வரிசையின் கட்டுக்குள்
அடங்காதிருந்தன
என் சொற்கள்!
சில அர்த்தமற்றும்
சில புரியாமலும்.
கோடு போட்ட
தாள்களுடன் உன்
கையேடு,
வரிசை மாறாத
எழுத்துக்களை அதில்
செறுகியிருந்தாய்!
என் பெயரும்
உன் பெயரும்
அருகருகில் இருந்த
தாள்களின்
முனைகளில்
தடவப்பட்ட மஞ்சள்!
எழுத்துகள் அழிந்து
மவுனத்தை மட்டுமே
சுமந்து கொண்டிருந்தது
அந்த இரவு!
முடிவில்
அர்ததமற்ற
என் சொற்களையெல்லாம்
கவிதையாக்கியிருந்தாய் நீ!
33 comments:
முடிவில்
அர்ததமற்ற
என் சொற்களையெல்லாம்
கவிதையாக்கியிருந்தாய் நீ!
....very nice.
என் பெயரும்
உன் பெயரும்
அருகருகில் இருந்த
தாள்களின்
முனைகளில்
தடவப்பட்ட மஞ்சள்!//
மங்களகரமாக இருக்கிற்து.
சித்ரா! மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி said...
என் பெயரும்
உன் பெயரும்
அருகருகில் இருந்த
தாள்களின்
முனைகளில்
தடவப்பட்ட மஞ்சள்!//
மங்களகரமாக இருக்கிற்து.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
//முடிவில்
அர்ததமற்ற
என் சொற்களையெல்லாம்
கவிதையாக்கியிருந்தாய் நீ!//
நிறைவான,அழகான கவிதை..
//கவிதையாக்கியிருந்தாய் நீ!//
டச்சிங் டச்சிங் பாஸ்.....
nIcE nA.. அர்த்தம் இல்லாததுக்கு அர்த்தம் கொடுத்துடுச்சே காதல்.
அமைதிச்சாரல் said...
//முடிவில்
அர்ததமற்ற
என் சொற்களையெல்லாம்
கவிதையாக்கியிருந்தாய் நீ!//
நிறைவான,அழகான கவிதை..//
மிக்க நன்றி !
MANO நாஞ்சில் மனோ said...
//கவிதையாக்கியிருந்தாய் நீ!//
டச்சிங் டச்சிங் பாஸ்....//
மனோ! கருத்துக்கு நன்றி
ஜீவன்பென்னி said...
nIcE nA.. அர்த்தம் இல்லாததுக்கு அர்த்தம் கொடுத்துடுச்சே காதல்.//
பின்னூட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கு!
மருத்துவ கவிஞருக்கு வாழ்த்துகள்.
கொஞ்சமா இருக்கு தேநீர்.
கவிதை அருமை தேவா சார்
சி.கருணாகரசு said...
மருத்துவ கவிஞருக்கு வாழ்த்துகள்.//
கவிதை இனிப்பாகத்தானே உள்ளது!!
ஜெரி ஈசானந்தன். said...
கொஞ்சமா இருக்கு தேநீர்.//
சுவை எப்படி!!
குமரை நிலாவன் said...
கவிதை அருமை தேவா சார்//
நிலாவன் ! இப்போது எங்கே!
அர்த்தமற்ற கவிதை எல்லாம் அர்த்தமானது இப்போது.. அருமை.. தேவன்
தேனம்மை லெக்ஷ்மணன் said...
அர்த்தமற்ற கவிதை எல்லாம் அர்த்தமானது இப்போது.. அருமை.. தேவன்
////
தங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது!
super...
Thank you prabhu!
அர்த்தமற்ற சொற்கள் கவிதையான விதம் இந்த அழகான கவிதை தொடுத்ததில் புரிகிறது சார்...
malaysia
சமீபத்தில் வலையில் படித்த கவிதைகளுள் சிறந்த கவிதை!!!
மீண்டும் ஒருமுறை படிக்கத் தோணுகிறது.
வணக்கம் சகோதரா, இன்று தான் இந்த வலையை கண்டேன். மகிழ்ச்சி, ஒரு புதிய பாணியில் கவிதையைப் பிரசவித்துள்ளீர்கள். அருமையான கவிதை என்பதை விட சொல்லாடல்கள் சொக்க வைக்கிறது.
கவிஞருக்கு வாழ்த்துகள்.
அருமையான கவிதை
கலக்கலான கவிதை மருத்துவர் அய்யா (ராமதாஸ் இல்லீங்கோ... ஹி..ஹி..ஹி...) ரொம்ப நல்லாயிருக்கு.
//என் பெயரும்
உன் பெயரும்
அருகருகில் இருந்த
தாள்களின்
முனைகளில்
தடவப்பட்ட மஞ்சள்!
எழுத்துகள் அழிந்து
மவுனத்தை மட்டுமே
சுமந்து கொண்டிருந்தது
அந்த இரவு!//
அழகான வரிகள். வேலைப்பழுவோடு கவிதைகள் வருவதும் அறுபுதம் தான்..! :)
//வரிசையின் கட்டுக்குள்
அடங்காதிருந்தன
என் சொற்கள்!
சில அர்த்தமற்றும்
சில புரியாமலும்.//
காதலில் அவனின் நிலை... பதட்டம்.
//கோடு போட்ட
தாள்களுடன் உன்
கையேடு,
வரிசை மாறாத
எழுத்துக்களை அதில்
செறுகியிருந்தாய்!//
காதலில் அவளின் நிலை... நிதானம்
//என் பெயரும்
உன் பெயரும்
அருகருகில் இருந்த
தாள்களின்
முனைகளில்
தடவப்பட்ட மஞ்சள்!//
இருமனமும் இணையும் திருமணம்...
//எழுத்துகள் அழிந்து
மவுனத்தை மட்டுமே
சுமந்து கொண்டிருந்தது
அந்த இரவு!//
இணைந்தது இங்கே மனம் மட்டுமல்ல... கனவுகள், நிஜங்களானதால் நிறைந்தது நிம்மதி.
//முடிவில்
அர்ததமற்ற
என் சொற்களையெல்லாம்
கவிதையாக்கியிருந்தாய் நீ//
‘நான்’ ‘நான்’ அழிந்து ‘நாம்’ ஆகி... பின் ‘நாமும்’ அழிந்த ‘சூன்யத்தில்’ அர்த்தமற்றதும் கவிதையாகும் ஆனந்த நிலை....
வெகுநாட்களுக்குப் பிறகு ரசிக்க ஒரு நல்ல கவிதையைத் தந்தமைக்கு ஒரு தமிழ் ரசிகனின் நன்றி...வாழ்த்துக்கள்.
எழுத்துக்கள் அழிந்து மவுனத்தை மட்டுமே சுமந்து கொண்டிருந்த இரவு என்ன சொல்கிறது?
Great posting, my friend!
have a nice week.
காதலிக்கும்போது அர்த்தமற்ற சொல் என்று எதுவுமில்லையே....
Post a Comment