பன்றிக்காய்ச்சல் சென்னையில் மறுபடியும் பரவுவதாகச் செய்திகள் வருகின்றன. மேலும் பரிசோதனையிலும் இரண்டு நபர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் பன்றிக்காயச்சல். வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களால்தான் பரவுகிறது என்று சொல்கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாயமாக மருத்துவமனைகளில் பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 11 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளனர் மேலும். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆகையினால் இம்முறை அதிக பயம் தேவையில்லை என்றாலும் பன்றிக்காய்ச்சல் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
பன்றிக்காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை கீழே தொகுத்துள்ளேன். பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் ஒவ்வொருமுறை தாக்கும்போதும் நோய் அறிகுறிகள், நோயின் வீரியம் ஆகியவை 100% ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
நோய்க்குறிகள் | சாதாரண சளி | பன்றிக்காய்ச்சல் . |
காய்ச்சல் | காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. | 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். . |
இருமல் | இருமலும் நல்ல சளியும் இருக்கும். | சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். . |
உடல் வலி | உடல் வலி மிதமாக இருக்கும். | கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். . |
மூக்கடைப்பு | மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். . | பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது. |
குளிர் நடுக்கம் | குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. . | 60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும். |
உடல் சோர்வு | உடல் சோர்வு குறைவாக இருக்கும். . | உடல் சோர்வு அதிகமாக இருக்கும். |
தும்மல் | தும்மல் சாதாரணமாகக் காணப்படும். . | தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை. |
நோய்க்குறிகள் தோன்றும் காலம். | சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். | இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். . |
தலைவலி | சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். . |
நெஞ்சில் பாரம்,வலி | சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும். |
| | |
பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள சில வித்தியாசங்கள்தான் இவை!
நோய் வரும் முன் நோய் பற்றி அறிதல் நல்லதுதானே!!
தமிழ்த்துளி தேவன்மாயம்.
9 comments:
காலத்துக்கு ஏற்ற பதிவு மருத்துவரே..
ஆழமான விளக்கங்கள் மிக நன்று.
நன்றி நண்பரே!
பயனுள்ள பகிர்வுங்க தேவன்.
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது.
மிக்க நன்றி சத்ரியன்!
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
தேவையான பதிவு டாக்டர், நன்றி
பயனுள்ள பகிர்வு.
ஒரு கேள்வி? பண்ணிக்காய்ச்சல் பண்ணிகளுக்கு வருமா?
தக்க சமயத்தில் பயனுள்ள பதிவு மிக்க நன்றி சார்...
Post a Comment