Thursday, 11 June 2009

தன் மரணத்தை எழுதியவன்!!

இளைஞர்களிடைடே வன்முறை குணம் தற்போது அதிகம் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆஸ்திரேலியா,கனடா நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

இலண்டனில் ஒரு மாணவன் தன் பள்ளியில் கற்பனை கட்டுரை ஒன்றை எழுதும்போது உணமையில் கத்தியால் குத்தப்படுபவர் எப்படி சித்திரவதைப் படுவார்கள் என்று தத்ரூபமாக எழுதினான்.

அவன் “ கத்தியால் குத்தப்பட்டு குளிர்தாங்காமல்  நடைபாதையில் கிடப்பதுபோலவும் தன்னுடைய சொந்த இரத்தம் கசிவதையும் குத்தியவனை வலியுடன் பார்ப்பதுபோலவும் அந்தக் கற்பனைக்கட்டுரையில் எழுதியிருந்தான்.

மேலும் தான் சொர்க்கத்துக்குப் போவது போலவும் அவனைக் கொலை செய்த மிருகவெறி பிடித்த அந்த நபரை தான் மன்னிப்பது போலவும் எழுதியிருந்தான்.

அந்தக்கட்டுரையிலேயே இப்படி இளைஞர்களின் வன்முறை புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு இதற்குக் காரணம் குடும்பத்தில் ஏற்படும் விவாகரத்துக்கள்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளான்.

இதற்கு பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகுப்புகள் எடுக்கப் படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளான்.

(16 வயதுப் பையனுக்கு எப்படி ஒரு அருமையான சிந்தனை பாருங்க).

பள்ளி விட்டவுடன் பகுதி நேரமாக ஒரு வலைகணினி மையத்தில் வேலை செய்து வருகிறான் இந்தமாணவன்.

இப்படி வேலை செய்யும்போது இளைஞர்கள் குழு ஒன்று சைக்கிளைத் திருடுவதைத் தடுத்திருக்கிறான்.

இந்த மாணவன் பள்ளியிலும், வெளியிலும் நல்ல பெயர் பெற்றவனாம்.இவனுக்கு நண்பர்களும் அதிகம்.இவனுடைய சகோதரி நடிகை என்பதால் இவனும் நடிப்புக்கலை பயின்று வந்துள்ளான். ஒரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளான்.

பென் கின்செல்லா என்ற இந்த மாணவன் இளைஞர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவன் இலண்டனில் ஒருவருடத்தில்  கொலை செய்யப்பட்ட 17 வது இளைஞன்!!

கொலையாளி அல்லெய்ன் கொலைசெய்த சமயத்தில் 6 கஞ்சா உட்கொண்டுள்ளான். பென் கின்ஸ்லாவை அனைவருக்கும் பிடித்திருப்பது பொறுக்காமல் கொன்றதாகக் கூறியுள்ளான்.

 

கத்தியால் பதினோரு முறை குத்தியதில் ஒரு குத்து நேரடியாக மார்பெலும்பை பிளந்து இதயத்தில் பாய்ந்துள்ளது.

 

இந்த மூவர் குழுதான் கொலையாளிகள்.

இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக பதினாறு வயதிலேயே புள்ளி விபரங்களுடன் எழுதிய புத்திசாலி இளைஞன் வன்முறையாலேயே இறந்தது பரிதாபகரமானது.

பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.

பணத்துக்கும், காமத்திற்கும் பெற்றோர்களே அடிமையாகி வருவது மிகவும் வருந்தத்தக்கது. இத்தகைய பெற்றோர் என்று திருந்துவர்? 

இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!

------------------------------------------------------------------------

தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஓட்டிடவும்!!

-------------------------------------------------------------------------

25 comments:

பழமைபேசி said...

+1

சூர்யா ௧ண்ணன் said...

வளரும் சிறுவர்களிடம் வக்கிர அல்லது வன்முறை எண்ணகள் அதிகமாக காணப்படுகின்றன, எனது நண்பர் (3000 மாணவர்கள் பயிலும் மேல் நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியர்) தனது மகன் ஐந்தாம் வகுப்பு முடிந்த விடுமுறை நாட்களில் அவனுக்கு கணினி சொல்லித்தர சொல்லி கேட்டிருந்தார்.
நானும் அச்சிறுவனை மாலை நேரங்களில் வரும்படி சொல்லி, கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். முதலாவதாக பெயின்ட் பிரஷில் படம் வரைய கற்றுக் கொடுத்தேன். அவனுக்கும் படம் வரைவதில் ஆர்வம் அதிகம்.
ஒரு நாள் அவனை கணினியில் வேலை செய்யச் சொல்லி ஒரு அவசர வேலையாக வெளியே கிளம்பினேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தால் பயங்கரமாக ஒரு படம் பெயின்ட் பிரஷில் வரைந்து வண்ணம் தீட்டி வைத்திருந்தான்.

அதைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.

கடா மீசை வைத்து லுங்கி அணிந்திருந்த ஆள் தனது ஒரு கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு அரிவாளும், மறு கையில் அப்பொழுதுதான் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட ஒரு மனிதனின் தலைமாய் ...,

இன்று வளருகிற சிறுவர்களின் மனப்போக்கை பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

என்ன செய்ய!

தேவன் மாயம் said...

+1//

சரி! சரி!!

தேவன் மாயம் said...

இன்று வளருகிற சிறுவர்களின் மனப்போக்கை பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

என்ன செய்ய!///

பயங்கரமா இருக்கே!நீங்கள் சொல்வது!
உங்கள் பின்னூட்டம் ஒரு பதிவு போல உள்ளது. உங்கள் கருத்தை விரிவாகச் சொன்னதற்கு நன்றி!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

unmai thana :(

nammaoore thevalapola .... innum koncham naalla ingaiyum appadi thaan aaga poguthu

bcz we are influenced with eastern culture....

வினோத் கெளதம் said...

தல

முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவியில் காட்டுவதை தடை செய்ய வேண்டும்..

தேவன் மாயம் said...

//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

unmai thana :(

nammaoore thevalapola .... innum koncham naalla ingaiyum appadi thaan aaga poguthu

bcz we are influenced with eastern culture....//

நீங்கள் சொல்வது
உண்மைதான்!!
நம் கலாச்சாரத்தை
நாமே கடைப்பிடிக்கவில்லை
என்றால் நிலைமை
அப்படித்தான் ஆகும்!!

தேவன் மாயம் said...

தல

முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவியில் காட்டுவதை தடை செய்ய வேண்டும்..//

உண்மை வினோத்!
எங்கே!
இதெல்லாம்
சொன்னால்
பழமையான
ஆள் என்று
கிண்டல் அடிப்பானுங்கப்பு!!

வழிப்போக்கன் said...

நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங்க....

தேவன் மாயம் said...

நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங்க....//

சொல்லிவிடுவோம்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ராமாயணத்தில் ராமர் தடாகையை வதம் செய்த போது கூட பதின்ம வ்ய்தின் துவக்கம்தானாம்.

கிருஷ்ணன் குழ்ந்தையாக இருக்கும்போதே ஒரு அரக்கியைக் கொண்டிருக்கிறாம்

பூங்காவனம் said...

Sir,

Sorry for posting this comment here:

அன்புடையீர்,

கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

சொல்லரசன் said...

//பெற்றோர்கள் விவாகரத்து, குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது //


உண்மைதானுங்க,இந்த விவாகரத்து சதவீதம் இந்தியாவில் அதிகரிப்பதும் கவலை கொள்ளசெய்கிறது.

கலையரசன் said...

இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!
நல்லா சொன்னீங்க தோழா!!

இராகவன் நைஜிரியா said...

இந்தக் காலத்தில் தொலைக்காட்சிகளும், வன்முறைக் காட்சிகளைக் காண்பிப்பதில் முன்னனியில் நிற்கின்றது.

நான் படிக்கும் போது மாரல் சயின்ஸ் என்று ஒரு பாடம் இருக்கும். இப்போது அது மாதிரி ஒன்றுமில்லை என்று நினைக்கின்றேன்.

பெற்றோர்களுக்குள் ஏற்படும் சண்டைகளும் குழந்தைகளை பாதிக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

நித்தம் நடக்கும் கொடுமைகள் இது,,, கண்டிப்பாக பெற்றொர்களுக்கு ஆலோசனைகள வழங்கப்படவேண்டும்

Suresh said...

இந்த காலத்திற்க்கு ஏத்த பதிவு, இப்போ எல்லாம் பட்ங்கள், மற்றும் வளரும் சூழ்நிலை, வீடியோ கேம்ஸ் எல்லாம் இப்படி தான் யோசிக்க வைக்குது

யூர்கன் க்ருகியர் said...

இந்தியாவிலும் பல திரை மறைவு கொலையாளிகள் உள்ளனர்.
இவனுங்களுக்கு / இவளுங்களுக்கெல்லாம் எப்ப தண்டனை ?

கார்த்திகைப் பாண்டியன் said...

பகிர்வுக்கு நன்றி..:-)

இது நம்ம ஆளு said...

இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!

அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சிறப்பான பதிவு.

பழமைபேசி said...

//thevanmayam said...
+1//

சரி! சரி!!
//

என்ன சரி சரி? +1 அப்படீன்னா, கூடுதல் சிறப்பு அப்படீன்னு அர்த்தம்.

Anonymous said...

எங்கும் இல்லை மாற்றங்கள் எல்லாமே வெறும் ஏமாற்றங்கள்....

வீடுதான் முதல் பள்ளி...
ஆம் இங்கு இட்ட விதைத்தான் மண்ணுக்கு ஏற்றவாறு விளைகிறது...
இளைஞர்கள் நாட்டிம் தூண்கள் கண்கள் என எல்லாம் சொல்கிறோம்...ம்ம்ம்ம்ம்ம்ம்

butterfly Surya said...

சிறப்பான பதிவு.

Sinthu said...

Wow, but it's really a sad situation. In this wor;d, It's hard to find mercy people...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory