Friday 18 June 2010

அதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா?

clip_image002

உணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிரபலமாகி வருகின்றன. அதே போல் சத்து டானிக்குகள், சத்துப் பவுடர்கள் எழுதி வாங்கி, அல்லது கடையில் வாங்கி உபயோகிப்போர் மிக அதிகமாகி வருகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நேரத்தில் அதிக புரதச்சத்து மிக்க உணவுகள் தேவையா? நாம் உண்ணும் உணவு தவிர உபரியாக புரோட்டின் டானிக்குகள், புரோட்டின் பவுடர்கள் தேவையா? அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை நாம் தற்போது பார்ப்போம்.

பொதுவாக புரோட்டீன் பவுடர்கள், டானிக்குகளை இளைஞர்களும், உடல் பளு தூக்கும் பயிற்சியில் ஈடு படுவோரும் உபயோகப்படுத்துகின்றனர். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்காகவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இவை தகுந்த ஆலோசனை மற்றும் உடல் பரிசோதனைக்குப் பின் உண்பதில் தவறில்லை.

இன்று நடுத்தர மக்கள் நல்ல சத்தான உணவு உண்ணும் நிலை உள்ளது. மூன்று வேளையும் தேவையான அளவு உணவு உண்போருக்கு புரோட்டீன் தேவையான அளவு அந்த உணவுகளிலிருந்தே கிடைத்து விடுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டின் ( புரதம்) தேவை?                                                                                        ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரோட்டின் மட்டுமே தேவை. உடல் எடை 60 கிலோ உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 கிராம் புரோட்டின் போதுமானது. நாம் தினம் உண்ணும்                                      

  • பால்
  • குழம்பில், கூட்டுகளில் உபயோகிக்கும் துவரம் பருப்பு
  • தயிர்
  • பயறு வகைகள்
  • நிலக்கடலை
  • கொட்டை வகைகள்
  • ஆட்டுக்கறி
  • கோழிக்கறி
  • முட்டை வெள்ளைக்கரு

ஆகியவற்றில் புரதம் அதிகமாக உள்ளது. அதுவே நமக்குப் போதுமானது.                                                             

நம் உடலானது அதிக புரோட்டின் சத்தை உடலில் சேமித்து வைக்க முடியாது. உணவு செரித்து பகுதிகளாகப் பிரியும் போது இந்த அதிகமான புரதம் நைட்டிரஜனாக வெளிப்படுகிறது. இந்த நைட்டிரஜன் சிறுநீரகத்தாலும், கல்லீரலாலும் வெளிப்படுத்தப்படுகிறது. இது சிறுநீரக பாதிப்பையும், ஈரல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

மேலும் அதிகப் புரத உணவானது

  1. சிறு நீரகக் கற்களையும்,
  2. எலும்பு வியாதியான ஆஸ்டியோபோரோசிஸையும் 
  3. விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களை உடலில் குறைக்கிறது.
  4. ஈறு வியாதிகள்
  5. சோரியாஸில் உள்ளவர்கள் புரத, மிருகப்புரதச் சத்துக்களைக் குறைக்க வேண்டும்.
  6. அதிக புரத உணவுகள் இதய நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.

சக்கரை வியாதியை எடுத்துக் கொண்டால் கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையுடன்தான் புரோட்டின் பவுடரோ, டானிக்கோ உபயோகிக்கலாம்.

எடுத்துக் காட்டாக 15 ஆண்டுகள் சக்கரை நோயாளி ஒருவரின் இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • இரத்த உப்பு, கிரியேட்டின் 2.2 மி.கி,
  • சிறுநீரில் புரதம் 300 மி.கி( சரியான அளவு- 150 மி.கி),

இவர் தன் உடல் எடை குறைவாக இருப்பதாக நண்பரிடம் சொல்லியுள்ளார்.   நண்பர் அவருக்கு ஒரு புரோட்டின் பவுடர் கொடுத்து இதை உண்டால் சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு எடை கூடி உடல் வலு ஏற்படும் என்று கூறியுள்ளார். அந்த 1 டின் புரோட்டின் பவுடர் விலை 2500 இவரும் அதனைச்சாப்பிட்டு வந்தார்.  மேல் சொன்ன அவருடைய இரத்த நீர் பரிசோதனைகளில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு சிறு நீரகம் நாளடைவில் பாதிக்கப்படும். அப்படி உள்ள இவர் இந்தப் புரோட்டின் பவுடர் உட்கொண்டால் சிறு நீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.

தகுந்த பரிசோதனைகள் இல்லாமல் அதிக புரோட்டின் உணவு உண்பதும், புரோட்டின் மாவுக்கள் உண்பதையும் தவிர்த்து உடல் நலத்துடன் வாழ்வோம்.

20 comments:

கொல்லான் said...

//இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.//

அந்த பொருட்களை வாங்கும் முன் நம் மக்கள் யோசிக்க வேண்டுமே?
பயனுள்ள பதிவு.

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு!!//

ஆம் ! மேலும் அதன் விளைவுகளும் அதிகம்!

நட்புடன் ஜமால் said...

புரோட்டின்கள் பற்றி அறியா செய்தி

மிக்க நன்றி தேவா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிகப்பயனுள்ள பதிவு டாக்டர்.
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

தலைமுடி உதிர்வதற்கு நிறைய பாதம் போன்ற நுட்ஸ் வகையைச் சாப்பிடச் சொல்கிறார் டாக்டர்.
அதைவிட (vollkorn - நான் நினைக்கிறேன் கேழ்வரகு இனம்)இதனால் செய்யப்பட்ட மா,பாண் போன்றவற்றைச் சாப்ப்பிட சொல்கிறார்.இது என்ன வகைச் சத்துக்குறைபாடு.இதுவும் புரோட்டினா ?

Chitra said...

இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

...... Business tactics vs health issues. :-(

ரோகிணிசிவா said...

@Chitra said...
இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

...... Business tactics vs health issues. :-(
-agreed , when wil we stand against all this

Praveenkumar said...

பயனுள்ள மருத்துவ தகவல்கள் அடங்கிய அவசியமான பதிவு.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை எனவும், உணவு உட்கொள்ளும் முறை குறித்தும், அதிக புரதத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஒரு பதிவராக இல்லாமல் மருத்துவ ஆலோசகராக விளக்கியிருக்கீங்க..! அதற்கே தங்களுக்கு மிகப்பெரிய கைதட்டல் கொடுத்து பாராட்டலாம்.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
புரோட்டின்கள் பற்றி அறியா செய்தி

மிக்க நன்றி தேவா!///

நன்றி ஜமால்!!

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
மிகப்பயனுள்ள பதிவு டாக்டர்.
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா!

தேவன் மாயம் said...

ஹேமா said...
தலைமுடி உதிர்வதற்கு நிறைய பாதம் போன்ற நுட்ஸ் வகையைச் சாப்பிடச் சொல்கிறார் டாக்டர்.
அதைவிட (vollkorn - நான் நினைக்கிறேன் கேழ்வரகு இனம்)இதனால் செய்யப்பட்ட மா,பாண் போன்றவற்றைச் சாப்ப்பிட சொல்கிறார்.இது என்ன வகைச் சத்துக்குறைபாடு.இதுவும் புரோட்டினா ?
//
இது பற்றி அறிந்து சொல்கிறேன்!

தேவன் மாயம் said...

Chitra said...
இந்தியா போன்ற நாடுகளில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் என்ற முறையில் புரத சத்து பவுடர்கள் மிக அதிக அளவில் ஏஜண்டுகளால் பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

...... Business tactics vs health issues. :-(//

உண்மைதான்!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
பயனுள்ள மருத்துவ தகவல்கள் அடங்கிய அவசியமான பதிவு.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை எனவும், உணவு உட்கொள்ளும் முறை குறித்தும், அதிக புரதத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஒரு பதிவராக இல்லாமல் மருத்துவ ஆலோசகராக விளக்கியிருக்கீங்க..! அதற்கே தங்களுக்கு மிகப்பெரிய கைதட்டல் கொடுத்து பாராட்டலாம்.
///

உற்சாகப்படுத்தியதற்கு நன்றி பிரவீன்!

அகல்விளக்கு said...

கொஞ்சம் லேட்தான்... பரவாயில்லை..

மிக மிக பயனுள்ள பதிவு அண்ணா...

நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...

:-)

Jerry Eshananda said...

//.ஹேமா said...
தலைமுடி உதிர்வதற்கு நிறைய பாதம் போன்ற நுட்ஸ் வகையைச் சாப்பிடச் சொல்கிறார் டாக்டர்.
அதைவிட (vollkorn - நான் நினைக்கிறேன் கேழ்வரகு இனம்)இதனால் செய்யப்பட்ட மா,பாண் போன்றவற்றைச் சாப்ப்பிட சொல்கிறார்.இது என்ன வகைச் சத்துக்குறைபாடு.இதுவும் புரோட்டினா ?
//
இது பற்றி அறிந்து சொல்கிறேன்//
சீக்கிரம்சொல்லுங்கப்பு.....அதுக்குள்ள...இருக்குற கொஞ்ச நஞ்ச முடியும் உதிந்து போயிடாம...இது..ஹேமாவுக்கு கேக்கலப்பு..எனக்குத்தான் கேக்குறேன்

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான தகவல்...சூபப்ர்ப்....

Part Time Jobs Online said...

மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஏமாற்றுபவன் அதை செய்துகொண்டுதான் இருப்பான்

SUFFIX said...

நல்ல தகவல்கள் டாக்டர், இரத்த சோகை குறிப்பாக ப்ளேட்லட் கவுண்ட் குறைவு இதை இயற்கை உணவு மூலம் குணப்படுத்த முடியுமா, முடிந்தால் இதைப் பற்றியும் எழுதுங்களேன். நன்றி.

priyamudanprabu said...

நன்றி மருத்துவரே

நல்ல பதிவு

ஓட்டு போட்டு ஆதரவு தாரென்

மின்னுது மின்னல் said...

கிரியேட்டின்
//

இதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன் பிளிஸ்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory