சுயம் கிழிந்து
மன ஆழங்களில்
மவுனமாய்
கரைந்தோடும்
என் பொழுதுகள்!
வெம்மையை
வெட்டி வெட்டிச்
செதுக்குகிறேன்,
முழுமையடையாத
என் யுகத்தை!
உணர்வுகள் இறுகிய
முகங்களில்
சிதறிக் கழிகிறதென்
தேடல்கள்.
தவறி விழும்
கனவுகளைச் சேகரித்துப்
பதுக்குகிறேன்
சிதைந்து போன
என் பிம்பங்களில்1
உயிர் உறங்கும்
இருளிலும்
திசைகளைத்
தேடித் தேடி
தொலைந்து போகிறேன்
கனவுகளில்!
24 comments:
மிக அருமையான வரிகள் மருத்துவரே..!
பிரவின்குமார் said...
மிக அருமையான வரிகள் மருத்துவரே..///
நன்றி பிரவீன்!!
நல்ல தொலைதல் தேவா
தவறி விழும் கனவுகள் மிக அருமை
மருத்துவ கவி!!!
நன்றி ஜோ!!
கவிதை நன்றாக இருக்கிறது./ வார்த்தைகளின் கோர்ப்பு ஆழமானதாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் டாக்டர்!
//கனவுகளைச் சேகரித்துப்பதுக்குகிறேன்சிதைந்து போனஎன் பிம்பங்களில்//
அருமை !
நீண்ட் நாள் கழித்து தேனீர் சுவை அருமை
ம் ..ம் ...
மருத்துவ கவி!!!
YAA
ஆதவா said...
கவிதை நன்றாக இருக்கிறது./ வார்த்தைகளின் கோர்ப்பு ஆழமானதாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது.
வாழ்த்துக்கள் டாக்டர்!
கருத்துக்கு மிக்க நன்றி!!
\\உணர்வுகள் இறுகியமுகங்களில்சிதறிக் கழிகிறதென்தேடல்கள்\\
தேவா சார் இது வரிகளல்ல... வாழ்வின் நிதர்சனம்...
ஆதவா எப்படி இருக்கிறீர்கள்?
/தேடித் தேடி
தொலைந்து போகிறேன்//
பிரபல பதிவர் காணவில்லை என ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்யவா?
மிக அருமையான வரிகள்.
//உயிர் உறங்கும்
இருளிலும்//
அருமை அருமை...
நிறைய நாளாச்சு வைத்தியரே தேநீர் தந்து.அதுவும் ஒரு மருந்துதானே !
CLICK THE LINK AND READ
பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது? பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
==================
உயிர் உறங்கும்இருளிலும்திசைகளைத்தேடித் தேடிதொலைந்து போகிறேன்கனவுகளில்!
nice lines deva sir!!!
பூங்கொத்து!
நல்லா இருக்குங்க.
கவிதை மிக சிறப்பு ... பாராட்டுக்கள் மருத்துவரே.
தேநீரின் வீரியம் அதிகம்
அருமை... வாழ்த்துக்கள்
Post a Comment