Tuesday, 10 March 2009

வக்கீல்கள் போராட்டம் -சரியா? தவறா?

சமீபத்தில் நடந்த உயர்நீதிமன்ற நிகழ்வுகள் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவற்றில் என் கருத்துக்கள் சிலவற்றை கீழே அலசுகிறேன்!!சரியா தவறா என்று தவறாமல் சொல்லவும்!

1.போலீஸ் துறை செய்தது சரிதானா?

போலீஸ் துறை செய்தது சரிதான் என்றால் போலீஸார் அமைதியான முறையில் கைது செய்து இருக்கலாம்.

இதே போலீஸ் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் அமைதியாக வேடிக்கை பார்த்ததே! எல்லா நேரமும் ஒரே போல் நடவடிக்கைகளை எடுத்தால் அவர்களை நாம் பாராட்டலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் முன்னரே திட்டமிட்டார்போல் அல்லவா தெரிகிறது!!

2. போலீஸ் ஒரு வளாகத்தில் நுழையும் போது அத்துறையின் தலைவருடன் பேசிவிட்டே நுழைவர். இது ஒரு பொதுவான கருத்து!

கல்லூரி வளாகங்களில் கூட முதல்வரிடம் போலீஸ் உயர் அதிகாரி கலந்து ஆலோசித்த பிறகே உள்ளே வருவர்.அதிலும் அடிதடி இருக்காது!!

3.தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!!

அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது! எந்த துறையையும் விட அதிக ஊழல் இதில்தான்.ஏனெனில் கேட்க ஆளில்லை!!அவர்களைக் கேட்கும் உரிமை நீதிதுறைக்கு மட்டுமே இருக்கிறது!

நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது வளாகத்தில் நுழைந்து பைக்கில் சென்ற மருத்துவரை சோதனை செய்தார் காவலர் ஒருவர். வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு காவலரை கல்லூரி தூணில் கட்டிவைத்து விட்டார் மருத்துவர். பின் டி.எஸ்.பி. எஸ்.பி. வந்து விசாரித்ததில் போலீஸ் மது அருந்தி வசூலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மாற்றப்பட்டார்..

இதுபோல் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை!

பாகிஸ்தானில் முஷ்ரஃப் அரசு நீதிபதிகளைக் கைது செய்தது. அப்போது வக்கீல்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்! ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.20000 வக்கீல்களை சிறையில் அடைத்தது அரசு. நடந்த்து என்ன? அவசர நிலை பிரகடனம் செய்தார் முஷ்ராப்!

கடைசியில் சர்வதேச அமைப்புகள்,நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அமெரிக்காவின் தலையீட்டில் பதவி இறங்கினார்..

ஒரு நாட்டின் சரித்திரத்தியே நீதித்துறை மாற்றி எழுதியது!!

4.போலீஸை எதிர்க்க தற்போது யார் இருக்கிறார்கள்?

பொதுமக்கள்-முடியாது

பொறியாளர்கள்-முடியாது

மருத்துவர்கள்-முடியாது

தனிதொழில்துறையினர்-முடியாது

அரசு அதிகாரிகள்-முடியாது

கட்சிகள்--முடியும்

வக்கீல்கள்-முடியும்!!!

வக்கீல்கள் போல தொடர்ந்த போராட்டத்தில் யார் ஈடுபடுகிறார்கள்?

இரண்டு மாதகாலம் தங்கள் வருமானத்தை விட்டு யாராவது போராடுவார்களா?

மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தப்பிரச்சினைக்காகவா போராடினார்கள்?

இல்லையே!!  இவற்றையெல்லாம் பார்க்கும்போது வழக்கறிஞர்கள் செய்வது சரி என்றுதான் தோன்றுகிறது!!

சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!

இது என் கருத்து!!

உங்கள் கருத்துக்களை தாராளமாகச்சொல்லலாம்!!!

23 comments:

அபுஅஃப்ஸர் said...

//தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!! அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது!//

போலீஸ் மந்திரியால் முடியாதா, இதை முதல்வர்தானே வைத்துள்ளார், அவரால் முடியாதா?

அபுஅஃப்ஸர் said...

சட்டத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையே இப்படியென்றால்...
சாதாரன மக்கள் நாம் நிலை???

thevanmayam said...

//தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!! அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது!//

போலீஸ் மந்திரியால் முடியாதா, இதை முதல்வர்தானே வைத்துள்ளார், அவரால் முடியாதா?///

ஆமா! அபு!! கட்டாயம்!!

thevanmayam said...

சட்டத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையே இப்படியென்றால்...
சாதாரன மக்கள் நாம் நிலை???///

நம்ம நிலை அதோகதிதான்

அன்புமணி said...

போலீஸ் மந்திரியால் முடியாதா, இதை முதல்வர்தானே வைத்துள்ளார், அவரால் முடியாதா? முடியாதா? முடியாதா?

Anonymous said...

mmmmmmmmmm

thevanmayam said...

போலீஸ் மந்திரியால் முடியாதா, இதை முதல்வர்தானே வைத்துள்ளார், அவரால் முடியாதா? முடியாதா? முடியாதா?///

முடியாதா! முடியாதா!!

thevanmayam said...

mmmmmmmmmm///

புகழினி! ம் என்றால்!!

Anonymous said...

வழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்
(டார்வின் சார்வாகன்)

http://www.keetru.com/law/general/darwin_charvakan.php

நட்புடன் ஜமால் said...

மற்றவர்களை பற்றி அல்ல

தான் யார் என்றே சிந்திக்காதவர்களை என்ன செய்ய ...

thevanmayam said...

மற்றவர்களை பற்றி அல்ல

தான் யார் என்றே சிந்திக்காதவர்களை என்ன செய்ய ...///

சரிதான்

thevanmayam said...

வழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்
(டார்வின் சார்வாகன்)

http://www.keetru.com/law/general/darwin_charvakan.php//

சரிதான் நண்பரே!!

வால்பையன் said...

வக்கில்கள் மேல் ஒரு பக்க சார்பு ஆதரவு பதிவாக இருக்கிறது, அதற்காக நான் காவல்துறையையும் ஆதரிக்கவில்லை.

நீதியை காப்பாற்ற வேண்டியவர்கள் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டது மொத்த இந்தியாவிற்கும் அவமானம் தான், சரியான முறையில் விசாரித்து குற்றம் செய்தவர்கள் மேல் பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் பக்க வாதம்

thevanmayam said...

வக்கில்கள் மேல் ஒரு பக்க சார்பு ஆதரவு பதிவாக இருக்கிறது, அதற்காக நான் காவல்துறையையும் ஆதரிக்கவில்லை.

நீதியை காப்பாற்ற வேண்டியவர்கள் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டது மொத்த இந்தியாவிற்கும் அவமானம் தான், சரியான முறையில் விசாரித்து குற்றம் செய்தவர்கள் மேல் பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் பக்க வாதம்///

நடந்த நடக்கும் நிகழ்வுகள் அதற்கான் சாத்தியக்கூறு இருப்பதை பொய்யாக்குகின்றன..

வால்பையன் said...

//நடந்த நடக்கும் நிகழ்வுகள் அதற்கான் சாத்தியக்கூறு இருப்பதை பொய்யாக்குகின்றன..//

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு இருபக்க ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

அதனால் இவர்களுது பிரச்சனை இன்னும் சில காலங்களுக்கு அமுக்கி வைக்க படலாம் என நினைக்கிறேன்

நிலாவன் said...

நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது வளாகத்தில் நுழைந்து பைக்கில் சென்ற மருத்துவரை சோதனை செய்தார் காவலர் ஒருவர். வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு காவலரை கல்லூரி தூணில் கட்டிவைத்து விட்டார் மருத்துவர். பின் டி.எஸ்.பி. எஸ்.பி. வந்து விசாரித்ததில் போலீஸ் மது அருந்தி வசூலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக
மாற்றப்பட்டார்.. இதுபோல் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை!

ஏன் நடக்காது
இதுல பூனைக்கு யார் மனிகட்டுரதுங்கறது தான் பிரச்சனை

போலிஸ் துறையையும் குறை சொல்லமுடியாது
தொண்ணுறுகளில் தென் மாவட்டங்களில் நடந்த
( ) கலவரங்களை ஒடுக்கியதில் போலிஸ் துறையின்
பங்கு பாராட்டத் தக்கதே ...

இருந்தாலும் வக்கில்கள் மீது தாக்குதல் நடத்தும்
அளவிற்கு செல்ல வேண்டியது இல்லை
அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்

கல்வி
நீதி
காவல்
இந்த மூன்று துறைகளிலும் ஊழல் ,சுயநலம் இல்லாமல்
இருக்க வேண்டும்
இது என்னுடைய கருத்து

thevanmayam said...

கல்வி
நீதி
காவல்
இந்த மூன்று துறைகளிலும் ஊழல் ,சுயநலம் இல்லாமல்
இருக்க வேண்டும்
இது என்னுடைய கருத்து///

சரியான கருத்துதான்! அதே போல அரசியல் தலையீடும் இல்லாதிருக்கவேண்டும்!!

thevanmayam said...

//நடந்த நடக்கும் நிகழ்வுகள் அதற்கான் சாத்தியக்கூறு இருப்பதை பொய்யாக்குகின்றன..//

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கு இருபக்க ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

அதனால் இவர்களுது பிரச்சனை இன்னும் சில காலங்களுக்கு அமுக்கி வைக்க படலாம் என நினைக்கிறேன்///

அவர்களும் மன்றம் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்

ராஜ நடராஜன் said...

//சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!//

ஊடகங்களை உற்று நோக்கியதில் தவறுகள் காவல்துறை மீதே என்பது தெளிவு.சும்மா நிற்கும் வாகனங்களை உடைக்கும் பொறுக்கித்தனமும்,மண்டை உடைத்து விட்டு மருத்துவமனையில் மல்லாக்க படுத்து நாங்களும்தான் காயம்பட்டோம் என்ற அரசியல் சித்து விளையாட்டுகள் எல்லாம் கண்டிக்கத் தக்கது.

ராஜ நடராஜன் said...

எய்தவன் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

thevanmayam said...

//சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!//

ஊடகங்களை உற்று நோக்கியதில் தவறுகள் காவல்துறை மீதே என்பது தெளிவு.சும்மா நிற்கும் வாகனங்களை உடைக்கும் பொறுக்கித்தனமும்,மண்டை உடைத்து விட்டு மருத்துவமனையில் மல்லாக்க படுத்து நாங்களும்தான் காயம்பட்டோம் என்ற அரசியல் சித்து விளையாட்டுகள் எல்லாம் கண்டிக்கத் தக்கது.///

மிகவும் சரி! நான் சொல்லவ்ந்ததே இதைத்தான்!!

thevanmayam said...

எய்தவன் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.///

குழப்பம்!!யாரும் பதில் சொல்லமாட்டார்கள்!

Anonymous said...

Excellent article

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory