Monday, 2 August 2010

தேவநாதனைத் தெரியுமா?

சமீபத்தில் நண்பர்களுடன் தேக்கடி வரை செல்லவேண்டியிருந்தது. மதுரை வந்து இரவு உணவு சாப்பிடலாம் என்று ஒரு அசைவ உணவகத்திற்குச் சென்றோம். மதுரையின் பிரபலமான அந்தக்கடை பாதி வெளியில் போடப்பட்ட மேசை நாற்காலிகளில் ’குடி’ மகன்களால் நிரம்பியிருந்தது.

நாங்கள் இடம் தேட கடையின் சிப்பந்தி ராஜ்கிரண் போன்ற தோற்றத்துடன்’ உள்ளே வாங்க’ என்று அன்புடன் மிரட்டல் அழைப்பு விடுத்தார்.
நேரமோ நடு இரவு 12 மணி இருக்கும். உள்ளே சென்று அமர்ந்தோம். அதே சிப்பந்தி சிவந்த கண்களுடன் என்ன வேணும்? என்று கேட்க நண்பர்கள் இங்கு ‘வடியல்’ நன்றாக இருக்கும் என்றார்கள். சரி! வடியல்,புரோட்டா என்று ஆர்டர் செய்ய அவர்  முட்டையைக் கொழகொழவென்று ஊற்றி சின்ன இலைகளில் கொண்டு வந்தார். கடையின் உள்ளேயும் குடிமக்கள் நால்வர் சத்தமாகக் கத்திப் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது ஆபாச ஜோக்குகளும், சிரிப்புமாக உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.

நாம் கண்சிவந்த சிப்பந்தியிடம்” என்னப்பா ஸ்பெசலா இருக்கு? என்று கேட்க நமக்குப் பின்புறமிருந்து “அண்ணே! மூளை ரோஸ்ட் சாப்பிடுங்க நல்லாயிருக்கும்” என்று ஒரு குரல். பார்த்தால் இரண்டு சிறுவர்கள்! இரவு 12 மணிக்கு இவர்கள் எப்படி? இங்கு என்று விசாரித்தோம்.
இருவரும் பக்கத்தில் கோவில் பூசாரிகளின் மகன்கள் என்றும் சாயங்காலத்துக்கு மேல் இந்தப்பையன்கள்தான் பூசை செய்வார்கள் என்றும் தெரியவந்தது. ”என்னடா இந்த நேரத்தில் இங்கே கடையில் சாப்பிடுகிறீர்கள்?” என்றால்
 ”இது என்னண்ணே! நாங்க இன்னும் லேட்டாக்கூட வருவோம், எங்களுக்கென்ன பயம்?” என்ன லேட்டா வந்தா குடல்கறி, மூளைரோஸ்டெல்லாம் கிடைக்காது” என்று கூறி அதிரவைத்தனர்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர்” ஏண்டா! தேவநாதன் தெரியுமாடா! அவன் சொந்தக்காரனாடா நீங்க?” என்று கேட்க கூட இருந்தவர்கள் அதிரடியாக சிரித்தனர்.

இரண்டு சிறுவர்களும் ஆங்கிலமீடியத்தில் எட்டாவது படிப்பதாகவும் தெரிவித்தனர். பெற்றோர்கள் இப்படி நள்ளிரவில் வெளியில் அனுப்பிவைத்தது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தச் சிறுவர்கள் சாயங்காலத்திலிருந்து கோயில் வேலை பார்த்துவிட்டு சேரும் சில்லரையில் இரவு கடையில் சாப்பிட்டு விட்டு மறுபடியும் கோவிலில் படுத்துவிட்டு அதிகாலை வீட்டுக்குப் போய்விடுவார்களாம்.
”உன் அம்மா திட்டமாட்டார்களா?” என்று அப்பாவியாகக் கேட்டேன். திட்டமாட்டங்கண்ணே, சாயங்காலம் சேரும் பணத்தில் பாதி எங்களுக்கு பாதி அம்மாவுக்குக் கொடுத்து விடுவோம்! ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றான்.
சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது பெரும் சுமையாக இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியும் பெற்றோரா என்று வருந்தினேன். மன வருத்தத்துடன் காரில் ஏறிக்கிளம்பினோம் .

(உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லவும்.)

37 comments:

Chitra said...

”உன் அம்மா திட்டமாட்டார்களா?” என்று அப்பாவியாகக் கேட்டேன். திட்டமாட்டங்கண்ணே, சாயங்காலம் சேரும் பணத்தில் பாதி எங்களுக்கு பாதி அம்மாவுக்குக் கொடுத்து விடுவோம்! ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றான்.

...... பணமா? பாசமா? புளைப்பா? பாதுகாப்பா? ம்ம்ம்....

தேவன் மாயம் said...

.. பணமா? பாசமா? புளைப்பா? பாதுகாப்பா? ம்ம்ம்..//

எல்லாவற்றிலும் ஜெயிப்பது பணம்தானோ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

என்ன கொடுமை!?

:(((

சென்ஷி said...

:(

இராகவன் நைஜிரியா said...

பணம் பத்தும் செய்யும்

அபி அப்பா said...

கொடுமை தான் டாக்டர்:-((

அபி அப்பா said...

கொடுமை தான் டாக்டர்:-((

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
என்ன கொடுமை!?

:(((

என்ன செய்ய?

தேவன் மாயம் said...

சென்ஷி said...
:(
//

நன்றி சென்ஷி!

------------------------------------

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
பணம் பத்தும் செய்யும்

//
ஆமாங்க!
-----------------------------------

தேவன் மாயம் said...

அபி அப்பா said...
கொடுமை தான் டாக்டர்:-((

நேரில் நொந்து போனேன்!

வால்பையன் said...

நல்ல பசங்க, ஆசை பட்டதை வெளிப்படையா செஞ்சிருக்கானுங்க, இதையே பார்சல் வாங்கிட்டு போய் மறைவா செஞ்சா பின்னாளில் பெரிய திருடனா வர வாய்ப்பிருந்திருக்கும்!

நான் சொல்றது சரிதானே!

Anonymous said...

பார்வை மனிதாபிமானமற்றது.

ஒரு இரு சிறுவர்கள் - அவர்களைபெற்றோர் ஒரு சிறுபணத்திற்காக இரவில் வெளியே தங்குமளவிற்கு அனுப்புகிறார்கள். தாய் கூட.

இது ஒரு அவல நிலை. இதன் காரணங்கள் எவை எனத்தேட பதிவாளர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மாறாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புக்கு அடிமையாகி, அவர்கள் அதில் முரண்படும்போது, அவர்களை இழிவாகபேசி - ‘தேவநாதனைத் தெரியுமா? - என்று நகைச்சுவை பண்ணுகிறார்.

இதுதான் கொடுமை.

சே.குமார் said...

பணம் பத்தும் செய்யும்.

என்ன கொடுமை!?

Anonymous said...

இன்னும் மாற்றம் வரவில்லை நம்மவர்களுள் பிள்ளைகளின் நலன் எதிர்காலம் பற்றி ஏன் இப்படி அலட்சியம் ?

நட்புடன் ஜமால் said...

எங்களுக்கு தேவா-வைத்தான் தெரியும்

--------------

இடுக்கை - வேதனை ...

ரிஷபன்Meena said...

குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்க கூடிய சூழ்நிலை பெற்றோர்க்கு இல்லையோ என்னவோ.

அந்த சிறுவர்கள் பாவம்.

தேவன் மாயம் said...

வால்பையன் said...
நல்ல பசங்க, ஆசை பட்டதை வெளிப்படையா செஞ்சிருக்கானுங்க, இதையே பார்சல் வாங்கிட்டு போய் மறைவா செஞ்சா பின்னாளில் பெரிய திருடனா வர வாய்ப்பிருந்திருக்கும்!

நான் சொல்றது சரிதானே!
//
பிள்ளைகள் பெற்றோருக்குத்தெரிந்துதான் சாப்பிடுகிறார்கள். நடு இரவில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாமல் அனுப்புவதுதான் தவறு!

வால்பையன் said...

//பிள்ளைகள் பெற்றோருக்குத்தெரிந்துதான் சாப்பிடுகிறார்கள். நடு இரவில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாமல் அனுப்புவதுதான் தவறு! //

எனக்கு ஒண்ணும் தவறா தெரியலைங்க, அவர்களை வீட்டிலேயே பூட்டி வைத்து என்ன சாதிக்க போகிறார்கள், நிச்சயம் அந்த இரு சிறுவர்களும் நல்ல பசங்களா வளருவாங்க பாருங்க!, காரணம் அவர்களின் போலித்தனம் இல்லை, முழுக்க முழுக்க உண்மையே இருக்கு!

தேவன் மாயம் said...

Anonymous said...
பார்வை மனிதாபிமானமற்றது.

ஒரு இரு சிறுவர்கள் - அவர்களைபெற்றோர் ஒரு சிறுபணத்திற்காக இரவில் வெளியே தங்குமளவிற்கு அனுப்புகிறார்கள். தாய் கூட.

இது ஒரு அவல நிலை. இதன் காரணங்கள் எவை எனத்தேட பதிவாளர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மாறாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புக்கு அடிமையாகி, அவர்கள் அதில் முரண்படும்போது, அவர்களை இழிவாகபேசி - ‘தேவநாதனைத் தெரியுமா? - என்று நகைச்சுவை பண்ணுகிறார்.

இதுதான் கொடுமை//

வாங்க நண்பரே! பையன்கள் இருவரும் நடுத்தரக்குடும்பம்- ஆங்கிலப்பள்ளியில் ப்யிலுகிறார்கள்! அப்படியிருக்க இரவு 12 மணிக்கு புரோட்டாவும், இன்ன பிறவும் சாப்பிட அனுப்பிய அந்தப் பெற்றோர்களையே நான் சாடுகிறேன்.
ஜாதியையே நான் குறிப்பிடவில்லை!ஜாதியை இழிவாகச் சொல்லவில்லை.

வால்பையன் said...

//அவர்களின் போலித்தனம் இல்லை, முழுக்க முழுக்க உண்மையே இருக்கு! //

சிறு திருத்தம்

அவர்களிடம் போலித்தனம் இல்லை, முழுக்க முழுக்க உண்மையே இருக்கு!

தேவன் மாயம் said...

சே.குமார் said...
பணம் பத்தும் செய்யும்.

என்ன கொடுமை!?
//

என்ன செய்ய?

தேவன் மாயம் said...

தமிழரசி said...
இன்னும் மாற்றம் வரவில்லை நம்மவர்களுள் பிள்ளைகளின் நலன் எதிர்காலம் பற்றி ஏன் இப்படி அலட்சியம் ?
பிள்ளைகள் பற்றிய அக்கரையின்மையே காரணம்!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
//பிள்ளைகள் பெற்றோருக்குத்தெரிந்துதான் சாப்பிடுகிறார்கள். நடு இரவில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாமல் அனுப்புவதுதான் தவறு! //

எனக்கு ஒண்ணும் தவறா தெரியலைங்க, அவர்களை வீட்டிலேயே பூட்டி வைத்து என்ன சாதிக்க போகிறார்கள், நிச்சயம் அந்த இரு சிறுவர்களும் நல்ல பசங்களா வளருவாங்க பாருங்க!, காரணம் அவர்களின் போலித்தனம் இல்லை, முழுக்க முழுக்க உண்மையே இருக்கு!

//
நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் என்பதே என் ஆசையும். ஆனால் இத்தகைய இடங்களில் இவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறிதான்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
எங்களுக்கு தேவா-வைத்தான் தெரியும்

--------------

இடுக்கை - வேதனை .//

நம் எல்லோருக்கும் வேதனையாகத் தெரிவது பெற்றோருக்குத் தெரியவில்லையே!

தேவன் மாயம் said...

ரிஷபன்Meena said...
குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்க கூடிய சூழ்நிலை பெற்றோர்க்கு இல்லையோ என்னவோ.

அந்த சிறுவர்கள் பாவம்.
//

ரிஷபன்! அச்சிறுவர்கள் பாவம்தான்!

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

தேவேநாதன் என்பவன் ஒரு துரோகி தெரு நாயை விட கேவலமானவன் இந்த பசங்க சூழ்நிலையாள தப்பு பண்றவங்க ஆனா இவனுக வருங்கால தேவனாதனா வர வாய்ப்பு அதிகமாவே இருக்குது அப்டின்னு நான் நெனக்கறேன்

///

அப்படி மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டல்லவா!

நேசமித்ரன் said...

:(

வருத்தமே மிஞ்சுகிறது

அன்பரசன் said...

என்ன கொடுமை சரவணன் இது???

ஆ.ஞானசேகரன் said...

எது எப்படினு சொல்ல தெரியவில்லை

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த மாதிரி நிறைய பேரு டாக்டர் சார்..:-((

வழிப்போக்கன் - யோகேஷ் said...

பெற்றோரின் அக்கறை பிரமிக்க(!!!) வைக்கிறது...

பிரியமுடன் பிரபு said...

நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் என்பதே என் ஆசையும். ஆனால் இத்தகைய இடங்களில் இவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறிதான்!
////

yes

yes thats not a safe place in that age

பிரியமுடன் பிரபு said...

follow up

cheena (சீனா) said...

அன்பின் தேவா

கண்ணில் கண்ட காட்சி - அது ஏற்படுத்திய தாக்கம் - அதனால் விளைந்த வருத்தம் - ஆதங்கம் - அனைத்துமே இடுகையாக வந்திருக்கிறது. என்ன செய்வது ....

கோவில் பூசாரிகளின் மகன்கள் - கோவிலில் பூசை செய்பவர்கள் - இரவு 12 மணிக்கு இப்படி ........

ஆங்கில மீடியத்தில் படிப்பவர்கள் - பிறப்பும் வளர்ப்பும் படிப்பும் தொழிலும் இருந்தும் இயல்புக்கு மாறாக இச்சூழ்நிலையில் இரவினில் ஆட்டம் ......புரிந்து கொள்ள முடியவில்லை,

ஆதவா said...

பசங்க தண்ணியடிக்காம சிகரெட் பிடிக்காம இருந்தா சரிதாங்க.... மத்தபடி, கோவிலாவது பூசாரியாவது.. சாப்பிடறதுன்னு ஆயாச்சு.. அப்பறம் மூளைரோஸ்ட் என்ன, எதுவேனும்னாலும் சாப்பிடலாம்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory