Thursday 26 March 2009

அடிவாங்கும் ஆண்கள்! ச(சி)ங்கமே சிலிர்த்தெழு!!

 

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நம் சங்கம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறது!!

ஏதோ ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு வேலைகளைச் செய்து வருகிறோம்!!

ஆபிஸில் ஆணிகளைப் பிடுங்கி களைத்து வரும் நம் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி(தானே போட்டுத்தான்) குடித்தவுடன் விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்!!

நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!

அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!!

பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்? அதை நாம் ஒத்துக்கொள்ள முடியுமா! பயத்தில் கைகாலெல்லாம் ஆடாது? சில நேரம் அழுது விடுவோமோ என்ற நிலைக்கும் தள்ளப்படுகிறோம்!

இப்படி இருக்கும் நேரத்தில் சமீபகாலமாக் நம் சங்கத்தைச் சார்ந்தவர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது!

பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார், அதுவும் குழந்தைகள் முன்னிலையில்! இப்படி செய்தால் கணவரை எப்படி குழந்தைகள் மதிக்கும்!

1.கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!

அதோடு விட்டு இருந்தால் பரவாயில்லை! எல்லாத்துணிகளையும் துவைக்கவிட்டு, நம் சங்க நபரின் சட்டையைக் கழற்றி அதாலேயே வீடும் துடைக்கவைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி! !

 

2.இந்த காணொளியைப் பாருங்கள் !!

நான் சொல்வது பொய்யா?

இதைவிட ஆதாரம் என்ன வேண்டும்! நம் அப்பாவி அப்பா ஒருவர் எப்படி அடிபடுகிறார் பாருங்கள்!

இதைப் பார்த்த பின்னும் நாம் சும்மா இருக்க முடியுமா? படை கிளம்பட்டும் !! அந்த ராட்சத மனைவி இல்லாத நேரமாகப்பார்த்து நம் சங்க கணவனைப் பார்த்து வலி, வேதனையை தாங்குவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து வருவோம்! அடுத்த கூட்டத்தில் அவர் அனுபவங்களையும் எப்படி இந்த வலி வேதனையைத்தாங்கினார் என்றும் நம் சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்!!

2.சரி விடுங்க விவாகரத்தாவது கொடுங்க என்று கெஞ்சியவருக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்!

ஆணின் கதி! 

இவர் விவாகரத்துதானே கேட்கிறார்! விட்டுவிடவேண்டியதுதானே!  கையைக் கட்டி அடித்து உதைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி!!

அதோடு விடவில்லை!! கட்டிலில் கட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்!அறை  சாவி இரண்டு பேரிடமும் இருக்கும்! கஷ்டப்பட்டு எழுந்து சாவியைப் போட்டு திறக்கப் பார்த்தால் திறக்க முடியவில்லை! முன்னெச்சரிக்கையாக பூட்டையே மாற்றி வெறு பூட்டு போட்டு விட்டார் அந்த மகராசி!!

எப்படியோ போலீஸுக்கு போன் பண்ணி அவங்க வந்து அறைக்கதவை உடைத்து ஆளை வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள்!!!

இந்த சம்பவத்தை நம் சங்கம் சார்பாக கண்டிப்பதுடன் இன்றிரவு உள்ள சங்க அவசர கூட்டத்திற்கு வரவும்!! நாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் அனைவரும் சங்கத்தின் முக்கிய விதிமுறைப்படி... மாறுவேடத்தில் வரவும்!!

56 comments:

வேத்தியன் said...

1st..

வேத்தியன் said...

ஏதோ ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு வேலைகளைச் செய்து வருகிறோம்!!//

அட...
ஒத்துகிட்ட சரிதான் போங்க...

வேத்தியன் said...

நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!//

அதேன் 'நம்'????
அது சரி.. எல்லாரும் அப்பிடித்தானேங்கிறீங்களா???
:-)

வேத்தியன் said...

பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார்,//

முற்பிறவியில அந்தாளு என்ன பாவம் செஞ்சிருப்பாரோ தெரியல போங்க...

நட்புடன் ஜமால் said...

எழுந்துடுவோம் ...

நட்புடன் ஜமால் said...

குடித்தவுடன் விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்\\

ஆஹா! இது வேறயா

வேத்தியன் said...

கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!//

என்னாப்பா டீல் ஓகேவா?????

நிகழ்காலத்தில்... said...

நன்றாக உள்ளது...
வாழ்த்துகள்.......

வேத்தியன் said...

ஆஹா மனைவி கிட்ட நல்லா வாங்கியிருப்பார் போலா...
இப்பிடி அல்ர்றார் ஃபோன்ல...
அய்யய்யோ....

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

எழுந்துடுவோம் ...//

ஆமா ஆமா...
விட்டா பின்னாடி பெரிய பிரச்சினை ஆயிடும்ல...
:-)

தேவன் மாயம் said...

மக்களே தமிலிஷிலும்/மண்ம் வோட்டு போடுங்கள்!

Rajeswari said...

என்ன அடி போங்க...பாவம் அந்த மனுசன்..

Rajeswari said...

ரெண்டாவது வீடியோ கேட்க்க முடியலை..(fault in my system sound)

KARTHIK said...

என்னத்த சொல்ல

ஆண்களுக்கு குரல் கொடுக்க ஒரு பாரதி வேணும்.

குடந்தை அன்புமணி said...

ஊரில நடக்கிற விசயத்தையெல்லாம் போட்டீங்க, சரி. இந்த மேட்டரை போட்டு வயத்தில புளிய கரைக்கிறீங்களே பாஸ்! இதை நம்குலப்பெண்கள் படிச்சிட்டு என்ன நடக்கப்போகுதோ?

g said...

இந்த மேட்டரை போட்டு வயத்தில புளிய கரைக்கிறீங்களே பாஸ்!

நையாண்டி நைனா said...

கஷ்டத்தை போக்க வந்த விளக்கே... வருக ..வருக

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏம்ப்பா.. இப்பவே இப்படி பயமுறுத்துனா நாங்க எல்லாம் எப்படி காலத்துல இறங்குகிறது?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்! அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!! பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்?//

ஹே..ஹே..ஹே.. இப்படி ரகசியத்த எல்லாம் வெளில சொல்லாதீங்க தேவா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கமெண்ட் போட பயமாயிருக்கு தல.. யாராவ்து பார்த்த்ட்டா

ராஜ நடராஜன் said...

//நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!//

சாரி!கதவு மாறி தட்டிட்டேன்!படத்துக்காரர்கிட்ட ஆலோசனைக்குப் போயிட்டிருந்தேன்.

குமரை நிலாவன் said...

இந்த சம்பவத்தை நம் சங்கம் சார்பாக கண்டிப்பதுடன் இன்றிரவு உள்ள சங்க அவசர கூட்டத்திற்கு வரவும்!! நாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் அனைவரும் சங்கத்தின் முக்கிய விதிமுறைப்படி... மாறுவேடத்தில் வரவும்!!

மாறுவேடத்தில் வந்தாலும்
கண்டுபிடிச்சிடராங்கப்பா
அவ் அவ் .................

அப்துல்மாலிக் said...

தல இன்னா இது
இப்படிக்கூட நடக்கா என்னா
ம்ம் சீக்கிரம் பொதுக்குழுவை கூட்டுங்கள்

அப்துல்மாலிக் said...

//நம் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி(தானே போட்டுத்தான்) //

ஏன் ஏன் ஏன் நாந்தானு ஒத்துக்கோங்க அது என்னா சகோதரர்கள்னு ஒரு இது

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
Arasi Raj said...

அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!! பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்? ////

எங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்தீங்களோ ???

அ.மு.செய்யது said...

//இப்படி இருக்கும் நேரத்தில் சமீபகாலமாக் நம் சங்கத்தைச் சார்ந்தவர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது!//

என்னாச்சி தேவா...வீட்டில‌ எதாவ‌து பிர‌ச்சினையா..

கை கால் எதாவ‌து சேதார‌ம்னா ஆர்த்தோ டாக்ட‌ர் கிட்ட‌ போலாம்..

ஆனா அந்த‌ ஆர்த்தோ டாக்ட‌ருக்கே சேதார‌ம்னா...என்ன‌ ப‌ண்ர‌து ?

அ.மு.செய்யது said...

//நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!////

அதான‌...தேவா எவ்ளோ ந‌ல்ல‌வ‌ரு.

வால்பையன் said...

//கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!//

நல்ல கோரிக்கை!
நமக்கெல்லாம் வீட்டுகுள்ளயே தான் பூஜை!

RAMYA said...

//
அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!! பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்?
//

கோவம் வந்தப்புறம் எங்கே பேச்சு பேச்சா இருக்கிறது.

எதுக்கும் ஸ்டெத் கொஞ்சம் பத்திரமா வச்சிக்கவும் :)

RAMYA said...

//
நாம் எப்போதாவது சொல்பேச்சு கேட்காமல் இருந்து இருக்கிறோமா? சொல்வதற்கு முன்பே வேலைகளை ஆரம்பித்து விடுவது நம் ரத்தத்தில் ஊறிய குணாதிசயம்!
//

நீங்க செய்யறீங்கன்னு சொல்லுங்க, எதுக்கு எல்லார் பெயரையும் இழுக்கறீங்க.

ஆஹா ரொம்ப அருமையா கற்பனை டாக்டருக்கு :))

RAMYA said...

//
பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார்,
//

ஊரு ஊரா போய் விவரம் collect பண்ண்றீங்களா அது சரி :))

RAMYA said...

//
குடித்தவுடன் விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்
\\

சங்கமா ஐயா வாங்க அம்மா வாங்க
என்னா ஆச்சு ??

சங்கம் எப்போ, எங்கே கூடிச்சு
அதே சொல்லுங்க மொதல்லே :)

RAMYA said...

//கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை!
//

அது சரி ஒத்துக்கிட்டாங்களா ??இல்லையா :)

priyamudanprabu said...

எனக்கு இன்னும் கல்யானம் ஆகலயே
ஹா ஹா ஹா ஹா
உங்கள பாத்தா பாவமா இருக்கு
ஹையோ ஹையோ

இராகவன் நைஜிரியா said...

// பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நம் சங்கம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறது!! //

தம்பி வா.. அலை கடலென திரண்டு வா...

உனக்காக இந்த அண்ணன் ஆணை இடுகின்றேன்.. வா.. தயங்காமல் வா... ஒரு கை பார்த்துவிடுவோம்.

இராகவன் நைஜிரியா said...

// ஏதோ ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு வேலைகளைச் செய்து வருகிறோம்!! //

வெளியில் இதை எல்லாம் சொன்னால் .. நம்ம யாரு மதிப்பாங்க..

நோ நோ.. டோண்ட் டு லைக் திஸ்

இராகவன் நைஜிரியா said...

// ஆபிஸில் ஆணிகளைப் பிடுங்கி களைத்து வரும் நம் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி(தானே போட்டுத்தான்) குடித்தவுடன் //

திரும்பவும் மானத்த வாங்கிட்டாரப்பா... அவ்...அவ்...அவ்

இராகவன் நைஜிரியா said...

// விளம்பரத்தில் வரும் பொடியன்கள் போல புத்துணர்வு பெற்று, சூப்பர் மேன்களாக மாறி வீட்டில் பாக்கியுள்ள ஆணி,கடப்பாரைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருவது நம் சங்கத்தினர் அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்!!//

முந்தைய பின்னூட்டத்தை இதற்கு ரிப்பீட்டேய் போட்டுகிறேன்..

இராகவன் நைஜிரியா said...

// அப்படி இருக்கும்போது பேச்சு பேச்சாத்தானே இருக்கணும்!! //

ஆமாம் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...

இராகவன் நைஜிரியா said...

// பேசிக்கொண்டு இருக்கும்போதே அடிக்க வந்தால்? அதை நாம் ஒத்துக்கொள்ள முடியுமா! பயத்தில் கைகாலெல்லாம் ஆடாது? //

ஒரு வாயில்லா பிள்ள பூச்சிய அடிக்கிறாங்க பாருங்க...

வெரி வெரி பேட்..

இராகவன் நைஜிரியா said...

// இப்படி இருக்கும் நேரத்தில் சமீபகாலமாக் நம் சங்கத்தைச் சார்ந்தவர்களின் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது! //

சங்கத் தலைவர் தேவாவே அடிவாங்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்..

இராகவன் நைஜிரியா said...

// பாகிஸ்தானில் சமையல் செய்யவில்லை என்பதற்காக அவர் மனைவி துவைத்து எடுத்து இருக்கிறார், அதுவும் குழந்தைகள் முன்னிலையில்! //

குழந்தைகள் முன்னிலையில் அடிப்பதை மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இதனால் குழந்தைகள் மன பிறழ்வு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இராகவன் நைஜிரியா said...

// இப்படி செய்தால் கணவரை எப்படி குழந்தைகள் மதிக்கும்! //

அதானே, நீங்களே மதிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு நாங்க எல்லாம் கிள்ளு கீரையாகி விடமாட்டோமா?

இராகவன் நைஜிரியா said...

// 1.கோபம் வந்தவுடன் பலர் முன்னிலையில் அடிக்கக்கூடாது என்பது எங்கள் முதல் கோரிக்கை! //

முதல் கோரிக்கை நிராகரிக்கப் படுகின்றது என்று நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன...

இராகவன் நைஜிரியா said...

// எல்லாத்துணிகளையும் துவைக்கவிட்டு, நம் சங்க நபரின் சட்டையைக் கழற்றி அதாலேயே வீடும் துடைக்கவைத்து இருக்கிறார் அந்தப் பெண்மணி! ! //

வெரி வெரி பேட் ஹாபிட்.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். (தங்ஸ்கிட்ட இதுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டேன்)

இராகவன் நைஜிரியா said...

// நான் சொல்வது பொய்யா? இதைவிட ஆதாரம் என்ன வேண்டும்! //

சரியான ஆதாரம் கொடுத்துள்ளீர்கள்..

இராகவன் நைஜிரியா said...

// நம் அப்பாவி அப்பா ஒருவர் எப்படி அடிபடுகிறார் பாருங்கள்! இதைப் பார்த்த பின்னும் நாம் சும்மா இருக்க முடியுமா? படை கிளம்பட்டும் !!//

இதைப் பார்த்ததும் ரத்தம் கொதிக்கிறது...

அய்யகோ நான் என்ன செய்வேன்...

இராகவன் நைஜிரியா said...

// படை கிளம்பட்டும் !! //

ஆமாம் ஜாலிம் லோஷன் வாங்கிட்டு வாங்க..

இராகவன் நைஜிரியா said...

மீ த 50...

ஹையா...

இன்னிக்கு கோட்டா ஓவர்..

Arasi Raj said...

wait panromla..post podunga

Arasi Raj said...

சண்டைக் கோழில புதுசா ஒரு முயற்சி பண்ணிருக்கேன்...படிச்சுட்டு கருத்து சொல்லுங்க

மேவி... said...

payama irukku ithai padikkum pothu..
love marriage kuda ithe nilamai thaana?????

naama asin vera oru doctor...
athanala technicala adipangalo...

மோனி said...

இது கொஞ்சமில்ல
ரொம்பவும் ஓவர் ...
ஆண்களை காப்பாற்றும் சங்கம் கூடுவதற்கு ஏன் இவ்வளவு யோசனை...
(அம்மனிங்களுக்கு சங்கத்தோட அட்ரஸ் தெரிஞ்சிடுச்சா?)
அவ்வ்வ்வ்வ்

தேவன் மாயம் said...

மோனி!!
வருகைக்கு
நன்றி!!

உங்க ப்ளாகில்
போஸ்ட் போடவும்!!

ஊர்சுற்றி said...

//நாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் அனைவரும் சங்கத்தின் முக்கிய விதிமுறைப்படி... மாறுவேடத்தில் வரவும்!! //
:))))))


:))) :))))

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory