Monday, 9 August 2010

வாழ்க்கைப்பயணிகள்- சயனைடு!

இதற்கு முன்….

போஸ்ட்மார்ட்டம் ஒன்று உள்ளது. எல்லோரும் அவரவர் முறையை முடித்துவிட்டார்கள். இது உங்கள் முறை என்றார் உதவியாளர். ”என்ன கேஸ்?” என்றேன். சயனைடு பாய்ஸன் சார் என்றார். நான் என்னை அறியாமலேயே ஜெய்லானியா? என்றேன். உதவியாளர் முகத்தில் ஆச்சரியம் !! முழுவதும் படிக்க:  வாழ்க்கைப்பயணம்

…………………………………………………………………………………………சார்! ஆளைப்பார்க்காமலேயே  இறந்தவரின் பெயரைச் சொல்லிவிட்டீர்களே, எப்படி சார்? ” என்றார் உதவியாளர்.  ஒரு யூகம்தானப்பா என்று  சொன்னேன். ஜெய்லானி இறந்ததற்கு அளவுக்கு மீறிய குடியினால் கந்துவட்டிக்கடனாளியாகி மனம் உடைந்து சயனைடு சாப்பிட்டுவிட்டான் என்று அவன் உறவினர்கள் சொன்னார்கள். உண்மைக்காரணம் யார் அறிவர்?

ஜெய்லானியின் இறப்பின் காரணம் போலவே அவன் உபயோகித்த விசமும் ரகசியமானது.  ஆம்! சயனைடின் சுவைதான் அது! இதுவரை உலகில் உயிரோடிருப்பவர்கள் எவரும் அறியாதது சயனைடின் சுவை! ஆச்சரியமாக உள்ளதல்லவா?

1.சயனைடு சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும்?

10 வினாடிகளில்!

2. சயனைடின் நிறம்?

வெண்ணிறப் பொடியாக இருக்கும்.

3.சயனைடின் சுவை என்னவாக இருக்கும்?

சயனைடின் மணம் பாதாம் போல் இருக்கும். அதன் சுவையைக்  கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பலரும் முயன்றும் முடியவில்லை. இதன் சுவையைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று முயன்ற ஒரு விஞ்ஞானி மிகவும் எச்சரிக்கையுடன் முன்னேற்பாடுகளைப் பட்டியலிட்டார். பேப்பர்,பேனா, சயனைடு அனைத்தையும் ஒரு மேசையில் வைத்தார். சயனைடை நாக்கில் வைத்தவுடன் பேனாவில் சுவையின் முதல் எழுத்தை பேப்பரில் எழுதிவிட வேண்டும் "S "  என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு,  "T" என்றால் புளிப்பு  என்பது போல்  என்று முடிவு செய்தார்.  இதைக் கண்டுபிடித்துவிட்டால் உலகில் முதன்முதலில் சயனைடின் சுவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையும்,பெயரும் கிடைக்குமல்லவா! ஆனால் உயிர் போய்விடும். அதற்குத் துணிந்த அவர் மருத்துவர்களுக்கும், காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு ஒரு கையில் மிகக் குறைவான சயனைடு தூளையும் இன்னொரு கையில் பேனாவையும் வைத்துக்கொண்டு நாக்கில் சயனைடை வைத்தார். எல்லோரும் விரைந்து வந்து பார்த்தனர். விஞ்ஞானி தன் சோதனையை மு்டித்துவிட்டார். அவரும் உயிருடன் இல்லை. மேசையிலிருந்த தாளிலும் ஒன்றும் எழுதப்படவில்லை.

4.இந்தியாவில் யாரேனும் இதற்கு முயற்சி செய்துள்ளனரா?

கேரளாவைச் சேர்ந்த M.P.பிரசாத் என்பவர்  நகைத்தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முடிவுசெய்தார். கொஞசம்  மது அருந்த்விட்டு  சயனைடை சாப்பிட்டுவிட்டு அவர் இறப்பதற்கு முன் பேப்பரில்” பொட்டாசியம் சயனைடு நாக்கில் எரிச்சலை உண்டாக்கியதாகவும், கசப்பாக இருந்ததாகவும் கிறுக்கலான எழுத்துகளில் எழுதியுள்ளார். இந்தச் செய்தி தினசரிகளிலும் வந்திருந்தது. ஆயினும் இது அதிகாரபூர்வமாக இன்னும் ஏற்றுகொள்ளப்படவில்லை.

1. http://www.smh.com.au/news/world/suicide-note-reveals-taste-of-cyanide/2006/07/08/1152240534587.html 

2.http://www.indianexpress.com/story/8089.html

3.http://wiki.answers.com/Q/When_a_person_taste_a_cyanide_he_will_enter_into_coma_state_in_10_SEC_n_die_within_a_minute_will_he_be_able_to_experience_anything_when_he_is_in_coma_n_is_their_any_chances_to_save_him

சயனைடின் சுவை ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக, இன்றும் புதிராகவே உள்ளது.

27 comments:

நட்புடன் ஜமால் said...

S என்று ஒரு விஞ்ஞானி எழுதியதாக நேற்று வரை நினைத்திருந்தேன் ...

Jey said...

நானும் இதுபத்தி படிச்சிருக்கேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.

அகல்விளக்கு said...

நாம சோதன பண்ணிப் பாத்துடலாமா அண்ணா....
:)

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
S என்று ஒரு விஞ்ஞானி எழுதியதாக நேற்று வரை நினைத்திருந்தேன் ..///

இல்லை ஜமால்!!!

தேவன் மாயம் said...

Jey said...
நானும் இதுபத்தி படிச்சிருக்கேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.
///

மிக்க நன்றி நண்பரே!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
நாம சோதன பண்ணிப் பாத்துடலாமா அண்ணா....
:)///

நீங்க பண்ணுங்க! நான் மேற்பார்வை செய்கிறேன்!!

ஆதவா said...

என் மாமா ஒருவர் சயனைட் சாப்பிட்டுதான் இறந்தார். பெரும்பாலும் நானும் கேள்விப்பட்டதில்லை அதன் சுவை என்னவென்று.

ஒருமுறை கோபியில் தாய்மாமாவிடம் பரிட்சை விடுமுறையில் வேலைக்கு இருந்தேன். அப்போது செயினை மெருகு போட்டு வரும்படி என்னிடம் கொடுத்தனுப்பினார் (அவர் செயின் வேலைகள் செய்வார்) அப்போது சயனடை கலந்த நீரை தெரியாமல் தொட்டுவிட்டேன். நல்லவேளை, மெருகு போடுபவர் சொன்னார், கையை நன்கு சோப்பு போட்டு கழுவு, அது சயனைடு கலந்த தண்ணீர் என்று...

தேவன் மாயம் said...

ஆம்! ஆதவா! சயனைடை இவ்வளவு அலட்சியமாகப் பயன்படுத்துவது ஆபத்து!!

சே.குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.

Thomas Ruban said...

ஒரு விஞ்ஞானி சுவைத்துப் பார்த்து S என்று எழுதி விட்டு இறந்தார்.
S என்பது SWEET(Or)SALT என்று குழப்பத்தில் உள்ளதாக படித்த ஞாபகம்.

நன்றி சார்.

சத்ரியன் said...

தேவா சார்,

விஷம் பற்றிய இடுகைகளே வந்துக்கிட்டிருக்கே. என்ன விஷமத்தனம் இது?

சயனைடு எந்த கடையில விக்கிறாங்கன்னு சொன்னா, பூச்சிமருந்து சாப்பிட்டு சாவறதுக்கு அவஸ்தை படறவங்களுக்கு சவுக்கரியமா இருக்குமில்லையா?

sakthi said...

சயனைடு எந்த கடையில விக்கிறாங்கன்னு சொன்னா, பூச்சிமருந்து சாப்பிட்டு சாவறதுக்கு அவஸ்தை படறவங்களுக்கு சவுக்கரியமா இருக்குமில்லையா?


என்ன ஒரு நல்ல எண்ணம் சத்ரியரே

மோகன் குமார் said...

Very different article Doctor. Interesting to read.

ரவிச்சந்திரன் said...

Interesting.....!

தேவன் மாயம் said...

சே.குமார் said...
நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.
//

நன்றி குமார்!

தேவன் மாயம் said...

Thomas Ruban said...
ஒரு விஞ்ஞானி சுவைத்துப் பார்த்து S என்று எழுதி விட்டு இறந்தார்.
S என்பது SWEET(Or)SALT என்று குழப்பத்தில் உள்ளதாக படித்த ஞாபகம்.

நன்றி சார்.
//
ஜமாலும் சொகிறார்! தேடிப்பார்ப்போம்!

தேவன் மாயம் said...

சத்ரியன் said...
தேவா சார்,

விஷம் பற்றிய இடுகைகளே வந்துக்கிட்டிருக்கே. என்ன விஷமத்தனம் இது?

சயனைடு எந்த கடையில விக்கிறாங்கன்னு சொன்னா, பூச்சிமருந்து சாப்பிட்டு சாவறதுக்கு அவஸ்தை படறவங்களுக்கு சவுக்கரியமா இருக்குமில்லையா?

மரணதண்டனைக்கும் சயனைடு பயன்படுத்தப்பட்டது சத்ரியன்!! பெரிய விசயத்தை சொல்லிப்புட்டீகளே!!!

தேவன் மாயம் said...

sakthi said...
சயனைடு எந்த கடையில விக்கிறாங்கன்னு சொன்னா, பூச்சிமருந்து சாப்பிட்டு சாவறதுக்கு அவஸ்தை படறவங்களுக்கு சவுக்கரியமா இருக்குமில்லையா?


என்ன ஒரு நல்ல எண்ணம் சத்ரியரே
//

சத்ரியன் கருணைக் கொலைஞரோ?

தேவன் மாயம் said...

மோகன் குமார் said...
Very different article Doctor. Interesting to read.///

உற்சாகமூட்டியதற்கு நன்றி!!

தேவன் மாயம் said...

ரவிச்சந்திரன் said...
Interesting.....!//

நன்றி ! நன்றி!

ஜீவன்பென்னி said...

very interesting na.

மதுரை சரவணன் said...

சுவைப்பட எழுதியுள்ளீர்கள். புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள விவரங்கள் தேவா சார்..

Gayathri said...

அவ்ளோ கொடிய விஷம் அவங்களுக்கு எப்படி கிடைக்குது ???

அப்துல்மாலிக் said...

10 Seconds???

Thats a reason, terrorist are using it

unga blog oru thahaval kalanjiyam

பிரியமுடன் பிரபு said...

அய்யா சந்தேகமுனு வந்துட்டா விடபிடாது
எதுக்கு நிங்களே அதை சாப்பிட்டு பார்த்து என்ன ஏதுன்னு பிளக்குல தெளிவா எழுதிடுக
இப்படிக்கு பிரியமுடன் பிரபு
சரிதானே..........

தருமி said...

//சயனைடின் சுவை ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக, இன்றும் புதிராகவே உள்ளது.
//

அப்படியே இருந்துவிட்டு போகட்டும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory