Thursday 18 June 2009

மங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14!!

அன்பின் வலை மக்களே!!

நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விசயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விசயங்கள் தெரிய வரும்.

2.மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3.கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4.ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், நண்பர்களாக எவ்வளவு பழகலாம், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்கௌங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6.கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7.பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விசயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8.நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9.நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.

10.உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி,எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுதுபோக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

11.புத்தகம்,கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12.உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13.இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.

14.இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!

--------------------------------------------------------------------------

பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக!

------------------------------------------------------------------------------

27 comments:

சி தயாளன் said...

உண்மைதான்...அதுவும் 14 வது...அத எல்லாரும் முதலில் செய்யுங்கள்..எல்லாம் சரியாகிவிடும் :-)

தராசு said...

அருமையான அறிவுரைகள்.

ஒரு சிலவற்றை நானும் கடைப்பிடிக்கிறேன். மற்றவற்றை துவங்க முற்சிக்கிறேன்.

pudugaithendral said...

தந்தை, மகள் பாசப்பிணைப்பு அதிகமாக இருக்குமே தவிர கற்றுக்கொடுத்தல் அங்கே குறைவுதான்.

அருமையா சொல்லியிருக்கீங்க.

pudugaithendral said...

ஆமாம் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேனே என்னாச்சு????????????????????????????????????

Rajeswari said...

நல்ல பதிவு..7 வது பாயிண்ட்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

இஃகி இஃகி..

வால்பையன் said...

உளவியல்!!

நன்றி,

Anonymous said...

தேவையான அறிவுரைகள் நல்லா எடுத்துச் சொல்லியிருக்கீங்க.....அவசியம் அனைவரும் அறியனும்...

சொல்லரசன் said...

பயனுள்ள பதிவு டாக்டர் பின்பற்ற முயற்சிசெய்கிறேன்.

//கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள்.//

உங்க மகள் கேட்ட ஜீன்ஸ் எடுத்துகொடுத்தீர்களா?

நட்புடன் ஜமால் said...

இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!\\

இது தான் டாப்பு

தேவன் மாயம் said...

Blogger ’டொன்’ லீ said...
உண்மைதான்...அதுவும் 14 வது...அத எல்லாரும் முதலில் செய்யுங்கள்..எல்லாம் சரியாகிவிடும் :-)///
வாங்க ! லீ!! 14 எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு!!
---------------------------
Blogger தராசு said...
அருமையான அறிவுரைகள்.

ஒரு சிலவற்றை நானும் கடைப்பிடிக்கிறேன். மற்றவற்றை துவங்க முற்சிக்கிறேன்///
மிக்க நன்றி!!
------------------------------.
Blogger புதுகைத் தென்றல் said...

தந்தை, மகள் பாசப்பிணைப்பு அதிகமாக இருக்குமே தவிர கற்றுக்கொடுத்தல் அங்கே குறைவுதான்.

அருமையா சொல்லியிருக்கீங்க.///
வாங்க புதுகை!!
------------------------------
Blogger Rajeswari said...

நல்ல பதிவு..7 வது பாயிண்ட்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

இஃகி இஃகி..///
சாப்பாட்டு விசயம்தானே!! நல்லாப் பிடிக்குமே!!
-------------------------------
Blogger வால்பையன் said...

உளவியல்!!

நன்றி,///

நன்றி
------------------------------
Blogger தமிழரசி said...

தேவையான அறிவுரைகள் நல்லா எடுத்துச் சொல்லியிருக்கீங்க.....அவசியம் அனைவரும் அறியனும்..///

தமிழரசி!! உங்க கவிதையையை இன்னும் படிக்கல!
---------------------------- !
Blogger சொல்லரசன் said...

பயனுள்ள பதிவு டாக்டர் பின்பற்ற முயற்சிசெய்கிறேன்.

//கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள்.//

உங்க மகள் கேட்ட ஜீன்ஸ் எடுத்துகொடுத்தீர்களா?//

எடுத்துக்கொடுத்துவிட்டேன் நண்பா!!
--------------------------
Blogger நட்புடன் ஜமால் said...
உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!\///

ஆமா! ஜமால் !!

இது தான் டாப்பு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பயனுள்ள ஒரு பதிவு. பெண்கள் முதலில் காணும் ஆண்மகன் அவர்கள் அப்பா தான்.
அவர்கள் ஆண்களைப் பற்றி அறிந்து கொள்ள அப்பா-மகள் நட்புறவு மிகவும் உதவும்.

குடந்தை அன்புமணி said...

மக்களைப் பெற்ற மகராசனுங்களே! உருப்படியான யோசனை சொன்ன தேவா அவர்களுக்கு பாராட்ட வார்த்தைகள் இருந்தா சொல்லுங்க! அசத்திட்டீங்க தல!

வெற்றி-[க்]-கதிரவன் said...

திருமணத்திற்கு பெண் கிடைக்காத எங்களை போன்ற வாலிபர்களை வேருபெற்றுவதே உங்கள் வேளையாக போய் விட்டது. முன்பு தலையணை மந்திரங்கள் இப்பொழுது இது,..

-:)

குமரை நிலாவன் said...

அருமையான அறிவுரைகள்
தேவா சார்

Unknown said...

உண்மைங்கோ... ஆனா வயசுக்கு வந்ததுக்கப்பறம் பெண்களுக்கும் அவர்களின் ஆண் ரத்த சொந்தங்களுக்கும் (அப்பா, சகோதரன்) விழுகின்ற இடைவெளி நம்ம சமுதாயத்தில் இயல்பாகிவிட்டதே... சில இலட்சியக் குடும்பங்களில்தான் நீங்க சொன்ன அறிவுரைகள் செல்லுபடியாகும். கிராமப்புறங்களில் போய் சொன்னால் அதோ கதிதான்.

*இயற்கை ராஜி* said...

6TH 7 TH RENDU POINTSM SUPER:-)

வழிப்போக்கன் said...

இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். //

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா... - தவமாய் தவமிருந்து...
:)))

வழிப்போக்கன் said...

நல்ல அறிவுரைகள்...
நான் பிறகு உபயோகப்படுத்திகிறேன்....
:)))

ச.பிரேம்குமார் said...

அருமையான சிந்தனைகள். வாழ்த்துகள் தேவா

சுந்தர் said...

பொறுப்புடன் தந்தையர் அவசியம் கடை பிடிக்க வேண்டியவை ? ஆமா பசங்கள கண்டுக்காம விட்டுடலாமா டாக்டர் ?

செந்தில்குமார் said...

பயனுள்ள பதிவு டாக்டர்...

அருமையாக தொகுத்து கொடுத்திருக்கீங்க...சூப்பர் !!

நசரேயன் said...

நல்ல தொகுப்பு

Anonymous said...

ஆம் இவை அனைத்தும் தந்தையரால் கடைபிடிக்கப்பட வேண்டியவை... இவை எதுவும் எனக்கு சிறு வயது முதலே கிடைக்காத காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையிடம் எனக்கு இருந்த சிறிய ஒட்டுதல் கூட மறைந்து விட்டது... ஒரு தந்தை மகளிடம் அன்பு காட்டினால் அது அவளை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடும் என்று தன் வாய்மொழியாகவே கூறி இருக்கிறார்.. இன்று வரை என் தந்தையிடம் எவ்வளவு தான் பேசினாலும் எங்களுக்கு இடையே ஏதோ ஒரு கோடு விழுந்துதான் கிடக்கிறது...இப்பொழுது என் தந்தை என்னிடம் வந்து ஒட்டுதலாய்ப் பேசினாலும் நான் என் தந்தையின் அன்புக்காக ஏங்கிய தருணங்கள் என் நினைவில் வந்து என்னை அவரிடம் இருந்து தனியாகவே வைத்திருக்கிறது.... இதை என் தந்தையை குறைவாய் மதிப்பிட்டுக்காட்ட நான் எழுதவில்லை... இது போல் எந்த தந்தையும் செய்து பின்னால் நீங்களும் வருந்தி உங்கள் மகளும் வருந்தாமல் இருக்கவே இந்த இடுகை....

malar said...

கடைசி பாயிண்டுதான் ரொம்ப கடைபிடிக்க வேண்டியது எத்தனை மனைவியை மதிக்கிறார்கள் ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிறந்த பதிவு சார்.,

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் அருமை,
14 அதவிட அருமை

Sinthu said...

"4.ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், நண்பர்களாக எவ்வளவு பழகலாம், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்கௌங்கள்!"
அனுபவமா?

அப்படி என்றால் அப்பா இல்லாதவங்கள் இதை எல்லாம் செய்யக் கூடாது என்றீங்களா?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory