Thursday 29 July 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்-4 மணற்கேணி!,ஜோதிபாரதி,கருணாகரசு,மனவிழிசத்ரியன்,நிஜமாநல்லவன்,ஜோ,பிரியமுடன்பிரபு,இராம.கண்ணப்பன்

..

சிங்கப்பூரில் மனவிழி சத்திரியன், கருணாகரசு ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் இணைபிரியா நண்பர்கள். பரபரப்பாக நேரமின்றி இயங்கும் சிங்கையில் இப்படிப்பட்ட நட்புகள் அமைவது மிகச் சிறப்பு. கீழேயுள்ள பத்தில் இருப்பது மனவிழி சத்திரியன், அதற்குக் கீழ் சிவகுமாரிடம் பரிசு பெறுபவர் அன்பு நண்பர் கருணாகரசு. கருணாகரசு கவிமாலை, பட்டிமன்றங்களில் பிரபலமான கவிஞர்.

clip_image002

மனவிழி சத்திரியன்

clip_image004

பரிசு பெறும் கருணாகரசு.

சிங்கப்பூரில் உண்மையாகவே நல்லவர் இவர்தான். நான் சொல்லத்தேவையில்லை, உங்களுக்கே தெரியும். சிரிப்பைத் தவிர இவர் முகத்தில் வேறு எதையும் பார்க்க முடியாது.

clip_image006

நிஜமா நல்லவன்

கடல்புறத்தான் ’ஜோ’ மணற்கேணி அமைப்பின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார். மிக அமைதியான இவரும் நிஜமா நல்லவர்தான்.

clip_image008

ஜோ http://cdjm.blogspot.com/

ஜோதிபாரதி http://jothibharathi.blogspot.com/ அத்திவெட்டி அலசலில் நாட்டுநடப்புகளைத் தீவிரமான அலசுபவர். பிளாகர் அடையாளப் படத்தில் காண்பதை விட இளமையாகவும், இனியவராகவும் இருந்தார்.

ஜோதிபாரதி

அன்பும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களால் நிரம்பியுள்ளது சிங்கைப் பதிவர்களின் மணற்கேணி அமைப்பு. பரிசு பெற்ற கட்டுரைகளை ஆங்க்மோக்யோ நூலகத்தின் தக்காளி அறையில்

clip_image010

நடந்த கருத்தரங்கில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, கட்டுரையாளர்களிடம் கேள்விகளைத் தொடுத்து பிரமிப்பில் ஆழ்த்தினர்.

தருமி ஐயா கட்டுரையை குழலி அறிமுகம் செய்வித்தார். இருபுற அலசல்கள், உணர்ச்சிகரமான அணுகல், நேற்றைய, இன்றைய நிலவரங்கள், வழக்குகள், புள்ளி விவரங்கள் ஆகியவை பற்றி குறிப்பிட்டார். இடப்பங்கீடு என்ற தலைப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.
அடுத்து மருத்துவர் தேவன்மாயத்தின் கட்டுரையை கோவி கண்ணன் ஆய்வு செய்தார். சரியான சொல்தேடலால்புரிதல் எளிதாகிறது என்பதிலிருந்து, நம் மேற்படிப்புகளைத் தமிழில் நடத்த முடியுமா என்ற வினாவையும் எழுப்பினார். இலங்கையில் மருத்துவம் தமிழில் சொல்லிக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

பிரபாகரின் கட்டுரையை முகவை ராம் அறிமுகம் செய்வித்தார். கட்டுரையில் தமிழ் இசையின் முழு வரலாறு, பக்தி இசை, இசையில் சமயங்களின் ஈடுபாடுஇசை ஆர்வலர்களின் அளிப்புகள், அரசியலின் தாக்கம் என்பவற்றைக் கூறி இசை நோக்கிய பயணத்தின் அடுத்த அடிக்குச் செல்லும் சிறப்பான கட்டுரை என்று கூறி முடித்தார்.
அதன்பின் நடுவரின் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. பிரபாகர் தன் ஏற்புரையில் தான் கட்டுரையில் எடுத்துக் கொண்டவைகளைப் பற்றியும், இசையைப் பற்றிய பொதுப்பார்வையையும், தமிழிசையின் இன்றைய நிலைப்பாடுகள், வேறுபாடுகள் பற்றியும் அளித்தவையும், குட்டி musical demo-வும் அவையோரைக் கட்டி வைத்தது. (நன்றி- உரை உதவி திரு.தருமி மேலும் இது பற்றி வாசிக்க: http://dharumi.blogspot.com/2010/06/397-1.html)

நல்ல வேளை இவர்கள் தமிழ்நாட்டில் இல்லை, இல்லையென்றால் கட்டுரையாளர்களுக்கு(எங்களுக்கு)ப் பெரும் போட்டியாக இருந்திருப்பர்.

சிங்கப்பூர் வாழையிலை செல்லப்பா(காரைக்குடி) - உணவகத்தில் நடந்த மணற்கேணி கட்டுரையாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் நிறைய இளம் பதிவர்களின் சுறு சுறுப்பான செயல்திறனைக் காண முடிந்தது.

பிரியமுடன் பிரபுவை அங்கு சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. கூகிள் சாட்டில் என்னுடன் தொடர்ந்து கதைக்கும் இனிய நண்பர் பிரியமுடன் பிரபு.

clip_image012

பிரியமுடன் பிரபு.

மணற்கேணி அமைப்பு நம் இளம் பதிவர்களால் நடத்தப்படுவது போல் ‘வாசகர் வட்டம்” என்ற அமைப்பும் அங்கு செயல்படுகிறது. இதிலும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்களையும் தம் விழாக்களில் இணைத்துக்கொண்டது மணற்கேணி அமைப்பு. வாசகர் வட்ட முக்கிய நபரான இராம.கண்ணப்பன் பரிசளிப்பு விழா உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொண்டார்.

clip_image014

மேலே இராம.கண்ணப்பன் அவர்கள்!

சிங்கைத் தமிழ் எழுத்துகளின் வரலாறு பற்றி நம்முடன் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டார்.

Singapore banana leaf Appollo உணவகத்தின் உணவு வகைகள் மிகச்சுவையானவை. பெரிய இறால் வறுவல் முதல் அனைத்து வித உணவுகளையும் அனைவரும் ஒரு கை பார்த்தனர்.

clip_image016

clip_image018

அருமையான உணவு அது ஏனெனில் அது நம்ம காரைக்குடிக்காரரான திரு.செல்லப்பன் அவர்களால் நடத்தப்படுவது. Stomach is not the burial ground of all animals –என்பதற்கிணங்க அளவாகவே உணவை ருசித்தேன்.

தமிழ்த்துளி தேவா.

35 comments:

அன்புடன் நான் said...

நான் தான் முதல்ல....

Jerry Eshananda said...

தருமி ஐயா "ஏதோ வில்லங்கமான புத்தகம் பாக்கிறது மாதி தெரியுதே,"

அன்புடன் நான் said...

மிக அருமைங்க மருத்துவரே.....

மிக்க நன்றி.
மிக்க மிக்க நன்றி
மிக்க மிக்க மிக்க நன்றி.

அன்புடன் நான் said...

ஜெரி ஈசானந்தன். said...

தருமி ஐயா "ஏதோ வில்லங்கமான புத்தகம் பாக்கிறது மாதி தெரியுதே,"//

உங்க கூர்மையான பார்வையை வியக்கிறேன்.

Jerry Eshananda said...

சத்திரியன்,கருணாகரசு,மற்றும் பல நண்பர்களின் புகைப்படங்கள் மகிழ்ச்சியை தருகிறது,ஆனால் அந்த "பெரிய எறால் "வயித்தெரிச்சலை"கெளப்புது.

Jerry Eshananda said...

வணக்கம் கருணாகரசு," நம்ம கொங்கு நாட்டு, தமிழ் சொந்தம் சிவக்குமார் கையில் விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்."

தேவன் மாயம் said...

கருணாகரசு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

ஜெரி! நீங்களும் போட்டியில் ஜெயிச்சு இறால் சாப்பிடுங்க!

Jerry Eshananda said...

அடுத்த தடவை "கள்ள ட்ரைன்,ஏறியாவது....சிங்கப்பூர் வந்துருவோம்ல."

Jerry Eshananda said...

சரி தேவா,சென்னை கிளம்புறேன்,நேரமாச்சு,"கள்ள ட்ரைன்,நொள்ள ட்ரைன்னு,கும்மியடுச்சுட்டு,உள்ள ட்ரைனை மிஸ் பண்ணிட போறேன்."

தேவன் மாயம் said...

நன்றி ஜெரி!!

sathishsangkavi.blogspot.com said...

நண்பர்களது புகைப்படங்களை பார்த்து சந்தோசம் பொங்குகிறது....

cheena (சீனா) said...

அன்பின் தேவன்

மணற்கேணி - சிங்கை சென்று வந்த புகைப்படங்கள் - அதட்னையும் அருமை

நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேவன்

மணற்கேணி - சிங்கை சென்று வந்த புகைப்படங்கள் - அதட்னையும் அருமை

நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேவன்

மணற்கேணி - சிங்கை சென்று வந்த புகைப்படங்கள் - அதட்னையும் அருமை

நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் தேவன்

மணற்கேணி - சிங்கை சென்று வந்த புகைப்படங்கள் - அதட்னையும் அருமை

நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா

ஜோ/Joe said...

நன்றி மருத்துவரே!

தேவன் மாயம் said...

Sangkavi said...
நண்பர்களது புகைப்படங்களை பார்த்து சந்தோசம் பொங்குகிறது...///

சந்தோசத்தில் பங்கு பெற்றதில் மிக மகிழ்ச்சி!

தேவன் மாயம் said...

அன்பின் தேவன்

மணற்கேணி - சிங்கை சென்று வந்த புகைப்படங்கள் - அதட்னையும் அருமை

நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா
//

நன்றி சீனா அய்யா!

தேவன் மாயம் said...

ஜோ/Joe said...
நன்றி மருத்துவரே!
///

நன்றி ஜோ!

Joseph said...

மிக அருமை டாக்டர் சார்.

நட்புடன் ஜமால் said...

நான் அங்கு இல்லாத குறையை இந்த இடுக்கையில் சரி செய்திட்டீங்க தேவா

தெளிவான புகைப்படங்கள், நேரில் இருந்தது போன்ற உணர்வை தருகின்றது.

ஹேமா said...

எல்லோர் முகங்களையும் பார்த்ததில் சந்தோஷம் தேவா.நன்றி.

பா.ராஜாராம் said...

பகிர்விற்கு நன்றி டாக்டர் சார்!

மக்களை எல்லாம் நேரில் பார்த்த நிறைவு. (குங்கும பொட்டு கவுண்டரே..) :-)

Mahi_Granny said...

பகிர்வுக்கு நன்றி டாக்டர். யார் சொல்லுறது எல்லோர் முகங்களையும் பார்த்ததில் திருப்தி என்று. இவங்க முகத்தை மட்டும் காட்ட மாட்டங்களாம்

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

CS. Mohan Kumar said...

படங்கள் அனைத்தும் க்ளோஸ் அப்பில் எடுக்கப்பட்டு தெளிவாய் உள்ளது. பகிர்வுக்கு நன்றி

Unknown said...

பகிர்விற்கு நன்றி சார்... மணற்கேணி நண்பர்களுக்கு பாராட்டுக்கள்

கோவி.கண்ணன் said...

இரண்டு திங்கள் சென்றும் சரியாக நினைவுகளை அசைப்போட வைக்கும் பதிவும் படங்களும் நன்று.

ஆதவா said...

கலக்கல் தேவா சார்....
சிங்கைக்கு நீங்கள் சென்றுவந்ததற்குக் கூட வாழ்த்து நான் சொல்ல மறந்துவிட்டேன்.

வாழ்த்துக்கள்.

படங்களும் பதிவர்கள் அருமை!!

குடந்தை அன்புமணி said...

புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு சார்.

நண்பர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கும்தான்.

பாண்டியன் தியேட்டர் உரிமையாளரின் வாழையிலை விடுதி பிரபலமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

priyamudanprabu said...

arumaiya podurukinga
nice
( sorry no tamil)

vasan said...

Stomach is not the burial ground of all animals –என்பதற்கிணங்க,
Stomach is a taste tesing lab என்கிற‌ அள‌வில் ர‌சித்து ருசி தீர்த்தீர்க‌ளாக்கும்?
ப‌ட‌ங்க‌ளுட‌ன் ப‌திவு நல்ல‌ செட்டிநாட்டு சிக்க‌ன் ருசி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு டாக்டர்... மிக்க நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory