Wednesday, 9 June 2010

மாடு குத்தினால்?- கேஸ் ரிப்போர்ட்!!

IMG_3299

மஞ்சுவிரட்டு பற்றியும் அதில் காயம் ஏற்பட்ட ஒருவரின் கதையையும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவைப் பார்க்கவும்!

மஞ்சுவிரட்டு மைதானத்திலேயே ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சைக்காக நிறுத்தப்பட்டு இருக்கும்.அதில் உள்ள குழுவினர் சிறு காயங்க்களுக்கு சிகிச்சை அளிப்பர்.ஆனால் வயிற்றிலோ நெஞ்சிலோ மாடு குத்தினால் மிகவும் ஆபத்து. அப்படிப்பட்ட பெரிய காயங்கள் ஏற்பட்டால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல் வேண்டும். அங்கு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். 

நன்கு படித்த இஞ்சினியர் ஒருவருக்கு மஞ்சுவிரட்டில் வயிற்றில் மாடு குத்திக் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருடைய காயம் ஆழமாக இருந்ததால் குடல், ஈரல் போன்றவற்றில் காயம் இருக்கலாம் என்றும் ஆகையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர்.

அவரோ எனக்கு ஏற்பட்டுள்ள சின்னக் காயத்திற்கு அறுவை சிகிக்கையா? மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை கிகிச்சை செய்கிறீர்கள் என்று குறை சொல்லி விட்டு மறுத்து விட்டு காயத்திற்குக் கட்டு மட்டும் போடுங்கள் நான் வெளியில் பார்த்துக் கொள்கிறேன்" என்று கட்டுப் போட்டுக் கொண்டு சென்று விட்டார்.

தற்போது நம் ஊரில் நோயாளியே தனக்கான சிகிச்சையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் கொடுமை. அதனால்தான் பல வித கொடிய நோயுள்ளவர்களும் சிகிச்சை பெறாமல் சுதந்திரமாக நடமாடி எல்லோருக்கும் நோயைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

வயிற்றில் குத்துப்பட்ட இந்த நபரும் சிகிச்சையை மறுத்து வெளியில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் பட்டது.

அங்கு "நீ காசு சம்பாதிக்க நான்தான் கிடைத்தேனா? என்று அறுவை சிகிச்சையை  மறுத்து விட்டு வீட்டுக்குச்சென்று விட்டார். மறு நாள் வயிறு வீங்கி விட்டது. அன்று வீட்டில் உள்ளவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கால தாமதமான சிகிச்சை காலனை அழைத்து விட்டது. சரியான நேரத்தில் சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார். தன் அரைகுறை அறிவாலும், பிடிவாதத்தாலும் தன் உயிரை இழந்தார் அவர்.

இது அத்துடன் நிற்கவில்லை. மஞ்சு விரட்டில் மாடு குத்தி  இறந்தால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்துவர். அந்த விசாரணையில் இவர் சிகிச்சையை மறுத்ததை அவருடைய நண்பரும், மனைவியுமே ஒத்துக் கொண்டனர். இல்லையென்றால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.இந்த விசாரணைக்கு நாங்களும், அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவரும் பல கட்ட விசாரணையைக் கடக்க வேண்டியதாக இருந்தது.

சரி மாடு வயிற்றில் குத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
1. மாடு வயிற்றில் குத்தினால் கல்லீரல், மண்ணீரல் குடல், இரைப்பை,பெரிய இரத்தக் குழாய்கள் ஆகியவற்றில்  காயம் ஏற்பட்டு அதிக அளவு இரத்தம் வெளியேறி விடுதல்.(HYPO VOLEMIA)                        2.மாட்டுக் கொம்பிலிருக்கும், மண், கிருமிகள் வயிற்றுப் பகுதியில் சென்று பெருகி செப்டிக் ஆகி வயிற்றிலுள்ள எல்லா உறுப்புகளும் செயலிழந்து இறப்பு நேரிடலாம்.(PERITONITIS)
3.இடது புற நெஞ்சில் ஆழமாகக் குத்துப்பட்டால் இதயம் கிழிந்து உடனே இறக்க வாய்ப்புள்ளது.                                 4.மார்பின் வலது புறக்காயத்தில் நுரையீரல் காயப்பட்டால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்:
1.குத்து மிக ஆழமாகவும், நிறைய குத்துக்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை, உயர் ஆண்டிபயோடிக் மருந்துகள்,

இரத்தம் அதிகம் வெளியேறியிருந்தால் இரத்தம் ஏற்றுதல் ஆகியவை.

அறுவை சிகிச்சையில் தற்போது பெரும்பாலும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இத்தகைய காயங்க்களைச்சரி செய்யலாம். நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் செய்வது இயலாவிட்டால் ஓபன் அறுவை சிகிச்சை செய்வார்கள்.     .

24 comments:

கொல்லான் said...

நல்ல விளக்கம்.
அருமை.

Chitra said...

சரி மாடு வயிற்றில் குத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்...... பாக்கலாமே! நல்லா எழுதி இருக்கீங்க...... :-)

தேவன் மாயம் said...

கொல்லான் said...
நல்ல விளக்கம்.
அருமை//

கொல்லான் நன்றி.

தேவன் மாயம் said...

சித்ரா கருத்துக்கு நன்றி!!

சி. கருணாகரசு said...

நீங்க குத்துப்பட்ட “காளைகளுக்கு” மருத்துவம் செய்வீர்கள்.
குத்திய காளைக்கு கோம்பு ஒடிந்தாலோ... காயம் ஏற்பட்டாலோ அவைகளுக்கு ???

(கேள்வி கேட்போமில்ல)

சி. கருணாகரசு said...

அவரோ எனக்கு ஏற்பட்டுள்ள சின்னக் காயத்திற்கு அறுவை சிகிக்கையா? மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை கிகிச்சை செய்கிறீர்கள் என்று குறை சொல்லி விட்டு மறுத்து விட்டு காயத்திற்குக் கட்டு மட்டும் போடுங்கள் நான் வெளியில் பார்த்துக் கொள்கிறேன்" என்று கட்டுப் போட்டுக் கொண்டு சென்று விட்டார்.//

என்ன கொடுமை இது!

சி. கருணாகரசு said...

தற்போது நம் ஊரில் நோயாளியே தனக்கான சிகிச்சையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் கொடுமை. அதனால்தான் பல வித கொடிய நோயுள்ளவர்களும் சிகிச்சை பெறாமல் சுதந்திரமாக நடமாடி எல்லோருக்கும் நோயைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். //

இது பகுத்தறியாதவர்களின்.... செயல்.

சி. கருணாகரசு said...

நீங்க குத்துப்பட்ட “காளைகளுக்கு” மருத்துவம் செய்வீர்கள்.
குத்திய காளைக்கு கோம்பு ஒடிந்தாலோ... காயம் ஏற்பட்டாலோ அவைகளுக்கு ???

(கேள்வி கேட்போமில்ல)//

அது கோம்பு இல்ல கொம்பு!!!

அபுஅஃப்ஸர் said...

இதுக்குதான் ஆணீயே புடுங்கவேணாம்னு கோர்ட் தடைவிதிச்சது, மக்கள் எங்கே கேக்கவா போறாங்க

இதுக்கு பேருதான் ஆப்பை தானா தேடிப்போய் வெச்சிக்கிறதோ@:)

பிரவின்குமார் said...

கட்டுரை அருமை நண்பரே..! காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை குறித்தும், மாடு குத்தினால் ஏற்படும் விளைவுகளையும், தீர்க்கும் வழிமுறைகளையும் நல்லா சொல்லியிருக்கீங்க..!

ஷாகுல் said...

கொம்பு இல்லாத மாட அடக்குன இந்த பிரச்சனையே இல்லயே.

குசும்பன் said...

//நன்கு படித்த இஞ்சினியர் ஒருவருக்கு மஞ்சுவிரட்டில் வயிற்றில் மாடு குத்திக் காயம் ஏற்பட்டது.//

படிச்சவங்களுக்குதான் இதுமாதிரி குயித்தியான யோசனை எல்லாம் வரும், படிக்காதவன் சரிங்கன்னு ஒத்துப்பான்!

நல்ல பகிர்வு!

தேவன் மாயம் said...

நீங்க குத்துப்பட்ட “காளைகளுக்கு” மருத்துவம் செய்வீர்கள்.
குத்திய காளைக்கு கோம்பு ஒடிந்தாலோ... காயம் ஏற்பட்டாலோ அவைகளுக்கு ???

(கேள்வி கேட்போமில்ல)
//
கருணா! நல்லாக் கேளுங்க!! உங்களைப் போல் கல் பாடியைக் குத்தினாத்தான் மாட்டுக்குக் கொம்பு உடையும்!!!

தேவன் மாயம் said...

இதுக்குதான் ஆணீயே புடுங்கவேணாம்னு கோர்ட் தடைவிதிச்சது, மக்கள் எங்கே கேக்கவா போறாங்க

இதுக்கு பேருதான் ஆப்பை தானா தேடிப்போய் வெச்சிக்கிறதோ@:)
///

இன்சூரன்ஸ் 2 லட்சம் பணம் டெபாசிட் செய்தால் கோர்ட் மஞ்சுவிரட்டு நடத்தலாம் என்று உத்தரவு தருது அபு!!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
கட்டுரை அருமை நண்பரே..! காயம்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை குறித்தும், மாடு குத்தினால் ஏற்படும் விளைவுகளையும், தீர்க்கும் வழிமுறைகளையும் நல்லா சொல்லியிருக்கீங்க..!
///
சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன் பிரவீன்!!

தேவன் மாயம் said...

கொம்பு இல்லாத மாட அடக்குன இந்த பிரச்சனையே இல்லயே///

சாகுல் நீங்க எந்த மாட்டைச் சொல்றீங்க!!

தேவன் மாயம் said...

குசும்பன் said...
//நன்கு படித்த இஞ்சினியர் ஒருவருக்கு மஞ்சுவிரட்டில் வயிற்றில் மாடு குத்திக் காயம் ஏற்பட்டது.//

படிச்சவங்களுக்குதான் இதுமாதிரி குயித்தியான யோசனை எல்லாம் வரும், படிக்காதவன் சரிங்கன்னு ஒத்துப்பான்!

நல்ல பகிர்வு!

///
உண்மைதான்!! சில நேரங்களில் அது அசம்பாவிதமாக முடிகிறது!!

நேசமித்ரன் said...

இது இதத்தான் எதிர்பார்த்தோம் தலைவரே

அருமையான நடையும் விளக்கிய விதமும்

மிக்க நன்றி

கலா said...

அப்பா,சாமி அந்த விளையாட்டு
நடக்கின்ற பக்கமும் எட்டிப் பார்க்க
மாட்டேன் இவ்வளவு விபரீதங்களா?

நல்ல பகிர்வு மிக்க நன்றி மருத்துவரே!

தேவன் மாயம் said...

நேசமித்ரன் said...
இது இதத்தான் எதிர்பார்த்தோம் தலைவரே

அருமையான நடையும் விளக்கிய விதமும்

மிக்க நனறி//

இதுதானே! இது போன்றும் தொடர்ந்து எழுதுகிறேன்!

தேவன் மாயம் said...

அப்பா,சாமி அந்த விளையாட்டு
நடக்கின்ற பக்கமும் எட்டிப் பார்க்க
மாட்டேன் இவ்வளவு விபரீதங்களா?

நல்ல பகிர்வு மிக்க நன்றி மருத்துவரே!

///

பயந்து விட்டீர்களா! சும்மா வேடிக்கை பார்ப்பவர்களையும் சில நேரம் மாடு குத்திவிடும்!!

ஹேமா said...

மாடு குத்தினால்....
பயமாத்தான் இருக்கு டாக்டர் !

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

ஹுஸைனம்மா said...

//மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை கிகிச்சை செய்கிறீர்கள் என்று குறை சொல்லி விட்டு //

மிகச்சில மருத்துவர்களால் எல்லாருக்குமே ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது; யோசிக்காமல் பலியாகி விட்டார் இவர். செகண்ட் ஒப்பீனியன் கேட்ட பின்னராவது யோசித்திருக்கலாம்; என்ன சொல்ல!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory