Thursday, 25 June 2009

மதுவால் என்ன ஏற்படுகிறது?

மது அருந்தினால் உடலில் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம். ம்துவால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

மதுவின் பொதுவான் மூலக்கூறு எதில் ஆல்கஹால். பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால்(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

1.ரம் --- 50-60%

2.விஸ்கி,பிராந்தி,ஜின் --40-45%

3.ஷெர்ரி,போர்ட் --20%

4.ஒயின் --10-15%

5.பீர் --4-8% பொதுவாக...

6.சாராயம் --40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது

1. கிளர்ச்சி (excitement) நிலை: முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும்,  சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்ததில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும்  மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மிகி ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

இரத்தத்தில் 30மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும்போது

1.தசை கட்டுப்பாடு இழக்கும்.

2.தொடு உணர்வுகள் குறையும்.

3.சிந்தனை,புரிந்துணர்வு,மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.  

இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்

1. வாய் வார்த்தைகள் குளறுதல்,

2.நடையில் தள்ளாட்டம்,

3.அதிக மயக்கம்,

4.ஞாபக மறதி

5. அதிக குழப்பம்

ஆகியவை ஏற்படும்.

பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது.

கால நேர, தூர  மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.

(தொடரும்...)

--------------------------------------------------------------------------

தமிழ்மணம்,தமிழிஷில் வாக்கிடவும்.

----------------------------------------------------------------------------

41 comments:

புதுகைத் தென்றல் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

ஒரு முறை மதுவின் கைகளுக்குள் சென்றவர்கள் திரும்புவது கடினம்.

வீக் எண்டில் இந்த்ப்பதிவு ரொம்ப முக்கிய்ம்.
ஆனா யாருங்க இதை எல்லாம் படிச்சு, மண்டையில ஏத்திக்கப்போறாங்க??? :(((

சொல்லரசன் said...

தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?

குடுகுடுப்பை said...

நானும் வைன் வாங்கி வெச்சிருக்கேன், இதயத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு, ஆனா பாருங்க என்னால தனியா குடிக்க முடியாது பாட்டில் ஓப்பன் பண்ணவே இல்லை

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொடர் தொடர்ந்து எழுதலாம் தேவன் சார்... சொல்லரசன் கேட்பதும் சொல்லுங்களேன். மேலை நாடுகளில்(குளிர் பிரதேசத்தில்) குடிப்பதால் பிரச்சனை இல்லையா?

வால்பையன் said...

//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே!

வால்பையன் said...

//சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?//

நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!

Anonymous said...

வால்பையன் said...
//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே

அதனா பார்த்தேன் எங்க திருந்திடுவீங்களோன்னு.....

Anonymous said...

பயனுள்ள பதிவு தேவா சார்...

அவசியம் இதனை அறிந்து மொத்தமாய் துறக்க இயலாது போனாலும்.......................கொஞ்சமாகவாவது...........

வால்பையன் said...

//தமிழரசி said...
வால்பையன் said...
//ஷெர்ரி,போர்ட் --20%//
இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே
அதனா பார்த்தேன் எங்க திருந்திடுவீங்களோன்னு.....//

பின்ன அதில் உள்ள எல்லா சரக்கும் குடிச்சிருக்கேன் இதை தவிர செத்த என் கட்டை வேகுமா!
எப்படியாவது அதை குடித்தே ஆக வேண்டும்!

ஜீவன் said...

//1. வாய் வார்த்தைகள் குளறுதல்,//

ஆமா அப்போதான் கவிதையெல்லாம் வருது....

//2.நடையில் தள்ளாட்டம்,//

ம்ம்ம் பறக்குறது போல இருக்கும்!

//3.அதிக மயக்கம்,//

அம்பது மில்லிக்கு அதிக மயக்கமா?

//4.ஞாபக மறதி//

ஆமா கவலை எல்லாம் மறந்து போய்டும்!

//5. அதிக குழப்பம்//

இல்ல, எனக்கு என்னமோ அப்போதான் ரொம்ப தெளிவா இருக்குரதுபோல ஒரு பீல்!

பிரியமுடன்.........வசந்த் said...

//4.ஒயின் --10-15%//

கம்மியாத்தான் இருக்கு நமக்கு பிரச்சினையில்ல்

சும்மாஆஆஆஅ


தேவா சார் உபயோகமான சரக்கு சார் உங்க பதிவு

sollarasan said...

வால்பையன் said...
//நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!//

நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல‌

வால்பையன் said...

//நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல‌//

ஸ்ரீதருக்கு ஓட்டவாயப்பா!

சொல்லரசன் said...

யாருங்க அந்த ஸ்ரீதர்.

வால்பையன் said...

glass mate(no spelling mistake)

யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?

வால்பையன் said...

//யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?//

குவாட்டருக்கு முன்னாடி குடிக்கிற ஃபுல்ல ஒருநாளைக்கு குடிக்காம குவாட்டரை மட்டும் குடிச்சி பாருங்களேன்!

தேனீ - சுந்தர் said...

பெரியவுங்க சமாசாரம் , இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை, அதுனால நான் ஜூட்.,

தேனீ - சுந்தர் said...

// சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?/


அப்டி சொன்னதுக்கு அந்த டாக்டர் ,இப்போ நொந்துகிட்டாராமே ?

வால்பையன் said...

தொடர்புடய சுட்டி அல்லது தமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும்.

குடந்தை அன்புமணி said...

நான் என் நண்பர்களுடன் பாருக்கு சென்று அவர்கள் அருந்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அவர்கள் உளறுவதை கேட்டுக்கொண்டும் சைடிஸ்சை காலி பண்ணிக்கிட்டிருப்பேன். அதததுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தா எங்க வேணாலும் ஸ்டடியா நிக்கலாங்க!

குடந்தை அன்புமணி said...

அய்க்கூ படிக்கலையா தேவா சார்... வாங்க....

Anonymous said...

இருங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சீ..படிச்சிட்டு வந்துடுறேன்...

Anonymous said...

எல்லாம் சரி தானுங்க...வாகனம் ஒட்டுனா தானே பிரச்சினை..நாங்க எல்லாம் ரூம் போட்டு தண்ணி அடிக்கறவங்க. அதனால பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.

Rajeswari said...

குடி குடியை கெடுக்கும்

குமரை நிலாவன் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க தேவா சார்

//நானும் வைன் வாங்கி வெச்சிருக்கேன், இதயத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு, ஆனா பாருங்க என்னால தனியா குடிக்க முடியாது பாட்டில் ஓப்பன் பண்ணவே இல்லை//

வால்பையன் சார் குடுகுடுப்பை சாருக்கு கம்பெனி கொடுக்கலாம்ல

thevanmayam said...

Blogger புதுகைத் தென்றல் said...

படிச்சு, மண்டையில ஏத்திக்கப்போறாங்க??? :(((///உண்மைதான் புதுகை!!
----------------------------
Blogger சொல்லரசன் said...

தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?///
மிஞ்சுவதை விட பரவாயில்லை!!
----------------------------

Blogger குடுகுடுப்பை said...

நானும் வைன் வாங்கி வெச்சிருக்கேன், இதயத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு, ஆனா பாருங்க என்னால தனியா குடிக்க முடியாது பாட்டில் ஓப்பன் பண்ணவே இல்லை///
அப்படியே வாலுக்கு பார்சல் பண்ணிவிடுங்க!!
-----------------------

Blogger ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொடர் தொடர்ந்து எழுதலாம் தேவன் சார்... சொல்லரசன் கேட்பதும் சொல்லுங்களேன். மேலை நாடுகளில்(குளிர் பிரதேசத்தில்) குடிப்பதால் பிரச்சனை இல்லையா?///

குடி எல்லா ஊரிலும் கெடுதிதான்!!
--------------------------

Blogger வால்பையன் said...

//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே!///

விசாரிப்போம் வால்!!
----------------------------


Blogger வால்பையன் said...

//சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?//

நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!///

கவிதையா! கொல்லுங்க!!
----------------------------

Blogger தமிழரசி said...

வால்பையன் said...
//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே

அதனா பார்த்தேன் எங்க திருந்திடுவீங்களோன்னு.....///

தமிழ் வருக!! திருந்துவாங்களா என்ன!!
இஃகி இஃகி!!
-----------------------!
ஜீவன் said...


இல்ல, எனக்கு என்னமோ அப்போதான் ரொம்ப தெளிவா இருக்குரதுபோல ஒரு பீல்!///
உங்க உடல் அமைப்பு வேறோ?
---------------------

26 June 2009 00:04
Delete
Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//4.ஒயின் --10-15%//

கம்மியாத்தான் இருக்கு நமக்கு பிரச்சினையில்ல்

சும்மாஆஆஆஅ


தேவா சார் உபயோகமான சரக்கு சார் உங்க பதிவு///
வாங்க வசந்த்!
------------------------

thevanmayam said...

Blogger sollarasan said...

வால்பையன் said...
//நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!//

நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல‌//

26 June 2009 01:24
Delete
Blogger வால்பையன் said...

//நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல‌//

ஸ்ரீதருக்கு ஓட்டவாயப்பா!

26 June 2009 01:47
Delete
Blogger சொல்லரசன் said...

யாருங்க அந்த ஸ்ரீதர்.

26 June 2009 01:54
Delete
Blogger வால்பையன் said...

glass mate(no spelling mistake)///

ஸ்ரீதான் ரகசியங்களை சொன்னதா?
சரி இந்த சனி,ஞாயிறு மதுரையில் சரக்கடிப்புன்னாங்க!! சே... சந்திப்புன்னாங்க!!
--------------------------

26 June 2009 01:57
Delete
Blogger யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?

26 June 2009 01:58
Delete
Blogger வால்பையன் said...

//யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?//

குவாட்டருக்கு முன்னாடி குடிக்கிற ஃபுல்ல ஒருநாளைக்கு குடிக்காம குவாட்டரை மட்டும் குடிச்சி பாருங்களேன்!
///
வால் சொல்றதை செய்து பாருங்க!!
-------------------------


Blogger தேனீ - சுந்தர் said...

பெரியவுங்க சமாசாரம் , இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை, அதுனால நான் ஜூட்.,//

26 June 2009 02:58
Delete
Blogger தேனீ - சுந்தர் said...

// சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?/


அப்டி சொன்னதுக்கு அந்த டாக்டர் ,இப்போ நொந்துகிட்டாராமே ?///
இதெல்லாம் நமக்கு புரியலே
--------------------------


26 June 2009 03:18

Blogger குடந்தை அன்புமணி said...

அய்க்கூ படிக்கலையா தேவா சார்... வாங்க..///
இதோ வருகிறேன்!!
--------------------------.

26 June 2009 03:19
Delete
Blogger இங்கிலீஷ்காரன் said...

இருங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சீ..படிச்சிட்டு வந்துடுறேன்...

26 June 2009 03:59
Delete
Blogger இங்கிலீஷ்காரன் said...

எல்லாம் சரி தானுங்க...வாகனம் ஒட்டுனா தானே பிரச்சினை..நாங்க எல்லாம் ரூம் போட்டு தண்ணி அடிக்கறவங்க. அதனால பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.///

ரொம்ப சேஃப்டிதான்!!
----------------------------

26 June 2009 04:01
Delete
Blogger Rajeswari said...

குடி குடியை கெடுக்கும்///

நம்ம கெடாம இருந்தா சரிதான்!!
---------------------
Blogger குமரை நிலாவன் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க தேவா சார்///
மிக்க நன்றி!!! சரி குமரை!!
-------------------------
------------------------

வழிப்போக்கன் said...

முதல்ல அவனே ஒழுங்கா இருக்கானான்னு தெரியாது..அதுக்குள்ள ஆடைய எங்க கவனிக்க போறான்...

நல்ல விழிப்புணர்வான பதிவு..
இத பாத்தாவது நிறுத்துங்கப்பா..

டாக்குத்தர் சொன்னா சரியாதான் இருக்கு...
:)))(ச்சும்மா)

இய‌ற்கை said...

நல்லா சொல்லியிருக்கீங்க

லவ்டேல் மேடி said...

நல்லா கெலப்புரிங்கையா பீதிய...!! நாங்க அசர மாட்டமில்ல.....!!!

MayVee said...

ஹ்ம்ம்
பாஸ் .... நல்ல தொடர்

எழுதுங்க ...
நல்ல இருக்கு ....

ஸ்ரீதர் said...

நான் யோக்கியமானவன் ,சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க. கொஞ்சமா குடிச்சா உடம்புக்கு நல்லதாமில்ல. அதுனால அப்பப்போ கொஞ்சமா.

ராஜ நடராஜன் said...

இந்த இடுகை எனக்குத் தேவையா?இல்ல இந்த இடுகை எனக்குத் தேவையாங்கிறேன்!

வால்பையா!டாக்டரு என்ன என்னமோ ஷெர்ரி,போர்ட்ன்னுலாம் கூவுறாரு.அதையெல்லாம் ட்யூட்டி ஃப்ரி கடையில கூட பார்த்தது கிடையாதே!எங்கேயோ எப்பவோ படப்புத்தகத்துல பார்த்த மாதிரி மட்டும் நினைவு.ஆங்!ஷெர்ரி பற்றி இப்ப ஒரு ஞாபகம் கூட வருது.அது லேடிஸ் ட்ரிங்.அதனால அது உங்களுக்கு வேண்டாம்:)

குடுகுடுப்பையாரே!தனிக்குடித்தனம் பிடிக்கலைங்கிறது நல்லாயிருக்குதே!

குடிச்சா ரோடு சரியாத் தெரியாதுங்கிறது ஆளைப் பொறுத்தது என நினைக்கிறேன்.முன்பு பணிபுரிந்த நிறுவன ஓட்டுனருக்கு குடிக்கலைன்னா ரோடு சரியாத் தெரியாது:)

ராஜ நடராஜன் said...

உங்க கடைய விட்டு வெளியே போகும் போது இன்னொரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.இந்த தென்னங்கள்ளு,பனங்கள்ளு எத்தனை % விகிதாச்சாரம்ன்னு சொல்லலையே?

அமர பாரதி said...

அருமையான கட்டுரை.

த.ஜீவராஜ் said...

பயனுள்ள கட்டுரை
தொடருங்கள்

கிரி said...

//4.ஒயின் --10-15%

5.பீர் --4-8% பொதுவாக//

இது தான் நம்ம பக்கம் ;-)

cheena (சீனா) said...

நல்ல பயனுள்ள பதிவு - தெரிந்த தகவல்கள் தான் - குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே தான் இருப்பார்கள் - இம்மாதிரிப் பதிவுகள் வரும் போது நாளை முதல் குடிக்கக் கூடாதென்ற சபதத்துடன் - சும்மா 5 விழுக்காடு தானே என்ற ஆறுதலும் அடைவார்கள்

கதிர் said...

என்னமோ போங்க
ஏறுனுதெல்லாம் எறங்கிரும் போலிருக்கே

HRMAN SON said...

அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.மனமிருந்தால் மார்க்கம் உண்டுன்னு பெரியவக சொல்லியிருக்காங்க,அதனாலே டாக்டர் சொல்றதை கேட்டு(படித்து)திருந்துங்கப்பா
அக்பர் அலி HR
துபாய்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory