மவுனமாய்
நீ பேசிய சொற்களையெல்லாம்
திரட்டி
யாருமறியாமல்
கொடுத்தாய் முத்தமாய்!
எவ்வளவு அன்பைக்
குழைத்து முத்தமாக்கினாய்?
கரையில்லாத
கடல்போல்
விளிம்பில்லாதது
உன் முத்தம்!
முடிவுறாத உன்
முத்தங்களில்
மூழ்கிக்கிடக்கிறேன்
நான்!
மீண்டெழும்
முத்தங்களின் கரைகளில்
காதலும்
கவிதையுமாய்க்
கிடக்கிறாய் நீ!

26 கருத்துரைகள்:
ரைட் ... ரைட் ...
நண்டு! நன்றி!
மீண்டெழும்
முத்தங்களின் கரைகளில்
காதலும்
கவிதையுமாய்க்
கிடக்கிறாய் நீ!
.....அடேங்கப்பா.....!
வாங்க சித்ரா!
...............நல்லா இருக்கு டாக்டர்
அத்திரிக்கு என் அன்பு மு...!
என்ன டாக்டர் - முத்த ஆராய்ச்சியிலே எல்லாம் இறங்கிட்டீங்க - ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு.
cheena (சீனா) said...
என்ன டாக்டர் - முத்த ஆராய்ச்சியிலே எல்லாம் இறங்கிட்டீங்க - ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு//
நீங்க சொன்னா சரிதான்!
ஜெரி ஈசானந்தன். said...
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு.//
கூச்சப்படாமக் கேளுங்க!
நல்லா இருக்கு
முத்தச் சத்(ந்)தம் !
மருத்துவருக்கு கவிதையும் வரும் என்று தெரிந்துக்கொண்டேன்... கலக்கல்...
முத்தச்சுவையில் இதழூறுது ;)
ஸ்வீட்
மருத்துவரே எப்ப இருந்து இப்படி ?
அருமை
முதுகு தண்டு ஆராய்ச்சி முடிச்சு இப்போ முத்த(ம்) ஆராய்ச்சியா ...
கவிதை பிரமாதம் போங்க..!! அப்பப்ப.. இப்படி கவிதை மழைய பொழியவிடுங்க..!!
ஹி.ஹி..ஹி.. சூப்பர்.
//முடிவுறாத உன்
முத்தங்களில்
மூழ்கிக்கிடக்கிறேன்
நான்!//
கரையேறவே முடியாது!
நன்று.
சூப்பருங்க!
அருமை... ரசித்தேன்
அருமை...
கவிதை முத்தம் அழகு.
உங்கள் கவிதை காதலுக்கு
அளிக்கும் முத்தம்
முத்தக் கவிதை எழுதலாம்
போலுள்ளதே .
பெண் எழுதலாமா சார்?
என்ன நினைக்கறீங்க?
முடிவுபெறா முத்தக்காதல் டாக்டர் மீண்டும் மூழ்கிட்டீங்க போல..
Post a Comment