Monday, 2 August 2010

தேவநாதனைத் தெரியுமா?

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடி வரை செல்லவேண்டியிருந்தது. மதுரை வந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று ஒரு அசைவ உணவகத்திற்குச் சென்றோம். மதுரையின் பிரபலமான அந்தக்கடை பாதி வெளியில் போடப்பட்ட மேசை நாற்காலிகளில் ’குடி’ மகன்களால் நிரம்பியிருந்தது.

நாங்கள் இடம் தேட கடையின் சிப்பந்தி ராஜ்கிரண் போன்ற தோற்றத்துடன்’ உள்ளே வாங்க’ என்று அன்புடன் மிரட்டல் அழைப்பு விடுத்தார்.
நேரமோ நடு இரவு 12 மணி இருக்கும். உள்ளே சென்று அமர்ந்தோம். அதே சிப்பந்தி சிவந்த கண்களுடன் என்ன வேணும்? என்று கேட்க நண்பர்கள் இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள். சரி! வடியல்,புரோட்டா என்று ஆர்டர் செய்ய அவர்  முட்டையைக் கொழகொழவென்று ஊற்றி சின்ன இலைகளில் கொண்டு வந்தார். கடையின் உள்ளேயும் குடிமக்கள் நால்வர் சத்தமாகக் கத்திப் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது ஆபாச ஜோக்குகளும், சிரிப்புமாக உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.

நாம் கண்சிவந்த சிப்பந்தியிடம்” என்னப்பா ஸ்பெசலா இருக்கு? என்று கேட்க நமக்குப் பின்புறமிருந்து “அண்ணே! மூளை ரோஸ்ட் சாப்பிடுங்க நல்லாயிருக்கும்” என்று ஒரு குரல். பார்த்தால் இரண்டு சிறுவர்கள்! இரவு 12 மணிக்கு இவர்கள் எப்படி? இங்கு என்று விசாரித்தோம்.
இருவரும் பக்கத்தில் கோவில் பூசாரிகளின் மகன்கள் என்றும் சாயங்காலத்துக்கு மேல் இந்தப்பையன்கள்தான் பூசை செய்வார்கள் என்றும் தெரியவந்தது. ”என்னடா இந்த நேரத்தில் இங்கே கடையில் சாப்பிடுகிறீர்கள்?” என்றால்
 ”இது என்னண்ணே! நாங்க இன்னும் லேட்டாக்கூட வருவோம், எங்களுக்கென்ன பயம்?” என்ன லேட்டா வந்தா குடல்கறி, மூளைரோஸ்டெல்லாம் கிடைக்காது” என்று கூறி அதிரவைத்தனர்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர்” ஏண்டா! தேவநாதன் தெரியுமாடா! அவன் சொந்தக்காரனாடா நீங்க?” என்று கேட்க கூட இருந்தவர்கள் அதிரடியாக சிரித்தனர்.

இரண்டு சிறுவர்களும் ஆங்கிலமீடியத்தில் எட்டாவது படிப்பதாகவும் தெரிவித்தனர். பெற்றோர்கள் இப்படி நள்ளிரவில் வெளியில் அனுப்பிவைத்தது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தச் சிறுவர்கள் சாயங்காலத்திலிருந்து கோயில் வேலை பார்த்துவிட்டு சேரும் சில்லரையில் இரவு கடையில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் கோவிலில் படுத்துவிட்டு அதிகாலை வீட்டுக்குப் போய்விடுவார்களாம்.
”உன் அம்மா திட்டமாட்டார்களா?” என்று அப்பாவியாகக் கேட்டேன். திட்டமாட்டங்கண்ணே, சாயங்காலம் சேரும் பணத்தில் பாதி எங்களுக்கு பாதி அம்மாவுக்குக் கொடுத்து விடுவோம்! ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றான்.
சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சுமையாக இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியும் பெற்றோரா என்று வருந்தினேன். மன வருத்தத்துடன் காரில் ஏறிக்கிளம்பினோம் .

(உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லவும்.)

அன்பால் இணைந்த பதிவர்கள்-5

மணற்கேணிக்கு சிங்கை சென்றது ஒரு புதிய உலகின் கதவைத் திறந்துவிட்டது போல் இருந்தது. நிறைய பதிவர்கள் தமிழ் ஆர்வலர்களைச் ச்ந்திக்க முடிந்தது.

பூக்களின் பெயரை அறியாத வண்டு தேன் அருந்தியது போல் நான் சந்தித்த பலரின் பெயரும் எனக்கு நினைவிலில்லை.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க சிரமப்பட வேண்டியதில்லை. முப்பத்தி ஒரு (31)டக் டூர் என்ற பயண பேருந்த்கள் உடல் முழுக்க டக்  டூர் என்ற பெரிய எழுத்துகளையும் படங்களையும் தாங்கி நகர் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அருகில் டக் டூர் பஸ் எஙுகு வரும் என்று கேட்டு ஏறிக்கொள்ளலாம். அதிலேயே டிக்கெட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு பஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் அன்று முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இறங்கி இடங்களைப் பார்த்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் மீண்டும் அவர்களின் எந்த் பஸ்ஸில் வேண்டுமானாலும் ஏறலாம.

Boarding location @ Suntec City (Galleria)

Operating Hours: 10am – 6p

Duration : 60 minutes
Frequency
: Hourly departures
: 31 DUCKies
: S$33/Adult
   S$17/Child (3-12 years)
   S$2/Toddler (Below 3 yrs)
Phone reservation are highly  recommended.
Call us @ 6-33-868-77 (TOURS).

சன்டெக் சிட்டி என்றொரு மாபெரும் மால் உள்ளது. இது நம் ஸ்பென்சர் பிளாசா போல் ஐந்து பிரமாண்டமான மால்கள் ஒரு பெரிய ரவுண்டானாவைச் சுற்றிக் கட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே:சண்டெக் சிட்டியின் 5 பெரிய கட்டிடங்கள்,நீரூற்று!

ஐந்து கட்டிடங்களுக்கும் நடுவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று அமைந்துள்ளது. சண்டெக் சிட்டியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கடைகளும் உள்ளன. அனைத்து வகை உணவுக்கூடங்களும் உள்ளன.

அங்குள்ள வாசகர் வட்டம் பற்றிச்சொல்லியிருந்தேன். அதில் முக்கியப்பங்கு வகிப்போர்  திருமதி.சித்ரா,திருமதி ஜெயந்தி.

 clip_image001[6]

திருமதி.ஜெயந்தி ஏகப்பட்ட சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். சீன மொழியிலும் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ஆனால் வெகு எளிமையாகப் பழகுகிறார். சித்ரா அவரை மேடையேற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. மேடைப்பேச்சுப் பழக்கமில்லையாம்.

அவருக்கு நேரெதிர் நம் சித்ரா அவர்கள். மணற்கேணி அமைப்பின் எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தைத் திறனாய்வு செய்தார். சுமார் அரை மணிநேரம சுவையுடன் அவர் கொடுத்த விமரிசனம்.. சொல்ல முடியாத அளவு சிறப்பாக இருந்த்து. இவரும் கதை, பட்டிமன்றம் என்று சிங்கையைக் கலக்கி வருபவர். நமக்காக வந்திருந்த் சித்ரா, ஜெயந்தி இருவருக்கும் நன்றி!

திருமதி.சித்ரா

clip_image001

மேலே ஜெயந்திசங்கர், சித்ரா, செந்தில்நாதன்,குழலி

clip_image001[4]

டொன்லீ- http://donthelee.blogspot.com/2009/03/blog-post_23.html  சிறப்பாகக் கதைகள் எழுதிக்கொண்டிருந்த சிங்கை மாணவர். படிப்புச்சுமை காரணமாகத் தற்சமயம் கொஞ்சம் எழுத்தைக்குறைத்துவிட்டார். கணினியும் கையுமாக இருந்தார்.

clip_image001[8]

டொன்லீ

பக்கத்து ஊர்க்காரரான( சிங்கம்புணரி) பாண்டித்துரையைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.http://pandiidurai.wordpress.com/ நாம் என்று அவரும் அவர் நண்பர்களும் நடத்தும் இதழினைப் பரிசளித்தார். தமிழ் இலக்கியம் வளர சிங்கையில் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது.

clip_image001[10]

பாண்டித்துரை

மலேசியாவிலிருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கே.பாலமுருகன் வந்திருந்தார். அமைதியுடன் அமர்ந்திருந்த இவர்  இலக்கிய வட்டத்தில்  எல்லோருக்கும் நன்குhttp பரிச்சயமானவர்.://bala-balamurugan.blogspot.com/  இலக்கியம் பற்றிப்பேசுவத்ற்கு சந்த்ர்ப்பமேதும் இல்லாமல் போயிற்று. 

clip_image001[12]

கே.பாலமுருகன்

அநங்கம்  மலேசிய இலக்கிய சிற்றிதழ்

அநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்
அநங்கம் என்ற மலேசிய இலக்கியச் சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் இருக்கிறார்.

சிங்கப்பூர் பிளையர் என்கின்ற ராட்சத ரங்கராட்டினம் சிங்கப்பூரில் சுற்றுலாச் செல்வோர் பார்க்க வேண்டிய ஒன்று. மயக்கம், தலைசுற்றல் வருமோ என்று பயப்படத்தேவையில்லை. ஏனெனில் நகருவதே தெரியாதவண்ணம் மெதுவாக சுற்றுகிறது. 

இரவில் சிங்கையைப் பிளையரில் பார்ப்பது மிக அழகு.

தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory