சர்க்கரை
நோயாளிகளில் பலர் கால் வலி, கால் மதமதப்பு, கால் கடுப்பு, உளைச்சல் அவதிப்படுகின்றனர்.
அதற்காக
சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது கால் வலிக்கான காரணங்கள் பொதுவாக என்ன என்பதை அறிந்த பின்னரே சிகிச்சை மேற்கொள்ளுவதே சிறந்தது. பொதுவாக அவ்வப்போது வலி வரும்போது வலி மாத்திரைகளை சாப்பிடுவதும் விட்டுவிடுவதும் பிறகு வலி வரும்போதெல்லாம் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சரியல்ல.
வலிக்கான
காரணங்கள்:
கால்
வலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள்:
நீர்ச்சத்துக் குறைவு,
உப்பு
குறைவு
விட்டமின்
டி3 குறைவு
ஊட்டச்
சத்துக்குறைவு
பொருத்தமற்ற
காலணிகள்
யூரிக்
அமிலம் அதிகமாதல்
தசைகள்:
பொதுவாக
வலியானது தசைகளின் பலமின்மை மற்றும் தசை நார் ஆகியவற்றின் செயல்பாடுகளாலேயே ஆரம்பிக்கிறது.
1.தசைகளின் பலம் குறைவது
2.தசை நார் இறுக்கம், பிடிப்பு
3.தசைநார்களின் சுருங்கி விரியும் தன்மை
தசைகளுக்கு
சரியான உடற்பயிற்சியின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். 70% வலியானது தசைநார் பிரச்சினைகளாலேயே வருகின்றது.
எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சினைகள்:
எலும்புகளே
நம்முடைய உடல் எடையைத் தாங்குகின்றன. எலும்புகளில் சத்துக் குறைவு ஏற்படுவதால் கால் வலி உண்டாகிறது.
இரத்த
ஓட்டக்
குறைவால்
ஏற்படும்
வலி:
கால்
தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதாலும் கால் வலி உண்டாகிறது.
நரம்பு பாதிப்புகளால் ஏற்படும் வலி:
வலி,
மதமதப்பு, எரிச்சல், காலின் சில பகுதிகளில் உணர்வின்மை, நடக்க இயலாமை ஆகியவை நரம்பு பாதிப்புகளால் உண்டாகின்றன.
கீழே
கொடுத்துள்ளவை
உங்களுக்கு
இருந்தால்
சிகிச்சை
எடுத்துக்
கொள்வது
நலம்.
1.கால்,கைகளில் தசை இறுக்கம் மற்றும் அசைப்பதில் சிரம்ம்.
2.விரல்கள் மடக்கும்போது மடக்கவோ நீட்டவோ முடியாமல் லாக் ஆகி விடுதல்.
3.தோள்பட்டை அசைவுகள் குறைவு, கையை மேலே தூக்க இயலாமை.
4.கால் கைகளில் மதமதப்பு, ஊசியால் குத்துவது போன்ற உணர்வு
5.தசை வீக்கம், தசை வலி.
-------------------------------------------------------------------
தேவன்மாயம்.
-------------------------------------------------------------------
10 comments:
உபயோகமான தகவல்கள்...
வருகைக்கு நன்றி !
பயனுள்ள பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
கருத்துக்கு நன்றி!
நலமா மருத்துவரே!
ஓ!சிலேடையும் கூட வருகிறதோ:)நீண்ட நாட்களாக உங்க பதிவுகளை காண இயலவில்லை.
தொடுப்பதில்லையா?தொடர்வதில்லையா?
நண்பன் ஒருவர் கால் வலியில் துவங்கி ரணமாகி சிகிச்சை பலனிக்காமல் இறந்தே போனார்.
இதற்கான முக்கிய காரணமாக தொடர்ந்து போட்டு வந்த பென்சிலின் ஊசியை நிறுத்தி விட்டு விளம்பரத்தில் வந்த மலேசியா காளான் பொருட்களால் நோய்கள் குணமாகின்றன என்ற விளம்பரத்தாலும் இருக்க கூடும்.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.//
ந
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.///
நலமா நண்பரே!
ராஜ நடராஜன் said...
நலமா மருத்துவரே!
ஓ!சிலேடையும் கூட வருகிறதோ:)நீண்ட நாட்களாக உங்க பதிவுகளை காண இயலவில்லை.
தொடுப்பதில்லையா?தொடர்வதில்லையா//
தொடுக்கவில்லை....இனி தொடுத்தலும் தொடர்தலும் முடியும் என எண்ணுகிறேன்!
ராஜ நடராஜன் said...
நண்பன் ஒருவர் கால் வலியில் துவங்கி ரணமாகி சிகிச்சை பலனிக்காமல் இறந்தே போனார்.
இதற்கான முக்கிய காரணமாக தொடர்ந்து போட்டு வந்த பென்சிலின் ஊசியை நிறுத்தி விட்டு விளம்பரத்தில் வந்த மலேசியா காளான் பொருட்களால் நோய்கள் குணமாகின்றன என்ற விளம்பரத்தாலும் இருக்க கூடும்.//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.
Very useful article. Please keep it up
Post a Comment