Tuesday 6 September 2011

200/200

நாம் பனிரெண்டாவது அதாவது +2 எழுதும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் பல மாறுதல்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

அவற்றில் பல நல்ல     விசயங்கள் இருக்கலாம்.            

ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விசயம் எனக்கு  நெருடலாக  இருக்கிறது.

அதுதான் 200 க்கு 200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை.

உங்களுக்குத் தெரியும் நம் காலத்தை விடவும் தற்போது முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். இதனைப் பார்க்கும் போது எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

1.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் அறிவாளிகளா??

2.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் நன்கு படிக்கின்றனரா?

3.ஆசிரியர்கள் திருத்தும் முறை மாறிவிட்டதா?

4.இதனால் ஏற்பட்ட்டுள்ள அனுகூலங்கள் பாதிப்புகள் என்ன?

நண்பர்களே இவற்றை உங்கள் கருத்துகளோடு அடுத்து அலசுவோம்!!!

14 comments:

'பரிவை' சே.குமார் said...

அலசலாமே...
தேர்வு முறையில் மாற்றம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.
மற்ற நண்பர்கள் அலசட்டும்...
படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை வலையுலகில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது மருத்துவரே..

நல்லதொரு களத்தைக் கொண்டு விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்குத் தெரிந்த ஒரு பெண்குழந்தை ஆங்கில வழி படிக்கிறது முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை

அதற்கு 1-50 வரை ஆங்கிலத்தில் எழுத்தால் எழுதத் தெரியும்.

நீண்டநாட்களுக்குப் பிறகுதான் அவங்க பெற்றோர் அறிந்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு எண் வடிவங்களில் அடையாளம் காணத் தெரியவில்லை என்று.

இப்படித்தான் இன்றைய கல்வி இருக்கிறது

மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை
மனப்பாடம் செய்யும் கருவிகளை
எழுதிக் குவிக்கும் மென்பொருள்களை
சிந்திக்க மறந்த வன்பொருள்களைளே

இன்றைய கல்வி உற்பத்தி செய்கிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

கல்வி உளவியல் குறித்த விகடனில் வெளிவந்த எனது கட்டுரையைக் காண தங்களை அன்புடன் அழைக்கிறேன் மருத்துவரே.

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_3806.html

முனைவர் இரா.குணசீலன் said...

///கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.//

200/200 மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கையில் 100/100 மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது என்றே கருதுகிறேன் மருத்துவரே.

தேவன் மாயம் said...

சே.குமார் said...

அலசலாமே...
தேர்வு முறையில் மாற்றம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.
மற்ற நண்பர்கள் அலசட்டும்...
படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.//

நன்றி நண்பரே! தமிழ்மணத்தில் என்னால் இணைக்க முடியவில்லை!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...

நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை வலையுலகில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது மருத்துவரே..

நல்லதொரு களத்தைக் கொண்டு விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்..//

மிக்க மகிழ்ச்சி நண்பரே!

TNGDA SIVAGANGAI said...

முனைவர்.இரா.குணசீலன் said...

எனக்குத் தெரிந்த ஒரு பெண்குழந்தை ஆங்கில வழி படிக்கிறது முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை

அதற்கு 1-50 வரை ஆங்கிலத்தில் எழுத்தால் எழுதத் தெரியும்.

நீண்டநாட்களுக்குப் பிறகுதான் அவங்க பெற்றோர் அறிந்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு எண் வடிவங்களில் அடையாளம் காணத் தெரியவில்லை என்று.

இப்படித்தான் இன்றைய கல்வி இருக்கிறது

மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை
மனப்பாடம் செய்யும் கருவிகளை
எழுதிக் குவிக்கும் மென்பொருள்களை
சிந்திக்க மறந்த வன்பொருள்களைளே

இன்றைய கல்வி உற்பத்தி செய்கிறது.
//

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்!

Jerry Eshananda said...

தேவா, சௌக்கியமா? எம்புட்டு நாளாச்சு?

தேவன் மாயம் said...

ஜெரி! பதிவுலகமே புதுசா இருக்கே!

சீனுவாசன்.கு said...

பசங்களுக்கு அறிவு வளர்த்து கொள்வதற்கான ஊடகங்கள்
பெருகிடுச்சு!

தேவன் மாயம் said...

நீங்கள் சொல்வது போள் இருப்பின் நல்லதுதான்!

Sabapathy Anbuganesan said...

தேர்வில் விடைத்தாள் திருத்துவதில்தான் பெரும் குளறுபடி. எவரும் பேப்பரை படித்தே திருத்துவதில்லை. எழுதும் மாணவர்கள் சற்று விபரம் அறிந்தவர்களாக இருந்தால் அதிக மதிப்பெண் சாத்தியமே. அதற்காக அவர்கள் புத்திசாலி என்று அர்த்தமல்ல. நாங்கள் 1973 ல் படிக்கும் போது 60 விழுக்காடே மிகப்பெரிய விஷயம். அந்த மார்க் எடுத்தவர்கள் புத்திசாலித்தனம் நான் அறிந்ததே

பினாத்தல் சுரேஷ் said...

என் கருத்துகளை இங்கே எழுதி இருக்கிறேன்: http://penathal.blogspot.com/2012/03/2.html

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory