Thursday, 3 December 2009

சங்கரின் டி.வி. நிகழ்ச்சி!!

சங்கரின் நண்பர்கள் குழு அவன் ரூமிலிருந்த டி.வி.யின் முன் குழுமியிருந்தது. எல்லோரும் சந்தோச மூடில் மானிட்டருடன் சோடாவைக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டைக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர். சிப்ஸ்,வறுத்த கடலை, வெட்டப்பட்ட கேரட், தக்காளிகள் ஒரு பக்கம் தட்டுகளில்.
”மாப்ஸ் ! நான் நடிச்ச புரோக்ராம் வரப்போகுது” எழுந்து சிகரெட் புகையின் நடுவில் உற்சாகத்துடன் கத்தினான் சங்கர்.
அனைவரும் அடுத்த அரை மணி நேரம் நிகழச்சியை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
”வெல்டன் மாப்பிள்ளை” செமத்தியா நடிச்சிருக்கடா சங்கர் , ஆளாளுக்கு உற்சாகத்துடன் பாராட்டினர்.
”சரி! வாங்கடா ! சாப்பிடப் போவோம்” குழு இறங்கி அடுத்ததெருவை நோக்கி நகர்ந்தது.
” ஏண்டா மாப்பிள்ளை! நம்ம நிகழ்ச்சியை மக்கள் பார்த்திருப்பாங்களா?” இனிமேல் ஒரே ரசிகர் தொல்லையாயிடுமேடா! ரோட்டில் நடக்க முடியாதே” சங்கர் சரக்கின் உற்சாகத்துடன் ஓவர் படம் காட்டினான்..

தெரு முனையில் திரும்பினர். கொஞ்ச தூரத்தில் மெஸ்!! மெஸ்ஸிலிருந்து வந்த இருவர் சங்கர் குழுவை நோக்கி சந்தேகக் கண்ணுடன் நெருங்கினர்.
”சார் இப்ப டி.வி யில வந்தது நீங்கதானா?” அவர்களில் ஒருவன் கேட்டான். மூச்சில் மெல்லிய சரக்கு வாடை!!
’ஆமா’ சங்கர் சொன்ன அடுத்த வினாடி”ஏண்டா! அப்பாவி ஜனங்க பணத்தைப் போட்டா அபேஸ் பண்ணிட்டு சவடாலா நடந்து வரியே! நீதானே அந்த பைனாஸ் ஓனரு”
”அண்ணா ! இல்லீங்கனா அது கதை! – வார்த்தைகள் குழறி கைகால் நடுங்க ஆரம்பித்தது சங்கருக்கு!!
“ என்னடா கதை சொல்றே எங்களுக்கு, புடிடா அவனை” – அவன் சொல்லி முடிப்பதற்குள் சங்கர்&கோ சிட்டாய்ப் பறந்து விட்டனர்!!

13 comments:

cheena (சீனா) said...

ஓஓ இப்படியும் நடக்குமா - அது சரி - அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

நல்லாருக்கு கற்பனை

நல்வாழ்த்துகள் தேவா

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...

ஓஓ இப்படியும் நடக்குமா - அது சரி - அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

நல்லாருக்கு கற்பனை

நல்வாழ்த்துகள் தேவா
03 December 2009 05:57 ///

நடந்தது என்ன? போன்ற நிகழ்ச்சியில் இவன் ஏமாற்றும் ஃபைனான்ஸியராக நடிக்கிறான் ..

Rajeswari said...

mm.....

idhu tv programmaa illa ungaloda karpanaiyaa...

தேவன் மாயம் said...

Blogger Rajeswari said...

mm.....

idhu tv programmaa illa ungaloda karpanaiyaa...//

கற்பனைக் கதைங்க இது!!

இராகவன் நைஜிரியா said...

தொலைக்காட்சி தொடர்கள் மக்களை எவ்வளவு ஆதிக்கம் செய்கின்றன என்பதை மிக அழக்காக எடுத்து சொல்லியிருக்கின்றீர்கள்.

கதை எது, கற்பனை எது என்று கூட புரியாத அளவுக்கு மக்களின் மனங்களை இந்த தொலைக்காட்சிகள் மழுங்கடித்துவிட்டன.

சில தொடர் பெயரைச் சொல்லி, அதைப் பார்த்தீங்களா.. அப்படின் பேசாதவர்கள் பாபம் செய்தவர்கள் என்ற மனப் பான்மை வலுது வருகின்றதுங்க.

ஹாட்ஸ் ஆஃப் டு யூ மருத்துவரே.

ஜெஸ்வந்தி said...

கற்பனை வளரட்டும். நல்லாத்தான் இருக்கு. அது சரி! அங்கே ஓடிப் போனவர்களை உங்களுக்குத் தெரியுமா?

புலவன் புலிகேசி said...

நல்ல கற்பனை...நன்றாக இருந்தது....

Sangkavi said...

நல்ல கற்பனையா? இல்ல

அந்த சங்கர் நீங்களா?............

Anonymous said...

short and cute story நல்லாயிருந்தது சார்..

குமரை நிலாவன் said...

நல்லாருக்கு தேவா சார்..

Chitra said...

"நடந்தது என்ன? போன்ற நிகழ்ச்சியில் இவன் ஏமாற்றும் ஃபைனான்ஸியராக நடிக்கிறான் .."........... நிழல்கள் நிஜமாகின்றன. நிஜங்கள் நிழல்களில் மறைகின்றன. சிறுகதை அருமை.

சிங்கக்குட்டி said...

நல்ல கற்பனை, வாழ்த்துகள் தேவா :-)

S.A. நவாஸுதீன் said...

சங்கர் & கோ விற்கு சரக்கு போதைன்னா மெஸ்லேர்ந்து வந்த ரெண்டு பேருக்கும் டீவி போதையோ.

சின்னதா இருந்தாலும் நல்லா இருக்கு தேவன் சார்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory