Sunday 14 June 2009

எதிர்கால கார்கள்!

எதிர்காலத்துக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. சாதாரண குடிதண்ணீருக்கு சிரமப்படும் உலகில் தனி நீச்ச்ல் குளம் வைத்திருப்போர் வரை நாம் பார்க்கிறோம்.

எதிர்காலக்கார்கள் சுற்றுப்புறச்சூழல், எரிபொருள் சிக்கனம்,மாற்று எரிபொருள், ஒட்டுவதற்கு எளிமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி சில கார்களைப் பார்ப்போம்!!

1. Ying Hui Choo's Peugeot Blade,Peugeot ன் இந்தக்கார்

பின்புறமுள்ள காற்றாலையிலிருந்து சக்தியை மின் கலன்களுக்கு அளிக்கிறது.

2.Oskar Johansen's Peugeot 888 நடுவில் மடிந்து கொள்ளும். அதனால் நிறுத்தி வைக்க எளியது. மேலும் நாலாபுறமும் நன்றாக பார்க்கலாம். ஓட்டுவதற்கு எளியது.

3.Emre Yazici's lightweight 'EGO’ இரண்டு சக்கரங்களில் ஓடுவது. யாசி என்ற துருக்கியர் வடிவமைத்துள்ளார். இது மின்சக்தியால் ஓடும் ஒரு நபர் செல்லும் வாகனம். நிற்கும் இடத்திலேயே 180 கோணம் திரும்பும். நிறுத்திவைக்க மூன்றில் ஒரு பங்கு இடம் போதும்.

4.Tolga Metin என்ற அமெரிக்கர் வடிவமைத்த Peugeot Magnet என்ற இந்தக்கார் காந்த சக்தியால் ஓடக்கூடியது. ஏற்கெனவே காந்தப்புலத்தில் ஓடும் ஜப்பானின் அதிவேக தொடர்வண்டிகளின் பாணியில் இது அமைக்கப்பட்டுள்ளதாம்.

5.Woo-Ram Lee ,electric MoVille

இதுவும் ஒருவர் அமர்ந்து செல்லும் கார்தான். மூன்று மின்காந்த சக்கர உருளைகளால் ஓடும். இடத்தை அடைக்காமல் நிறுத்தலாம்.

6.Ke Guo என்ற சீனர் வடிவமைத்த கார். ஃபார்முலா 1 கார்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பார்த்து ஒட்டுவதுபோல் கண்ணாடிகள் இதிலுள்ளன.

7.Michael Witus Schierup என்ற டென்மார்க் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளத்தை மூன்று விதமாக குறைத்து கூட்டி அமைக்கலாம்!!! நெடுஞ்சாலையில் 16’5” அடி நீளமும்,நகர்புறத்தில் ஓட்டும்போது 12” நீளமும், வீட்டில் நிறுத்தும்போது இன்னும் நீளம் குறைவாகவும் மாற்றிக்கொள்ளலாம்!!

8. அர்ஜெண்டினாவச்சேர்ந்த Esteban Peisci வடிவமைத்த காரைப்பாருங்கள். இதில் சக்கரங்களுக்கு பதில் உருளைகள் மூன்று உள்ளன.எல்லாத்தையும் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்த்துளி.தேவா.

------------------------------------------------------------------------------

தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் ஓட்டு குத்துங்க!!

-------------------------------------------------------------------------

13 comments:

நட்புடன் ஜமால் said...

முதலிரண்டும் நான்கும் பிடிச்சிருக்கு

பழமைபேசி said...

எல்லாமும் பிடிச்சிருக்கு...இஃகிஃகி!

Vishnu - விஷ்ணு said...

முதல் கார் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசில இருக்கிறது காருன்னு கண்டுபிடிக்கவே எனக்கு டைம் எடுத்தது.

தேவன் மாயம் said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html//

மிக்க நன்றி !!

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

முதலிரண்டும் நான்கும் பிடிச்சிருக்கு//

வாங்க ஜமால்!! விடுமுறை எங்கும் போகவில்லையா?

தேவன் மாயம் said...

எல்லாமும் பிடிச்சிருக்கு...இஃகிஃகி!//

ஆஹா!! ஒரு ஆள் எத்தனை கார்தான் ஓட்டமுடியும்?

தேவன் மாயம் said...

முதல் கார் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசில இருக்கிறது காருன்னு கண்டுபிடிக்கவே எனக்கு டைம் எடுத்தது.///

எனக்கும் கார் மாதிரி தெரியவில்லை!!

யூர்கன் க்ருகியர் said...

எல்லாம் சர்தான் ...நம்ம ஊரு ரோடில் வேலைக்காகுமா?

தேவன் மாயம் said...

எல்லாம் சர்தான் ...நம்ம ஊரு ரோடில் வேலைக்காகுமா?///

ஆவாது!! பருப்பு வேவாது !!

Unknown said...

நல்ல கற்பனைத் திறன் உங்களுக்கு......

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் நல்லா இருக்கு டாக்டர்

Anonymous said...

நான் எல்லாம் எட்டிப்பார்க்க மட்டுமே தான் தொட்டுப்பார்க்க முடியாது.....யம்மாடியோவ் எம்புட்டு காசு ஆகறது.....

வால்பையன் said...

//உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.//

கூரியர்ல போட்டோ தானே அனுப்புவாங்க! இப்போ காரும் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்களா!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory