Friday 30 July 2010

பாம்பு கடி தெரியவேண்டியவை-10!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரியநேரத்தில் செய்யவேண்டியது அவசியம்.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 250 வகைதான் விசத்தன்மையுள்ளவை.

இந்தியாவில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகைதான் விசமுள்ளவை.

ஒவ்வொரு வருடமும் ஏற்க்குறைய இரண்டு லட்சம் நபர்கள் பாம்புகடிக்கு ஆளாகிறார்கள்.அவர்களில் 15000-20000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு(COBRA). இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில்( COBRA HOOD) இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும்.சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு.  கருநாகத்தின் ப்டத்தில் கண் இருக்காது.

இறந்த் பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம்.

நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்

நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

1.கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.

2.கடிவாயிலிருந்த் இரத்தத்துடன் நீர் கசியும்.

3.30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.

4.சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.

5. நடம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைகள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.

6.கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.

7.கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.

8.சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சுவிடுதல்( RESPIRATORY PARALYSIS) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.

9.அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

10.சிகிச்சை:  

  • முதலுதவி- கடிவாயின் மேல் சிறிது அகலமாக, பட்டையாக துணியால் கட்டலாம். அகலமாக அழுத்திக்கட்டுவதால் தோலுக்கடியிலுள்ள இரத்தத் தமனிகளின் வழியாக விசம் பரவுவது குறையும்.
  • கடித்த கால் அல்லது கைப்பகுதியை அசைக்காமல் வைக்க வேண்டும்.

மருந்துகள்:

  • விச முறிவு மருந்த் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசதட்தையும் குணப்படுத்தும்.
  • விசம் அதிகமாக இருந்தால் செயற்கை சுவாசக் கருவிகள்(VENTILATOR) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் சிறந்தது.

நல்ல பாம்பு கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள்:

  1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து  உடலுக்குள் செலுத்துதல்,
  2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவராமை, தகுந்த சிகிச்சை அளிக்காதது ஆகியவையே.

   உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

நல்ல பாம்பு தவிர பிற பாம்புகடிகள் பற்றி அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.

51 comments:

நட்புடன் ஜமால் said...

மருந்து அரசு மருத்தவமனையில் கிடைக்கின்றது - நல்ல புதிய செய்தி.

Chitra said...

மிகவும் பயனுள்ள இடுகை.... பகிர்வுக்கு நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பய’னுள்ள பதிவு!

ஆதவா said...

தகவலுக்கு நன்றிங்க மருத்துவரே, சிகிச்சை நிறைவாக இருந்தாலும் தகவல் கொஞ்சம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறேன்./

SASee said...

தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான தகவல். தெரிவித்தமைக்கு நன்றிகள்...!!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
மருந்து அரசு மருத்தவமனையில் கிடைக்கின்றது - நல்ல புதிய செய்தி./

ஆம் ஜமால்!

தேவன் மாயம் said...

Chitra said...
மிகவும் பயனுள்ள இடுகை.... பகிர்வுக்கு நன்றி.

கருத்துக்கு நன்றி சித்ரா!

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பய’னுள்ள பதிவு!

/
நன்றி பாரதி!

தேவன் மாயம் said...

ஆதவா said...
தகவலுக்கு நன்றிங்க மருத்துவரே, சிகிச்சை நிறைவாக இருந்தாலும் தகவல் கொஞ்சம் குறைவாக இருப்பதாக எண்ணுகிறேன்.//

உண்மைதான்! பெரிதாக்ப் போட்டால் பாடம்போல் ஆகிவிடும்!

தேவன் மாயம் said...

SASee said...
தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான தகவல். தெரிவித்தமைக்கு நன்றிகள்...!!!
நன்றி சசி!

அப்துல்மாலிக் said...

அனிமல் ப்லானட் தமிழ்ழ்லே பார்த்த திருப்தி..

ஜோதிஜி said...

பய’னுள்ள பதிவு!

பதிவைப் போலவே ரசித்த விமர்சனம்

ரிஷபன்Meena said...

டாக்டர்,

அவசியம் தெரிய வேண்டியவை. மருத்துவமனைக்கு செல்லும் முன் முதலுதவி ஏதும் செய்ய வேண்டுமா என்பதையும் சொல்லியிருக்கலாம்.

அன்புடன் நான் said...

"நல்ல”பாம்புத்தகவல்..... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்க மருத்துவரே.

அகல்விளக்கு said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

விழிப்புணர்வளிக்கும் இடுகை மருத்துவரே.

குட்டிப் பாம்பு தாய்ப்பாம்பிடம் கேட்டது..

அம்மா நான் கடிச்ச விசமா?

தாய்ப்பாம்பு சொன்னது ஆமாடா..

குட்டிப்பாம்பு சொன்னது..

ஐயோ நான் நாக்கைக் கடிச்சிட்டேனே என்று..

முனைவர் இரா.குணசீலன் said...

பாம்பு கடிச்சுப் பிழைச்சவனும் இருக்கான்...
முள்ளக்குத்திச் செத்தவனும் இருக்கான் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை மருத்துவரே.

Unknown said...

ஜாக்கி வாசுதேவ் பால் கலக்காத டீயை அதிக அளவில் குடித்தால் விஷம் எளிதில் கலக்காது என அனுபவமாக எழுதி இருந்தார்.. ஏனெனில் அது ரத்தத்தை இலக வைக்கும் ஆற்றல் உடையது...

Anonymous said...

sir padikum podhey payama erukku...

ஹேமா said...

ஊரில் நடந்த ஒரு சம்பவம் டாக்டர்.மரமேறும் தொழிலாளி ஒரு மரத்தில் இருக்கும்போது பாம்பு கடித்து இறந்துவிட்டார்.இளம் வயதுதான்.யாரோ வெளிநாட்டிலிருந்து வருவதறகாக 3 நாட்கள் அடக்கம் தள்ளிப்போடப்பட்டது.உடலைப் பக்குவப்படுத்த உறுப்புகளை அகற்றும்போது இரத்தம் பீறிட்டதாம்.
எனவே அங்கு பிறகு பேசிக்கொண்டார்கள்.மூச்சு அடங்கியிருந்ததாம்.உயிர் போகவில்லை.கொன்றுவிட்டார்கள் என்று.இது சாத்தியமா ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உடலைப் பக்குவப்படுத்த உறுப்புகளை அகற்றும்போது இரத்தம் பீறிட்டதாம்.
எனவே அங்கு பிறகு பேசிக்கொண்டார்கள்.மூச்சு அடங்கியிருந்ததாம்.உயிர் போகவில்லை.கொன்றுவிட்டார்கள்//

hemotoxic விஷம் என்று கூறலாம், அதவாது ரத்தம் உறைதலை தடுத்து அனைத்து இடங்களிலும் ரத்தக் கசிவு ஏற்பட்ட்டு மரணம் ஏற்பட்டு இருக்கலாம். இதைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களுக்கு இங்க சென்று பாருங்களேன்.

போலி மருத்துவர்கள் செய்யும் பாம்புக் கடி வைத்தியம் பற்றி எழுதப்பட்டு உள்ளது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அதனால தான் //பாம்பென்றால் படையும் நடுங்கு//து டாக்டர்.

தேவன் மாயம் said...

அப்துல்மாலிக் said...
அனிமல் ப்லானட் தமிழ்ழ்லே பார்த்த திருப்தி..//

ஐஸ் ரொம்பக்குளிருது அபு!

தேவன் மாயம் said...

ஜோதிஜி said...
பய’னுள்ள பதிவு!

பதிவைப் போலவே ரசித்த விமர்சனம்

ஜோதிஜி! நன்றி!

தேவன் மாயம் said...

ரிஷபன்Meena said...
டாக்டர்,

அவசியம் தெரிய வேண்டியவை. மருத்துவமனைக்கு செல்லும் முன் முதலுதவி ஏதும் செய்ய வேண்டுமா என்பதையும் சொல்லியிருக்கலாம்.

முதலுதவி என்று சொல்லியிருக்கிறேனே!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...
"நல்ல”பாம்புத்தகவல்..... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்க //

நல்ல- பாம்புத்தகவலா? ரசித்தேன் கருணா!

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி அகல்!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
விழிப்புணர்வளிக்கும் இடுகை மருத்துவரே.

குட்டிப் பாம்பு தாய்ப்பாம்பிடம் கேட்டது..

அம்மா நான் கடிச்ச விசமா?

தாய்ப்பாம்பு சொன்னது ஆமாடா..

குட்டிப்பாம்பு சொன்னது..

ஐயோ நான் நாக்கைக் கடிச்சிட்டேனே என்று..

---------------

முனைவர்.இரா.குணசீலன் said...
பாம்பு கடிச்சுப் பிழைச்சவனும் இருக்கான்...
முள்ளக்குத்திச் செத்தவனும் இருக்கான் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை மருத்துவரே.

//
இலக்கியத்தில் நகைச்சுவை என்று பதிவு போடுங்கள் புலவரே!

தேவன் மாயம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
ஜாக்கி வாசுதேவ் பால் கலக்காத டீயை அதிக அளவில் குடித்தால் விஷம் எளிதில் கலக்காது என அனுபவமாக எழுதி இருந்தார்.. ஏனெனில் அது ரத்தத்தை இலக வைக்கும் ஆற்றல் உடையது...
///

இதுபற்றி அறிவியல்ரீதியாகத் தெரியவில்லையே!

தமிழரசி said...
sir padikum podhey payama erukku..//

அட! நீங்க தைரியசாலியாச்சே!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
sir padikum podhey payama erukku..//

அட! நீங்க தைரியசாலியாச்சே!

தேவன் மாயம் said...

ஹேமா said...
ஊரில் நடந்த ஒரு சம்பவம் டாக்டர்.மரமேறும் தொழிலாளி ஒரு மரத்தில் இருக்கும்போது பாம்பு கடித்து இறந்துவிட்டார்.இளம் வயதுதான்.யாரோ வெளிநாட்டிலிருந்து வருவதறகாக 3 நாட்கள் அடக்கம் தள்ளிப்போடப்பட்டது.உடலைப் பக்குவப்படுத்த உறுப்புகளை அகற்றும்போது இரத்தம் பீறிட்டதாம்.
எனவே அங்கு பிறகு பேசிக்கொண்டார்கள்.மூச்சு அடங்கியிருந்ததாம்.உயிர் போகவில்லை.கொன்றுவிட்டார்கள் என்று.இது சாத்தியமா ?

//
கேட்க சுவாரசியமாக இருக்கிறது ஹேமா!” ஆயின் நம்பத் தகுந்ததல்ல!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//உடலைப் பக்குவப்படுத்த உறுப்புகளை அகற்றும்போது இரத்தம் பீறிட்டதாம்.
எனவே அங்கு பிறகு பேசிக்கொண்டார்கள்.மூச்சு அடங்கியிருந்ததாம்.உயிர் போகவில்லை.கொன்றுவிட்டார்கள்//

hemotoxic விஷம் என்று கூறலாம், அதவாது ரத்தம் உறைதலை தடுத்து அனைத்து இடங்களிலும் ரத்தக் கசிவு ஏற்பட்ட்டு மரணம் ஏற்பட்டு இருக்கலாம். இதைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களுக்கு இங்க சென்று பாருங்களேன்.

போலி மருத்துவர்கள் செய்யும் பாம்புக் கடி வைத்தியம் பற்றி எழுதப்பட்டு உள்ளது.

//
ரொம்ப நன்றி சுரேஷ்! என் வேலையைக் குறைத்துவிட்டீர்கள்!

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அதனால தான் //பாம்பென்றால் படையும் நடுங்கு//து டாக்டர்.

///
ஆம் நண்பரே! டிஸ்கவரியில் இருளர் குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதைப் பார்க்கவில்லை!

abdul said...

very useful article

M.Mani said...

இன்னும் கொஞ்சம் விபராமாக போடுங்களேன் ஐயா! கடித்தவுடன மருத்துவரிடம் செல்லும்முன் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ன என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

Paleo God said...

கடித்த இடத்தின் மேலேயே கட்டவேண்டுமா? அல்லது கடித்த இடத்துக்கு சிறிது மேலா? எது சரி டாக்டர்?

தொடருங்கள். :)

அம்பிகா said...

மிகவும் பயனுள்ள, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு. நன்றி.

ஹேமா said...

நன்றி சுரேஷ்.உங்கள் தளத்திலும் வாசித்து அறிந்துகொண்டேன்.
பிரயோசனமான சுவாரஸ்யமான தகவல்கள்.
டாக்டர் தேவாவுக்கும் நன்றி.

priyamudanprabu said...

பயனுள்ள இடுகை....
நன்றிகள்..

'பரிவை' சே.குமார் said...

தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான தகவல். தெரிவித்தமைக்கு நன்றிகள்...!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Useful article Theva. Thanks for sharing your knowledge.

அரசூரான் said...

தொடர்ந்து மருத்துவ தகவல்களை பதிவிட்டு கலக்குறீங்க. தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் தேவன்

அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள்

பகிர்ந்தமை நன்று - நன்றி

நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

அன்பரசன் said...

உபயோகமான தகவல்

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் தங்கள் இடுகையில் மட்டுமல்லாது (குணசீலன், ஹேமா)கருத்துரைகளிலும்... வாழ்த்துகள்.

Unknown said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் கருனையும் காரன்யமும் உங்கள் மீது உண்டாகட்டும் சகோதரரே. நல்ல முக்கியமான பதிவு. மிகவும் நன்றி.

மேலும் எந்த விஷக்கடியானாலும் கடிப்பட்டவுடனே மூன்று அல்லது நான்கு கிராம்புகளை நன்றாக மென்று தின்றால் உடனே எந்தவொறு விஷமாக இருந்தாலும் உடனே இறங்கி விடும் என்று கேள்விப்பட்டுள்ளேன். இறைவனின் சாந்தியும் சமாதானமும் கருனையும் காரன்யமும் உங்கள் மீது உண்டாகட்டும் சகோதரரே.

சத்ரியன் said...

மிகமிகப் பயனுள்ள தகவல் தேவன்.

இன்னும் தகவல்களை எதிர்ப்பார்க்கிறோம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory