Thursday 12 March 2009

பொண்ணு பார்க்க போறோம்!

நகைச்சுவையாக ஒரு சின்ன நிகழ்ச்சி!! இது நான் கல்லூரி படிக்கும்போது நடந்தது!

கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! அதிலும் அருமையான நண்பர்கள் கிடைத்தால் அது சொர்க்கம்தான்!!

நாங்க படிக்கும்போது கரைஅரசன் என்று செல்லமாக நாங்க சொல்லிக்கொள்ளும் லெக்சரெர் ஒருத்தர் உண்டு!! அவரைப் பார்த்தாலே சிரிப்பாத்தான் இருக்கும்! அவர் பார்க்க மாநிறம்.. சுமாரான உயரம்! தலையை குளிருக்கு இரண்டு தோள்களுக்கும் நடுவில் வைத்து இருப்பது போல் வைத்து இருப்பார். யாருடனும் பேசமாட்டார்.  ஆனால் நடந்து போகும்போது கையைக்கூட ஆட்டாமல் அவரே பேசிக்கொண்டு போவார்!!!

காலேஜ் போனவுடனேதான் நமக்குயாரைப்பார்த்தாலும் நக்கலாத்தானே இருக்கும்!! அப்படியே உலகத்துலேயே வேற யாரும் ஈடில்லைன்ற மாதிரி மக்கள் ஒரே மப்பா அலைவானுங்க! நம்மளும்தான்!!

அப்பல்லாம் விவரம் புடிபடாத வயசுதானே!!! +2 முடிச்ச கையோட கல்லூரிக்குள்ள போறோம்! அப்படித்தானே இருக்கும்!!

சரி! கதைக்கு வருவோம்!!! நம்ம கரைஅரசனோட வகுப்பு ரொம்ப கலகலப்பா இருக்கும்! ஒரே லூட்டிதான்! பேப்பர் ஏரோ க்கள் பறந்துகொண்டே இருக்கும்!!

பாதிபேர் அட்டண்டன்ஸ் குடுத்துட்டு பின் பக்கம் வழியா போய்கிட்டே இருப்பாங்க. தலயும்(லெக்சரெர்) பாதி கிளாஸ் எடுத்துட்டு போயிடும்!!பசங்க இருந்தாதானே கிளாஸ் எடுக்க முடியும்!!

இப்படியாகப்பட்ட நேரத்தில்    நம்ம தோஸ்துகள் இருவர் எப்படியோ கரைஅரசன் மேல் அனுதாபம் கொண்டு சந்தேகம் கேட்கிற மாதிரி  குவார்ட்டர்ஸ் போய் பேசி பழக்கமாயிட்டாங்க! குவார்டர்ஸில் அவர் தனியாகத்தான் இருந்தார்! வயதான அம்மா, அப்பா கிராமத்தில் இருந்தார்கள்!

பல சந்தேகம் கேட்டு ,கதைகளைப் பேசி ஒரு வழியா அவர் கிட்ட பழகி அவரைப்பத்தி எல்லா விசயத்தையும்கறந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புது விசயத்தோட வருவானுங்க!! நாங்க அதைக் கதையாக் கேப்போம்!!

ஒரு தடவை அப்படித்தான் ஒரு அதிர்ச்சித்தகவலோடு வந்து ரொம்ப ஃபீலிங்காயி மேட்டரை சொல்லிச்சு மக்கள்!!! ஒன்னும் இல்லை!! அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னுதான்!!!(இது ஒரு பெரிய மேட்டரா?)

பார்க்கிற பெண் வீட்டிலெல்லாம் ரிஜெக்ட் ஆயி இண்டெர்வியூவில் பெயிலான மாணவனா தன் சோகத்தை பசங்கட்ட சொல்லியிருக்காரு!!!

”கரையரசன் ஆதரவாளர்கள்” முக்கியமா இரண்டு பேர் 1. ”அண்ணன் கனக்கு” (கனகராஜ் அண்ணனை செல்லமா அப்படித்தான் கூப்பிடுவோம்)  2.எம்.எம்.சாமி, ஆம்பிளைப்பிள்ளை வேண்டிப்பிறந்ததால் மூக்குசாமி என்று மூக்குக்குத்தி அப்பா அம்மா ஆசையா வச்ச பேரை அசிங்கமா?- எம்.எம்.சாமியா மாத்திகிட்டவர்!!

இருவரும் ரொம்ப டென்சன் ஆயி ”தல”க்கு எப்படியாவது பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிவிடனும்னு முடிவு பண்ணியாச்சு!!

”இதுக்கு முன்னாடி போய் பொண்ணு பார்த்தது ஏன் சரிவரலை”ன்னு கேட்டோம். அதற்கு நம்ம லெக்சரரோ அவனுங்க,(அதாவது பொண்ணு வீட்டார்) ”ஏதேதோ புரியாததைக்கேட்டு குழப்புறான்க” என்றார்!

அவரிடம் பொதுவான சில கேள்வி கேட்டோம். எங்களையே குழப்பினார்..உலக அறிவு சுத்தம். பேப்பர் கூட படிக்கமாட்டார் போலத்தெரிந்தது!

அண்ணன் கனக்குவின் அண்ணன் ஒருவர் பி.எச்.இ.எல் லில் வேலை பார்த்து வந்தார்!! அவரிடம் சொல்லி புரொக்கர் மூலம் வரன் தேடி ஒரு ஞாயிறு பெண் பார்க்க போவது என்று முடிவானது!!

சரி! இந்ததடவை நாங்க கூட்டிப்போறோம்..நீங்க அவங்க எது கேட்டாலும் எங்களைப்பாருங்க! நாங்க   மேலே கீழே தலையாட்டினா ஆமா!! சைடில் தலயாட்டினா இல்லை!!ன்னு சொல்லணும் !!!

வேறு எதுவும் பேசக்கூடாது என்று சொன்னோம்! சரி என்றார்!

பொண்ணு வீட்டில் நல்லா காபி, வடை சாப்பிட்டோம்!!

தலைவர் அமைதியா இருந்தார். பொண்ணு நல்லா இருந்தது!! என்ன மாப்பிள்ளை ஒரு வார்த்தைதான் பேசுகிறார்!!ன்னு பொண்ணு அப்பா கேட்டார்!! அமைதியான டைப்பு!! ரொம்ப பேசமாட்டார் என்றோம்!!விசயம் எல்லாம் நல்லபடியாக முடிந்தமதிரிதான்.

சரி! நாங்க போய் சொல்றோம்ன்னு சொல்லிவிட்டு வெளியே வந்தோம்!!

எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!! அப்பாடி ஒரு வழியா சாதித்து விட்டோம்! எங்களுக்குள் பார்த்துகொண்டோம்!! சாதித்த பெருமை எங்கள் எல்லோர் முகத்திலும்!

ஹாலிலிருந்து வராந்தா வந்தோம்! வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது!

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்.

பெண் அப்பாவுக்கு ஒன்னும் புரியவில்லை! என்ன சார் கேக்கிறீங்க? என்றார்..

இல்லை முகஜாடை உங்களை மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.. எங்களுக்கு புரிந்து விட்டது!!

வாங்க பாஸ் !!! வாங்க!! என்று லெக்சரரை இழுத்துக்கொண்டு ஒரே ஒட்டமாக வந்து டாக்ஸியில் ஏறிப்பறந்தோம்!  பெண்ணின் அப்பா ஏதோ கத்திக்கொண்டு இருந்தார்... எங்கள் காதில் விழும் தூரத்தை எப்பவோ கடந்து விட்டிருந்தோம்!

பி.கு.: நாங்க கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!!

61 comments:

Anonymous said...

//அப்பல்லாம் விவரம் புடிபடாத வயசுதானே!!! +2 முடிச்ச கையோட கல்லூரிக்குள்ள போறோம்! அப்படித்தானே இருக்கும்!!//

இப்ப தாத்தாவான வயசில ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....

//பி.கு.: நாங்க கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!!//

இந்தப்பொடிப்பயலுகளோடை சேந்ததினாலதான் கரை அரசனுக்கு கல்யாண ராசியில்லாமப் போயிடுச்சா ?

வேத்தியன் said...

மீ த செகன்ட்...

வேத்தியன் said...

சிறிது வேலை...
நாளை படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்...
:-)

வேத்தியன் said...

என்னது, பொண்ணு பாக்கப் போறீங்களா???

வேத்தியன் said...

ட்ரீட்டு எங்கே???

geevanathy said...

கரைஅரசன் அவர்களின் பெண்பார்க்கும் படலம் அமர்க்களம்...

///பொண்ணு வீட்டில் நல்லா காபி, வடை சாப்பிட்டோம்!! ///

ம்...ம்..

//கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! அதிலும் அருமையான நண்பர்கள் கிடைத்தால் அது சொர்க்கம்தான்!!///

உண்மைதான்...

வால்பையன் said...

ஹா ஹா ஹா

நல்லா தமாசா இருந்தாலும் கொஞ்சம் வேதனையாகவும் இருக்கு!

அவருக்கு கண்டிப்பா ராஜாஜியை தெரிந்திருக்கும். அது கூட தெரியாமல் அவர் உங்களுக்கு லெக்க்சரராக வந்திருக்க முடியாது.

எனக்கு தெரிந்து ஸீஸோபெரினியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான முக அடையாளங்கள் மறக்கலாம்.

அவருக்கு அப்போதே சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருப்பார்.

இயல்பு நிலை தவறிய சிறிய மாற்றமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் ஒரு டாக்டராக டிஸ்கியில் சொன்னால் சிறு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தலாம்.

Thamiz Priyan said...

:)))
இது உங்களோட உண்மைக் கதை தானே?.. ;-)

அப்துல்மாலிக் said...

படிச்சிட்டு வாரேன்

தேவன் மாயம் said...

/அப்பல்லாம் விவரம் புடிபடாத வயசுதானே!!! +2 முடிச்ச கையோட கல்லூரிக்குள்ள போறோம்! அப்படித்தானே இருக்கும்!!//

இப்ப தாத்தாவான வயசில ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....

//பி.கு.: நாங்க கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!!//

இந்தப்பொடிப்பயலுகளோடை சேந்ததினாலதான் கரை அரசனுக்கு கல்யாண ராசியில்லாமப் போயிடுச்சா ?///

ஆஹா வாங்க!! நாங்க தாத்தாவா?
அப்ப நீங்க பாட்டியா?

தேவன் மாயம் said...

சிறிது வேலை...
நாளை படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன்...
:-)///

duty first!!

தேவன் மாயம் said...

என்னது, பொண்ணு பாக்கப் போறீங்களா???//

Yes!

தேவன் மாயம் said...

ட்ரீட்டு எங்கே????/

உள்ளே போய் படிங்க..

தேவன் மாயம் said...

கரைஅரசன் அவர்களின் பெண்பார்க்கும் படலம் அமர்க்களம்...

///பொண்ணு வீட்டில் நல்லா காபி, வடை சாப்பிட்டோம்!! ///

ம்...ம்..

//கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! அதிலும் அருமையான நண்பர்கள் கிடைத்தால் அது சொர்க்கம்தான்!!///

உண்மைதான்..///

உண்மைதானே ராசா!!!

தேவன் மாயம் said...

ஹா ஹா ஹா

நல்லா தமாசா இருந்தாலும் கொஞ்சம் வேதனையாகவும் இருக்கு!

அவருக்கு கண்டிப்பா ராஜாஜியை தெரிந்திருக்கும். அது கூட தெரியாமல் அவர் உங்களுக்கு லெக்க்சரராக வந்திருக்க முடியாது.

எனக்கு தெரிந்து ஸீஸோபெரினியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான முக அடையாளங்கள் மறக்கலாம்.

அவருக்கு அப்போதே சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருப்பார்.

இயல்பு நிலை தவறிய சிறிய மாற்றமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் ஒரு டாக்டராக டிஸ்கியில் சொன்னால் சிறு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தலாம்.?//

நல்லது!! தாங்கள் கூறியது!!!
எம்.பி.பி.எஸ் ஆரம்ப வருடங்களில் எங்களுக்கு ஒன்னும் புரியல!!

தேவன் மாயம் said...

:)))
இது உங்களோட உண்மைக் கதை தானே?.. ;-)///

ஆமாம்!!

தேவன் மாயம் said...

படிச்சிட்டு வாரேன்///

நல்லா படிங்க!!

kuma36 said...

//கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!!//

இன்னும் முடியலையா?

kuma36 said...

//வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது! இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார். பெண் அப்பாவுக்கு ஒன்னும் புரியவில்லை! என்ன சார் கேக்கிறீங்க? என்றார்.. இல்லை முகஜாடை உங்களை மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.//

ஒரு போட்டோவில் தொங்கி கொண்டே ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டாரே!!!!!!

Sasirekha Ramachandran said...

//ஹாலிலிருந்து வராந்தா வந்தோம்! வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது!

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்//

நெஜமாவா?வாத்தியாரே இப்டீன்னா,அப்போ மாணவராகிய நீங்க எப்டீ???:-)

இராகவன் நைஜிரியா said...

// இது நான் கல்லூரி படிக்கும்போது நடந்தது! //

தப்பு தப்பா சொல்லக்கூடாது... படிச்சப்போது என்றெல்லாம்.... கல்லூரிக்கு போன காலத்தில் நடந்தது என்று இருக்க வேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

// கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! //

ஆமாம்.. ஹாஸ்டலில் இடம் கிடைத்தால் தான் ஹாஸ்டல் வாழ்க்கை கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைக்காது.

இராகவன் நைஜிரியா said...

// நாங்க படிக்கும்போது கரைஅரசன் என்று செல்லமாக நாங்க சொல்லிக்கொள்ளும் லெக்சரெர் ஒருத்தர் உண்டு!! //

லெக்சரர், புரொபஸர் இவங்களுக்கு எல்லாம் பட்ட பேர் வைக்கவில்லை என்றால் கல்லூரி போவதே வேஸ்ட்.

இராகவன் நைஜிரியா said...

// காலேஜ் போனவுடனேதான் நமக்குயாரைப்பார்த்தாலும் நக்கலாத்தானே இருக்கும்!! //

சேம் ப்ளட்...

+2 படிக்கிற காலத்திலேயே இந்த நக்கல் எல்லாம் வந்திட்டதா பட்சி ஒன்னு சொல்லுது

இராகவன் நைஜிரியா said...

// சரி! கதைக்கு வருவோம்!!! //

இது வரைக்கும் சொன்னது என்னாங்க..

ஓ.. இதுக்கு பேரு முன்னுரைங்களா?

இராகவன் நைஜிரியா said...

// நம்ம கரைஅரசனோட வகுப்பு ரொம்ப கலகலப்பா இருக்கும்! ஒரே லூட்டிதான்! பேப்பர் ஏரோ க்கள் பறந்துகொண்டே இருக்கும்!! //

அப்ப லெக்சரர உண்டு இல்லைன்னு ஆக்கிவிட்டுடீங்க... படிச்ச மாதிரி தெரியலயே..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு தடவை அப்படித்தான் ஒரு அதிர்ச்சித்தகவலோடு வந்து ரொம்ப ஃபீலிங்காயி மேட்டரை சொல்லிச்சு மக்கள்!!! ஒன்னும் இல்லை!! அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னுதான்!!!//

அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தா, அதுதான் அதிர்ச்சி தகவல். கல்யாணம் ஆகாதது எல்லாம் ஒரு தகவலே இல்லை.

இராகவன் நைஜிரியா said...

// நாங்க மேலே கீழே தலையாட்டினா ஆமா!! சைடில் தலயாட்டினா இல்லை!!ன்னு சொல்லணும் !!!//

ஒருத்தர் மேலேயும் கீழேயும் ஆட்டி, இன்னொருத்தர் சைடில் ஆட்டினா என்ன சொல்லணும் அப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார். //

அருமையான ஜோக் இதுதான்.

பெண்ணின் அப்பா அடிக்காம விட்டாரே.. அத பார்த்து சந்தோஷப் பட்டுகுங்க

இராகவன் நைஜிரியா said...

// பி.கு.: நாங்க கல்லூரி முடிக்கும்வரை நம்ம கதாநாயகனுக்கு கல்யாணம் ஆகவில்லை!! //

எப்படிங்க நடக்கும். நடக்கத்தான் விட்டுவிடுவீங்களா?

cheena (சீனா) said...

aakaa aakaa தேவா - நகைச்சுவைக் கதை அருமை - பாவம் அவரு

சி தயாளன் said...

ஆஹா...செம கூத்து...பாவம் அந்த வாத்தியார்...:-))

ஹேமா said...

என்ன மருத்துவரே இந்த வேலையெல்லாம் தாண்டித்தான் வந்தீங்களா !

ஹேமா said...

// “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார். //

உங்களை எல்லாரையும் சேர்த்துக் கிணத்துக்குள்ள தள்ளாம விட்டாரே அவங்க அப்பா.

priyamudanprabu said...

///
பொண்ணு பார்க்க போறோம்!
////

ungkaLukkaa??
உங்களுக்கா ?!?!?
ஆழ்ந்த அநுதாபங்கள்

priyamudanprabu said...

இல்லையா !!???

(ஒரு அநுதாபம் வேஸ்டா போச்சே)

priyamudanprabu said...

////
ஹாலிலிருந்து வராந்தா வந்தோம்! வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது!

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்.

////


ha ha ha

Arasi Raj said...

/*********

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்//********
-----------------
அப்புறம் விடிய விடிய உக்காந்து எல்லாம் சொல்லிக் குடுத்த நீங்க அந்த போட்டோல இருக்குறது பொண்ணோட அப்பா இல்லை தாத்தானு சரியா சொல்லித் தர வேண்டாம்...இப்டி ஒருத்தர் வாழ்க்கைய கெடுத்து போட்டீங்களே

புருனோ Bruno said...

//பெண்ணின் அப்பா ஏதோ கத்திக்கொண்டு இருந்தார்... எங்கள் காதில் விழும் தூரத்தை எப்பவோ கடந்து விட்டிருந்தோம்!//

:) :)

புருனோ Bruno said...

//அவருக்கு கண்டிப்பா ராஜாஜியை தெரிந்திருக்கும். அது கூட தெரியாமல் அவர் உங்களுக்கு லெக்க்சரராக வந்திருக்க முடியாது.

எனக்கு தெரிந்து ஸீஸோபெரினியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான முக அடையாளங்கள் மறக்கலாம்.//

அப்படி எல்லாம் பொதுவாக கூற முடியாது சார்.

//தப்பு தப்பா சொல்லக்கூடாது... படிச்சப்போது என்றெல்லாம்.... கல்லூரிக்கு போன காலத்தில் நடந்தது என்று இருக்க வேண்டும்.//

குமுதம் விகடன் தினத்தந்தி படிச்சப்போது சார் !!!

புதியவன் said...

//இல்லை முகஜாடை உங்களை மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.. எங்களுக்கு புரிந்து விட்டது!!//

மருத்துவரே காமெடியிலும் கலக்குறீங்க...

Rajeswari said...

படிச்சுக்கிட்டே என்ன வேலைலாம் செய்து இருக்கீங்க பாருங்க.பெரிய ஆளுதான்,சரி கடைசிளியாவது,அந்த போட்டோ யாருதுன்னு சொன்னிங்களா?

குடந்தை அன்புமணி said...

//நீங்க அவங்க எது கேட்டாலும் எங்களைப்பாருங்க! நாங்க மேலே கீழே தலையாட்டினா ஆமா!! சைடில் தலயாட்டினா இல்லை!!ன்னு சொல்லணும் !!! வேறு எதுவும் பேசக்கூடாது என்று சொன்னோம்! சரி என்றார்! //

உங்க லெக்சரரையே தலையாட்ட வச்சிட்டீங்க!

குடந்தை அன்புமணி said...

//சாதித்த பெருமை எங்கள் எல்லோர் முகத்திலும்! ஹாலிலிருந்து வராந்தா வந்தோம்! வராண்டா எதிர் சுவரில் ராஜாஜி படம் தொங்கிக்கொண்டு இருந்தது! இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார். //

வச்சுட்டாரு ஆப்பு!

குடந்தை அன்புமணி said...

//லெக்சரரை இழுத்துக்கொண்டு ஒரே ஒட்டமாக வந்து டாக்ஸியில் ஏறிப்பறந்தோம்! //

டாக்ஸியில் பறந்தீங்களா?

Sinthu said...

"இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்."
இப்படித் தான் எல்லாம் பொண்ணு வீட்டையும் கேட்டாரோ தெரியவில்லை...

வேத்தியன் said...

:-))))))

வேத்தியன் said...

இதுவரை நல்லா வந்த நம்ம ஆள் படைத்தைப் பார்த்து “இது உங்க அப்பாவா?” என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்துக்கேட்டார்.//

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

வேத்தியன் said...

பாவம் மிஸ்டர்.கரைஅரசன்...
அறிவு இல்லைன்னாலும் பிரச்சினை தான், அறிவு கூடினாலும் பிரச்சினை தான்...

வேத்தியன் said...

மீ த 50...
இவரெல்லாம் எப்பிடி தான் லெக்சரர் ஆனாரோ???
:-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தலையை குளிருக்கு இரண்டு தோள்களுக்கும் நடுவில் வைத்து இருப்பது //

//நடந்து போகும்போது கையைக்கூட ஆட்டாமல் //


ortho effect..?

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/10.html

வந்து பார்க்கவும்...

அப்துல்மாலிக் said...

//கல்லூரியில் ஹாஸ்டல் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் கிடைக்காதது! அதிலும் அருமையான நண்பர்கள் கிடைத்தால் அது சொர்க்கம்தான்!! ///

உண்மைதான்

அப்துல்மாலிக் said...

//சொல்லிக்கொள்ளும் லெக்சரெர் ஒருத்தர் உண்டு!! அவரைப் பார்த்தாலே சிரிப்பாத்தான் இருக்கும்! அவர் பார்க்க மாநிறம்.. சுமாரான உயரம்! தலையை குளிருக்கு இரண்டு தோள்களுக்கும் நடுவில் வைத்து இருப்பது போல் வைத்து இருப்பார். யாருடனும் பேசமாட்டார். ஆனால் நடந்து போகும்போது கையைக்கூட ஆட்டாமல் அவரே பேசிக்கொண்டு போவார்!!!//

எல்லா காலேஜ்லேஎயும் இதேமாதிரிஒரு ஆள் இருக்கத்தான் செய்ராங்கய்யா உங்க காலேஎஜ்மட்டும் விதிவிலக்கா என்னா

அப்துல்மாலிக் said...

//காலேஜ் போனவுடனேதான் நமக்குயாரைப்பார்த்தாலும் நக்கலாத்தானே இருக்கும்!! அப்படியே உலகத்துலேயே வேற யாரும் ஈடில்லைன்ற மாதிரி மக்கள் ஒரே மப்பா அலைவானுங்க! நம்மளும்தான்!! அப்பல்லாம் விவரம் புடிபடாத வயசுதானே!!! +2 முடிச்ச கையோட கல்லூரிக்குள்ள போறோம்! அப்படித்தானே இருக்கும்!!//

ஆமாம் நா ஸ்டூடன்ட் என்ர மப்பு, போதைதந்த மப்புஇல்லியா மருத்துவரே

அப்துல்மாலிக் said...

ஹா ஹா சரியான கலாட்டா பெண்பார்க்கும் படலம்

அப்துல்மாலிக் said...

பகிர்ந்ததுக்கு நன்றி

இன்னும் எழுதுங்க‌

SASee said...

ஏதோ சொன்னீங்க........
நாங்களும் பாத்தோம்
...

fun மாப்பு.........fun

அ.மு.செய்யது said...

தலைப்ப பார்த்ததும் நான் உங்களுக்கு தான் பொன்னு பாக்க போறீங்களோனு நினைச்சி ஷாக் ஆயிட்டேன்..

நல்ல வேள...கொசுவத்தி கலாட்டா..பெண்பார்க்கும் படலம்..அசத்தல் தேவா..

யாழினி said...

ஹீ...ஹீ... நல்ல நகைச்சுவை.

சாந்தி நேசக்கரம் said...

thevanmayam சொன்னது…
ஆஹா வாங்க!! நாங்க தாத்தாவா?
அப்ப நீங்க பாட்டியா?

பின்னயென்ன பேத்தியா ? தாத்தா ?

34ம் அகவையைத் தாண்டப்போகிறேன் இன்னும் 3மாதத்தில்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory