இடமும் வலமுமாய்
கழிகிறதென்
செவ்வக வாழ்க்கை!
தனிமைச்சிறையில்
எப்போதும் இரைக்கான
எனது
காத்திருப்புகள்!
பசியையும்
அன்பையும்
சொல்லமுடியாததென்
நீர்ச்சிறையில்,
கழிகிறதென் காலம்
கண்ணாடி மீனாய்!
(வீட்டில் கண்ணாடித் தொட்டியில் விடப்பட்டிருந்த ஒற்றை அரோனா வாஸ்து மீனைப் பார்த்தபோது எழுதியது!!!)
10 comments:
welcome back..:)
Thank you Prabhu!
அருமை டாக்டர்.
வாஸ்து மீனுக்கு நன்றி, மீண்டும் எழுத வைத்ததற்கு:)!
மீனைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருந்தால் இந்தக் கவிதை இன்னும் அதிக அர்த்தங்களை வாரி வழங்கி இருக்கும். உதாரணம் - 'தனிமை சிறையில் இரைக்கான காத்திருப்பு'
வணக்கம் டாக்டர்.ரொம்பக் காலத்துக்கப்புறம்.சுகம்தானே !
உணர்வு மிகுந்த கவிதை.அருமை !
ராமலக்ஷ்மி said...
அருமை டாக்டர்.
வாஸ்து மீனுக்கு நன்றி, மீண்டும் எழுத வைத்ததற்கு:)!//
மிக்க நன்றிங்க என் கவிதை படித்ததற்கும் கருத்துக்கும்!
சாய் ராம் said...
மீனைப் பற்றி குறிப்பிடாமல் இருந்திருந்தால் இந்தக் கவிதை இன்னும் அதிக அர்த்தங்களை வாரி வழங்கி இருக்கும். உதாரணம் - 'தனிமை சிறையில் இரைக்கான காத்திருப்பு'//
உண்மைதான் நண்பரே!
ஹேமா said...
வணக்கம் டாக்டர்.ரொம்பக் காலத்துக்கப்புறம்.சுகம்தானே !
உணர்வு மிகுந்த கவிதை.அருமை !//
உணர்வு மிக்க கவிஞருக்கு நான் நலமே!
அருமை அருமை..
கவிதை மிக நன்றாகவுள்ளது மருத்துவரே..
கவிதை அருமையாயிருக்கு..
Post a Comment