Saturday, 5 December 2009

காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!

காய்ச்சல் இந்த முறை தீவிரவாதியின் தாக்குதல் போல் மக்களை வறுத்தெடுக்கிறது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் இருந்தாலும் காரைக்குடி வட்டாரத்தில் காய்ச்சல் வராதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

புயல் சின்னம் உருவாகுவதும், தூறல் போடுவதுமாக ஒரு வினோதமான இயற்கை விளையாட்டின் பலனாய் காய்ச்சல் உசுப்பிவிடப்பட்டிருக்கிறது!

குடும்பத்தில் ஒரு ஆளுக்கு வந்தால் போதும் எல்லோருக்கும் பரவிவிடுகிறது!! இதனால் அரசுமருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு முறை வந்தாலே இந்த வைரஸ் காய்ச்சல் ஆளைச்சாய்த்து விடுகிறது. பலரும் கை,கால் வீங்கிப்போய் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதில் தற்போது பலருக்கும் இரண்டாம் முறையாக வேறு வந்துகொண்டிருக்கிறது!!

பலருக்கும் இரத்தம் சோதித்தல், உள்நோயாளியாகச் சேர்த்தல், குளுக்கோஸ் ஏத்துதல் என்று படு பிஸியாக உள்ளன அரசு மருத்துவமனைகள்!!

பிரச்சினை என்னவென்றால் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அனைவரும் பெட் வேண்டும் என்று தினமும் குடுமிப் பிடிச்சண்டையாக உள்ளது!!பெட் கொடுக்க ரெகமெண்டேசன் போனிலும்,நேரிலும், தெரிந்தவர்,தெரியாதவர் என்று ஏகப்பட்ட குழப்பங்கள்!!
ஏழை என்றில்லாமல் தற்போது எல்லாத்தரப்பு மக்களும் வரிசையில் நின்று ஊசி போட்டுக்கொண்டு செல்கிறார்கள்.

ஜி.எச். பக்கம் வரமாட்டீங்களே!! இப்ப்ப வந்திருக்கீங்க! என்ன விசயம்? என்று நமக்குத் தெரிந்த வசதியுள்ள ஆசாமி ஒருவர் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டு மாத்திரை வாங்கிக்கொண்டு போகும்போது கேட்டேன். அவர் சொன்னதுதான் ஆச்சரியம்- ஜி.எச் சில்தான் இப்ப வந்திருக்கிற காய்ச்சலுக்கு மருந்து இருக்குன்னு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க, அதுதான் வந்தேன் ! என்றார்.
அடக் கொடுமையே!!

ஜி.எச்சில் கூட்டத்தைச் சமாளித்து ”இவ்வளவு பேருக்கும் மருந்து கொடுப்பது எப்படி? நிறையத்தேவைப்படுமே!! என்ன செய்வது?” என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு கோஷ்டி கிளம்பி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறது!!

அது பரவாயில்லை!!காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!! எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!!

33 comments:

பீர் | Peer said...

நீங்கள் செய்வது உயிர் காக்கும் சிகிச்சை. சோர்வடைய வேண்டாம். வாழ்த்துக்கள்!

(ஹோமியோவில் கிடைக்கும் முன்னெச்சரிக்கை மருந்து உபயோகமாக இருக்கிறதாமே.. உண்மையா?)

நேசமித்ரன் said...

மிகப் பயனுள்ள அவசியமான பகிர்வு

மிக அற்புதமான சேவை உங்களுடையது

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
நீங்கள் செய்வது உயிர் காக்கும் சிகிச்சை. சோர்வடைய வேண்டாம். வாழ்த்துக்கள்!

(ஹோமியோவில் கிடைக்கும் முன்னெச்சரிக்கை மருந்து உபயோகமாக இருக்கிறதாமே.. உண்மையா?)
05 December 2009 05:34 //

ஹோமியோ பற்றித் தெரியவில்லையே!!

தேவன் மாயம் said...

நேசமித்ரன் said...
மிகப் பயனுள்ள அவசியமான பகிர்வு

மிக அற்புதமான சேவை உங்களுடையது

05 December 2009 05:44//

மிக்க நன்றி நேசரே!!

tamiluthayam said...

சாதாரணமாக மெட்ராஜ் ஐ என்ற கண் வலி வரும் இந்த மழை நாளில். இந்த வருடம் மாறுதலாக இந்த காயச்சல். சுற்று புறத்தை கொசுக்களிடம் இருந்து பாதுகாத்தால், உங்களை காய்ச்சலில் இருந்து காத்து கொள்ளலாம்.

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அரிய சேவை - அரசு மருத்துவ மனையில் தான் குணமாகும் என்ற நம்பைக்கையில் கூட்டம் சேருகிறதென்றால் அது நல்ல சகுனம் தான். பணி அதிகமிருப்பினும் ஊக்கத்துடன் பணியாற்றுங்கள்

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//குடும்பத்தில் ஒரு ஆளுக்கு வந்தால் போதும் எல்லோருக்கும் பரவிவிடுகிறது!! இதனால் அரசுமருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது//

இதைப்பற்றி நானே கேட்கவேண்டும் என்று இருந்தேன், நீங்களே விளக்கமாக சொல்லிட்டீங்க நன்றி டாக்டர்

சிங்கக்குட்டி said...

கடவுளுக்கு பின் மக்கள் நம்புவது உங்கள் தொழிலைத்தான்.

அதனால் உயிர் பயத்தில் அவர்கள் தரும் அன்பு தொல்லையை நீங்கள் பொறுத்துக்கொள்ளதான் வேண்டும் :-)

சத்ரியன் said...

//காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!! எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!! //

தேவா,

அதானே.........................!

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு மக்கா.

(ஒரு ரகசியமான கேள்வி. ஆளாளுக்கு "மக்கா..மக்கா" 'ன்னு எழுதறாய்ங்களே அப்டின்னா இன்னா அர்த்தம் தல?

ஜெரி ஈசானந்தா. said...

good samaalification.

S.A. நவாஸுதீன் said...

//எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!!//

அதானே!. காய்ச்சலுக்கே காய்ச்சல் வர வச்சிட மாட்டீங்க நீங்க.

தேவன் மாயம் said...

Anonymous tamiluthayam said...

சாதாரணமாக மெட்ராஜ் ஐ என்ற கண் வலி வரும் இந்த மழை நாளில். இந்த வருடம் மாறுதலாக இந்த காயச்சல். சுற்று புறத்தை கொசுக்களிடம் இருந்து பாதுகாத்தால், உங்களை காய்ச்சலில் இருந்து காத்து கொள்ளலாம்.//

உண்மைதான்!

தேவன் மாயம் said...

Blogger cheena (சீனா) said...

அன்பின் தேவா

அரிய சேவை - அரசு மருத்துவ மனையில் தான் குணமாகும் என்ற நம்பைக்கையில் கூட்டம் சேருகிறதென்றால் அது நல்ல சகுனம் தான். பணி அதிகமிருப்பினும் ஊக்கத்துடன் பணியாற்றுங்கள்

நல்வாழ்த்துகள்//

உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

தேவன் மாயம் said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

//குடும்பத்தில் ஒரு ஆளுக்கு வந்தால் போதும் எல்லோருக்கும் பரவிவிடுகிறது!! இதனால் அரசுமருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது//

இதைப்பற்றி நானே கேட்கவேண்டும் என்று இருந்தேன், நீங்களே விளக்கமாக சொல்லிட்டீங்க நன்றி டாக்டர்//

வீட்டில் எல்லாருக்கும் காய்ச்சலா!

தேவன் மாயம் said...

Blogger சிங்கக்குட்டி said...

கடவுளுக்கு பின் மக்கள் நம்புவது உங்கள் தொழிலைத்தான்.

அதனால் உயிர் பயத்தில் அவர்கள் தரும் அன்பு தொல்லையை நீங்கள் பொறுத்துக்கொள்ளதான் வேண்டும் :-)//

நிச்சயமாக !!

தேவன் மாயம் said...

Blogger சத்ரியன் said...

//காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!! எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!! //

தேவா,

அதானே.........................!

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு மக்கா.

(ஒரு ரகசியமான கேள்வி. ஆளாளுக்கு "மக்கா..மக்கா" 'ன்னு எழுதறாய்ங்களே அப்டின்னா இன்னா அர்த்தம் தல?//

எனக்கும் தெரியல மக்கா!!

தேவன் மாயம் said...

Blogger ஜெரி ஈசானந்தா. said...

good samaalification.///

ஏதோ தோன்றியது

சொல்லரசன் said...

வருமுன் காப்போம் போன்று இதை தடுக்க சுகாதரதுறையிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...

//எவ்வளவோ சமாளிக்கிறோம். இதைச் சமாளிக்க மாட்டோமா!!//

அதானே!. காய்ச்சலுக்கே காய்ச்சல் வர வச்சிட மாட்டீங்க நீங்க.
05 December 2009 21:25 //

அடங் கொப்புரானெ!!! இப்படி வேறயா!!!

தேவன் மாயம் said...

Blogger சொல்லரசன் said...

வருமுன் காப்போம் போன்று இதை தடுக்க சுகாதரதுறையிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?//

குறிப்பாக இல்லை!!

காந்தி காங்கிரஸ் said...
This comment has been removed by the author.
காந்தி காங்கிரஸ் said...

சரியான நேரத்தில் போடப்பட்ட ,
தெளிவான
தேவையான
பதிவு .
தொடருங்கள்
தங்களின் சிறிய
களப்பணியை .
வாழ்த்துக்கள் .

Thevanmayam said...

Thanks Mr Gandhi for coming & encouraging me!!

அபுஅஃப்ஸர் said...

ஊருலே கடந்த சில வருடமாக இப்படி ஏதாவது ஒரு வியாதி வந்துவிடுதே, இதற்கு நிரந்தர தீர்வு இல்லியா, இதன் மூலம் மருத்துவர்களும், மருந்துக்கடைகளும் அதிகம் லாபம் ஈட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது, அதை பற்றிய தாங்கள் கருத்து?

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
ஊருலே கடந்த சில வருடமாக இப்படி ஏதாவது ஒரு வியாதி வந்துவிடுதே, இதற்கு நிரந்தர தீர்வு இல்லியா, இதன் மூலம் மருத்துவர்களும், மருந்துக்கடைகளும் அதிகம் லாபம் ஈட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது, அதை பற்றிய தாங்கள் கருத்து?
06 December 2009 01:58///

1.அரசு சுகாதாரத்தை ரெவின்யூவிடம் விட்டுள்ளது.- நகராட்சி,பஞ்சாயத்து.
2.மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்குவது மருத்துவர்கள் அல்ல.
3.மருத்துவமனைக் கட்டிடங்கள் P.W.D பராமரிப்பில் உள்ளன.
4.கழிப்பிடம் போன்றவற்றை பராமரிக்க ஊழியர்களையும் சென்னைதான் நியமனம் செய்கிறது.
- இந்த சூழ்நிலையில் மிகவும் சுகாதாரக் குறைவான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் போன்றோர்களே இங்கு அதிகம். எங்களுக்குத்தான் தொற்று நோய்கள் முதலில் வருகின்றன.இவற்றிலிருந்து நாங்கள் தப்பிப்பதே பெரும்பாடாக உ:ள்ளது..

D.R.Ashok said...

சென்னைக்கூட அப்படிதான் இருக்கு தேவன்மாயம்..
நல்லவேளை திருப்பி மழை வநதது.

கவிதை(கள்) said...

சிக்குன்குனியா நேரத்தில் ஒருவர் இதற்க்கு ஊசி டாக்டர்கிட்ட இல்லையாம் கம்பவுண்டர் கிட்ட மட்டும்தான் இருக்குதான் என்றார். ( என் என்றால் அவர்கள் தான் steroid போடுவார்கள் )

வாழ்த்துக்கள் நல்ல அவசிய பதிவு

விஜய்

ஹுஸைனம்மா said...

அண்ணே, உங்களைத் தொடர் பதிவு எழுதச் சொல்லியிருக்கேன் இங்கே. எழுதுவீங்களா?

Chitra said...

!!பெட் கொடுக்க ரெகமெண்டேசன் போனிலும்,நேரிலும், தெரிந்தவர்,தெரியாதவர் என்று ஏகப்பட்ட குழப்பங்கள்!! .........இந்த recommendation காய்ச்சல் என்று தீருமோ? நல்ல பதிவு.

நசரேயன் said...

//காய்ச்சல் இல்லாட்டியும் பரவாயில்லை எங்களுக்கும் வந்துவிடாமல் அந்த ஊசியைப் போடுங்கள் என்று கேட்கும் மக்களையும் சமாளிக்கவேண்டியுள்ளது!!//

ஒரு ஊசி மிச்சம் வையுங்க

சத்ரியன் said...

//எனக்கும் தெரியல மக்கா!!//

அடங்கொக்கா..மக்கா...இஙெயும் தெரியலியா..? சரியாப் போச்சி...

கோமதி அரசு said...

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுதல்,சுற்றுப்புற தூய்மை இவை
நோய் வரும் முன் காக்கும் இல்லையா டாக்டர்.

உங்கள் பணி சிறப்பானது.

பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

பாசக்கார பயபுள்ளைக...குடும்பத்தோட வந்து ஊசி போட்டுக்குற மாதிரி ஆயிடுச்சு நிலைமை.

சிறப்பாக பணியாற்றுங்கள். வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory