Monday, 15 June 2009

"குங்குமம்" பத்திரிக்கை இப்படி செய்யலாமா?

அன்பின் வலை மக்களே!!

வலைத்தளம் ஆரம்பித்ததிலிருந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய பதிவு பலராலும் படிக்கப்படுவது நமக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.வலையில் எழுதுவது துரித உணவு போல. எழுதியவுடன் வெளியிடுகிறார்களா? என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாமே வெளியீட்டாளர்.(எவ்வளவு பெரிய சங்கதி இது!!!).

அது மட்டுமல்ல. பத்திரிக்கைகளில் எழுதி படித்து அடுத்தவாரம் ”மடலில் உங்கள் படைப்பு நன்று” என்று யாராவது பதில் போடுகிறார்களா என்று காத்திருக்க வேண்டும். வலையில் நாம் போட்ட அடுத்த நிமிடமே நண்பர்கள் பின்னூட்டம் ஆரம்பித்துவிடுவார்கள்!! உடனே நாமும் பதில் கொடுக்கிறோம்.

ஆயினும் அச்சில் வெளியிடும் புத்தகம் கணினி பார்க்காதவரையும் சென்றடைகிறது. பல நாட்டினரும் படிப்பர். மேலும் ஆசிரியர்கள் நன்றாக இருந்தால்தான் வெளியிடுவார்கள்.

அந்த வகையில் என்னுடைய தலையணை மந்திரங்கள் 16!என்ற பதிவைக்  குங்குமம் 18.6.2009 இதழில் வெளியிட்டுஉள்ளார்கள்.  image

image

தலையணை மந்திரத்தை மூன்று பக்கங்கள் போட்டு இருக்கிறார்கள்.

இதனை எனக்குத்தெரிவித்த நண்பர் திரு.ரவிசங்கர்,ரவி ஆதித்யா,நான் பேச வந்தேன்!! 

அவர்களுக்கு மிக்க நன்றி! அவர் சொல்லவில்லை என்றால் நான் இதனைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. வேறு யாராவது பின்பு சொல்லியிருப்பார்கள் என்பது உண்மை.

குங்குமம் பத்திரிக்கைக்கு நன்றி!!

ஆயினும் ஒரு மின்னஞ்சலாவது குங்குமம் எனக்கு அனுப்பி தெரிவித்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

தமிழ்த்துளி.தேவன்மாயம்

38 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தேவா!

லக்கிலுக் said...

வாழ்த்துகள்!

ஆனால் தலைப்பு பரபரப்புக்காக எழுதப்பட்டிருப்பதாக நினைக்கத் தூண்டுகிறது.

நட்புடன் ஜமால் said...

வலையில் நாம் போட்ட அடுத்த நிமிடமே நண்பர்கள் பின்னூட்டம் ஆரம்பித்துவிடுவார்கள்!! உடனே நாமும் பதில் கொடுக்கிறோம்\\

இது ஒரு அருமையான அனுபவம் தான்.

\\வலையில் எழுதுவது துரித உணவு போல. எழுதியவுடன் வெளியிடுகிறார்களா? என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாமே வெளியீட்டாளர்\\

இப்படி ஒரு மேட்டர் இல்லன்னா, என்னையெல்லாம் எங்கே ...

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்! பாஸ்..

தலைப்பு வேறுமாதிரியான யூகத்திற்கு வழிவகுக்கிறது..

கிரி said...

வாழ்த்துகள் தேவா

வேத்தியன் said...

congrats...

Anonymous said...

வாழ்த்துக்கள்ப்பா....ஆமாம் தலையணை மந்திரம் குங்குமத்தில்....மேலும் வளரவும் வாழ்த்துக்கள்....

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

அபி அப்பா said...

வாழ்ட்துகள் டாக்டர்!

ஆபிரகாம் said...

நானும் குங்குமத்தில் பார்த்தேன்... உங்களிடம் அனுமதிகேட்டுதான் பிரதியேடுத்திருப்பார்கள் என நினைத்தேன்!
உங்களுக்கு சொல்லவேயில்லையா??
வாழ்த்துக்கள்!

Anbu said...

வாழ்த்துக்கள் டாக்டர்..

சொல்லரசன் said...

வாழ்த்துகள் டாக்டர் சார்

யூர்கன் க்ருகியர்..... said...

பதிவுகளை மட்டும் மட்டுமல்லாமல் பின்னூட்டங்களையும் வெளியிட்டிருந்தாங்கன்னா எங்கள மாதிரி ஆளுங்களும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
இப்படி பண்ணிட்டாங்களே ! ஹும் !

வாழ்த்துக்கள் டாக்டர் சார் !! :)

புதியவன் said...

வாழ்த்துக்கள் தேவா...

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் தேவா,

பல இதழ்களில் இப்போதெல்லாம் வலைப்பூக்களுக்கென தனி பக்கங்கள் ஒதுக்கி படைப்புக்களை வெளியிடுகிறார்கள். நீங்க சொல்வது போல் குறைந்தபட்சம் மெயிலிலாவது தெரிவிக்கலாம்.

நாம எல்லாம் சேர்ந்து ஏதாவது செய்ய முடியுமா???

குமரை நிலாவன் said...

வாழ்த்துக்கள் தேவா சார்

பித்தன் said...

வாழ்த்துக்கள் அப்பு

வால்பையன் said...

வாழ்த்துக்கள் டாக்டர்!

கும்குமம் மும்கூட்டியே தகவல் தெரிவிப்பதில்லை!

உங்க ப்ளாக் பேரு வரலைன்னா சண்டை போடலாம்!

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் மருத்துவர்

நாணல் said...

வாழ்துக்கள் :)

இராகவன் நைஜிரியா said...

குங்குமம் பத்திரிக்கை இது மாதிரி செய்வார்கள் என நான் எதிர்ப் பார்க்கவில்லை...

உங்க எழுத்துக்கள் குங்குமத்தில் வந்ததில் வாழ்த்துகள்.

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள் அண்ணா...

விஷ்ணு. said...

வாழ்த்துக்கள் தேவா சார்.

மயாதி said...

வாழ்த்துக்கள் அண்ணா...

தமிழிச்சி said...

வாழ்த்துக்கள் தேவா.

மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் நண்பரே! ;)

MayVee said...

congrats theva.....

anyways they should have informed you..

they shouldnt have taken everything for granted ;

அன்புடன் அருணா said...

வாழ்த்துகள் டாக்டர்!!!!!

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள் தேவா சார்

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தேவா..

சந்தோசமான விஷயம் தான..அத இவ்வளவு சீரியஸா சொல்ற மாதிரி இருக்கு.

கலக்கிட்டீங்க போங்க..

thevanmayam said...

நன்றி! ஜமால்! இது ஒரு பெரிய சுதந்திரம்தான் ஜமால்! உங்கள் கருத்து எனக்கும் பொருந்தும்!!
-------------------
லக்கி!! நோகாமல் சொல்லவேண்டும் அல்லவா?
உங்கள் வருகைக்கு நன்றி லக்கி!!
-----------------------------
தீப்பெட்டியார் வருகை இனிமையானது. ஆதங்கத்தை சொன்னேன்.
---------------------------
கிரி-- வாங்க கிரி!
வேத்தியன்,-- நன்றி!
-----------------------------------------
தமிழரசி,-- வாக்கு பலிக்கட்டும்
திகழ்மிளிர்,-- மிக்க நன்றி!!
-------------------------------------------------------
அபிஅப்பா- உடல் நலமா?,
---------------------------------------------
ஆபிரகாம்,--முதல் வருகைக்கு நன்றி
--------------------------
அன்பு,-- நன்றி அன்பு!
-----------------------------
சொல்லரசன்.-- மிக்க நன்றி!!
----------------------------
யூர்கன்--அடுத்தமுறை பின்னூட்டத்தையும் போட சொல்லுவோம்!!
--------------------------
புதியவன் --நன்றி புதியவன்!!
--------------------
குமரை நிலவன் -- நன்றி மக்கா!
------------------------
புதுகைத்தென்றல் --- நல்ல யோசனைங்க!
-------------------------------
பித்தன் -- மிக்க நன்றி!,
----------------------------
வால்பையன் --- ப்ளாக் அட்ரெஸ் போட்டுவிட்டார்கள்!
-----------------------
ச.பிரேம்குமார்-- வாங்க பிரேம்
-------------------------------
நாணல்- முதல் வருகைக்கு நன்றி.
---------------------------
இராகவன்- கருத்துக்களுக்கு நன்றி
----------------------------
வழிப்போக்கன்-- வாங்க நன்றி
----------------------------
விஷ்ணு- நன்றி நண்பா!!
----------------------------
மயாதி-- மயாதி பதிவுகள் அபாரம்!,
----------------------------------
தமிழிச்சி-- வாழ்த்துகளுக்கு நன்றி!!
----------------------------
மணிப்பக்கம்--- வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா!!
---------------------------------------
MayVee -- வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேவி!
------------------------------
அன்புடன் அருணா --- வாங்க நம்ம பக்கம் அடிக்கடி!!
-----------------------------
பிரியமுடன்.........வசந்த்-- கலக்குங்க வலையை வசந்த்!!
-----------------------
அ.மு.செய்யது -- செய்யது நலமா!!
---------------------
பின்னூட்ட பாசக்கார மக்கள் அனைவருக்கும் நன்றி!
----------------------------
________________________________

cheena (சீனா) said...

நன்று நல்வாழ்த்துகள் - தேவன்மயம்

Cable Sankar said...

வாழ்த்துக்கள்.

Suresh said...

மச்சான் நான் நேற்று இரவு பார்த்தேன் உன்னிடம் தெரிவிக்கலாம் என்று இருந்தேன் ... வாழ்த்துகள் மச்சான் ;-)


அது ஒரு தீரில் தான் ;) நம்ம தான் வாங்கி பார்க்கனும் என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம் ;)

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

Akbar Ali HR Dubai said...

குங்குமம் தெரிய படுத்தவில்லை என்று வருத்தப்படவேண்டாம்,குங்குமத்தில் கண்டதால்தான் உங்களின் வலை அறிந்தேன்,அருமையான பதிப்புகள் வாழ்த்துக்கள் அன்பு நண்பரே.
அக்பர் அலி HR
துபாய்

குரு said...

You have to be happy that they have mentioned your web address in the page.

My Hearty Wishes....

குரு said...

Dont misunderstand my comment.

You have to be happy that atleast they have mentioned your blog address in their page, instead of mentioning it as their own invention.

My Hearty Wishes.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory