Wednesday, 7 July 2010

சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தம் சோதனை செய்யும்போது அதிகாலையில்  உணவு, பானங்கள் எதுவும் சாப்பிடாமல் 7.00 மணிக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவும் அதன்பின் உணவு சாப்பிட்டவுடன் 2 மணி நேரம் கழித்தும் பார்ப்பார்கள்.இதை ஆங்கில்த்தில் Fasting(வெறும் வயிற்றில்) and Postprandial(உணவுக்குப்பின்) Blood Sugar tests என்று குறிப்பிடுவார்கள். வெறும் வயிற்றில் சர்க்கரை 100-120 மி.கி./டெ.லி, இருப்பதே சிறந்தது.
ஆனால் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் உணவு செரித்து இரத்ததில் சர்க்கரை அளவு கூடிவிடுகிறது. இந்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இன்சுலினின் வேலை.

உணவு சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு சாதாரணமாக 140 மிகி. க்குள் இருப்பது சிறந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு 160 மி.கி வரை இருந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கொள்ளலாம்.
நாம் பெரும்பாலும் தானிய உணவையே உட்கொள்ளுவதால் உணவு செரித்தவுடன் இரத்தத்தில் சர்க்கரை கூடிவிடுகிறது. அதுவும் மதிய உணவாக நாம் குழம்பு, ரசம் மோர் என்று மூன்று விதமாக சாதம் உண்பதால் சர்க்கரை மிக அதிகம் கூடிவிடுகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் மதியம் அதிகம் உண்டவுடன் எந்தவித வேலையும் இல்லாது தூங்கவும் செய்கிறோம். மதியம்  சாப்பிட்டவுடன் அதிகமாகும் சர்க்கரை இரத்தக் குழாய்களை நேரடியாக பாதிக்கிறது.
இதேபோல் இரவு உணவும் நாம் 9-11 மணிவரை உண்ணுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரையானது மிக அதிகமாக இருக்கும். இதுவும் உடல் உறுப்புக்களை பாதிக்கும்.
சாப்பிட்டபின் சர்க்கரை அதிகமாவதைத் தடுப்பது எப்படி?
1.      அதிக மாவுச்சத்துள்ள இட்லி,தோசை,சப்பாத்தி,பொங்கல், உப்புமா ,சேமியா போன்றவைகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
2.      நார்ச்ச்த்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3.      இரவில் மைதா தோசை,நான்,பரோட்டா,பிஸ்ஸா ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4.      மதிய உணவில் சோற்றைக்குறைத்துவிட்டு காய்கறிகளை அதிகப்படுத்த வேண்டும்.
5.      இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுதல் நலம்.
6.      வாரம் இரண்டு முறை மதியம், இரவு சாப்பாட்டுக்குப்பின் சர்க்கரை சோதனை செய்து அதன்படி உணவை உண்ண வேண்டும்.

அதிகப்படியான சர்க்கரை இதயத்தில் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது?
  1. இதயத்தில் சுவர்களில் உள்ள இரத்தக்குழாயினை சேதப்படுத்துகிறது.
  2. இதயம் வேகமாகத்துடிக்கும் நேரங்களில் இரத்தக்குழாய்கள் விரிந்து கொடுத்து அதிக இரத்தத்தை இதய தசைகளுக்குப் பாய்ச்ச வேண்டும். ஆனால் சேதமடைந்த இரத்தக்குழாய்களால் விரிந்து கொடுக்க இயலாது. இதனால் இதயத்தின் செயல்பாது குறைகிறது.
  3. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புக்கள், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகிறது.
 ஆகையால் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதனை வீட்டில் இரத்த சர்க்கரைமானியால் சர்க்கரை நோயாளிகள் சோதித்துக்கொள்வதும் அதன்படி உணவு, மாத்திரைகள், உடற்பயிற்சி மேற்கொள்வதும் மிக நல்லது. 

29 comments:

கொல்லான் said...

நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு.
சர்க்கரை நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல், எல்லாரும் அவசியம் செறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விசயங்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.
எனக்கு சர்க்கரை வியாதியில்லை. அதிகம் சர்க்கரை சாப்பிடுவேன்.
அதனால் எனக்கு சர்க்கரை வியாதி வருமா?

தேவன் மாயம் said...

கொல்லான் said...
நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவு.
சர்க்கரை நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல், எல்லாரும் அவசியம் செறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விசயங்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.
எனக்கு சர்க்கரை வியாதியில்லை. அதிகம் சர்க்கரை சாப்பிடுவேன்.
அதனால் எனக்கு சர்க்கரை வியாதி வருமா?
//
சர்க்கரை அதிகம் உண்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நல்லது. இல்லையெனில் வாய்ப்புகள் அதிகம்!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டாய பதிவு . பகிர்வுக்கு நன்றி டாக்டர் .

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

2-3-4-
நான் பாலோ பண்ணறேன்....

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டாய பதிவு . பகிர்வுக்கு நன்றி //

மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி மணி!!

cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

பகிர வேண்டிய இடுகை - கருத்துகள் / தகவல்கள் புஅனுள்ளவை.

நன்று நன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

தேவன் மாயம் said...

கருத்துக்கும் வருகைக்கும் சீனா அய்யாவுக்கு ந்ன்றி!!

நேசமித்ரன். said...

மிக அத்தியாவசியமான பதிவு மருத்துவரே மிக்க நன்றி இந்த தகவல்களுக்கு

GEETHA ACHAL said...

நல்ல பயனுள்ள பகிர்வு...நன்றி...

தேவன் மாயம் said...

நன்றி நேசரே!!

அத்திரி said...

நல்ல பதிவு டாக்டர்

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி கீதா ஆசல்!!

தேவன் மாயம் said...

திரு. அத்திரி !!கருத்துக்கு நன்றிங்க!

Praveenkumar said...

வழக்கம்போல் பயனுள்ள மருத்துவ தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..!

தேவன் மாயம் said...

வழக்கம்போல் நன்றி பிரவீன்!!

Chitra said...

மருத்துவரே..... பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. :-)

அகில் பூங்குன்றன் said...

கோதுமை சாதம் / அரிசி சாதம் எது சாப்பிடுவது சர்க்கரையை குறைக்க உதவும். எவ்வளவு சாப்பிடலாம் என்பதற்கு அளவீடுகள் ஏதேனும் உளனவா?

Rajeswari said...

பயனுள்ள பதிவு. நன்றி

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி சித்ரா!!

தேவன் மாயம் said...

அகில் பூங்குன்றன் said...
கோதுமை சாதம் / அரிசி சாதம் எது சாப்பிடுவது சர்க்கரையை குறைக்க உதவும். எவ்வளவு சாப்பிடலாம் என்பதற்கு அளவீடுகள் ஏதேனும் உளனவா?

///

உள்ளன. இது பற்றி முன்பே எழுதியுள்ளேன். எனினும் மறுபடி விரைவில் எழுதுகிறேன்!!

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி ராஜேஸ்!!

தேவன் மாயம் said...

Cable Sankar said...
ஒவ்வொரு மருத்துவர்களுக்குஒவ்வொரு ரீடிங் வைத்துள்ளார்களே.. 70-90 என்று பாஸ்டிங்கில் இருக்க வேண்டும் மேலேயிருந்தால் சக்கரை நோய் அதிகமாகிவிட்டது என்று சொல்கிறார்களே.///

உணவு சாப்பிடும் முன் சர்க்கரை நான் சொல்லிய அளவுதான் சரியானது!!

தேவன் மாயம் said...

தவறுதலாக உங்கள் பின்னூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது கேபிள்!! மன்னிக்கவும்!!

Anonymous said...

Dear Sir,

I have been reading your blog for the past 1 year or so. But, I have never given any comments. Your blog is very useful. Congratulation and keep up the go(o)d work.

I have one question. One of my friends who is just 38 years old who is a teetotler, non-smoker, Vegetarian but working in IT (ofcourse stressful work life systle). Recently Drs. have told him that he is suffering from Kidney failure. Now he is under medication. Let us pray god for his recovery.

Could you please brief us why does it happen to a person who is having a very normal good life style.

I am very much worried about it. It affected me psychologically.
I am jogging atleast 12K every week (4 K on alternate days). I do not have any problem with jogging. Weekly once swimming for 40min to 1 Hr. I sweat a lot. Now, please
Tell us/give tips to keep ourself fit and healthy.

Regards
Ranga

தேவன் மாயம் said...

Dear friend!! Thaks!!!

Living without disease is a great topic to start!! I will surely write about it!

Thank u!!

Deva!

தேவன் மாயம் said...

Dear friend!! Thaks!!!

Living without disease is a great topic to start!! Eventhough you are teetotler, non-smoker, Vegetarian you still have other reasons for having diseases!! I will surely write about it!

Thank u!!

Deva!

Anonymous said...

Dear Dr.

Thank you very much. Please start such topics..

Regards
Ranga

Unknown said...

Hi

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory