Thursday 8 April 2010

கொஞ்சம் தேநீர்-தொலைந்து போனவன்!

நேற்றிரவு

தொலைந்து போனவனைக்

கண்டேன்!!

 

தன் கூரிய

விருட்ச விரல்களால்

இரவைக் கிழித்துக்

கொண்டிருந்தான்.

 

கீழே நிழலாகக்

கிடந்த உடலகளினின்றும்

பீரிட்ட குருதி

அவன் கண்களூடாய்

வழிந்து கொண்டிருந்தது!

 

அவற்றின் அடங்காத

ஓலம்

வீங்கிப்போன அவன்

செவிப்பறைகளில்

அதிர்ந்து கொண்டிருந்தது.

 

புகையாய்க் கிளம்பிய

நர வீச்சம் தாளாமல்

அவன் நாசித்துவாரங்கள்

சிதறிக்கிடந்தன.

 

தன் முகம் காணச் சகியாது

உடலினின்றும்

தன் தலையைப்

பிய்த்தெடுத்தான்.

 

கைகளில் வழிந்த முகம்

என் முகத்தை

ஒத்திருக்க,

கிழிந்து கிடந்த

இரவின் ஊடாய்

அவனும் நானும்

மெதுவாகக் கரைந்து போனோம்.

30 comments:

Chitra said...

ஆஆஆஆஆஆஆஆ !!!!

க.பாலாசி said...

//புகையாய்க் கிளம்பிய நர வீச்சம் தாளாமல் அவன் நாசித்துவாரங்கள் சிதறிக்கிடந்தன//

டாக்டர்... பின்னிட்டீங்க... நல்லாயிருக்குங்க...

தொலைந்த இடம் கனவுங்களா..:-))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை தோழா....

அகல்விளக்கு said...

கலக்கிட்டீங்க அண்ணா...

Anonymous said...

சார் எல்லாருக்கும் புரிந்திருக்கு எனக்கு புரியலையே?

தேவன் மாயம் said...

Chitra said...

ஆஆஆஆஆஆஆஆ !!!!///

புரிந்ததா!!!

தேவன் மாயம் said...

Nundhaa said...

nice//

நன்றி நுந்தா!!

தேவன் மாயம் said...

க.பாலாசி said...

//புகையாய்க் கிளம்பிய நர வீச்சம் தாளாமல் அவன் நாசித்துவாரங்கள் சிதறிக்கிடந்தன//

டாக்டர்... பின்னிட்டீங்க... நல்லாயிருக்குங்க...

தொலைந்த இடம் கனவுங்களா..:-))///

நன்றி பாலாசி!!

தேவன் மாயம் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை தோழா....///

நன்றி உலவு!!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...

கலக்கிட்டீங்க அண்ணா...//

நன்றி விளக்கு!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...

சார் எல்லாருக்கும் புரிந்திருக்கு எனக்கு புரியலையே?///

மீண்டும் படிங்க தமிழ்!!

SASee said...

// கைகளில் வழிந்த முகம்

என் முகத்தை

ஒத்திருக்க,

கிழிந்து கிடந்த

இரவின் ஊடாய்

அவனும் நானும்

மெதுவாகக் கரைந்து போனோம்.//




ஒரு நல்ல கவிஞர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அருமையாக வடித்துள்ளீர்கள்.

தேவன் மாயம் said...

SASee said...

// கைகளில் வழிந்த முகம்

என் முகத்தை

ஒத்திருக்க,

கிழிந்து கிடந்த

இரவின் ஊடாய்

அவனும் நானும்

மெதுவாகக் கரைந்து போனோம்.//




ஒரு நல்ல கவிஞர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அருமையாக வடித்துள்ளீர்கள்.
//

வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி!!

சாந்தி மாரியப்பன் said...

அருமையா ஆனா பயமா இருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி!!!!
டெரர்ராவுல இருக்கு.

Mythees said...

:))

இராகவன் நைஜிரியா said...

தம்பி நேசன் சொல்லுவார்... கவிதை எழுதும் வரைத்தான் அது படைப்பாளியின் கவலை... பின்னர் வாசகனின் எண்ணங்கள், புரிதலுக்கு எல்லையில்லை என்று..

அது இங்கு நிரூபிக்கப் பட்டு இருக்கின்றது.

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அழகா இருக்கு சார்

Prasanna said...

நான் ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டு இருக்கேன்.. சரியா தெரியலை

தேவன் மாயம் said...

அமைதிச்சாரல் said...

அருமையா ஆனா பயமா இருக்கு.///

மிக்க நன்றி சாரல்!!

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி!!!!
டெரர்ராவுல இருக்கு//

வாழ்க்கை இதைவிடட் டெரர்தானே!

தேவன் மாயம் said...

mythees said...

:))///

நன்றி!

----------------------------

Blogger இராகவன் நைஜிரியா said...

தம்பி நேசன் சொல்லுவார்... கவிதை எழுதும் வரைத்தான் அது படைப்பாளியின் கவலை... பின்னர் வாசகனின் எண்ணங்கள், புரிதலுக்கு எல்லையில்லை என்று..

அது இங்கு நிரூபிக்கப் பட்டு இருக்கின்றது.

///

இதைப் படிக்கப் படிக்க புரியும்!!!

தேவன் மாயம் said...

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அழகா இருக்கு சார்///

நன்றி உழவன்!!

தேவன் மாயம் said...

பிரசன்னா said...

நான் ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டு இருக்கேன்.. சரியா தெரியலை//

நீங்கள் என்ன நினைத்தீர்களோ அது சரிதான்!

Jerry Eshananda said...

மிரட்டல் கவிதை,புத்தகம் ரிலீஸ் கன்பிர்ம்.

அன்புடன் அருணா said...

எனக்குப் புரியலையே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ் யப்பா !!!!!!!!!!!

ரோஸ்விக் said...

ஆத்தாடி ராத்திரில வேற படிச்சுப்புட்டனே... ஒத்தையில போக பயமா இருக்கப்போது சார்... :-)

மேவி... said...

சார் ...கவிதை நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் குழப்பமா இருக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஏன் டாக்டர் இப்படி பயங்கரக் கனவு எல்லாம் வருகுது? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கோ? ha ha haa

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory