Monday, 16 August 2010

எழுதக்கூடாதவை!

 என் தெருவில் குழி கண்டு ஒதுங்கிப்போவேன்!
பிச்சையெடுக்கும் கிறுக்கனைக் கண்டு முகம் சுளிப்பேன்,
கொள்ளையடிக்கும் கவுன்சிலா¢டம் சிரித்துப்பேசுவேன்,
அ¡¢மா, ரோட்டரி சங்கத்தில் இருந்து பெருமைப்படுவேன்,
அங்கு வரும் அமைச்சருடன் போட்டோவில் நிற்பேன்,

எல்லோருடைய வரிப்பணத்தில் நான் படிப்பேன்,
ஐ.ஐ.டி என்பேன், எயிம்ஸ் என்பேன்,
நல்ல வேலை தேடிப் பல நாடு செல்வேன்,
அமெரிக்காவில் என்ன சுதந்திரம் என்று பூரித்துப்போவேன்,
சிங்கப்பூரில்  சுத்தம் கண்டு அகமகிழ்வேன்,
என் அறிவை அன்னியருக்கு விற்பேன்,
நீ பெறுவது ஆயிரம்தான்,
என் சம்பளம் லட்சங்களில் என்று எண்ணி மகிழ்வேன்,
பணச்செல்வம் கொணர்ந்து என் கணக்கில் சேர்ப்பேன்,

சின்ன அடிபட்டாலும் மல்டிஸ்பெசாலிட்டியில் நிற்பேன்,
சிகிச்சை பில் கண்டு பகல் கொள்ளை என்பேன்,
பிளைட் ஏறுவேன், ஏசிக் காரில் செல்வேன்,
பெட் ரோல் விலை அதிகம் என்று வருத்தப்படுவேன்,

ஸ்டார் ஓட்டலில் பிஸ்ஸா, பர்கர்,எல்லாம் தின்பேன்,
அறை தங்கி பிளாக் லேபிள், மார்ட்டினி எனக் குடிப்பேன்,
அந்தரங்க ஆசைகளும் தீர்த்துக் கொள்வேன்,

விளை நிலங்கள் வீட்டுமனையாகுதல் கண்டு வருந்துவேன்,
சீப்பாய்க் கிடைத்தால் சில ஏக்கர் பட்டாப் போட்டுக்கொள்வேன்,
அய்யோ வரி அதிகமென்பேன்,பொய்க்கணக்குக் காட்டுவேன்,

முதலாளித்துவம் என்பேன், முடிந்தால் கம்யூனிசமும் பேசுவேன்,
லஞ்சத்தை எதிர்ப்பேன், லஞ்சம் ஒழிந்தால் நாடு உருப்படும் என்பேன்,
காரியம் விரைந்து முடிக்க தெரியாமல் நானே லஞ்சமும் கொடுப்பேன்,

ஜாதி ஒழியவேண்டும் என்பேன், சமத்துவம் பேசுவேன்,
என் ஜாதிப் பெண் பார்த்துத் திருமணம் முடிப்பேன்,

தமிழ் தமிழ் என்பேன்,
என் வீட்டுக்குழந்தைகளை கான்வென்ட் சேர்ப்பேன்,
இந்தியா இன்னும் திருந்தவில்லை என்பேன்,
இன்னும் சுதந்திரம் இல்லை என்று எழுதிக் குவிப்பேன்,

இன்னும் பல செயல்களெல்லாம் மறைவாய்ச் செய்வேன்,
கேட்டால் நான் சாதாரண மனிதன் என்பேன்!

டிஸ்கி! இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல!

44 comments:

தேவன் மாயம் said...

டெஸ்ட்

ஹுஸைனம்மா said...

மிக உண்மை டாக்டர். அருமை.

ஹுஸைனம்மா said...

மிக உண்மை டாக்டர். அருமை.

கொல்லான் said...

இவை எல்லாம் தனி மனிதர்கள் எல்லோரும் செய்யும் செயல்கள் தானே?
இந்த நாடு மட்டுமல்ல. எல்லா நாட்டு குடிமக்களும் இப்படித்தான்.

அன்புடன் அருணா said...

அச்சச்சோ இவை சொல்லக்கூடாதவையாயிற்றே!!!

தேவன் மாயம் said...

ஹுசைனமா கருத்துக்கு நன்றி!

தேவன் மாயம் said...

அன்புடன் அருணா said...
அச்சச்சோ இவை சொல்லக்கூடாதவையாயிற்றே!!!
//
அய்யய்யோ! சொல்லிவிட்டேனே!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையாகச் சொன்னீர்கள்
டாக்டர்.

முனைவர்.இரா.குணசீலன் said...

இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல!


ஆம் மருத்துவரே..
எல்லோரையும்..
குறிப்பிடுவது!!!!!!!!

மருத்துவராயிற்றே அதனால் மருந்து தந்திருக்கிறீர்கள்..!

தேவன் மாயம் said...

கொல்லான் said...
இவை எல்லாம் தனி மனிதர்கள் எல்லோரும் செய்யும் செயல்கள் தானே?
இந்த நாடு மட்டுமல்ல. எல்லா நாட்டு குடிமக்களும் இப்படித்தான்//

கருத்து சரிதான் கொல்லான்!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல!


ஆம் மருத்துவரே..
எல்லோரையும்..
குறிப்பிடுவது!!!!!!!!

மருத்துவராயிற்றே அதனால் மருந்து தந்திருக்கிறீர்கள்..!
//
உண்மைதான்! நானும் இதில் அடக்கம்தான் நண்பரே!

அன்பரசன் said...

சூப்பர் சார்

குடந்தை அன்புமணி said...

ஒட்டுமொத்த இந்திய குடிமைக்களின் குணாதிசயங்களையும் இங்கு குவித்து விட்டீர்கள்.

தேவன் மாயம் said...

அன்பரசன் வருகை சிறப்பு!

தேவன் மாயம் said...

குடந்தை அன்புமணி said...

ஒட்டுமொத்த இந்திய குடிமைக்களின் குணாதிசயங்களையும் இங்கு குவித்து விட்டீர்கள்.///

அன்பு! அனைவரும் கொஞ்சமாவது மாற முயல்வோம்!

ஜெரி ஈசானந்தன். said...

இது எழுதவேண்டியவை.[செதுக்கி இருக்கிறீர்கள்.]சும்மா.செவுட்டுல அறைஞ்ச மாதி

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நிஜம் தேவா!

டிஸ்கி - ஏதுமில்லையே :P

ஜோதிஜி said...

எதையோ கழட்டி அடித்த மாதிரி இருக்கு.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஜெரி சொன்னது போல இருக்கும்.

வால்பையன் said...

யாரையும் ஏன் குறிக்குது, எல்லாரையும் தான் குறிக்குது!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி டாக்டர்...

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
இது எழுதவேண்டியவை.[செதுக்கி இருக்கிறீர்கள்.]சும்மா.செவுட்டுல அறைஞ்ச மாதிரி//

ஜெரி வருக!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
ஆஹா! நிஜம் தேவா!

டிஸ்கி - ஏதுமில்லையே :P
///

ஜமால் நலமா!

தேவன் மாயம் said...

ஜோதிஜி said...
எதையோ கழட்டி அடித்த மாதிரி இருக்கு.

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஜெரி சொன்னது போல இருக்கும்.
//

எல்லோருக்கும் பொதுவாகத்தான் எழுதியுள்ளேன்!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
யாரையும் ஏன் குறிக்குது, எல்லாரையும் தான் குறிக்குது!

//
சரிதானே!

தேவன் மாயம் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி டாக்டர்...//

மணி! கருத்துக்கு நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

மிகச்சரி டாக்டர்!

Gayathri said...

மிகவும் எதார்த்தமாய் அழகாய் உண்மையை சொல்லிவிடீர்கள்..வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

எந்த போதிமரம் கீழ் அமர்ந்தீர்... ம்ம் ஞானம் வைத்து பயன் இல்லை... வாழ்த்துக்கள்

முனியாண்டி said...

பாதிக்குமேல் எல்லோருக்கும் பொருந்தும் அவலம் என்னையும் சேர்த்தே.

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய விஷயங்கள் தேவா சார்.. எளிதா சொல்லிட்டீங்க.. ஆனா அத்தனையும் கஷ்டமான நிஜங்கள்..:-((

Anonymous said...

Best described!!!!

Chitra said...

சுடும் நிஜங்கள்..... சராசரி மனிதரின் எதார்த்த நிலை.

Mahi_Granny said...

எல்லோரும் சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் தப்பு என்று உணராமலே . நல்லா சொல்லி இருக்கிறீர்கள்

அப்துல்மாலிக் said...

உண்மைய உரக்க சொல்லிருக்கீங்க

Jay said...

oru telugu anbar ithai padithu artham ennavendru sollumaaru kaetaar. avarukkaga, ithai ezhuthinen (pizhai irupin, thiruthuga :))

Blog Name: Tamil Drop
Blog Caption: I am a drop in the huge sea of tamil


Monday 16 August 2010

Title What should not be written:

I move away when I see a pit on my street
I show disdain in my face on seeing a begging idiot
I smile and talk with the robbing councillor
I ll be happy by being in Lion's Clubs and Rotary Clubs
I pose for a snap with the minister who comes there.

I ll study in everyone's tax money
In IITs and IIMs
I ll find a good job and go many countries
I ll be awestruck with the freedom, liberty in America
My inner happiness will increase on seeing the clenliness of Singapore
I ll sell my brains to foreigners
I look at the majority and think - huh, you earn only in thousands. I earn in lakhs.
I ll bring money into my bank accounts


I ll reach a multi speciality hospital even in case of a small injury
I ll look at the bill and say that it is day light robbery
I ll go in air conditioned cars and flights
I ll be sad that petrol cost is getting higher

I ll eat pizzas and burgers in star hotels
I ll book a room and drink Black Labels and Martinis
I ll fulfil my fantasies too.

I ll see agricultural lands turn into concrete jungles and feel sad
If I get a few free, I ll buy a few in my name
I ll say - Oh my god, so much tax ! and show fake accounts to reduce it

I ll talk about capitalism. Sometimes about communism
I ll oppose bribery. I ll say that the country will be better if bribery is done with.
Without knowing the right processes and wanting to do things faster, I ll end up paying bribes.


I ll talk about abolishing of caste system. I ll talk about equality
I ll look out for a girl for my own caste.


I ll say tamil, tamil in my breath.
I ll join my kids in an english convent school.
I ll say that India hasnt reformed
I ll keep writing on the lack of freedom in India

I ll do a lot of more things in the background.
If asked, I ll cover them up saying that I am an ordinary man.

(;), was not written with reference to anyone specific.)

சங்கவி said...

அருமை அருமை....

பிரியமுடன் பிரபு said...

அருமையாகச் சொன்னீர்கள்
டாக்டர்.

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நல்ல சிந்தனை - இருப்பினும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் செய்கிறோம் - மாற வேண்டும் என நினைத்தால் கூட மாற இயலவில்லை. ம்ம்ம்ம்ம்ம் - நாடு ஒரு நாள் திருந்தும் - அதுவும் நம்மால் தான் நடக்கும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

மோகன் குமார் said...

அருமை மருத்துவர் ஐயா

துளசி கோபால் said...

ரொம்ப சூடா இருக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன்.

பர்னாலையும் சேர்த்துடுங்க.

kavisiva said...

நடு மண்டையில் நச்சுன்னு கொட்டுன மாதிரி இருக்கு.

எல்லோரும் உணர்ந்தால் நன்று

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்னை அவமானப் படுத்தவேண்டும் என்றே இந்தக்கவிதையை எழுதியிருக்கிறீர்கள்.

'இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதில்லை'என்றி டிஸ்கி போட்டால் எனக்குத் தெரியாதா.? உங்கள் மேல் மானநஷ்ட வழக்குப்போடுவேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

கிரி said...

நல்லா இருக்குங்க தேவா! இது அனைவருக்கும் பொருந்தும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory