Tuesday, 21 September 2010

தசைநார்த் தேய்வு(Muscular Dystrophy)

        தசைநார்த் தேய்வு என்பது ஒரு மரபியல் நோயாகும். தசைநார்த்தேய்வு நோய் நரம்புகளைத் தாக்காமல் குறிப்பிட்ட தசைகளை மட்டும் படிப்படியாக செயலிழக்கச் செய்யும்.

 • தசை தொடர்ந்து பலமிழத்தல்
 • தசைப் புரதக் குறைபாடுகள்
 • தசைச் செல்கள் அழிவு – ஆகிய மூன்று முக்கிய குறைபாடுகள் இந்நோயில் காணப்படுகின்றன.

ஏறக்குறைய 30 வகைகள் இவற்றில் இருந்தாலும் இவை ஒன்பது முக்கிய வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன

Duchenne MD-டுஷென் மஸ்குலர் டிஸ்ட்ரோபி- டுஷன் தசை நார்த்தேய்வு இதில் முக்கியமானது.

Duchenne de Boulogne- டுஷென்-

1806-1875 – பிரென்சு நரம்பியல் நிபுணர்-

 clip_image002

நவீன நரம்பியல் மருத்துவ முன்னோடியான இவர் இந்நோய்

பற்றி முதலில் ஆராய்ந்து கூறினார். டுஷென் த.தே. தாயின் மரபணுவிலிருந்து ஆண் குழந்தைக்கு வருகிறது. ஆனால் தாய்க்கு இந்த வியாதியின் அறிகுறிகள் இருப்பதில்லை.

நோயின் அறிகுறிகள்:

 • தசைகள் வலுவிழப்பு விரைவில் சோர்வடைதல்
 • ஓடுதல், குதித்தல்,படிகளை ஏறுதலில் சிரமம்.
 • உடலை சம நிலைப்படுத்தி நிற்கவோ நடக்கவோ இயலாமை.
 • இந்த நோயில் தசைகள் சிறுத்துப் போதல் பலமிழந்து போதல் உடலில் இருபுறமும் சமமாக இருக்கும்.
 • இந்த நோய் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. 2-5 வயதில் இதன் அறிகுறிகள் தோன்றும் தசைகள் சிறுத்து, பலமிழந்து இருப்பதால் இவர்களால் நடக்க இயலாமல் விரைவில் சக்கர நாற்காலி உபயோகிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
 • டுஷென் த.தே. ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.
 • இதயம் நுரையீரலும் பாதிப்படைகிறது.
 • முதுகெலும்பு வளைந்து போவது (SCOLIOSIS) ம் ஏற்படுகிறது.
 • இதனால் மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் சுவாசக் கருவிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது.

பரிசோதனைகள்:

 1. எலக்ட்ரோமயோகிராபி பரிசோதனைகள்
 2. இரத்தத்தில் கிரியேட்டினின் கைனேஸ் அதிகமாக இருத்தல்.
 3. ஜீன் பரிசோதனைகள்.

ஆகியவற்றைக் கொண்டு இந்த நோயைக் கண்டறியலாம்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தியாவில் அதிக அளவில் (கால் மில்லியன்) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.

டிஸ்கி:    ஆக்சிலெரான் மருந்துக் கம்பெனி Acceleron Pharma  ACE-031 என்ற புதிய மருந்தை இந்த தசைனார்த்தேய்வு நோயாளிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. : இது ஆய்வு நிலையிலுள்ள மருந்து. தசை வளர்ச்சிக்கும், தசை வலிமைக்கும் உதவும் என்று நம்பப்படுகிறது.விலங்குகளில் இது தசை வளர்ச்சியை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து தற்போது இரண்டாம் கட்ட ஆய்வில் உள்ளது.

31 comments:

Chitra said...

இந்தியாவில் அதிக அளவில் (கால் மில்லியன்) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.

......அதற்கு அரசாங்க உதவியுடன், மருத்துவர்கள் ஏதாவது முகாம் அமைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதா?

நல்ல பதிவு. நன்றி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல பதிவுங்க. நன்றி.

அகல்விளக்கு said...

//அதற்கு அரசாங்க உதவியுடன், மருத்துவர்கள் ஏதாவது முகாம் அமைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதா?//

விழிப்புணர்வேற்படுத்தல் வேண்டும்.... :-)

தேவன் மாயம் said...

Chitra said...
இந்தியாவில் அதிக அளவில் (கால் மில்லியன்) குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.

......அதற்கு அரசாங்க உதவியுடன், மருத்துவர்கள் ஏதாவது முகாம் அமைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதா?

நல்ல பதிவு. நன்றி.

சித்ரா! நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்! சிறந்த கருத்துக்கு நன்றி.

தேவன் மாயம் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல பதிவுங்க. நன்றி.

//
நன்றிங்க!

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
//அதற்கு அரசாங்க உதவியுடன், மருத்துவர்கள் ஏதாவது முகாம் அமைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதா?//

விழிப்புணர்வேற்படுத்தல் வேண்டும்.... :-//

நல்ல கருத்து! நிச்சயம் செய்யலாம்.

Jey said...

நல்ல பகிர்வு. நன்றி.

தேவன் மாயம் said...

நன்றி ஜே!

கே.ஆர்.பி.செந்தில் said...

மருத்துவ துறையை பொறுத்தவரையில் நமக்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு இல்லை என்றாலும்.. இந்தியா போன்ற பெரிய தேசத்தில் உங்களைபோல் சிலரால் அது மேம்படவே செய்கிறது..

உங்களுக்கு என் வந்தனம் ...

முனைவர்.இரா.குணசீலன் said...

அரிய செய்திகளை அறியந்து கொண்டேன்


மகிழ்ச்சி மருத்துவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

நட்புடன் ஜமால் said...

ரொம்ப புதிய தகவல்கள் எனக்கு

நன்றி தேவா!

ஹுஸைனம்மா said...

பத்திரிகைகள் மூலம்தான் இந்தியாவிலும் இப்பாதிப்புடையவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அதுவரை வெளிநாடுகளில் மட்டுமே கானப்படும் நோய் என்று நினைத்திருந்தேன்!!

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு மிக்க நன்றி :-)

Gayathri said...

pagirvukku mikka nandri..ungalin indha muyarchi palarukku ubhayogamaaga ullathu

சுந்தரா said...

இப்படியும் ஒரு நோய் இருப்பதைப் படித்தபின்தான் தெரிந்துகொண்டேன்.

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

Anonymous said...

could you please write about spinal card injuries cases,

தேவன் மாயம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
மருத்துவ துறையை பொறுத்தவரையில் நமக்கு இன்னும் நிறைய விழிப்புணர்வு இல்லை என்றாலும்.. இந்தியா போன்ற பெரிய தேசத்தில் உங்களைபோல் சிலரால் அது மேம்படவே செய்கிறது..

உங்களுக்கு என் வந்தனம் .///

உங்கள் கருத்து சரிதான்! உங்கள் ஊக்கமிக்க வரிகள் என்னை மேன்மேலும் எழுதத்தூண்டும்!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
அரிய செய்திகளை அறியந்து கொண்டேன்


மகிழ்ச்சி மருத்துவரே.///

நன்றி நண்பரே!

தேவன் மாயம் said...

நன்றி! சைவக் கொத்து புரோட்டா!

தேவன் மாயம் said...

நன்றி ஜமால்!

தேவன் மாயம் said...

ஹுஸைனம்மா said...
பத்திரிகைகள் மூலம்தான் இந்தியாவிலும் இப்பாதிப்புடையவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அதுவரை வெளிநாடுகளில் மட்டுமே கானப்படும் நோய் என்று நினைத்திருந்தேன்!!

//
ஆம்! பரவலான விழிப்புணர்வு தேவை!

தேவன் மாயம் said...

நன்றி! சிங்கக்குட்டி!

தேவன் மாயம் said...

Gayathri said...
pagirvukku mikka nandri..ungalin indha muyarchi palarukku ubhayogamaaga ullathu///

பிளாக் இவ்வளவு உதவியாக இருப்பது மகிழ்வளிக்கிறது!

தேவன் மாயம் said...

!
சுந்தரா said...
இப்படியும் ஒரு நோய் இருப்பதைப் படித்தபின்தான் தெரிந்துகொண்டேன்.

பகிர்வுக்கு நன்றி டாக்டர்.
//
திரு.சுந்தரா! வருகைக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

நன்றி டாக்டர்

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் said...

in our village, two boys are affected in this disease. kindly suggest hospital or doctor name to look into this boys

ஹேமா said...

நன்றி டாக்டர்.இதன் விளக்கங்கள் இன்னும் வேணும்.இதைச் சரிப்படுத்த முடியாதா.எத்தனை வயதில் ஆரம்பமாகும்?

என் தோழி 32 வயது.முழங்கால் வலியால் அவதிப்படுகிறாள்.டாக்டர் சொல்கிறார்...முழங்கால் மூட்டில் இருக்கும் ஒருவகையான பசைத்தன்மை காய்ந்துவிட்டதென்று.அது திரும்பவும் உருவாக மாட்டாது என்றும் சொல்கிறார்.இது பற்றி ஒரு பதிவு தாருங்களேன்.

பிரியமுடன் பிரபு said...

நல்ல பதிவுங்க. நன்றி.

சே.குமார் said...

நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

நல்ல பதிவு SIR.

நன்றி.

Baskar Karan said...

எனது ​பெயர் பாஸ்கரன். நான் musclar dystrophy பாதிக்கப்பட்டு இருப்பது எனது 23 வயதில் மருத்துவ ரீதியாக கண்டுபிக்கப்பட்டுள்ளது. நான் இது சாதரணமாக குணப்படுத்தக்கூடிய ​நோய் என்றுதான் நி​னைத்​தேன். ஆனால் doctor இந்​நோய்க்கு மருந்து இல்​லை என்று ​​சொன்னதும் எனது உயிர் அன்​றே பிரிந்துவிட்டது ​போல் இருந்தது. இப்​போது எனக்கு வயது 26, இப்​போது தட்டுதடுமாறி ந​​டைபிணமாக வாழ்ந்து ​​கொண்டிருக்கி​றேன். பள்ளி படிப்​பை 10 வகுப்பு வ​ரை விருதுநகர் மாவட்டத்தில் வீர​சோழன் என் கிரமத்திலும், 11, 12 மற்றும் DIPLOMA AUTO MOBILE ENGINEERING என் அண்ணன் உதவியுடன் ​வெற்றிகரமாக ​​சென்​னையில் முடித்​தேன். ஒருவருடம் அப்பரன்டீஸாக Chennai rane madras company பணிபுரிந்​தேன். பிறகு ஸ்ரீ​பெரும்புத்தூர் ஒரு COMPANY ல் ​வே​லையில் ​சேர்ந்து அங்கு என்னால் பழுவான ​​வே​லை ​​செய்யமுடியாத காரணத்தால் கம்​​பெனி நிர்வாகத்தால் நிறுத்தப்பட்​டேன், என் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அப்​போது கூட நான் HOSPITAL ​​செல்ல வில்​லை, என் அண்ணன் திருமணத்திற்கு வந்த என் மாமா எனது ந​டை மற்றும் உடல் பாவ​னையில் மாற்றம் இருப்ப​தை கண்டு அவர் மூலம்தான் நான் HOSPITAL ​​சென்று பரி​சோத​னை ​​செய்து ​​கொண்​டேன். அப்​போதுதான் எனக்கு இந்த அதிர்ச்சி கி​டைத்தது, பிறகு என் அண்ணியின் பிடிவாத்தால் தனி வாட​கை வீட்டில் 6 மாதம் மிகவும் கஷ்டப்பட்டு அம்பத்தூரில் ​வே​லை பார்த்​தேன். என்னால் அதற்கு பிறகு கடினமான ​வே​லை​யை ​​​தொடர முடியவில்​லை. அதன் பிறகு பிறந்த கிரமாத்திற்கு ​​சென்​றேன். அங்கு எனது கிராம மக்கள் மிகவும் ஏழனமாக ​பேசினர் அவர்களின் அந்த வார்த்​தையால் தற்​​கொ​லைவ​ரை ​​சென்​​றேன். ஒருசில நல்லவர்கள் ​​கொடுத்த ​தைரியத்தில் மீண்டும் ​​சென்​​னை வந்து computer-ல் DTP கற்று அதன் மூலம் ​வே​லைக்கு ​​சென்று ​கொண்டிருந்​தேன். ​​வே​லைக்கு பஸ் ஏறி ​​​செல்ல ​வேண்டியிருந்தது. பஸில் ஏறகூட முடியாத சூழலில் ஒரு வருடம் கஷ்ட்டபட்டு ​​சென்​றேன். ஒருநாள் பஸ் ​நெறிசல் காலத்தில் படியில் இருந்து மிகவும் அடிபட்டுவிட்டது. அன்றிலிருந்து ​​​வெளி​யே ​வே​லைக்கு ​​செல்வ​தை நிறுத்தி விட்​டேன். இப்​போது என் அண்ணன் ​​செய்யும் ​transfer assembling ​தொழிலில் என்னால் முடிந்த உதவிக​ளை ​​செய்து அவர் தயவால் வாழ்ந்து ​​கொண்டு இருக்கி​றேன். என் ​வெளி உலக வாழ்க்​கை​யே முடிந்து விட்டது. இதுவ​ரைக்கும் என் அன்றாடம் ​வே​லை​யை நான் ​செய்து​கொண்டிருக்கி​றேன். அருகில் உள்ள க​டைக்கு ​​செல்ல கூட அங்கு அங்கு விழுந்து ​போய்வருகி​றேன். என் இப்​போது ??????????????????????? ஆகிவிட்டது. நான் இப்​போது மனம் ​​நொந்து காணப்படுகி​றேன். எனக்கு யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் என் நம்பர்7871405618. இந்த ​நோய்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த என்னால முடிந்த​தை நான் ​​செய்கி​றேன்,

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory