Wednesday, 2 June 2010

என்ன எழுத?

ஒவ்வொரு முறையும்

வாசல்வரை வந்து

ஏமாந்து செல்கின்றன!!

 

வரிகளாய் மாற்ற முடியாத

எழுத்துக்களுடன்

இரவும் பகலும்

பிரசவத்துக்கு முந்திய வேதனை!

 

கர்ப்பம் கலைந்த

தாயின் வேதனையை

நான் சுமக்கிறேன்,

உருவெடுக்கும் வரிகள்

உங்களை

காயப்படுத்தி விடலாம் என்பதால்!!

31 comments:

ஜெரி ஈசானந்தன். said...

என்ன எழுத?

V.Radhakrishnan said...

எழுதிட்டு என்ன எழுதவா? போங்க டாக்டர்.

பிரவின்குமார் said...

இப்படியும் கவிதை எழுத முடியுமா..??!! நல்லயிருக்கு நண்பரே..!

*இயற்கை ராஜி* said...

nice..Dr

வேத்தியன் said...

இது எல்லாம் ரொம்ப ஓவர் சார்...
நல்லாருக்கு...
:-)

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு எழுதுங்க...

நேசமித்ரன் said...

நல்லாருக்கு டாக்டர்

:)

sury said...

" என்ன எழுத ? " என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய வசன கவிதை பல விஷயங்களை சொல்லாமல்
சொல்கிறது.

மற்ற பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் ஒரு டாக்டர் எனவும் தெரிகிறது. டாக்டர் என்றால் மருத்துவப்படிப்பா,
அல்லது பி. ஹெச்.டி. எந்த ஒரு படிப்பிலும் தேர்வு பெற்று டாக்டர் எனப்படுபவரா ? தெரியவில்லை.

இருப்பினும், நீங்கள் ஒரு மருத்துவத்துறை டாக்டர் என வைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

பல சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் தமை நாடி வரும் நோயாளிகளுக்கு முக்கியமாக, குறிப்பாக, முதியோர்க்கு
என்ன மருந்துகள் எழுதுவது என்ற் தயக்கப்படுவதை ( ஓரிரு கணத்துக்குக்கூட ) நான் கண்டிருக்கிறேன்.

என்ன மருந்து கொடுத்தாலும், இவர் திரும்பவும் ஆரோக்கியமானவராக ஆகப்போவதில்லை என்பது
பல்வேறு நிலைகளைல், சந்தர்ப்பங்களில் டாக்டருக்கு தெரிந்திருந்தாலும், வந்தவரின் மன் நிம்மதிக்காக‌
ஓரிரு மருந்துகள் எழுதித் தரும் நிலை.


// உருவெடுக்கும் வரிகள் உங்களை காயப்படுத்தி விடலாம் என்பதால்!!//

உண்மை.

தன் அறிவு சொல்வதை சொற்களால் சொல்லமுடியாத நிலை. டாக்டர் சொல்கிறார்: எல்லாம் சரியாய் போயிடும்.
கவலையை விடுங்கள். "

பல்வேறு சமயங்களில் டாக்டர் எழுதும் மருந்துகளை விட, அவர் தரும் நம்பிக்கை நோயாளியை குணப்படுத்துக்கிறது.
என்பதே உண்மை.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
என்ன எழுத?

ஏதாவது எழுதுங்கப்பு!

சி. கருணாகரசு said...

மருத்துவ கவிஞருக்கு...வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

கவிதை.... மிக நேர்த்தி தெளிவு.....
பாராட்டுக்கள் மருத்துவரே.

தேவன் மாயம் said...

V.Radhakrishnan said...
எழுதிட்டு என்ன எழுதவா? போங்க டாக்டர்.
//

கோச்சுங்காதீங்க மக்கா!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
இப்படியும் கவிதை எழுத முடியுமா..??!! நல்லயிருக்கு நண்பரே.//

இது எப்புடி?

தேவன் மாயம் said...

*இயற்கை ராஜி* said...
nice..Dr//

நன்றி!

தேவன் மாயம் said...

வேத்தியன் said...
இது எல்லாம் ரொம்ப ஓவர் சார்...
நல்லாருக்கு...
:-)/

ஒவர்!! தலைக்கு மேலே!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லாயிருக்கு எழுதுங்க...///

என்னத்த எழுத!

தேவன் மாயம் said...

நேசமித்ரன் said...
நல்லாருக்கு டாக்டர்

:)///

நன்றி !!

தேவன் மாயம் said...

எல்லாம் சரியாய் போயிடும்.
கவலையை விடுங்கள். //

உண்மை அய்யா!!உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்கிறேன்!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...
கவிதை.... மிக நேர்த்தி தெளிவு.....
பாராட்டுக்கள் மருத்துவரே.

//

நண்பரே நலமா?

தமிழ் மதுரம் said...

உருவெடுக்கும் வரிகள்

உங்களை

காயப்படுத்தி விடலாம் என்பதால்//

மருத்துவக் கவிஞர் என்பது இதனைத் தானோ? மறைமுகச் சாடல்... இது தான் இக் கவிதைக்கு அழகு.

தேவன் மாயம் said...

தமிழ் மதுரம் said...
உருவெடுக்கும் வரிகள்

உங்களை

காயப்படுத்தி விடலாம் என்பதால்//

மருத்துவக் கவிஞர் என்பது இதனைத் தானோ? மறைமுகச் சாடல்... இது தான் இக் கவிதைக்கு அழகு.

//

கசப்பு மருந்தைக் குடித்துத்தானே ஆகனும்!!

நட்புடன் ஜமால் said...

மருத்துவர்

வரும் முன் காப்போம் :)

smart said...

super

அமைதிச்சாரல் said...

ஏதாவது எழுதுங்க...

ஹேமா said...

ஒரு கவிதையின் பிரசவ அவஸ்தை.அழகு தேவா !

பிரியமுடன் பிரபு said...

நல்லாத்தான் எழுதுறீக

குமரை நிலாவன் said...

ம்ம்ம்
இப்படியும் கவிதை எழுத முடியுமா..??!!

நல்லாருக்கு தேவா சார்...

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை கவிஞரே.

கலா said...

உருவெடுக்கும் வரிகள்
உங்களை
காயப்படுத்தி விடலாம் என்பதால்!!\\\\\
ஏங்க அவ்வளவு நல்ல மனசுக்காரங்களா
நீங்க?
குத்தும் போது வலிக்குமே...
அதுதாங்க ஊசி
அப்ப நீங்க யாருக்கும் ஊசி
போடமாட்டீங்களா?அல்லது
வலிக்காமல் குத்தும் கலை
கைவசம் உண்டோ!

குடந்தை அன்புமணி said...

//உருவெடுக்கும் வரிகள்

உங்களை

காயப்படுத்தி விடலாம் என்பதால்!!//

இப்படி எல்லாரும் நினைச்சிருந்தா- அதை மனசில வைச்சி இடுகையிட்டா இன்னைக்கி பதிவுலகம்... ம்....

சத்ரியன் said...

தேவா,

பேசத்துடிக்கும் மழலை ‘ஆ...ஊ...’வென சப்தம் செய்யுமே அப்படியான உணர்வை,
கவிதை செய்யத்தூண்டும் உங்களின் உள் போராட்டத்தை அழகாக ‘கவிதை’யாக்கி இருக்கின்றீர்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory