Friday, 26 June 2009

அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)

அன்பின் நண்பர்களே! நம் அன்பு நண்பர் கார்த்தியின் தங்கை திருமணம் இனிதே நடைபெற்றது.

மதுரையில் பதிவர்கள் சந்திப்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருப்பது மிக மகிழ்வான விசயம். ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது சந்திக்க.

இம்முறை கார்த்தியின் தங்கை திருமணம்!!

கீழே அந்த நிகழ்ச்சி நிரல்!!

----------------------------------------------------------------------

நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை

முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை

மணமக்கள்: நா.நாகராணி

இர.தமிழ்க்குமரன்

இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,

மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,

மதுரை.

-----------------------------------------------------------

காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன். அதன்பின் ஒருவர் இருவராக அனைவரும் வந்தனர்.

நண்பர் ஆதவா வை முதன் முதலாக இன்றுதான் சந்தித்தேன். மிக இளையவர், மிகுந்த அமைதியும் அடக்கமும் நிறைந்து காணப்பட்டார்.

பதிவுலக நண்பர்கள்  சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார்,

ஸ்ரீதர், அன்பு, சுந்தர், ஜாலிஜம்பர், பாலகுமார், சொல்லரசன், ஆதவா,

தம்பதி சமேதராக வந்த தருமி ஐயா மற்றும் நான் ( தேவன்மாயம்) என அனைத்து நண்பர்களும் வந்திருந்தோம்.

தாங்கள் வர முடியாத காரணத்தால் தங்கள் அண்ணனை அனுப்பி வைத்தார்கள் நண்பர்கள் முத்துராமலிங்கம், அன்புமணி..- எவ்வளவு பொறுப்புடன் செய்துள்ளார்கள் பாருங்கள்!

காலை உணவு, மதிய உணவு இரண்டுமே அங்குதான். பின்பு லாட்ஜுக்கு சென்றோம்!! கவிதைகளைப் பற்றி நண்பர் ஸ்ரீதர், சுந்தர்,சொல்லரசன், ஆதவா ஆகியோருடன் கலந்துரையாடல். மிகவும் இனிய சந்திப்பாக இருந்தது.

தேனி சுந்தர் நல்ல பேச்சாளர், தன் கருத்துக்களை தெளிவாக சொன்னார்.

நண்பர் ஸ்ரீதர் கார்த்திகை பாண்டிக்கு வீடு பிடித்தது முதல் கல்யாண வேலைகளில் மிகவும் பொறுப்பாக செய்து கொடுத்தார். இவர் ஒரு பரம்பரை ஜோதிடரும் கூட... இவருடைய தளத்தில் பல சூடான இடுகைகளைப் பார்க்கலாம்.

பாலகுமார் பி.எஸ்.என்.எல் மதுரையில் வேலை செய்கிறார். கவிதைகள் பற்றி தெளிவாகப் பேசினார்.

ஜாலிஜம்பர் லேட்டாக வந்து அவசர அலுவல் காரணமாக உடனே சென்று விட்டார்.

போனில்  வாழ்த்தினர்  வால்பையன், mayvee, ஞானசேகரன், இளைய கவி, ரம்யா..

நம் வேலை முடிந்தது... பணி அழைத்தது...

இனிய நினைவுகளுடன் விடைபெற்றோம்.....

காணொளியைப்பார்க்க யூடியூபிலும் பார்க்கலாம்!! யூடியூப் முகவரி :கார்த்திகைபாண்டியன் வீட்டு கல்யாண காணொளி-பகுதி-1

பகுதி இரண்டு இன்று இதே பதிவில் சேர்க்கப்படும்!

உங்கள்,

அன்பு நண்பன் தமிழ்த்துளி தேவா..

-----------------------------------------------------------------------

31 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அருமையான இடுகை - காணொளி கண் கொள்ளாக் காட்சி - அடுத்த பகுதிகளினை விரைவினில் வெளியிடுக - ( என் துணைவி எங்கே - அதுக்காகத்தான் இந்த வேண்டுகோள்? )

thevanmayam said...

ஆகா ஆகா - அருமையான இடுகை - காணொளி கண் கொள்ளாக் காட்சி - அடுத்த பகுதிகளினை விரைவினில் வெளியிடுக - ( என் துணைவி எங்கே - அதுக்காகத்தான் இந்த வேண்டுகோள்? )///
வீடியோ கட்டருடன் போராடிக்கொண்டுள்ளேன்! விரைவில் போடுகிறேன்!!

வேத்தியன் said...

காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன்//

முதல் ஆளாய் நீங்களா???
நம்பவே முடியலை..
:-)

வேத்தியன் said...

கானொளி பார்த்துவிட்டு வருகிறேன்...

வேத்தியன் said...

அருமையா இருக்கு தேவா சாரே...

இன்னும் இருந்தால் அதையும் போடுங்க...

ஓட்டும் போட்டாச்சு...

சென்ஷி said...

:))

மகிழ்ச்சியாய் உள்ளது. நிகழ்வினை நேரில் கண்டு, நண்பர்களுடன் உரையாடிய மனநிறைவைத் தருகிறது!

நன்றி டாக்டர்!!

யூர்கன் க்ருகியர்..... said...

நன்று !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் தேவன்மாயம்,

நமது பதிவர்களைக் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி. அதிலிருக்கும் இளையவர்தான் ஆதவன் என நினைக்கிறேன். எதிர்பார்த்ததைவிடவும் இளையவராக இருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ஆ.ஞானசேகரன் said...

காணொளியும் அருமை, பதிவும் அருமை

ஆ.ஞானசேகரன் said...

இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கின்றேன்.. நான் இல்லை என்பது வருத்தமே

ஆ.ஞானசேகரன் said...

அந்த என்னையாட்டம் சின்ன பையந்தான் ஆதவா நினைக்கின்றேன் .. சரிதானே தேவன் சார்

ஆ.ஞானசேகரன் said...

அழகா போயிட்டு அருமையா சந்திப்பு இருக்கு வாழ்த்துகள்

வழிப்போக்கன் said...

தேவாண்ணா....
கலக்கீட்டீங்க போங்க...
காணொளிக்கு நன்றி...

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said...
அந்த என்னையாட்டம் சின்ன பையந்தான் ஆதவா நினைக்கின்றேன் .. சரிதானே தேவன் சார்42 க்கு 22 க்கும் முடிச்சுபோடுவது ரொம்ப ஓவருங்கோ

தீப்பெட்டி said...

நன்றி பாஸ்..

பாலகுமார் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள், தேவா சார்....

அடுதத பகுதிகளையும் , ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

//பாலகுமார் பி.எஸ்.என்.எல் மதுரையில் வேலை செய்கிறார். கவிதைகள் பற்றி தெளிவாகப் பேசினார். //

இருக்காதே, அப்படியெல்லாம் நடக்க சான்ஸ் இல்லயே !!! :) :) :)

குடந்தை அன்புமணி said...

காணொலியை அலுவலக கம்யூட்டரில் காணமுடியவில்லை. இன்டர்நெட் மையத்தில் பார்த்துக்கொள்கிறேன். பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

// வேத்தியன் said...
காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன்//

முதல் ஆளாய் நீங்களா???
நம்பவே முடியலை..//

முன்பு பட்ட அனுபவம் அப்படி வரவழைத்திருக்கும் என்று நினைக்கிறேன்...

Anonymous said...

யார் யார்ன்னு தெரியலை என்றாலும் வலைப்பூக்களை கண்டதில் மகிழ்ச்சி....அடுத்த பகுதிக்கு நானும் காத்திருக்கிறேன்..புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

அபுஅஃப்ஸர் said...

தேவா சார்
கலக்கிட்டேல்

ஒரே கல்லுலே ரெண்டு (பதிவர் சந்திப்பு & திருமணம்)

Anbu said...

தேவா சார்..மீதமுள்ள வீடியோவையும் சீக்கிரம் இணையுங்கள்.

கலக்கல் பதிவு சார்..

ஆ.முத்துராமலிங்கம் said...

ரொம்ப மகிழ்ச்சி தேவா சார்.
காணொளி பார்த்தேன் வர முடியா விட்டாலும் பகிர்வு சந்தோசத்தை அளிக்கின்றது.
அண்ணன் உங்கள் எல்லோரையும் சந்தித்ததை பெருமையாக சொன்னான். ரொம்ப சந்தோசமான நிகழ்வு. அடுத்த காணொளியையும் காண ஆவல்!

MayVee said...

video coverage yaaru sir????

thevanmayam said...

26 June 2009 20:14
வேத்தியன் said...
காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன்//

முதல் ஆளாய் நீங்களா???
நம்பவே முடியலை..
:-)

26 June 2009 20:31
வேத்தியன் said...
கானொளி பார்த்துவிட்டு வருகிறேன்...

26 June 2009 20:34
வேத்தியன் said...
அருமையா இருக்கு தேவா சாரே...

இன்னும் இருந்தால் அதையும் போடுங்க...

ஓட்டும் போட்டாச்சு...///

வேத்தியன் நாந்தான் அங்கே மொத!!
அடுத்தது இன்னும் கொஞ்ச நேரத்தில்.
----------------------------


26 June 2009 20:40
சென்ஷி said...
:))

மகிழ்ச்சியாய் உள்ளது. நிகழ்வினை நேரில் கண்டு, நண்பர்களுடன் உரையாடிய மனநிறைவைத் தருகிறது!

நன்றி டாக்டர்!!///

சென்ஷி நன்றி!!
--------------------------

26 June 2009 20:53
யூர்கன் க்ருகியர்..... said...
நன்று !//

நன்றி!
--------------------

26 June 2009 20:54
எம்.ரிஷான் ஷெரீப் said...
அன்பின் தேவன்மாயம்,

நமது பதிவர்களைக் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி. அதிலிருக்கும் இளையவர்தான் ஆதவன் என நினைக்கிறேன். எதிர்பார்த்ததைவிடவும் இளையவராக இருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே !///

நன்றி இரண்டாம் பகுதி இன்னும் சில மணிநேரத்தில்!!
--------------------------

26 June 2009 22:16
ஆ.ஞானசேகரன் said...
காணொளியும் அருமை, பதிவும் அருமை

26 June 2009 23:37
ஆ.ஞானசேகரன் said...
இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கின்றேன்.. நான் இல்லை என்பது வருத்தமே

26 June 2009 23:42
ஆ.ஞானசேகரன் said...
அந்த என்னையாட்டம் சின்ன பையந்தான் ஆதவா நினைக்கின்றேன் .. சரிதானே தேவன் சார்

26 June 2009 23:48
ஆ.ஞானசேகரன் said...
அழகா போயிட்டு அருமையா சந்திப்பு இருக்கு வாழ்த்துகள்///

நன்றி நண்பரே!! இரண்டாம் பகுதி இப்போது போட்டுவிடுகிறேன்!!
-------------------------------

26 June 2009 23:49
வழிப்போக்கன் said...
தேவாண்ணா....
கலக்கீட்டீங்க போங்க...
காணொளிக்கு நன்றி..///

வழிப்போக்கன் நன்றி!!
-------------------------

27 June 2009 00:13
சொல்லரசன் said...
ஆ.ஞானசேகரன் said...
அந்த என்னையாட்டம் சின்ன பையந்தான் ஆதவா நினைக்கின்றேன் .. சரிதானே தேவன் சார்//

ஹை!! நீங்க சின்னப்பையனா!!
-----------------------------


42 க்கு 22 க்கும் முடிச்சுபோடுவது ரொம்ப ஓவருங்கோ
------------------------
27 June 2009 00:46
தீப்பெட்டி said...
நன்றி பாஸ்.//

வாங்க !!!
----------------------------.

27 June 2009 01:02
பாலகுமார் said...
முயற்சிக்கு வாழ்த்துக்கள், தேவா சார்....

அடுதத பகுதிகளையும் , ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

//பாலகுமார் பி.எஸ்.என்.எல் மதுரையில் வேலை செய்கிறார். கவிதைகள் பற்றி தெளிவாகப் பேசினார். //

இருக்காதே, அப்படியெல்லாம் நடக்க சான்ஸ் இல்லயே !!! :) :) :)//

தன்னடக்கம் அதிகம் பாலா!!
=-----------------------------
27 June 2009 01:45
குடந்தை அன்புமணி said...
காணொலியை அலுவலக கம்யூட்டரில் காணமுடியவில்லை. இன்டர்நெட் மையத்தில் பார்த்துக்கொள்கிறேன். பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துகள்!

27 June 2009 02:42
குடந்தை அன்புமணி said...
// வேத்தியன் said...
காலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன்//

முதல் ஆளாய் நீங்களா???
நம்பவே முடியலை..//

!


முன்பு பட்ட அனுபவம் அப்படி வரவழைத்திருக்கும் என்று நினைக்கிறேன்..///

.ஆம் நண்பரே!
---------------------

27 June 2009 02:43
தமிழரசி said...
யார் யார்ன்னு தெரியலை என்றாலும் வலைப்பூக்களை கண்டதில் மகிழ்ச்சி....அடுத்த பகுதிக்கு நானும் காத்திருக்கிறேன்..புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

27 June 2009 03:07
அபுஅஃப்ஸர் said...
தேவா சார்
கலக்கிட்டேல்

ஒரே கல்லுலே ரெண்டு (பதிவர் சந்திப்பு & திருமணம்)

27 June 2009 03:40
Anbu said...
தேவா சார்..மீதமுள்ள வீடியோவையும் சீக்கிரம் இணையுங்கள்.

கலக்கல் பதிவு சார்..///

மிக்க நன்றி மக்கா!! இதோ இரண்டாம் பதிவு..
------------------

MayVee said...

"சொல்லரசன் said...
ஆ.ஞானசேகரன் said...
அந்த என்னையாட்டம் சின்ன பையந்தான் ஆதவா நினைக்கின்றேன் .. சரிதானே தேவன் சார்


42 க்கு 22 க்கும் முடிச்சுபோடுவது ரொம்ப ஓவருங்கோ"

wy ths kola veri????

thevanmayam said...

video coverage yaaru sir????//

myself...

MayVee said...

அடுத்த பதிவுல என்னை பாராட்டி எதாவது சொல்லுங்க ....

இல்லாட்டி கவிதை எழுதிருவேன் ......

MayVee said...

ungalai thaan see panna mudiyala

thevanmayam said...

அடுத்த பதிவுல என்னை பாராட்டி எதாவது சொல்லுங்க ....

இல்லாட்டி கவிதை எழுதிருவேன் ...///

என்ன மிரட்டலா? கவிஜக்கெல்லாம் பயமில்லை!!!

வால்பையன் said...

வீடியோவுல அன்பு தான்பா ஸ்மார்ட்டா இருக்கார்!

சுந்தர் said...

நன்றி, அய்யா அருமையாக உள்ளது.,

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory