என்னால் சில நாட்களாகத் தொடர்ந்து பதிவில் எழுத
முடியவில்லை. கடைசியாக டிசம்பரில் எழுதியது. நான்
எழுதமுடியாததற்கு காரணங்கள்,
இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்தான்.
1.இந்திய மருத்துவ கழகம் செட்டிநாடு கிளைக்கு என்னை செயலராகத் தேர்ந்தெடுத்திருப்பது.
கழக செயலர் என்றால் கொஞ்சமாவது செயல்படவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
அதன்படி மருத்துவ முகாம்கள் நடத்துவதில் கொஞ்சம் முனைப்புக்காட்டி வருகிறேன்.
அதுபோல் மருத்துவர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தும் பொறுப்பும் செயலருடையதே.
இதனிடையில் இன்ன்னொரு மாற்றமும் சேர்ந்து கொண்டது.
2. அது முதுநிலை குடிமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று நான் அரசு மருத்துவமனை நாமக்கல்ல்லுக்கு மாற்றலாகி இருப்பது.
பதவி உயர்வு மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
ஆனால் நான் இருக்கும் ஊரிலிருந்து நாமக்கல் வெகு தொலைவு.
நாமக்கல்லுக்கு நான் செல்வது இதுவே முதல் முறை. யாரையும்
தெரியாத ஊர்.
பணி மாற்றத்தால் மருத்துவ சங்க செயலராக செயல்படுவதே பெரிய
வேலையாக உள்ளது.
அதனாலேயே வலைப் பக்கம் வர இயலவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது நடு நடுவே எட்டிப்பார்க்கிறேன்.
அன்புடன்
தேவகுமார்.
50 comments:
அரசு மருத்துவமனை நாமக்கல்ல்லுக்கு மாற்றலாகி
.////
VAANGA,...
நானும் அதே மாவட்டம்தான் ஆனாலும் நாமக்கல்லில் இருந்து 28 கிமி தள்ளி எங்க ஊர் (பொத்தனூர்)
நம்ம ஊரு நல்ல ஊரு..
அன்பின் தேவகுமார் -
நீண்ட நாடகளாகவே எழுத வில்லையே என நினைத்தேன் . தொடர்பு கொள்ள நினைத்தேன் - ஏனோ செய்ய வில்லை. பதவி உயர்விற்கும், புதிய பதவிக்கும் நல்வாழ்த்துகள். இருப்பினும் நாமக்கல்லில் ஒரு பணியும் - செட்டி நாடு கிளைச் செயலராக காரைக்குடியில் ஒரு பணியும் என்பது சிரமமான ஒன்று தான். ஆனால் உங்களால் முடியும் . நட்புடன் சீனா
பிரபு சொந்த ஊர் தான் பொத்தனூர் - இருப்பது எங்கே ?
Blogger பிரியமுடன் பிரபு said...
அரசு மருத்துவமனை நாமக்கல்ல்லுக்கு மாற்றலாகி
.////
VAANGA,...
நானும் அதே மாவட்டம்தான் ஆனாலும் நாமக்கல்லில் இருந்து 28 கிமி தள்ளி எங்க ஊர் (பொத்தனூர்)
நம்ம ஊரு நல்ல ஊரு..//
நல்ல ஊர்தான் பிரபு!
காரைக்குடியில் செட்டில் ஆகி விட்டதால்தான் சிரமம்!
cheena (சீனா) said...
பிரபு சொந்த ஊர் தான் பொத்தனூர் - இருப்பது எங்கே ?
//
சிங்கையில்..
உடம்பு மட்டும் தான் அய்யா இங்கே
cheena (சீனா) said...
அன்பின் தேவகுமார் -
நீண்ட நாடகளாகவே எழுத வில்லையே என நினைத்தேன் . தொடர்பு கொள்ள நினைத்தேன் - ஏனோ செய்ய வில்லை. பதவி உயர்விற்கும், புதிய பதவிக்கும் நல்வாழ்த்துகள். இருப்பினும் நாமக்கல்லில் ஒரு பணியும் - செட்டி நாடு கிளைச் செயலராக காரைக்குடியில் ஒரு பணியும் என்பது சிரமமான ஒன்று தான். ஆனால் உங்களால் முடியும் . நட்புடன் சீனா//
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி!
முயற்சி செய்கிறேன்!
HOW LONG HAVE TO WORK THERE ?,...
ஏற்ற பணிகள் சிறக்கட்டும், வாழ்த்துகள் சார்.
பிரியமுடன் பிரபு said...
cheena (சீனா) said...
பிரபு சொந்த ஊர் தான் பொத்தனூர் - இருப்பது எங்கே ?
//
சிங்கையில்..
உடம்பு மட்டும் தான் அய்யா இங்கே//
உயிர் இங்கு யாரிடம்? ஹி ஹி ஹி
வி.பாலகுமார் said...
ஏற்ற பணிகள் சிறக்கட்டும், வாழ்த்துகள் சார்.//
பாலகுமார் நன்றி!
வாழ்த்துகள் சார்
congrates Deva ...
பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்.
எவ்வளவு உயரத்துக்கு போனாலும் எங்களை மறக்காது வந்திருக்கிங்களே... அதான்... உங்க உயரிய பண்பு.
நான் இடையில உங்க பக்கத்துக்கு வந்து வாழ்த்து சொல்ல வந்தேன்.................
உங்கள போல எளிமையான மருத்துவர் எங்களுக்கு கிடைத்தில் பெருமை....
இனி நாமக்கல் வாசிகளும் அப்படியே சொல்லுவாங்க...
ரொம்பதூரம் பயணிக்கிறிங்க உடல் நலத்தையும் கவனித்துகொள்ளுங்க... மருத்துவரே.
வாழ்த்துக்கள் பதிவு என்பது வாழ்க்கையல்ல வாழ்கையில் பதிவு எழுவதையும் கொள்க என்றுணர்க........... தொடர்ந்து பணியிலும் அனுபவத்தை எழுத்திலும் தந்தால் மகிழ்ச்சி..
சார் வாழ்த்துகள். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். ஒரு மருத்துவர் பதிவு எழுதுவது எங்களுக்கெல்லாம் பெரும் உதவி.
பதிவை தாளில் எழுதி நெருங்கிய பதிவர் நண்பர்களிடம் சேர்த்தால் அவர்களே கூட டைப் செய்து வலை ஏற்றம் செய்ய கூடும்
வாழ்த்துக்கள் சார்!
மருத்துவ சேவை செய்யும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தேவகுமார்....
பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் சார்.
பதவி உயர்வுக்கும் கூடுதல் பொறுப்புக்கும் வாழ்த்துகள்.
நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போங்க! மீண்டும் வாழ்த்துகள்!
பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் சார்..
றமேஸ்-Ramesh said...
வாழ்த்துக்கள் பதிவு என்பது வாழ்க்கையல்ல வாழ்கையில் பதிவு எழுவதையும் கொள்க என்றுணர்க........... தொடர்ந்து பணியிலும் அனுபவத்தை எழுத்திலும் தந்தால் மகிழ்ச்சி..//
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க!
மோகன் குமார் said...
சார் வாழ்த்துகள். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். ஒரு மருத்துவர் பதிவு எழுதுவது எங்களுக்கெல்லாம் பெரும் உதவி.
பதிவை தாளில் எழுதி நெருங்கிய பதிவர் நண்பர்களிடம் சேர்த்தால் அவர்களே கூட டைப் செய்து வலை ஏற்றம் செய்ய கூடும்//
ஆம்! உங்கள் யோசனையை அவசியம் செயல்படுத்துகிறேன்!
எஸ்.கே said...
வாழ்த்துக்கள் சார்!//
மிக்க நன்றிங்க!
Blogger MANO நாஞ்சில் மனோ said...
மருத்துவ சேவை செய்யும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தேவகுமார்....//
மிக்க நன்றி நண்பரே!
அமைதி அப்பா said...
பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் சார்.//
மிக்க மகிழ்ச்சிங்க!
சென்னை பித்தன் said...
பதவி உயர்வுக்கும் கூடுதல் பொறுப்புக்கும் வாழ்த்துகள்.
நேரம் கிடைக்கும்போது வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போங்க! மீண்டும் வாழ்த்துகள்!//
வாழ்த்துக்கு நன்றிங்க!
Blogger தமிழரசி said...
பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள் சார்..//
நலம்தானே தமிழ்!
வாழ்த்துகள் சார்
குமரை நிலாவன் said...
வாழ்த்துகள் சார்//
நிலவன்! எப்போது இந்தியா?
வாழ்த்துக்கள் மருத்துவரே!!
மிக்க நன்றிங்க!
முதலில் பதிவு உயரவுக்கும் புது பொறுப்புக்கும் - பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
Super!
congrats dr:)
when are you practicing here?
பூங்கொத்து!பதவி உயர்வுக்கும் புது பொறுப்புகளுக்கும்!
பதிவுலகமும் ஒரு சமூக சேவை நோக்கோடு பகிரப்படுவது தானே அதை நீங்கள் வெளியே செய்கிறீர்கள்.. இரண்டுக்கும் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உடல் கவனம் பற்றி மருத்துவருக்கே அறிவுரைன்ன
சூரியானுக்கே...என்ற கிண்டல் வந்துவிடும்.
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உடல் கவனம் பற்றி மருத்துவருக்கே அறிவுரைன்ன
சூரியானுக்கே...என்ற கிண்டல் வந்துவிடும்.
Jokes apart, we really missed your BLOG & Comments too.
வணக்கம் டாக்டர்.சுகமான்னு கேக்கக்கூடாது.உங்களை நீங்களே பாத்துக்குவீங்க.உங்கள் சேவை மிக மிக முக்கியமானது.பணி தொடர வாழ்த்துகள் தேவா.நேரமிருக்கிறப்போ எங்களையெல்லாம் நினைச்சுக்கோங்க.பதிவும் எழுதுங்க !
மருத்துவப் பணி செம்மையாக சிறக்க வாழ்த்துகள்
congrats
மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அது முதுநிலை குடிமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று//
வாழ்த்துகள் சார்...
காரைக்குடி மக்கள் தப்பிச்சுட்டாங்க...நாமக்கல் மக்கள் மாட்டிகிட்டாங்க.
பதவி உயர்வுக்கு வாழ்த்துகள். புது இடம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். அதை நிச்சயம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தானே போகிறீர்கள். காத்திருக்கிறோம்.
அட நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க... ரொம்ப நாள் ஆச்சுங்க உங்க பக்கத்துக்கு வந்து... :)
மருத்துவரின் பதிவைப் பார்த்தேன். நல்ல பல விவரங்களைத் தந்திருப்பமைக்கு நன்றி.
தங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது ''வாழி நலம் சூழ'' வலைப்பூவை நோட்டமிட அழைக்கிறேன். சுட்டி:www.frutarians.blogspot.com
அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ...
Post a Comment