலே குஜால்தான்!! இந்த அஜால் குஜால் மேட்டரப் பத்தி தாடி வளர்க்கிற விஞ்சானிங்க ஆராய்ச்சியெல்லாம் பண்றானுங்க!

”ஆல்பா பாண்ட் சிக்மா பாண்ட்” ஆராய்ச்சிய  விட்டுட்டு இவனுங்களுக்கு இந்த வேலை தேவையா நைனா? 

இவனுங்க ஆராய்ச்சி செய்யப்போவ..... நானு தூக்கம் போயி இந்த மத்தியானம் 3.15க்கு ஒக்காந்து பொம்பளைங்க பூக்கட்டுற கண்க்கா எழுதினுகீறேன்!!!    எல்லாம் நம்ப ஜொள்ளர் சங்க தோழர்களுக்குதான்!!!.....

அதுவும் நீயும் தூங்காத ஒக்காந்து, பதிவு வந்தவுடனே கபால்னு புடிச்சி பின்னூட்டமா குத்தித் தள்ளுறியே தோழா!! உன்னிய ஏமாத்தலாமா நானு!!!

தூங்கினா மேட்டர் சூடு ஆறிப்பூடுமே!!  அதான் !! ரெண்டு வார்த்தை சொல்லிடுறேன்!!!

கனடாக்கார விஞ்சானிங்களும், ஹாலந்து கெழவன்களும் சேந்து பண்ணிய ஆராய்ச்சியாம் இது!

115 கல்லூரி மாணவர்களை அழகிய நடிகைகளிடம் பேச விட்டு இருக்கிறார்கள்!!! இதில் ஆண் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் ? எவ்வளவு நேரம் முகத்தைப் பார்க்கிறார்கள் ? நடிகைகளின் கண்களை எவ்வளவு நேரம் நெருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்!( நம்ம ஊரு ஆராய்ச்சியாளர்களும் இப்படி ஆராய்ச்சி பண்ணலாமே!!! இளைஞர்கள் நாங்கள் ரெடி!!

நம்ம முதியோர் சங்கம் கூட ரெடியாம்பா!!!).

அதில் பல சுவாரசியமான முடிவுகள்!! அதாவது ஆராய்ச்சிக்குப்பின்னாடி எல்லா மாணவர்களிடமும் கேள்வியும் கேட்டு பதிலும் வாங்கி இருக்காங்க!

அதில்  பெண்கள் ஆண்களைப்பார்த்தவுடன் மயங்குவது இல்லையாம்! ரொம்ப யோசிக்கிறாங்களாம்!!!

இப்படி யோசிச்சு யோசிச்சே பல பேரை ப்ளாக் கவிஞர்களாக மாத்தீட்டீங்களே பெண்களே!!! இது ஞாயமா?.. (ஃபிகர் மடக்கும் மக்கள் கவனிக்கவும்!)

இதற்காக ரகசிய கேமரா வைத்து ஆராய்ச்சி பண்ணி ஒவ்வொரு பெண் ஆண்களின் கண்ணசைவுகளையும் முக மாறுதலகள் எவ்வளவு பேரை நேருக்கு நேர் பார்க்கிறார்கள் என்று எல்லா விபரங்களையும்  பதிவு செய்துள்ளார்கள்!!

பெண்கள் ஆண் நடிகர்களை, மாடல்களைப் பார்த்தாலும் டேடிங் போக விருப்பமா,காதலிக்க விருப்பமா என்று கேட்ட போது குழம்பியிருந்தார்கள்!!!

தேவயில்லாத கர்ப்பம், இவன் கைவிட்டுவிடுவானோ என்ற பயம் (அங்கேயுமா?) இருக்கிறதாம்!!

( இன்னா இது!! எங்கே போனாலும் இதே பேஜாரா? என்று நம் சங்கத்து சிங்கங்கள் கொதிப்பது கேட்கிறது!!  கூல்!!கூல்!! என்ன செய்வது!  இவ்வளவு இடர்களையும் தாண்டி கடலை உடைத்து, கரெக்ட் பண்றது எவ்வளவு கஷ்டம்!!)

பொம்பளைங்க இப்படி இருக்கிறார்களே!!

நம்ப பசங்க!!  (ஏக் மால் தோ துக்கடா!)  வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!! கதைதான்!!

4 வினாடி ஒரு நடிகை கண்ணை ப்பார்த்துட்டு வேற நடிகை இப்பிடி அலைபாய்ந்து எல்லா அழகையும் அள்ளிப்பருகின பசங்க செட்டில் ஆகலை!!!

8.2 வினாடி தொடர்ந்து ஒரு அழகியைப் பார்த்த பசங்க எல்லாம் கழண்டு ஒருமாதிரி ஆகி ஜோள்ளு விட ஆரம்பித்து இருக்கிறார்கள்! ( டேட்டிங் போக ரெடியாம்!! கூத்தைப் பாருங்கப்பா! எவ்வளவு நல்ல பசங்க!! நம்ம பசங்க!!!)

ஆராய்ச்சி முடிவில் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்!!

எச்சரிக்கை:  சங்கத் தோழா தொடர்ந்து 8.2 வினாடிக்கு மேல் பெண்களின் கண்களைப் பார்ப்பது ஆபத்து!!! பார்க்காதே!! பார்த்தே சிக்கிக்குவே மாப்பிள்ளே!!

8.2 வினாடிக்கு மேல் கண்ணோடு கண் நோக்கினால் ஆண் காதல் வசப்படுகிறான்!!(ராமனே இந்த லிஸ்டுதானே!-- அண்ண்லும் நோக்கினான் அவளும் நோக்கினான்!!!)....................அங்கே சரிதான்! இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! பார்த்துட்டான்னா...நொங்கிருவானுங்க!!!

இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? ஓகே...நடத்துங்க...

பி.கு:  இதைப் படித்து ப்ரூப் பார்த்த தங்கமணி 4 வினாடிக்கு மேல் எந்த அம்மிணியையும் லுக் உடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்!!   

  கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!

29 comments:

’டொன்’ லீ said...

முதல்..?

நட்புடன் ஜமால் said...

அட நீங்களுமா டொன்லீ

நட்புடன் ஜமால் said...

இந்த அஜால் குஜால் மேட்டரப் பத்தி\\

ஆஹா! நம்ம மேட்டரு போல

நட்புடன் ஜமால் said...

\\கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!\\

ஹா ஹா ஹா

Rajeswari said...

இதைப் படித்து ப்ரூப் பார்த்த தங்கமணி 4 வினாடிக்கு மேல் எந்த அம்மிணியையும் லுக் உடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்!! //

அண்ணி உஷார் தான்...

Rajeswari said...

(ராமனே இந்த லிஸ்டுதானே!-- அண்ண்லும் நோக்கினான் அவளும் நோக்கினான்!!!)....................அங்கே சரிதான்! இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! பார்த்துட்டான்னா...நொங்கிருவானுங்க!!! //

ஹா ஹா ஹா..

குடந்தைஅன்புமணி said...

நல்லாத்தான்கீதுப்பா தலைப்பும், உள்ளே மேட்டரும்!

குடந்தைஅன்புமணி said...

// நம்ம ஊரு ஆராய்ச்சியாளர்களும் இப்படி ஆராய்ச்சி பண்ணலாமே!!! இளைஞர்கள் நாங்கள் ரெடி!! //

அண்ணியார் வலைப்பக்கம் வர்றதில்லையோ...?

thevanmayam said...

தமிலிஷில் மணத்தில் ஓட்டு போடுக>

நிலாவும் அம்மாவும் said...

நான் தான் பத்து...நீ வாயைப் பொத்து

நிலாவும் அம்மாவும் said...

எல்லாம் நம்ப ஜொள்ளர் சங்க தோழர்களுக்குதான்!!!..... ////

சரி ...அப்போ நான் அப்பால வர்றேன்

நிலாவும் அம்மாவும் said...

இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! /////

மாமன்காரனை விட்டீங்க

நிலாவும் அம்மாவும் said...

தேவா, நீங்க கண் டாக்டர் இல்லியே....ஹி ஹி

Poornima Saravana kumar said...

இதைப் படித்து ப்ரூப் பார்த்த தங்கமணி 4 வினாடிக்கு மேல் எந்த அம்மிணியையும் லுக் உடக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள்!! /

4 வினாடி அதிகாமாத் தெரியுதுங்க...
நான் எல்லாம் 1 வினாடிக்கு கூட சம்மதிக்க மாட்டேன்!

Poornima Saravana kumar said...

நிலாவும் அம்மாவும் said...
இங்கே அவளுடைய அண்ணன்,தம்பி, அருவா அப்பன் ஆகியோர் நோக்காமப் பார்த்துக் கொள்ளுங்கள்!! /////

மாமன்காரனை விட்டீங்க

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

மனோ said...

\\கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!\\

ஹா ஹா ஹா

வேத்தியன் said...

ஆஹா ஆஹா.
அஜால் குஜால் மேட்டராம்ல...
இதை வாசிச்சு முடிச்சுட்டு தான் டின்னர்...

வேத்தியன் said...

இப்படி யோசிச்சு யோசிச்சே பல பேரை ப்ளாக் கவிஞர்களாக மாத்தீட்டீங்களே பெண்களே!!! இது ஞாயமா?.. //

அதானே???
வேத்தியெல்லாம் எழுதுறானாம்ல...
:-)))

வேத்தியன் said...

சங்கத் தோழா தொடர்ந்து 8.2 வினாடிக்கு மேல் பெண்களின் கண்களைப் பார்ப்பது ஆபத்து!!! பார்க்காதே!! பார்த்தே சிக்கிக்குவே மாப்பிள்ளே!//

யாராச்சும் கண்ணைப் பாக்குறவை கவனிக்கவும்...
நமக்கு இல்லப்பா...

வேத்தியன் said...

கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!//

ஓ உங்களுக்குமா??/
விதி யாரை விட்டுது???

வேத்தியன் said...

நெம்ப சீரியஸான மேட்டர் தல...
இனி ஒரு விநாடியும் கண்ணைப் பாக்கவே கூடாதுப்பா...

வால்பையன் said...

//கஷ்டப்பட்டு எழுதி சொந்த செலவுலே சூனியம் வச்சுக்கிட்ட கதையாப்போச்சு நம்ம கதை!!//

நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்ல!

ஆதவா said...

இப்படியும் ஒரு ஆராய்ச்சியா.. நல்ல கட்டுரை!!!

டாக்டரே!!! நீங்க ஏதாச்சும் பண்றீங்களா?? ஹி ஹி

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்கு எழுத்துநடை!

அ.மு.செய்யது said...

ஆரம்பமே குஜாலா கீதே !!!!

அ.மு.செய்யது said...

//8.2 வினாடிக்கு மேல் கண்ணோடு கண் நோக்கினால் ஆண் காதல் வசப்படுகிறான்!!(//

இதற்கு பேர் காதலா ?

இய‌ற்கை said...

inimel Deva kunitha thalai nimiraamal than irukka pokiraar...

yevlo thairiam iruntha anni kittaye proof paaka solveenga....

Deva nna vukku romba thairiam

pappu said...

அதச் சொல்லுங்க! நம்ம எவ்ளோ பாத்தாலும் நமக்கு லவ் வருதே தவிர பொண்ணுங்களுக்கு ஒண்ணும் வர்றதில்லையே.
8.2 நொடி என்னங்க.... 6 மாசம் பாத்தாலும் ஒண்ணும் ஆக மாட்டேங்குதே!

ஊர் சுற்றி said...

இது, பேசிக்கிட்டே பார்க்கறதா இல்ல பேசாம சும்மா இருக்கும்போது பார்க்கற கணக்கா?!

விடயம் ரொம்ப சுவாரசியமா இருக்கு... :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory