மதுரையில் பதிவர்கள் சந்தித்து சிறிது காலம் ஆகிவிட்டதே என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது. சிறு சிறு சந்திப்புகள் நிகழ்ந்தாலும் நான் அவற்றில்
கலந்துகொள்ள(கொல்ல!!) இயலவில்லை.
தற்போது வேறு வழியில்லை! பதிவுலகில் நட்புக்கு மிகுந்த மரியாதை தருபவரும், பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதற்கு தன் இந்தியப் பயணத்தில் அதிக காலம் செலவிடுபவருமான... ஆம் ! வேறு யார்? திரு.இராகவன் அவர்களின் வருகிறார் என்றால் அதை விட முக்கிய வேலை என்ன? - சென்றுதான் ஆகவேண்டும் என்பது நான் இப்போது எடுத்த முடிவல்ல, போன வருடம் நான் அவரை மதுரையில சந்திக்க இயலாமல் போனபோதே எடுத்த் முடிவு!
சீனா ஐயா தன்னுடைய துணைவியார்அம்மா.செல்விஷங்கர்
அவர்களுடன்
வந்து சேர்ந்தார். ஸ்ரீதர்,பாலகுமார், மதுரை சரவணன், ஜெரி, தேனி
சுந்தர் ஆகியநண்பர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
காரைக்குடியில் இருந்து நானும் கடைசியாக தருமி ஐயாவும்
வந்து சேர்ந்து
கொண்டார்.
அண்ணன் இராகவனுடன் பேசும்போது நீண்ட நாள்
நண்பருடன் பேசிய
உணர்வு ஏற்பட்டது. மிகுந்த அன்பு மிக்க சகோதரர் ஒருவர்
கிடைத்த
மகிழ்வு எனக்கு.( வலையுலகில் நிறையப்பேருக்கு அவர்
பாசமிகு அண்ணன்!! ).
கலகலப்பான பேச்சுடன் உணவுக்கு விடுதியின் மொட்டை
மாடிக்குச் சென்றோம்.
சைவ உணவு , அசைவ உணவு என்று இரு அணிகளாகப்
பிரிந்து களத்தில் இறங்கினோம்.
ரொட்டி,பிரியாணியை முதலில் கொண்டு வராமல்
வறுவல்மீன், கோழிடிக்கா, இறால் ஆகியவற்றை
( இது உணவக தந்திரமோ?) முதலில் கொண்டு வந்து
வைத்தான் விவரமான சர்வர்.
பசியுடன் ஒரு மரியாதைக்காக பிரியாணி வந்தவுடன்
சாப்பிடலாம் என்று பார்த்தால் மக்கள் அசுர வேகத்தில்
இயங்கி தட்டுகளை காலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பிறகென்ன! நானும் களத்தில் இறங்க
வேண்டியதாயிற்று.
உணவின் ஊடே தான் முன்பு உண்ட பழைய சாதம், தயிர்,
சின்ன வெங்காயத்தின் சுவையை இராகவன் நினைவு
கூர்ந்தார். ஆர்டர் செய்திருந்த வெண்ணெய் போன்ற
தயிர் சாதத்தையும் விடாது வழித்து அடித்தார்
( உணவை மிச்சம் வைக்கக் கூடாதில்ல!!)
ஜெரி ஈசானந்தா,இரா.நைஜீ, தருமி, சரவணன்
உணவு முடிந்து 9.45 போல் ”படம் எடுக்கும் படலம்”
ஆரம்பம்! அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள
சந்திப்பு இனிதே முடிந்தது.
மதுரை உணவகத்தில் இரா.நைஜீரியா கேட்ட வத்தக் குழம்பு மட்டும் கிடைக்கவில்லை( இராத்திரி 9.00 மணிக்கு
வத்தக்குழம்பு இல்லாமல் என்னய்யா ஸ்டார் ஹோட்டல் நடத்துறீங்க? என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை!!! . தலைவர் தொப்பையில்லாமல் வற்றிய வயிறுடன் சிக்ஸ் பேக்கில் இருக்க வத்தக் குழம்புதான் காரணமோ? அடுத்து
இந்த நைஜீரிய எக்ஸ்பிரஸ் செல்லும் ஊர்களில் சுவையான வத்தக்குழம்பு ஏற்பாடு செய்யுங்கள் மக்களே!!
இரவு 12.45க்கு காரைக்குடி வந்து உறங்கிப்போனேன்!!ஒளிப்படங்களைப்பார்க்கவும்!
43 comments:
நினைவில் நிற்கும் சந்திப்பு, இல்லையா சார் !
thala ...nalla irunthuchu padivu ..yen adikkadi eluthuvathillai ippo ellam ?
தேவன் மாயம் சார்,
சந்திப்பு, சாப்பாடு, புகைப்படங்கள் அனைத்தும் அருமை! இராகவன் சாரோடு சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம் என்பது என் எண்ணம்.
ஸ்ரீ....
தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மருத்துவரே..
எனக்காக அவ்வளவு தூரம் வந்தது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது..
வி.பாலகுமார் said...
நினைவில் நிற்கும் சந்திப்பு, இல்லையா சார் !
//உண்மைதான் பாலகுமார்!!
டம்பி மேவீ said...
thala ...nalla irunthuchu padivu ..yen adikkadi eluthuvathillai ippo ellam ?//
நேரம், மனம் எல்லாம் வேண்டுமே மேவி!
ஸ்ரீ.... said...
தேவன் மாயம் சார்,
சந்திப்பு, சாப்பாடு, புகைப்படங்கள் அனைத்தும் அருமை! இராகவன் சாரோடு சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம் என்பது என் எண்ணம்.
ஸ்ரீ....
//
ஆம்!! ஸ்ரீ நினைத்தால் முடியாததா?
இராகவன் நைஜிரியா said...
தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மருத்துவரே..
எனக்காக அவ்வளவு தூரம் வந்தது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது.//
நன்றிங்க!! இதெல்லாம் என்ன! நைஜீரியாவே வருவோம்!!
நானும் அவரை சென்னையில் சந்தித்துவிட்டேனாக்கும்...
இனிய சந்திப்பு....
பகிர்வுக்கு மிக்க நன்ரிங்க மருத்துவரே.
கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கம்.
புகைப்படம் எதுவும் போடலையே.. காரைக்குடியில் இருந்து மதுரை சென்று பார்த்து வந்தது - சந்தோசமாக இருந்தது
அன்பின் வெற்றிவேல்
ஆகா!
நல்ல சந்திப்பு~!
நான் வந்திருந்தா நல்லா ஒரு வெட்டு வெட்டியிருப்பேன்!
சென்னைக்கு அண்ணன் வரும் தேதி சொல்லுங்க, நளாஸ்-ல வத்தக் கொழம்போட சாப்பாடு போட்டிருவோம்.
கார்த்திக், சீனா அய்யா, ஸ்ரீ, ராகவன் அண்ணா ஆகியோரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. புகைப்படங்களில் பெயர்களை சேர்க்கலாம், அல்லது Photos கீழே பின்னூட்டத்தில் பெயர்களை எழுதலாமே?
ஸ்ரீ,
உங்க எண்ணத்தை செயல்படுத்தும் முன்பு தகவல் தெரிவிக்கவும் ;-)
குடந்தை அன்புமணி said...
நானும் அவரை சென்னையில் சந்தித்துவிட்டேனாக்கும்.//
குடந்தையாரே! முந்திக்கொண்டீரே!
சி. கருணாகரசு said...
இனிய சந்திப்பு....
பகிர்வுக்கு மிக்க நன்ரிங்க மருத்துவரே.
கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கம்///
கவிஞரே!! நலமா?
அ.வெற்றிவேல் said...
புகைப்படம் எதுவும் போடலையே.. காரைக்குடியில் இருந்து மதுரை சென்று பார்த்து வந்தது - சந்தோசமாக இருந்தது
அன்பின் வெற்றிவேல்
//
பதிவின் கீழ் லின்க் உள்ளதே!!
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஆகா!
நல்ல சந்திப்பு~!
நான் வந்திருந்தா நல்லா ஒரு வெட்டு வெட்டியிருப்பேன்!
//
வாங்க! விருந்து வைப்போம்!
Joe said...
சென்னைக்கு அண்ணன் வரும் தேதி சொல்லுங்க, நளாஸ்-ல வத்தக் கொழம்போட சாப்பாடு போட்டிருவோம்.
கார்த்திக், சீனா அய்யா, ஸ்ரீ, ராகவன் அண்ணா ஆகியோரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. புகைப்படங்களில் பெயர்களை சேர்க்கலாம், அல்லது Photos கீழே பின்னூட்டத்தில் பெயர்களை எழுதலாமே?
ஸ்ரீ,
உங்க எண்ணத்தை செயல்படுத்தும் முன்பு தகவல் தெரிவிக்கவும் ;-)
//
போட்டோவை உள்ளே தள்ளவே பெரும்பாடாகிவிட்டது!
தேவன்,
இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப அதிகமாத் தெரியலையா? நீங்களே கூகிள் சர்வர் வரைக்கும் கையால தள்ளிட்டு போனது மாதிரி பேசுறீங்க?
பிகாஸா வைச்சு மூணு கிளிக் பண்ணினா அஞ்சு வினாடில சட்னு ஓடிப்போயிரும். நேரம் கிடைக்கும் போது பெயர்களை ஒன்றிரண்டு புகைப்படங்களின் கீழ எழுதுங்களேன்?!? ;-)
மதுரையிலிருந்து கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் வரவில்லையா?
பகிர்வுக்கு நன்றிங்க!
super doctor! just now only i know the secrect od six bag of my anna:-)))
Joe said...
தேவன்,
இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப அதிகமாத் தெரியலையா? நீங்களே கூகிள் சர்வர் வரைக்கும் கையால தள்ளிட்டு போனது மாதிரி பேசுறீங்க?
பிகாஸா வைச்சு மூணு கிளிக் பண்ணினா அஞ்சு வினாடில சட்னு ஓடிப்போயிரும். நேரம் கிடைக்கும் போது பெயர்களை ஒன்றிரண்டு புகைப்படங்களின் கீழ எழுதுங்களேன்?!? ;-)
//
நமக்கு புரியலிங்க! படங்களை டிராஃப்டில் கொண்டு வந்தவுடன் மாயமாகி விடுகின்றன! ஓஞ்சு போய் உக்கார்ந்திருக்கேன்! இனி பிகாசா பக்கமா? அது ராகவன் அய்யாவுடைய தளமாச்சே!!
ஆதவா said...
மதுரையிலிருந்து கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் வரவில்லையா?
பகிர்வுக்கு நன்றிங்க!
//
இதானே வேணாங்கிறது!
அபி அப்பா said...
super doctor! just now only i know the secrect od six bag of my anna:-)))//
கண்டுபிடித்தாயிற்று! வத்தக்குழம்பு ரெடி பண்ணுங்க!
// வி.பாலகுமார் said...
நினைவில் நிற்கும் சந்திப்பு, இல்லையா சார் !
//
ரிப்பீட்டு
திருச்சியில் பதிவர்களே இல்லையா?
நேரில் சந்திக்கும் போது விளக்க முடிந்தால் சொல்கிறேன், பிகாஸா உபயோகித்து இணைய தளத்தில் ஏற்றுவது வெகு சுலபம்.
நன்றி ஜோ! நானும் முயல்கிறேன்!
நாளைக்கு நாங்களும் பார்க்கப்போறோமே!
//நான் வந்திருந்தா நல்லா ஒரு வெட்டு வெட்டியிருப்பேன்! //
ஜோதி,
யாரை ??
//பசியுடன் ஒரு மரியாதைக்காக பிரியாணி வந்தவுடன்
சாப்பிடலாம் என்று பார்த்தால் மக்கள் அசுர வேகத்தில்
இயங்கி தட்டுகளை காலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
பிறகென்ன! நானும் களத்தில் இறங்க
வேண்டியதாயிற்ற//
கண்ணு முன்னால வெரைட்டியா இருக்குறப்போ,பிரிச்சு மேயுறது தான சரி,
டாக்டர்,"அடுத்து எப்போ களத்துல இறங்குவோம்?"
வால்பையன் said...
நாளைக்கு நாங்களும் பார்க்கப்போறோமே!//
சந்தோசமாப்பாருங்க!
தருமி said...
//நான் வந்திருந்தா நல்லா ஒரு வெட்டு வெட்டியிருப்பேன்! //
ஜோதி,
யாரை ??
பிளேட்டில் இருந்த பரிணாமங்களைத்தான்!!
ஜெரி ஈசானந்தன். said...
டாக்டர்,"அடுத்து எப்போ களத்துல இறங்குவோம்?"
அதுகுள்ளயா?
Fantabulous Dinner With "Nice"gerian.
இனிய சந்திப்பு..... எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் போட்டு இருக்கலாமே....அட் லீஸ்ட், அந்த தயிர் சாதம் plate :-)
அன்பின் தேவகுமார்
அழகான இடுகை -படங்களும் சூப்பர்
நினைத்து நினைத்து மகிழ்ந்தோம்
நல்வாழ்த்துகள் தேவகுமார்
நட்புடன் சீனா
பதிவர் சந்திப்பில் ராகவன் அண்ணனுடனான சந்திப்பு குறித்து சரவணன் தளத்தில் பார்த்தேன். சீனா ஐயா மற்றும் நண்பர்களுடனான உங்கள் சந்திப்பு குறித்த பகிர்வு அருமை.
ஆமா நீங்க காரைக்குடியா...?
நான் தேவகோட்டை... குடும்பம் காரைக்குடியில்... நான் அபுதாபியில்...
http://www.vayalaan.blogspot.com
நைஜீரியா எக்ஸ்பிரசோட இந்த வருடத்தின் சுற்றுலா ஆரம்பிச்சாச்சா
இனி ஒரே சந்திப்பு பதிவாதான் வரும்
//இராகவன் நைஜிரியா said...
தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மருத்துவரே..
எனக்காக அவ்வளவு தூரம் வந்தது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது.//
அண்னே ஊருக்கு போறேனு சொல்லவே இல்லே? மறந்துட்டியலா
பகிர்வுக்கு நன்றி டாக்டர்
நினைவில் நிற்கும் சந்திப்பு...படித்தவுடன் மீண்டும் ராகவன் அண்ணா பற்றி எழுதத் தோன்றுகிறது... பகிர்வுக்கு நன்றி.
Post a Comment