Saturday, 24 March 2012

வாழ்க்கைப் பயணிகள்!



வாழ்க்கை ஒரு நெடிய பயணம். ஏன் இந்தப் பயணம்? யார் நம்மை இந்தப் பயணத்தில் நம்மை ஏற்றி விட்டது? என்று நம் யாருக்கும் தெரியாது.
ஆயினும் இந்த் வினோதப் பயணத்தில் நாம் சந்திக்கும் நபர்கள் பல விதமானவர்கள். அவர்களில் சிலர் நம்மால் மறக்க முடியாதவர்கள்.  அப்போது நான்  பதிவுலகில் எழுத ஆரம்பித்த நேரம்.. முகமறியாத பதிவர்கள் பலரும் பின்னூட்டங்களிலும் போன் மூலமும் என்னை உற்சாகப்படுத்தி வந்தனர்.
”நானும் காரைக்குடியில்தான் இருக்கிறேன், உங்களைச் ச்ந்திக்க வருகிறேன் எப்போது வரலாம்?” என்று கேட்டுவிட்டு அந்த நண்பர் வந்தார். அப்பொழுது அவர் பங்குச்சந்தை பற்றி தொடந்து தமிழில் எழுதி வந்தார். பங்கு வர்த்தக ஆலோசகராகவும் இருந்தார் அப்போது நான் பங்குச்சந்தையில் வர்த்தகம் பற்றி சிறிதளவே அறிந்திருந்தேன். ”பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம் ஏன் நீங்கள் அதில் முதலீடு செய்யக்கூடாது?” என்று என்னுடைய நண்பர்கள் சிலரும் என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
நானும் அவரும் பொதுவாகப் பேசினோம்.முதல் சந்திப்பிலேயே ரொம்ப நாள் பழகியது போல் சரளமாகப் பேசி விரைவில் என் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார்.. மருத்துவனான என்னுடன் நண்பரானால் நோயாளியாக மாறித்தானே ஆக வேண்டும். நானும் அவருடைய குடும்ப மருத்துவன்போல் ஆகிவிட்டேன்.
அவருடைய பங்கு ஆலோசனைத் தொழிலைக் கரூர், கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் செய்து வந்தார். என்னுடைய டிப்ஸினால் ஒரு சாதாரண குடும்பத்தலைவி ஒரே நாளில் 15000 சம்பாதித்தார்கள் என்றெல்லாம் அவரால் பயன் பெற்றவர்களைப்பற்றி சந்திக்கும்போதெல்லாம் கூறுவார். நானும் அவருடன் சேர்ந்து உண்டியலில் பணம் சேர்ப்பதுபோல் சிறிது சிறிதாக பங்குகளில் போடலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். இருவருக்கும் அது ஏனோ சரியாக ஒத்து வரவில்லை. 
சமீபத்தில் ஒருநாள், ஒரு மூன்று மாதத்துக்கு முன் இருக்கும் என்று நினைக்கிறேன், அவருடைய அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார். “என் மகன் எப்படி இறந்தான் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் டாக்டர்” என்று என்னைக் கேட்டார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. நான் இரண்டு நாள் லீவில் சென்னை சென்றிருந்தேன். இன்றுதான் காரைக்குடிக்கு வந்தேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே என்று அவரிடம் கேட்டேன்?
என் மகன் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டான் என்று கூறுகிறார்கள். போஸ்ட்பார்ட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில்தான் செய்தார்கள். என் மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று எனக்குத்தெரியவில்லை என்று அழுதார்.
நான் சென்னையில் இருந்தபோது ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்டதையும் சீக்கிரம் போஸ்ட்மார்ட்டம் செய்ய மருத்துவர்களிடம் சொல்லுங்கள் என்றும்  எனக்கு ஒரு போன் வந்தது நினைவு வந்தது.
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ற என் நண்பர் கடைசியாகத் தன் டைரியில் தன் அன்பு மகனுக்கு மட்டும் “அப்பாவை மன்னித்து விடு, மறந்து விடு: என்று எழுதுயதாக அறிந்தேன்.
அந்த அன்பு நண்பரின் தளம்  என்னால் அந்த அன்பு நண்பர் சாய்கணேஷ் இறந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. அவருடைய தள முகவரி http://top10shares.wordpress.com/

12 comments:

Jerry Eshananda said...

வணக்கம் தேவா,நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.

தேவன் மாயம் said...

வாங்க ஜெரி! தமிழ்மணத்தில் பதிவை இணைக்க முடியவில்லையே!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப காலம் கழித்து வந்துருக்கியன்னு வந்தா, சோகப்பதிவு

தாங்கள் நலம் தானே தேவா ...

தேவன் மாயம் said...

நலம் ஜமால்! தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்னுடைய போன் 9751299554. போன் செய்யவும் நண்பரே!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Welcome Back Dr.:-)))))))))
ஆனால் முதல் பதிவே சோகமான பதிவாகி விட்டதே.:-(((

தேவன் மாயம் said...

நலம்தானே நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

பதித்து விட்டு மனம் 'திக்'கென்றது ! நண்பர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் !

தேவன் மாயம் said...

ஆம்! என்னாலும் அதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

Praveenkumar said...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாங்கள் பதிவு எழுதியதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க்கைப்பயணிகள் என்று தலைப்பை பார்த்ததும் பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கும் என்று எண்ணி படித்துக் கொண்டே இருக்கும் போது திடீர் மரணம் பற்றி கூறியதும் உண்மையில் ஒருகணம் நானும் அதிர்ந்துதான் போனேன் டாக்டர் சார்.

நண்பரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !!!

சென்னை பித்தன் said...

உங்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தரும் செய்திதான்.உங்களை மீண்டும் வரவேற்கும் அதே வேளையில் அப்பதிவருக்கான இரங்கலையும் பதிவு செய்கிறேன்.

தேவன் மாயம் said...

சென்னைப் பித்தன் நன்றிங்க!

தேவன் மாயம் said...

பிரவீன் நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory