Saturday, 11 September 2010

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.

2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

 • திடீர்க் காய்ச்சல்,
 • தலைவலி,
 • தசைவலி,
 • மூட்டுவலி,
 • கண் பகுதியில் வலி 
 • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
 • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
 • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
 • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?

 • அதிக காய்ச்சல்
 • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு

4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

 • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.

5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?

 • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
 • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை

6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?

 • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
 • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
 • கொசு மருந்தடித்தல்

30 comments:

சே.குமார் said...

டெங்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பகிர்வு.

கார்த்திகைப் பாண்டியன் said...

முக்கியமான தகவல்கள் தேவா சார்.. பகிர்வுக்கு நன்றி..

நட்புடன் ஜமால் said...

6ஆவது பாய்ண்ட்
ஆறாவது செய்றாங்களா

-------------

நம்மூர்களில் அதிகம் இப்படித்தானே இருக்கு தேவா ஆனால் அதிகம் டெங்கு இங்கே வருவதில்லை ?

அருண் பிரசாத் said...

கொடுமையான வியாதி டாக்டர். அனுபவிச்சு இருக்கேன். எனக்கு பிளேட்லேட் ஏற்றினார்

செத்து பிழைத்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

தகவல்களுக்கு நன்றி டாக்டர்.

ஜோதிஜி said...

இடுகையில் வருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அநியாயத்திற்கு முக்கியமான விசயங்களை ரொம்பவே சுருக்கி எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள், சில இடங்களில் சற்று தெளிவாகவே இன்னும் கூட எழுதலாம்.

காரணம் இந்த தகவல்களை நீங்கள் புத்தகமாக கொண்டு வரலாம்.

ஜோதிஜி said...

உங்களின் தமிழ் மண பட்சை மூச்சு வாங்குகிறது(?)

பிரியமுடன் பிரபு said...

தேவா சார்.. பகிர்வுக்கு நன்றி..

மோகன் குமார் said...

அருமையான உபயோகமுள்ள பதிவு

ஹேமா said...

தேவையான பதிவு டாக்டர்.நன்றி.

Thomas Ruban said...

உபயோகமுள்ள பகிர்வு.பகிர்வுக்கு நன்றி சார் ...

அப்துல்மாலிக் said...

// * கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
* சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
* கொசு மருந்தடித்தல்//
இப்படி செய்தால் எதுவுமே வராதே? இவ்வளவு பதிவும் தேவையில்லையே?

தெளிவான பதிவு

தேவன் மாயம் said...

சே.குமார் said...
டெங்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பகிர்வு.

நன்றி குமார்!

-------------------------

கார்த்திகைப் பாண்டியன் said...
முக்கியமான தகவல்கள் தேவா சார்.. பகிர்வுக்கு நன்றி..

நன்றி கார்த்தி!

---------------------

நட்புடன் ஜமால் said...
6ஆவது பாய்ண்ட்
ஆறாவது செய்றாங்களா
//
நாம் செய்யலாம் ஜமால்!

தேவன் மாயம் said...

அருண் பிரசாத் said...
கொடுமையான வியாதி டாக்டர். அனுபவிச்சு இருக்கேன். எனக்கு பிளேட்லேட் ஏற்றினார்

செத்து பிழைத்தேன்

பிளேட்லட் ஏற்றுமளவுக்கு வியாதி என்றால் அதிக சிரமப்பட்டு இருப்பீர்கள்.கொடுமைதான்!


T.V.ராதாகிருஷ்ணன் said...
பகிர்வுக்கு நன்றி

நன்றிங்க!


சைவகொத்துப்பரோட்டா said...
தகவல்களுக்கு நன்றி டாக்டர்//

மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

ஜோதிஜி said...
இடுகையில் வருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அநியாயத்திற்கு முக்கியமான விசயங்களை ரொம்பவே சுருக்கி எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள், சில இடங்களில் சற்று தெளிவாகவே இன்னும் கூட எழுதலாம்.

காரணம் இந்த தகவல்களை நீங்கள் புத்தகமாக கொண்டு வரலாம்.

உங்களின் தமிழ் மண பட்சை மூச்சு வாங்குகிறது(?)//

நல்ல அறிவுரைக்கு நன்றி.தமிழ்மணப்பட்டையில் என்ன கோளாறு என்று தெரியவில்லை. என் ஓட்டையே போட முடியவில்லை.

--------------------


பிரியமுடன் பிரபு said...
தேவா சார்.. பகிர்வுக்கு நன்றி..

பிரபு வருகைக்கு நன்றி

---------------------


மோகன் குமார் said...
அருமையான உபயோகமுள்ள பதிவு

நன்றி மோகன்!

-----------------------------

தேவன் மாயம் said...

ஹேமா said...
தேவையான பதிவு டாக்டர்.நன்றி.

வருகைக்கு நன்றி ஹேமா!

-------------------------------

Thomas Ruban said...
உபயோகமுள்ள பகிர்வு.பகிர்வுக்கு நன்றி சார் ...

நன்றி ரூபன்!
---------------------------

தேவன் மாயம் said...

அப்துல்மாலிக் said...
// * கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
* சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
* கொசு மருந்தடித்தல்//
இப்படி செய்தால் எதுவுமே வராதே? இவ்வளவு பதிவும் தேவையில்லையே?

தெளிவான பதிவு

//
ஓ இப்படி வேறு இருக்கா? ஹி! ஹி! நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் தேவா

டெங்கு பற்றிய தகவல்கள் பகிர்ந்தமை நன்று - பலருக்கும் பயன்படும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

பாலா said...

நல்ல பகிர்வு நன்றிங்க

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிறந்த விளக்கங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான ஒரு பதிவு தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

Gayathri said...

அருமையா எளிமையா விளக்கி சொல்லிருக்கீங்க நன்றி

ஜெரி ஈசானந்தன். said...

பயமாத்தான் இருக்கு.

சிங்கக்குட்டி said...

நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

ரவிச்சந்திரன் said...

நல்ல பதிவு... தகவல்கள்.

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

callezee said...

Romab padhu kappa aga iruka vendum,nandri

மோகன் குமார் said...

டாக்டர் சார் வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_18.html

சீனிவாசன் said...

very informative....

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவல்கள் ! நன்றி நண்பா !

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory