Tuesday, 30 June 2009

காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!

அன்பின் வலைமக்களே!

பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை. அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம். பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.

2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து  பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.

3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க! உஜாரூ மாமே!! வாயத்தொற்க்கக்கூடாது...அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும்  ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!! 

4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. துணிந்து தாக்குங்க மச்சி!!

5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.

6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!

புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!!

என்ன சரிதானா. இது ரொம்ப பெரிய விசயம். ஆனாசுருக்கமா உங்களுக்கு தந்துள்ளேன்.

அன்புடன் தமிழ்த்துளி தேவா.

_________________________________________________________

பதிவு பிடித்திருந்தால் தமிலிஷ்,

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடவும்.

_________________________________________________________

40 comments:

கைபிள்ளை said...

சிறந்த ஒரு கருத்து ...
நீங்கள் உண்மையாகவே ஒரு பட்டாம்பூச்சிதான்.

என்னதான் நம் வாசகர்களுக்காக நாம் பல நன்மையான பதிவுகளை பகிர்ந்தாலும் அவர்கள் ஒரு கமெண்ட் அடிக்க தவறுவது மிகவும் கவலையாக உள்ளது.

உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

thevanmayam said...

கைபிள்ளை said...

சிறந்த ஒரு கருத்து ...
நீங்கள் உண்மையாகவே ஒரு பட்டாம்பூச்சிதான்.

என்னதான் நம் வாசகர்களுக்காக நாம் பல நன்மையான பதிவுகளை பகிர்ந்தாலும் அவர்கள் ஒரு கமெண்ட் அடிக்க தவறுவது மிகவும் கவலையாக உள்ளது.

உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.///

நன்றி நண்பரே!!
தங்கள் கருத்துக்கள் நன்று. நீங்கள் சொல்வதை அனைவரும் பின்பற்றுவார்கள்!!

நட்புடன் ஜமால் said...

அப்ப எப்படி இருந்தோம்/இருந்தார்கள் என்பது முக்கியமில்லை

அதை மறந்து விடுவது தான் நல்லது,


இணைந்த பின் எல்லாவற்றையும் பகிர வேண்டும் ...
(சமீபத்தில் திருந்தியவன் ...)

Anonymous said...

நீங்க ஒரு சிறந்த மனோத்தத்துவ மருத்துவரும் கூட.....உபயோகமான பதிவுகளா அளிக்கிறீர்கள் நன்றி...

thevanmayam said...

அப்ப எப்படி இருந்தோம்/இருந்தார்கள் என்பது முக்கியமில்லை

அதை மறந்து விடுவது தான் நல்லது,


இணைந்த பின் எல்லாவற்றையும் பகிர வேண்டும் ...
(சமீபத்தில் திருந்தியவன் ...)///

கொல்லுறீங்க ஜமால்!!

thevanmayam said...

நீங்க ஒரு சிறந்த மனோத்தத்துவ மருத்துவரும் கூட.....உபயோகமான பதிவுகளா அளிக்கிறீர்கள் நன்றி...///

மிக்க நன்றி தமிழ்!!

Monks said...

அருமையான மற்றும் அவசியமான பதிவு.
இதெல்லாம் முன்பே தெரியாமல் இன்று
கஷ்டப்படும் அப்பாவி நானு

நாணல் said...

palarukku payanpadugira padhivu..thodarndhu ezhuthungal...

தமிழிச்சி said...

தேவா சார், உங்கள் மேல் ரொம்ப மதிப்பு வைத்திருந்தேன். அப்பிடியே கெடுத்திட்டீங்க!
ஒழிவு மறைவு இல்லாத தம்பதிகள் தான் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். சின்னப் பையன்கள் மனதை எல்லாம் கெடுத்துக் குட்டிச் சுவராகி விட்டீர்கள்.
வோட்டுப் போட மாட்டேன்.

குடந்தை அன்புமணி said...

கணவன்/மனைவிக்குள் ஒளிமறைவு இருக்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் வரும் என்று எண்ணக்கூடிய விசயங்களை மறைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. ஏனென்னறால் எத்தனைப் பெண்கள் அதை நல்லவிதமாக எடுத்துக்கொள்வார்கள் என்று உத்தரவாதமில்லை. வாழ்க தேவா அவர்கள்!

Anbu said...

:-))

யூர்கன் க்ருகியர்..... said...

தவளை தன் வாயால் கெடும் :)

அப்பாவி முரு said...

அடிபட்டாலும் பாடுவோமே
ஒழிந்து,
உண்மையை மறைக்க மாட்டோம்.

வருத்தப் படாத வாலிபர் சங்கம்.,
சிங்கை கிளை..

அபுஅஃப்ஸர் said...

அண்ணாத்தே இப்படி பிளாக்குலே போட்டு உடைத்துவிட்டீர், என் தங்கமணி படிச்சு என்கிட்டே சொல்றாங்க.. ஆஆஆவ்வ்வ்வ்வ்வ், இனிமே எங்கே உஷாராயிருக்கிறது...

அபுஅஃப்ஸர் said...

//தமிழரசி said...
நீங்க ஒரு சிறந்த மனோத்தத்துவ மருத்துவரும் கூட.....உபயோகமான பதிவுகளா அளிக்கிறீர்கள் நன்றி...
//

இதுவே பிரச்சினை மிக்க பதிவாகவும் போச்சு

Sinthu said...

என்ன அனுபவமா....?

அபுஅஃப்ஸர் said...

//ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!! //


அனுபவசாலி சொல்லுறீங்க கேட்டுக்குவோம்

Rajeswari said...

ஓஹோ..இவ்வளவு விசயம் இருக்கா...சரி சரி ஏமாற இருந்துக்குவோம்...

நல்ல பதிவு மனோததுவ டாக்டர்!

’டொன்’ லீ said...

:-))))

புத்தகம் வெளியிடலாம் போல இருக்கே...? :-)))

பித்தன் said...

நல்லா எழுதிருக்கிங்க ஆனா காதலியும் இல்லை மனைவியும் இல்லை :(

காதலிப்பது எப்படி காதலித்த பெண்ணை கல்யாணம் செய்யாமல் இருப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களே :)

T.V.Radhakrishnan said...

:-))

சொல்லரசன் said...

தமிழிச்சி said...
தேவா சார், உங்கள் மேல் ரொம்ப மதிப்பு வைத்திருந்தேன். அப்பிடியே கெடுத்திட்டீங்க!
ஒழிவு மறைவு இல்லாத தம்பதிகள் தான் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். சின்னப் பையன்கள் மனதை எல்லாம் கெடுத்துக் குட்டிச் சுவராகி விட்டீர்கள்.இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விசயத்தையும் சொல்லி இன்னைக்கு செல்போன்கூட சென்சார் செய்தபின் பேசும் நிலையில் இருக்கும் டாக்டர் சாரின் சொந்தகதையை
சோகமாக பகிர்வதை, குறைசொல்வதை அ.உ.அ.க சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்

அ.மு.செய்யது said...

தலைவா..எங்கயோ போயிட்டீங்க..

இப்படி அட்வைஸ் பண்ண நாலு பேரு இருந்தா நாட்ல சண்டையே வராது.


( ஆமா இதெல்லாம் பட்டு தெரிஞ்சுகிட்டதா ?? )

லவ்டேல் மேடி said...

// 1அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க. //


சிறு திருத்தம்.......!! கேள்வியே கிடையாது......!! ஸ்ட்ரெய்ட்டா பூரி கட்டையிலதான் பதில் .....!!!!!!
// 2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே. //


கண்டிப்பாக.... முடுஞ்சா எடைக்கு போட்டு பேருச்சம்பழமோ , பஞ்சு முட்டாயோ , இல்ல சோன் பப்புடியோ வாங்கித் தின்னு ஏப்பம் விட்டுறணும்....!!!!
// புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. //


கல்யாணத்து அன்னைக்கு .... ஐயர கரக்ட் பண்ணி அவுருகிட்ட குடுத்துருங்க.... !! ஹோமத்துல போட்டு நமக்கு பரிகாரம் பணிடுவார்..!! அப்பறம் எல்லாமே ஷேமம்தான்...!!!!!

// .அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!! //அய்யய்யோ... போனவாரம்தான் இத நா ஒலறித் தொலஞ்சேனே...!!!

எல்லாம் முடுஞ்சு போச்சு....!!! ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!!!!!!
// பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். //ஆமாங்கோவ்.... எப்பவுமே மூஞ்சிய சிரிச்ச மாதிரியே வெச்சுக்குங்கோவ் ........!!!!

// ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. ////


இல்லாங்காண்டி கூஜா..... ( சொம்புதான்....) .// துணிந்து தாக்குங்க மச்சி!! //


இல்லாங்காண்டி .... துணி துவைப்பீங்க மச்சி........!!!!!
// வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. //கல்யாணம் ஆன உடனே .. மொதோ வேலையா அம்முனிங்க செய்யிற வேலையே தனி குடுத்தனம்தான.....!! அப்பும் உங்க அம்மா இப்புடி, உங்க நைனா ஆப்புடி .... உங்க அக்கா எப்பவுமே ஆகாது... !!!!!!!! கஷ்ட்ட காலம்......!!!!
// சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். //சிறு திருத்தம்....... பல நேரங்களில்.......
// 6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. //


" பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்.....


அம்முனி எம்பட அம்முனி........"


அப்புடீன்னு பாடு பாட வேண்டியதுதான்..........!!!!
// சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். //அட... நீங்க வேற......!!! சம்பளத்த வெச்சுத்தான் பிகரே செட்டாகுது......!!!!! காதலியும் சரி... மனைவியும் சரி......!!!!
// ...... ///சரி.... சரி.... மீசையில மண்ணு ஒட்டுனாலும் ... இனி உஷாரா இருந்துக்க வேண்டியதுதான்........!! நெம்ப தேங்க்ஸ்ங்கண்னோவ்...............!!!!

வால்பையன் said...

இதுகெல்லாம் முன்னாடி முதல்ல,
மனைவிகிட்ட காதலி இருக்குறதையும், காதலிகிட்ட மனைவி இருக்குறதையும் சொல்லக்கூடாது!

ஹிஹிஹிஹி

ஆகாய நதி said...

கிர்ர்ர்ர்ர்ர்

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அருமையான பதிவு - பெண்களிடம் சொல்லக்கூடாதவை என்று சில செயல்களைச் சொல்லி இருக்கிறிர்கள் -நன்று - ஆனால் இதே போல் அவர்களும் சிலவற்றை நம்மிடம் சொல்ல மாட்டார்கள். தயங்குவார்கள் -

மொத்தத்தில் புரிதலுணர்வு வேண்டும் - அறுபது நாட்கள் வரையானாலும் சரி - அறுபது ஆண்டுகளாயினும் சரி - புரிந்து கொண்டால்வாழ்க்கை சொர்க்கமே !

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல ஆலோசனை..........

பிரியமுடன்.........வசந்த் said...

உபயோகமான பதிவு தேவாசார்

அக்பர் said...

ரொம்ப உபயோகமான பதிவு.

மனைவியும் ப்ளாக் படிப்பவர்களா இருந்தா கத கந்தல்தான்.

காதலன் / கணவனிடம் சொல்லக்கூடாதவை என்று எதிர்பதிவு எழுதுபவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.//

எப்படி உங்க அனுபவம்....

ஆ.ஞானசேகரன் said...

//ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.//

ஹிஹிஹி புரியுது புரியுது...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல விளக்கம் டாக்டர் பாராட்டுகள்

சுந்தர் said...

இப்பிடி தலைப்பு வெச்சா , விகடன் ல வருமாமே ? இது வந்துருக்கா ?

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா.. சரியாச் சொன்னீங்கண்ணே.. எல்லாமே கரெக்ட் போங்க :-)

Anonymous said...

My Blog
http://www.wretch.cc/blog/markacey
Thanks for your share
Nice to meet you

Hsinchu, Taiwan

S.A. நவாஸுதீன் said...

பசங்களுக்கு மெயில் அனுப்பி உஷார் படுத்துற மேட்டர் இது. இப்படி பப்ளிக்கா போட்டு அவங்களை உஷார் படுத்திட்டீங்க. இனி பாடு ரொம்ப திண்டாண்டம்தான்

ஸ்ரீதர் said...

எங்களைப் போல ஆட்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கைப் பதிவு.

தீபக் வாசுதேவன் said...

கணவன் - மனைவி இடையே ஒரு போதும் எந்த ஒளிவு மறைவும் இருத்தல் கூடாது.

Useful Shopping Tips said...

நல்ல யோசனை தான்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory