Wednesday 25 March 2009

நம்ம ஊரு ஆளுங்க திருந்தமாட்டாங்கப்பா!

 

 

 ருக்கையிலிருந்து மெதுவாக  எழுந்து உடலை வளைத்து நெட்டி முறித்தேன். வயதாகிக்கொண்டே போகிறதல்லவா!

வயதாகிக்கொண்டே போகிறதா? அப்படித்தான் நண்பர்கள் பேசும்போது  சொல்லிக்கொள்வோம்.

உடலுக்குத்தான் வயசாகிக்கொண்டு போகிறது! உள்ளம் இன்னும் இளமை மாறாமல் அப்படியே கல்லூரி விடுதி வராண்டாக்களில்தானே சுத்திக்கொண்டு உள்ளது!

உணர்வுகளுக்கும் வயசாகவில்லை! கோபம் வருவதெல்லாம் குறையவில்லை

உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!

”இங்கிதம் தெரியாதவர்கள்!! இப்பத்தான் பார்க்கிறான், அதற்குள் வயசு என்னன்னு கேக்கிறான்! அடுத்து சம்பளம் என்னன்னு கேப்பான்! 

நம்ம ஊர் ஆளுங்க திருந்த மாட்டனுங்கப்பா”  என்று வீட்டில் கோபமாக பேசிக்கொண்டிருப்பேன்!

இப்படித்தான் ஒருமுறை பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.

பெரும்பாலும் பஸ்ஸில் ஏறினால் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டு இருப்பேன்! பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவது அரிது!

அன்றும் அப்படித்தான்! கையில் காலச்சுவடு புத்தகத்துடன் கிடைத்த சீட்டில் அமர்ந்தேன்.

பக்கத்தில் இன்முகத்துடன் நடுத்தர வயதுக்கார ஆசாமி ! மெதுவாகத்திரும்பிப் பார்த்தேன்! மாநிறம்,கண்ணாடி அணிந்து இருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் ஒரு புன்முறுவல்! சிலரைப் பார்த்தால் ரொம்ப தெரிந்த மாதிரி இருக்குமே!.... அதே மாதிரி இருந்தது அவர் முகம்!

நானும் சற்று சிரித்தமாதிரியும், சிரிக்காதமாதிரியும் ஒரு பார்வை விட்டேன்!

”சார்! காரைக்குடி போறீங்களா?”

அவர்தான்!!

”ஆமா!”

”புஸ்தகம் கொஞ்சம் பார்க்கவா?”

”இந்தாங்க பாருங்க”  காலச்சுவடை அவரிடம் கொடுத்து விட்டு கண்ணை மூடினேன்!!

“சார்!!””

”என்னங்க” என்றேன்!!

”இந்தாங்க புத்தகம் ஒன்னுமே புரியலை!”

”காரைக்குடியில் எங்கே சார் வீடு?”

”செக்காலையில்”என்றேன்!

”அப்படியா? நானும் செக்காலைதான் இரண்டாவது தெரு!”

”ஓஹோ”ஒப்புக்கு தலை ஆட்டினேன்!

”நான் தாலுகா ஆபீஸில் உதவி தாசில்தாரா இருந்து ரிடையர் ஆயிட்டேன்! ஒரு பொண்ணு போஸ்ட் ஆபீஸில் க்ளார்க்கா இருக்கு! பையன் இஞ்சினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறான்!!”

”அப்படியா! ரொம்ப நல்லதுங்க!” ரிடையர்டு உதவி தாசில்தார் சரிதான்!!!ஆள் டீஸண்டாத்தான் பேசுகிறார்!

”சார் கல்யாணம் ஆயிருச்சுங்களா?

என்ன வருணாசிரமம் சார் நீங்க!”

எனக்குப்புரியவில்லை!!

“ வருணாசிரமம் என்றால் என்ன?’ என்றேன்!!

”என்ன சார்! தெரியாத மாதிரி கேக்கிறிங்க? வருணாசிரமம்னா ஜாதிதான்!! என்ன ஜாதின்னு கேட்டா ஒரு மாதிரி இருக்கும்!

வருணாசிரமம் டீஸண்டா இருக்கு பாருங்க!”

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது!!

‘’சார் ! என்னைய பார்த்தே 10 நிமிசம்தான் ஆகுது! நான் என்ன ஜாதியா இருந்தா உங்களுக்கு என்ன?  ந்ம்ம என்ன பொண்ணெடுத்து பொண்ணு குடுக்கவா போறோம்! ஏன் சார் இப்படி இருக்கீங்க?

நீங்கள்ளாம் எவ்வளவு படிச்சாலும் மாறவே மாட்டீங்களா?””

கோபத்துடன் கேட்டேன்!!

மனிதர் கப்சிப்!!

மெதுவாக எழுந்து கடைசி சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்!

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!”

பேருந்தில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது!!

40 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் என்னாச்சு

தேவன் மாயம் said...

ஏன் என்னாச்சு///

ஒரு நிகழ்வு எழுதியுள்ளேன்!

நட்புடன் ஜமால் said...

\\”என்ன சார்! தெரியாத மாதிரி கேக்கிறிங்க? வருணாசிரமம்னா ஜாதிதான்!! என்ன ஜாதின்னு கேட்டா ஒரு மாதிரி இருக்கும்! வருணாசிரமம் டீஸண்டா இருக்கு பாருங்க!”\\

அட மக்கா

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் கிளம்பிட்டாய்ங்களா

தேவன் மாயம் said...

\\”என்ன சார்! தெரியாத மாதிரி கேக்கிறிங்க? வருணாசிரமம்னா ஜாதிதான்!! என்ன ஜாதின்னு கேட்டா ஒரு மாதிரி இருக்கும்! வருணாசிரமம் டீஸண்டா இருக்கு பாருங்க!”\\
///

ரொம்ப நல்லா இருக்கா

குடந்தை அன்புமணி said...

வந்துட்டேன். படிச்சி்ட்டு வர்றேன்.

தேவன் மாயம் said...

இப்படியெல்லாம் கிளம்பிட்டாய்ங்களா///

ரொம்பநாளா!

தேவன் மாயம் said...

வந்துட்டேன். படிச்சி்ட்டு வர்றேன்.///

வாங்க குடந்தை

Rajeswari said...

கஷ்டம் தான்

குடந்தை அன்புமணி said...

//நீங்கள்ளாம் எவ்வளவு படிச்சாலும் மாறவே மாட்டீங்களா?”” கோபத்துடன் கேட்டேன்!! மனிதர் கப்சிப்!! //

இப்படி நாலு பேரு கிளம்பினாத்தான் அடங்குவாங்க.

தேவன் மாயம் said...

கஷ்டம் தான்///

வாங்க ராஜேஸ்!

குடந்தை அன்புமணி said...

அய்க்கூ மாதிரி... நம்ம வலையில்... வருக!

தேவன் மாயம் said...

//நீங்கள்ளாம் எவ்வளவு படிச்சாலும் மாறவே மாட்டீங்களா?”” கோபத்துடன் கேட்டேன்!! மனிதர் கப்சிப்!! //

இப்படி நாலு பேரு கிளம்பினாத்தான் அடங்குவாங்க.///

ஆமா அன்பு

Rajeswari said...

சிலர் வருணாசிரமம்(அதாங்க ஜாதி) தெரிஞ்சாதான் பேசவே செய்யிராங்க

தேவன் மாயம் said...

அய்க்கூ மாதிரி... நம்ம வலையில்... வருக!///

வருகிறேன்!

வால்பையன் said...

//உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!//

ஏன் பிடிக்காது!
நானாக இருந்தால் பட்டுன்னு உண்மைய சொல்லிருவேன்
பத்தொன்பதுன்னு!

தேவன் மாயம் said...

சிலர் வருணாசிரமம்(அதாங்க ஜாதி) தெரிஞ்சாதான் பேசவே செய்யிராங்க///

அசிங்கமான உண்மை இது!

தேவன் மாயம் said...

/உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!//

ஏன் பிடிக்காது!
நானாக இருந்தால் பட்டுன்னு உண்மைய சொல்லிருவேன்
பத்தொன்பதுன்னு!////

இனிமேல் சொல்லிடுவோம்!

சி தயாளன் said...

ஓஒ....பஸ்ஸிலுமா....?

வால்பையன் said...

சாதியை ஒழிப்போம்!
மனிதம் காப்போம்!

தேவன் மாயம் said...

ஓஒ....பஸ்ஸிலுமா....?//

ரொம்ப கூத்துங்க இங்கே

தேவன் மாயம் said...

சாதியை ஒழிப்போம்!
மனிதம் காப்போம்!///

மனிதனையே ஒழிச்சுடுவானுங்க போல

ராஜ நடராஜன் said...

//”நான் தாலுகா ஆபீஸில் உதவி தாசில்தாரா இருந்து ரிடையர் ஆயிட்டேன்! ஒரு பொண்ணு போஸ்ட் ஆபீஸில் க்ளார்க்கா இருக்கு! பையன் இஞ்சினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறான்!!”//

அவரின் மனநிலை இந்த வார்த்தைகளில் ஒளிந்து கொண்டிருப்பதால் வருணாசிரமம் கேட்டிருப்பாரோ!

தேவன் மாயம் said...

//”நான் தாலுகா ஆபீஸில் உதவி தாசில்தாரா இருந்து ரிடையர் ஆயிட்டேன்! ஒரு பொண்ணு போஸ்ட் ஆபீஸில் க்ளார்க்கா இருக்கு! பையன் இஞ்சினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறான்!!”//

அவரின் மனநிலை இந்த வார்த்தைகளில் ஒளிந்து கொண்டிருப்பதால் வருணாசிரமம் கேட்டிருப்பாரோ!///

என்னமோ தெரியவில்லை

Arasi Raj said...

காப்பி குடிச்சுட்டு படிக்குறேன்

Arasi Raj said...

உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது!///--

இது பொம்பளைங்க சமாச்சாரமாச்சே

தேவன் மாயம் said...

உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது!///--

இது பொம்பளைங்க சமாச்சாரமாச்சே///

நாங்கள்லாம் கிழவனா?

Arasi Raj said...

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!” பேருந்தில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது!!///

இது கப்சா தானே ..

Arasi Raj said...

பொம்பளை கிட்ட வயசைக் கேக்காதே...ஆம்பிளைக்கிட்ட வருமானத்தைக் கேக்காதான்னு தான சொல்லுவாங்க

நிலா URL மாறிப போச்சு...குறிச்சுக்கோங்க
http://nilakaduthasi.blogspot.com/

அப்துல்மாலிக் said...

சாதி இல்லையடி பாப்பா.... நீ சார்ந்திருக்கலாகாது.......

இப்படி எத்தனை பாரதியார் வந்தாலும்(விவேக் சொல்றாமாதிரி) இவனுங்களை திருத்தவே முடியாது...

நீங்க இன்னும் நிறைய சொல்லிருக்கனும் தேவா சாரே... அதுலேர்ந்து அவனுங்க அந்த வார்த்தையை சொல்வதற்கே யோசிக்கனும்..

தேவன் மாயம் said...

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!” பேருந்தில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது!!///

இது கப்சா தானே ..//

உண்மையான கப்ஸா!!

தேவன் மாயம் said...

சாதி இல்லையடி பாப்பா.... நீ சார்ந்திருக்கலாகாது.......

இப்படி எத்தனை பாரதியார் வந்தாலும்(விவேக் சொல்றாமாதிரி) இவனுங்களை திருத்தவே முடியாது...

நீங்க இன்னும் நிறைய சொல்லிருக்கனும் தேவா சாரே... அதுலேர்ந்து அவனுங்க அந்த வார்த்தையை சொல்வதற்கே யோசிக்கனும்..///

இவன்கள மாதிரி ஏகப்பட்ட பேர் இருக்கானுங்க.

வெத்து வேட்டு said...

"என்னைய பார்த்தே 10 நிமிசம்தான் ஆகுது! நான் என்ன ஜாதியா இருந்தா உங்களுக்கு என்ன? ந்ம்ம என்ன பொண்ணெடுத்து பொண்ணு குடுக்கவா போறோம்! "

so what is the difference between him and you?
you are going to "check caste" when you propose weddings...
right???

தேவன் மாயம் said...

என்னைய பார்த்தே 10 நிமிசம்தான் ஆகுது! நான் என்ன ஜாதியா இருந்தா உங்களுக்கு என்ன? ந்ம்ம என்ன பொண்ணெடுத்து பொண்ணு குடுக்கவா போறோம்! "

so what is the difference between him and you?
you are going to "check caste" when you propose weddings...
right???///

பஸ்சில் இது தேவையா?

வேத்தியன் said...

வயதாகிக்கொண்டே போகிறதல்லவா!//

ஒத்துகிட்டா சரிதான்...
:-)

வேத்தியன் said...

உடலுக்குத்தான் வயசாகிக்கொண்டு போகிறது! உள்ளம் இன்னும் இளமை மாறாமல் அப்படியே கல்லூரி விடுதி வராண்டாக்களில்தானே சுத்திக்கொண்டு உள்ளது!//

கல்லூரி காலங்களை எப்பிடி மறப்பது???

வேத்தியன் said...

பெரும்பாலும் பஸ்ஸில் ஏறினால் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது யோசித்துக் கொண்டு இருப்பேன்!//

அடுத்து என்னத்தப்பத்தி பதிவு போடலாம்ன்னு தானே???
நானும் அப்பிடித் தாங்க...
:-)

வேத்தியன் said...

” ஒன்று எங்கள் ஜாதியே! ஒன்று எங்கள் நீதியே!”//

சிட்டுவேசன் சாங்க்...
:-)
நல்ல பதிவு தல...

ChoCaFeInoHoLiC said...

hey there... im sorry i cant read tamil.. but ur blog looks informative.. especially by the response it gets, i assume its a terrific job.. neway if ever u do post in english (sometimes), it would be nice :) gracias..

சாந்தி நேசக்கரம் said...

//உனக்கு என்ன வயசாகிறது? என்று யாராவது கேட்டுவிட்டால்கூட எனக்குப்பிடிக்காது! ஒரு மாதிரி ஆகி விடும்!! நானே ஒரு மாதிரியோ? என்று கூட எண்ணியிருக்கிறேன்!//

இதென்ன புதுக்கதையாக்கிடக்கு ? வயதைக்கேட்ட சொல்லீட்டுப் போறது.

1990ம் ஆண்டு எங்கள் ஊருக்குள் இலங்கை இராணுவம் புதுந்து நேரம் ஆவரங்கால் என்ற ஊரிலிருந்த உறவினர் வீட்டில் போயிருக்க நேர்ந்தது. அயலில் ஒரு பாட்டி இருந்தா. ஆனால் அவ திருமணம் முடிக்காத செல்வி. 70வயதுதாண்டிய பாட்டி. பாட்டியை யாரும் ஆச்சியெண்டு கூப்பிட்டா அந்த ஆள் சரி. ஏனெண்டா அவ கேப்பா நான் இன்னும் செல்வி என்னை அன்ரியெண்டு கூப்பிடவேணுமெண்டு. அவவின் நடமாட்டம் தெரிந்தால் நாங்கள் ஒளிந்து நின்று ஆச்சிக்கிழவியென அழைப்போம்.ஆச்சி கையில் வைத்திருக்கும் தடியால் அடி போட கோபத்துடன் ஆச்சியென்று சொன்னோரைத் தேடுவா. அந்த ஆச்சிதான் தேவாவின் பயணத்தில் பகிர்ந்தவை ஞாபகப்படுத்தியுள்ளது.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory